Blog Archive

Sunday, March 30, 2014

சிங்கம் பார்ட் 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அதிகமாக        வளர்ந்துவிட்ட போகென்வில்லா.                                                                                              இந்த சம்பவம்  1971இல்    கோவையில்  இருந்த போது நடந்தது..கோவையில்.          சின்னவனுக்கு   ஒரு வயதிருக்கும் பெரியவர்கள் இருவரும் பள்ளி செல்ல  ஆரம்பித்துவிட்டார்கள்.  சிங்கத்துக்கு    முதல் மனைவி    வேலை. பிறகுதான் நாங்கள்......|{~  காலையில் எட்டுமணிக்கு ஜீப் கிளம்பிவிட்டால்    திரும்பி வரும் நேரம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்/             ஒரு நாள் இரவு வர நேரமாகிவிட்டது.   வரும்போதே நாளிக்குச் சீக்கிரம் கிளம்பணும்.    ஈரோடு  பக்கத்தில்  லாரி  கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாம். வெளில எடுக்கணும். லாரி ஓனர் ரொம்ப வருத்தப் படறார். சரக்கெல்லாம் மூழ்கிடும் போல இருக்கு. நானும் இன்னும் இரண்டு பேரும் போகப் போறோம் என்றதும் எனக்குப் பகீர் என்றது. கிணற்றுக்குள் விழுந்தால் கிரேன் மாதிரி எதாயாவது வச்சுத் தூக்கவேண்டியதுதானே       நீங்க ஏன் போகணும்   என்றெல்லாம் வாதம் செய்தேன்.பாவம்மா  அவன். ஒரே ஒரு லாரிதான் வச்சிருக்கான் .கிரேன் வரவழைக்க எல்லாம் அவனிடம் காசு கிடையாது. என்னால் முடியும் எப்படியாவது வண்டியை எடுத்துவிட்டுத்தான் வருவேன்  என்று தூங்கப் போய்விட்டார். எனக்குப் போனது தூக்கம். அடுத்த நாள் காலையில் உதவியாளர்கள் துணையோடு கிளம்பியாச்சு.  சாயந்திரம் ஆச்சு. அடுத்த நாள் காலை வந்தது. அன்று இரவும் வரவில்லை.  தொலைபேசி வசதியும் அப்போ கிடையாது.                          எதிர்வீட்டுப் பெரியவரும் அவர் மனைவியும் எங்களிடம் மிக அன்பாகப்  பழகுவார்கள். அவர்களிடம் சொல்லி     வொர்க்ஷாப்புக்குப் பேசலாமா என்று கேட்டேன்.    அப்போது    கம்பெனியில் இருந்த ஷண்முகம் என்னும்  ஆஃபீஸ் பியூன் தான் வீட்டுக்கு வருவதகச் சொல்லி வந்தும் விட்டான்.    சின்னப் பையன். அம்மா  உங்களுக்குக்   காய்கறி வெண்ணெய் காப்பிப் பொடி ஏதாவது வேணுமா     நான் வாங்கித்தரட்டுமா. அய்யா  இன்னும் வரலைம்மா  என்றான்.   அன்றும் கழிந்தது. அடுத்த நாள் கவலையில்   என்      மனசே   உருகிக் கொண்டிருந்த நேரம் வந்தாரப்பா மனுஷன்.            ஷ்.....நோ டாக்  குளிக்கணும் தூங்கணும் என்றவரப் பார்த்து  ஆத்திரமும் அழுகையுமாக ஒரு  ஃபோன் பேசக் கூடாதா.  எங்க எப்படி இருக்கேள்னு ஒண்ணும் தெரியலை. என்ன  ஆச்சு என்றாபடி ஆளைப் பார்த்தேன்.உடன்பு முகம் வெள்ளைப் பாண்ட் சட்டை எல்லாம் கறுப்பாகி இருந்தது.முழங்கையில் ரத்தக் கட்டு வேற.   விடும்மா நீ போய்  சாப்பாடு எடுத்துவை. சாதமே பார்க்கமுடியலை அந்த               அத்துவானக் காட்டில் என்றபடி  குளிக்கப் போய்விட்டார்.  கூடவந்தவர்களிடம்       கேட்டு டீ போட்டுக் கொடுத்து பிஸ்கட்டும் கொடுத்தேன்.  அம்மா நம்ம அய்யா மாதிரி இனிமே   பர்க்கவே முடியாதுமா. நாற்பதடி ஆழம் அந்தக் கிணறு. தண்ணியில பாதி வெளியில பாதின்னு வண்டி சொருகிக் கிடுச்சும்மா.  அய்யா  தான்    இறங்கி    வண்டிக்கடியில் போய்  ஆக்சிலைக் கழட்டினார்  மா. அப்புறமாப் பெரிய பெரிய  கயிறு வாங்கி  அதை வெளிய கொண்டு வந்தோம். நடுல நடுல பக்கத்தில இருந்த டீக்கடையிம் டீயும் பொறையும் தாம்மா சாப்பாடு.   ஆக்சில் வெளில வந்தததும்.சரக்கெல்லாம் பத்திரமா  எடுத்துட்டாங்க. லாரியை எடுக்கணுமே.   அதற்காKஅ அங்க வேடிக்கை பார்க்கவந்தவர்களிடம் சொல்லி ஒரு ஐம்பது பேரைச் சேத்தாரு. எல்லோரிடமும் தடிம்னான கயிறுகளைக் கொடுத்து, நான் கீழ போயி  எவ்வளவு இடங்களில் முடிச்சுப் போடணுமோ போடுகிறேன். நான்  சொன்னவுடனே    தூக்கிடணும் என்றதும்.  நான் அவர்களை  இடை மறித்தேன். லாரியைத் தூக்கும்போது கீழ இருந்தாரா என்று. பின்ன எப்படிம்மா யாராவது அண்டக் கொடுக்குணுமில்லையா...............ஐய்யோ என்று பரிதவித்தது மனம். எத்தனை பாடுபட்டிருக்கும் அந்தக் கைகள்.  இறைவன் இந்த மாதிரி ஆத்மாக்களை உதவிக்காகவே அனுப்புகிறானோ என்று உள்ளுக்குள் அழுதேன். சரி நீங்க வீட்டுக்குப் போங்க. உங்கள் வீட்டிலியும்    காத்திட்டு இருப்பாங்க இல்லையா என்று அனுப்பிவிட்டு வந்து பார்த்தால்  மனுஷனைக் காணொம் அம்மா  அப்பா  தாச்சு எகிறது சின்ன வாண்டு.  வெகு நேரம் கைகால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தேன்.  அடுத்த நாள் தான் எழுந்தார்.                  பழைய உற்சாகம்,  அம்மா உனக்குத் தெரியுமா. அந்தக் காட்டில ஒரு விவசாயி எனக்குச்  சாதமும் குழம்புமாக  ஒரு இலையில் கொடுத்தான்.  அமிர்தம்.நீயும் அதுபோலக் குழம்பு பண்ணேன்   என்றபடி வண்டியில் ஏறிவிட்டார்,  மன்னாதி மன்னன்.

