வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
ஜூன் 4 ஆம் தேதி சிகாகோவை விட்டுப்
புறப்பட்டோம்.
அதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே
பெட்டிகள் நிறைக்க ஆரம்பித்தோம் .
மூன்று வருடம் கழித்துப் பார்க்கும் உறவினர்களுக்காக
மகள் வாங்கிய பொருட்கள்.கவனம் வைத்து வாங்கினதை அடுக்குவதில்
பெட்டிகள் கச்சிதமாக நிரம்பின.
15/6/2022
பதிவுகள் எழுத ஆரம்பித்ததிலிருந்து
இவ்வளவு நாட்கள் , இணைய தளங்களிலிருந்து விலகி இருந்ததில்லை.
இதுவும் நல்ல மாறுதலே :)
விமானப் பயணம் இத்தனை களைப்பைத் தரும் என்று எதிர்பார்க்கவில்லை.
கணினியைத் திறக்கவே சோர்வாக இருந்தது.
ஏதோ நாமும் உலாவுகிறோம் என்பதற்காக
வாட்ஸ் ஆப்பில் மட்டும் பேசிக் கொண்டிருந்தேன்.
அது கூட இல்லாமல்
இருப்பது கடினம் தானே.
மகள் குடும்பம் ஒரு சிற்றுலா போய் வந்த மறு நாள்,
மூன்று நாள்
300 மைல்கல் தொலைவிலிருந்த செர்மாட் Zermatt என்ற
மலைச் சிகரம் பார்க்கக் கிளம்பினோம்.
நல்ல குளிரும் இயற்கைக் காட்சிகளும்
பிரமிக்க வைக்க, டீசல் வாசமே இல்லாத அந்த
நகர கிராமத்தில் வலம் வந்த
அருமை சொல்லி முடியாது.
பல பல பிரபலங்கள் வந்து போகும் இடம் ஆதலால்
எல்லாமே உச்ச பட்ச விலையில்தான்
கிடைக்கின்றன.
மகன் ஏற்பாடு செய்திருந்த விடுதி நல்ல
வசதி வாய்ந்ததாகச் சமையல் அறை வசதிகளோடு
இருந்தது.
காலையில் உணவை முடித்துக் கொண்டு ,
கையிலும் எடுத்துக் கொண்டு இன்னும் ஒரு
மலைரயில் ஏறி சிகரத்தை அடைந்தோம்.
இந்த ஊருக்கு மட்டும் இறைவன் இத்தனை
இயற்கை வளத்தை அளித்திருக்கிறானே என்ற பொறாமையும்
கூடவே எழுந்தது.:)
மக்களின் நேர்மை, உதவும் மனப்பான்மை,
குழந்தைகளின் கபடம் இல்லாத மகிழ்ச்சி,
ஒரு பயமில்லாத வாழ்க்கை எல்லாமே
மீண்டும் மீண்டும் நெகிழ வைத்தன.
ஏற்கனவே 2002 இல் பார்த்த நகரம் என்றாலும்
20 வருடங்களுக்குப் பிறகு ,மாறுதல் என்று சொல்லப்
போனால் மேலும் மேலும் கட்டிடங்கள்
அதிகரித்திருப்பதைத் தான் சொல்ல வேண்டும்.
அரசாங்கம் எல்லா விதத்திலும் கட்டுப்பாடோடு இருக்கிறது.
நாட்டின் வருமானமே சுற்றுலாப் பயணிகளால்
தான் என்பதால் அவர்களுக்கு நல்ல விதமாக
சேவைகள் நடக்கின்றன.
அத்தனை பயணிகளுக்கு நடுவில் நாங்கள்
மட்டுமே முக உறை அணிந்திருந்தது வேடிக்கையாக இருந்தது.
தொடரலாம்.
9 comments:
இந்தப் பதிவு போட்டதே தெரியலை. இப்போத் தான் பார்த்தேன். தொடருங்கள். வாட்சப் குழுவிலும் உங்களைக் காணோமே! உடல் நலம் தானே?
அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள். இந்தப் பதிவை இன்றுதான் பப்ளிஷ் செய்தேன் மா.
பயணம், கால்வீக்கம், குளிர் எல்லாம் இப்போது தாங்குவது சிரமமாக இருக்கிறது. எழுதவும்்தோன்றவில்லை. அதுதான் காரணம்.
நிறைய செய்திகள் இருந்தாலும். வலிகள் இல்லாத போதே பதிவு போடமுடியும்.
நீங்கள், மாமா அனைவரும் நலம் என்று நம்புகிறேன் மா.
அழகான இ(ப)டங்கள் அம்மா காணொளிகள் கண்டேன்.
மிகவும் அழகாக இருக்கிறது.
பதிவுகள் பக்கம் வராமல் இருப்பதும் ஒரு மாறுதல்தான். மீனும் வரும்போது புத்துணர்ச்சியுடன் வரலாம்.
இயற்கை அழகு மிக அதிகம் இருக்கும் இடங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அரசாங்கமும் வஞ்சனை இல்லாமல் நல்லது செய்வது கேட்க மகிழ்ச்சி. நம்மூர் அரசியல்வாதிகள் என்றால் என்னென்ன நடந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை!
வணக்கம் சகோதரி
நலமா? அழகான படங்கள். கண்களுக்கு விருந்தாக உள்ளது. மக்களின் பிரச்சனைகளை களையும் அரசும் நல்ல அரசே. அதனால்தான் அங்கு பசுமையும், குளிர்ச்சியும் மாறாது நிலைத்துள்ளது. தங்களது வருகை எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. எனினும் நன்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.நேரமும், உடலும் ஒத்துழைக்கும் போது வாருங்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவு அருமை.காணொளிகளில் அந்த ஊரின் இயற்கை அழகு தெரிகிறது.
மகிழ்ச்சியாக இருக்கிறது. பொழுதௌகளை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக அனுபவித்து வாருங்கள்.
அம்மா படங்கள் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன...செமையா இருக்கு ஸ்விஸ் அழகான நாடு இயற்கை வளம் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறாள் இயற்கை அன்னை.....அம்மா நம்மூர் இமயமலை இப்படித்தான் பனி மூடி...
ஸ்விஸ்ஸில் சட்டம் ஒழுங்கு என்று கேள்விப்பட்டதுண்டு. ஊரும் அழகு! ஓ சுற்றுலா...இதோ அடுத்ததையும் பார்க்கிறேன். சென்னை வந்தாச்சா?
கீதா
Post a Comment