வெந்தயம் உணவு
வெந்தயம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள். இதில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது.
இருதய பிரச்சனை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தண்ணீர் கொண்டு முழுங்கலாம்.
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களின் டயட்டில் ஏதாவது ஒரு வகையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை பொடித்து மோருடன் கலந்து சாப்பிடலாம்.
வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு நீக்கும். மேலும் கொழுப்பு நிறைந்துள்ள உணவில் இருக்கும் டிரைகிளரசைட் என்ற கொழுப்பினை ரத்தத்தில் சேர்க்காமல் பாதுகாக்கும்.
வெந்தயத்தில் அமினோ அமிலம், உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள உதவும்.
நார்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும்.
அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலிக்கு வெந்தய கஷாயம் மிகவும் நல்லது. வெந்தய பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
வெந்தய தோசை, வெந்தய இட்லி, வெந்தயக் குழம்பு,
வெந்தயக் களி. என்று வெந்தயம் கலந்த சட்டினி
கசப்பாக இருந்தாலும் நல்ல பலன் கொடுக்கிறது.
உளுந்தே ஒத்துக்காத சில பேருக்கு
மெந்தியமும் சேர்த்துக் கொண்டால் தோசையும் இட்லியையும்
கவலை இன்றி சாப்பிடலாம்.
·
வெந்தயம்- Fenugreek – मेथी – மருத்துவ குணங்கள்
உடல் சூடு, தீப்புண், நீரிழிவு, நெஞ்சுவலி, பொடுகு, மலச்சிக்கல், முகப்பரு, வயிற்று உப்பிசம், வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம், வாய்வு தொல்லை, வெந்தயம்
வெந்தயத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
உடல் சூடு, மலச்சிக்கல்
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவுதண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின்தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர்குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்தநோயும் உங்களை அண்டவே அண்டாது.
உடல் வனப்பு
உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. ஒருதேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்து, பின்மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