Tuesday, March 25, 2014

சில சில்.... நினைவுகள் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நினைவுத்தறி                 திருமணத்துக்கு  முதல் நாள்   மாப்பிள்ளை அழைப்பு.    பெருந்தேவிப் பெரியம்மா  இழைய இழைய வாரிப் பின்னி   தங்கமுலாம் பூசின குஞ்சலம்  வைத்து முடித்தார். அவருக்கு பூச்சடை தைக்க ஆசை.  மாப்பிள்ளை வீட்டாருக்கு அதெல்லாம் பிடிக்காது.  கண்ணுக்கு மையெழுதக் கூடாது. கோபுரம் மார்க்    கத்திரிப்பூ குங்குமம்  தான் வட்டமாக வைத்துக் கொள்ளணும். இந்த நீட்டப் பொட்டு  பாரிஜாத வழக்கம் இல்லை.  என்றெல்லாம் செய்தி வந்து சேர்ந்தது.   மையில்லாவிட்டால்  என்கண்கள் வெளியே தெரியாதே   என்று அம்மாவுக்குக் கவலை.    சரி.... செய்த அலங்காரத்தைக்   கலைக்கவேண்டாம். நாளைக்கு அவர்கள் இஷ்டப்படி  எல்லாம் செய்துவிடலாம் என்று பெரிய சிறிய தலைகள் பேசிக்கொண்டன.  பொண்ணைப் பார்க்கணும்.  என்று கனத்த குரல் ஒரு நடுவயது மாமி. ஒட்டியாணனும் வைரநெக்லஸும் ஆக நான் இருந்த  அறைக்கு வந்தார்.     என் தோழிகள் சிலபேர் நான் எந்த ஜிமிக்கி போட்டுக் கொள்ளவேணும்கற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.வைரத்தோடோ என் காதை அழுத்திக் கொண்டிருந்தது. அதை அவிழ்த்து  இந்த  குட்டி ஜிமிக்கியைப் போட்டுக்கோ நாங்க விழாமப் பார்த்துக்கறோம்னு சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த அம்மா அப்போதான்  உள்ளே வந்தார்.        வந்தவர் முகத்தில் சிரிப்பே இல்லை.     நீதானா  ஆண்டாள்   என்றார். ஆமாம் என்றேன். நாட்டுப் புறமா  இருக்கே. ரேவதின்னு மட்டும் பத்திரிக்கையில் போட்டு இருக்கலாம்.போனாப் போறது. இரண்டு பேர் வைத்துக் கொள்ளும் வழக்கம் இன்னியோடு போச்சு.    அதே போல இப்படிச் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது. கல்யாணத்துக்கு அப்புறமாக் கொஞ்சம் சிரிப்பைக் குறைத்துக் கொள்......இன்னும் என்னென்னவோ புத்திமதிகள்.  எனக்கென்னவோ வருத்தம் வரவில்லை. பெரியவர்கள் இப்படி ஏதாவது சொல்வார்கள் என்று  நினைத்துக் கொண்டேன். என்    தோழிகளுக்கு வாயடைத்துப் போச்சு.                  என்னப்பா இப்படிப் பேசுகிறார்.யார் இவர் என்றெல்லாம்   கேட்டார்கள். தெரியாது.அவங்க வீட்டில அத்தை அந்த மாதிரி இருக்கும் என்று விட்டுவிட்டேன்.  மணமேடைக்கு  மாப்பிள்ளை வந்தாச்சு.      பொண்ணும் நிச்சய தாம்பூலத்துக்கு வந்து உட்கார்ந்து   சீர் எடுத்துக்கணும்னு செய்தி வந்தது.   