வெந்தயம் உணவு
வெந்தயம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள். இதில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது.
இருதய பிரச்சனை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தண்ணீர் கொண்டு முழுங்கலாம்.
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களின் டயட்டில் ஏதாவது ஒரு வகையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை பொடித்து மோருடன் கலந்து சாப்பிடலாம்.
வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு நீக்கும். மேலும் கொழுப்பு நிறைந்துள்ள உணவில் இருக்கும் டிரைகிளரசைட் என்ற கொழுப்பினை ரத்தத்தில் சேர்க்காமல் பாதுகாக்கும்.
வெந்தயத்தில் அமினோ அமிலம், உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள உதவும்.
நார்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும்.
அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலிக்கு வெந்தய கஷாயம் மிகவும் நல்லது. வெந்தய பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
வெந்தய தோசை, வெந்தய இட்லி, வெந்தயக் குழம்பு,
வெந்தயக் களி. என்று வெந்தயம் கலந்த சட்டினி
கசப்பாக இருந்தாலும் நல்ல பலன் கொடுக்கிறது.
உளுந்தே ஒத்துக்காத சில பேருக்கு
மெந்தியமும் சேர்த்துக் கொண்டால் தோசையும் இட்லியையும்
கவலை இன்றி சாப்பிடலாம்.
·
வெந்தயம்- Fenugreek – मेथी – மருத்துவ குணங்கள்
உடல் சூடு, தீப்புண், நீரிழிவு, நெஞ்சுவலி, பொடுகு, மலச்சிக்கல், முகப்பரு, வயிற்று உப்பிசம், வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம், வாய்வு தொல்லை, வெந்தயம்
வெந்தயத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
உடல் சூடு, மலச்சிக்கல்
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவுதண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின்தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர்குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்தநோயும் உங்களை அண்டவே அண்டாது.
உடல் வனப்பு
உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. ஒருதேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்து, பின்மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
15 comments:
சிறு வயதில் அம்மா அடிக்கடி வெந்தயக்களி செய்து தருவார்கள்.
எனக்கு இயல்பாகவே வெந்தயம் ரொம்பப் பிடிக்கும் எல்லாவற்றிலும் வெந்தயம் சேர்த்துடுவேன். :))))) வத்தக்குழம்பு, வெந்தயக்குழம்பில் தாளிக்கும் வெந்தயத்தை எல்லாம் பொறுக்கிச் சாப்பிடுவேன். :)
சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் வெந்தயம் உதவுகிறது. அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் எல்லா பொருள்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்துக்கு பொறுப்பேற்று டுஅலைச் சீராக வைக்க உதவுகின்றன,
நலன் தரும் வெந்தயம் நல்ல பகிர்வு.
வெந்தயம் பற்றி அறியாத பல தகவல்களைத் தந்தமைக்கு நன்றி சகோதரி
எனக்கு வெந்தயம் பிடிக்கும். இனி வெந்தயம் ஊறவைத்து காலையில் சாப்பிட முனைகிறேன்.
அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.
தலைக்கு ஷாம்பூ மாதிரி பயன் படுத்தலாம்.
நன்றி மா.
ஆஹா, கீதா நிஜமாகவா!!!
வெந்தயம் அவ்வளவு பிடிக்குமா.
என் அம்மா எனக்குச் சொன்ன நல்ல
விஷயங்களில் வெந்தயமும் ஒன்று,.
இரவு ஊறவைத்து தயிரோடு சாப்பிடச் சொல்லுவார்.
வெந்தயம் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கட்டும்.
அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
என் அம்மாவும் அஞ்சறைப் பெட்டி வைத்தியம் என்றே
சொல்வார்.
அம்மாவின் சொற்படி நடந்திருந்தால்
வாழ்வு எத்தனையோ மேம்பட்டிருக்கும்.
நம் அகத்தின் சுகத்தை உணவு வழியாகவே
சீர் செய்வோம். நன்றி மா.
அன்பின் மாதேவி ,
என்றும் நலமுடன் இருங்கள்.
நம் நாட்டின் சீர் மிக்க உணவு
நலங்களைப் பயன் படுத்துவோம்.
நன்றி மா.
அன்பின் ஜெயக்குமார் ஐயா,
வணக்கம்.
இயற்கை தரும் இந்த மருந்துகளை அறிந்து பயன் பெறுவோம்.
நன்றி.
அன்பின் முரளிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
என் அம்மா, மெந்தியம் என்றே சொல்வார்.
தேங்காய் எண்ணெயில் பொடித்துப்
போட்டு வைப்பார்.
நல்ல குளிர்ச்சி தரும்.
கண்டிப்பாக நீங்களும் உபயோகப்
படுத்துங்கள். நன்றி.
ஆமாம் ரேவதி, ஊறுகாய்க்கெல்லாம் வெந்தயப் பொடி சேர்க்காமல் இருக்க மாட்டேன். ஆவக்காயில் முழுசாக வெந்தயம் சேர்த்துவிட்டுப் பின்னர் அதைப் பொறுக்கிச் சாப்பிடுவது ஓர் தனி ருசி! கஞ்சிக்குக் கூட தினமும் பச்சைப்பயறு/வெந்தயம் ஊற வைத்துச் சேர்த்துடுவேன். முளை கட்டிவிடும் ஓர் இரவுக்குள்ளாக. அபார ருசி தரும்.
வெந்தயத்தின் பயன்கள் அருமை.
பகிர்வுக்கு நன்றி.
வெந்தய தோசை, மற்றும் புளிக்குழம்பு, ஊறுகாயில்
முழு உளுந்து தோசை குருணை தோசை என்று சொல்வதிலும் வெந்தயம் போவூவோம். வயிற்றுவலி என்றால் இரண்டு வெந்தயத்தை போட்டீ தண்ணீரோ மோரோ குடி என்பார்கள் அம்மா.
வெந்தயம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் திருநெல்வேலி புளியோதரை பிடிக்கும். வெந்தயம் மணம் மிக்கதாக இருக்கும் அதுவும் திருக்குறுங்குடி கோயில் புளியோதரை!!
நான் சேர்த்துக் கொள்வதுண்டு. ஊற வைத்துச் சாப்பிடுவதும் உண்டு. முளை கட்டி சலாடில் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு.
கீதா
Post a Comment