அறையின்    இன்னோரு வாயில் வழியாக  நானும் வந்தேன். பின்னாலயே என் அன்பு மாமி. பயப் படாம புடவை தடுக்காம போ. அவர் சிரிச்சுண்டு இருக்கார் பார். என்றார்.  நான் நிமிரவில்லை. உட்கார்ந்து அங்கிருக்கும் சீர்வரிசைத்தட்டுகளை மலைப்புடன் பார்த்தேன் விதவிதமான புடவைகள். கைப்பைகள்  முத்து மாலை செட் .சின்ன ஒட்டியாணம். அப்போ  கொடியிடைதான்}}}}}}        இன்னும்  முந்திரி போன்ற  உலர்ந்த வகைப் பழங்கள். அழகிய  இரண்டு மல்லிகை மாலைகள் மொத்தம் பதினோரு தட்டு  ,காரைக்குடி பழுக்காமரம் என்று சொல்வார்கள். அதில் செய்தவை. தட்டுக்களின் வேலைப்பாடே        பிரமிக்கவைத்தது. அதற்குள் சபையில் சலசலப்பு.        பெரிய மனிதர்களின் அணிவகுப்பு. அப்பா வந்தார் மாப்பிள்ளைக் கொடுக்கவேண்டிய      மோதிரம் , சூட் வகையறா  எல்லாம்  வைத்து இவரிடம் நீட்ட இவரும் வாங்கிக் கொண்டு எழுந்துபோனார். என்னையும் எழுந்திருக்கச் சொல்லி பாட்டியிடமிருந்து குரல். நானும் பச்சை வைர ஊசிப் புடவையை வாங்கிக் கொண்டு   என் அறைக்குப் போனேன்.  இவ்வளவு    கனமான  புடவையைக் கட்ட மாமிமார்கள் உதவினார்கள்.   மலைத்துபோகாதே. மாப்பிள்ளைதான் முக்கியம். மறக்காதே  என்றதும் எனக்கு கொஞ்சம் மூச்சு வந்தது. மீண்டும் மேடை. மந்திரங்கள் பத்திரிகை வாசிப்ப். இப்போ இரண்டு பேரும் பெரியவர்களைச் சேவிக்கலாம். தனித்தனியா வாங்கோ.என்றதும் காதருகில் குரல். 

நீயும் என்னோடு மேடைக்கு   அந்தப் பக்கம் இருக்கும் வாசல்வழியாக வந்துவிடு.  என்று.  ஏழெட்டுப்படிகள். முதல் படி...... அவர் இறங்கப் பின்னால் நான்.    பயப்படாதே   எங்க கொஞ்சம் சிரித்துக்கோ.என்றதும் உடனே  சிரிப்பு வந்துவிட்டது. சட்டென்று இறங்கிப் போய்விட்டார். அதற்குள் அவரது சகோதரிகள் கலாட்டா. படியிறங்க இரண்டுபேருக்கும்  இத்தனை நேரமா. சிம்மு நாளைக்குத்தாண்டா கல்யாணம்  என்று ஒரே கூச்சல். எனக்கோ மனமே இலகுவாகிவிட்டது. உலகத்தையே    அடைந்த திருப்தி.    கடைசியில் பெரிய மாமி மட்டும் என்னைப் பார்த்து சிரித்தவண்ணம் சொன்னார். அவர் சொன்னார் நீ அப்படியே  மந்திரம் போட்ட மாதிரி    அவர்    பின்னால் போயிட்டயே.எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை   ம்ம்.அவ்வளவுதானா.  சரிசரி. இந்த ராத்திரி எங்களோடுதான் இருக்கணும் . வந்து சாப்பிடுகிற வழியைப் பாரு   என்று அழைத்துப் போனார். எனக்கு மட்டும் அந்த அன்புக் குரலே  காதில் ஒலித்தபடி இருந்தது.

Sunday, March 23, 2014

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கற்பனைக்குத் துணை எபியும் கீதா சாம்பசிவமும்

வெளிறிப்போன  பைன்  இலைகள்
பசும்பாலும்  கரும்புச் சர்க்கரையும் காஃபியும்
காபிக்குப் பிறகு  அரைமணியில் ஆரஞ்ச்
மாலைச் சூரியன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வாசனை வந்ததா

Saturday, March 22, 2014

சில சில் நினைவுகள் 1965

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நயகராவின்  பெரு மூச்சு வானை எட்டுமோ                                                                                அக்டோபர்  31 ஆம் தேதி   பெண்பார்த்தல். சம்பந்திகள் பேச்சு எல்லாம் முடிந்தது. நிச்சயம் எல்லாம் செய்ய வேண்டாம். என் சொல்  தான்   நிச்சயம். என்று ஆஜிப்பாட்டி சொன்னதற்கு என் பாட்டி கவலைப் பட்டார். இன்னிக்கே வெற்றிலை பாக்காவது மாற்றிக் கொள்ளலாமே   என்று  சொன்னார். பெற்றோருக்கு என் மாமியாரிடம் அளவு கடந்த பாசமும் மரியாதையும். கமலா  சொன்னால் சரிதான். நாங்கள் இன்றே  மதுரை திரும்புகிறோம்    என்று  சொல்லி விட்டார்கள். எனக்குச் சென்னையில் ஒரு சினிமா கூடப் பார்க்காமல் கிளம்புகிறோமே என்று வருத்தம்.   தை பிறந்ததும் திரும்பி வந்து புடவைகள் வாங்கலாம். மற்றதை மதுரையிலேயெ  முடித்துக் கொள்ளலாம் என்று அப்பா சொல்லிவிட்டார்.  நானோ என்  தனி உலகத்தில் இருந்தேன்.     திருமணமா எனக்கா. என்று ஆச்சரியம்.    மகா பதவிசாக எல்லோரையும்  வணங்கிவிட்டு வந்த டாக்ஸியில் ஏறி அமர்ந்து எழும்பூர் வந்தோம். வழக்கம்போல் ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டேன்.  அம்மா  வழக்கம்போல் ..எட்டிப் பார்க்காதே. கண்ணில புகை விழும்.  என்று சொல்லிய வண்ணம் தூங்க முயற்சி செய்தார். நான் செங்கல்பட்டு  ரயில் நிலையத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று முதல் நாள் பார்த்த உருவம்    என்னையே   பார்த்தவண்ணம்  என் ஜன்னலைக் கடப்பது போலத் தோன்றியது. குப்பென்ற கலவரம் பற்றிக் கொண்டது. அம்மாவை எழுப்பி நான் பார்த்ததைச் சொன்னேன்.       சூச்சூ.கனவு காணாதே. அந்தப் பிள்ளை புதுக் கோட்டைக்கு வேறரயிலில் போயிருக்கும். நீ பேசாமல் தூங்கு. அசடு............}}என்றவண்ணம்     கண்ணை   மூடிக்கொண்டார்.   நானும் அதே பாதி கண்ணை மூடிக் கொண்டேன்.        ஐந்து நிமிடம் கழித்து அதே உருவம்    இன்னும் அருகாமையில் கடந்தது.  இந்தத் தடவை அப்பாவை எழுப்பினேன்.        அவர் மாதிரியே    என்று ஆரம்பித்ததும் அப்பா  முறைத்தார். இது பாரு சும்மா  தூங்கு. நேத்துதான் பார்த்திருக்கே  மனசில பதிந்து கூட இருக்காது.        கற்பனை      பண்ணாமல் சமத்தாத் தூங்கு     என்றவர் என்னைப் பார்த்துக் கொஞ்சம் மனம் தளர்ந்தார்.  சரி உன் திருப்திக்காகக் கீழே  இறங்கிப் பார்க்கிறேன் என்று       இறங்கினார். அப்பாவைத் தூங்கவிடாமல் இதென்ன பிடிவாதம்    என்று அம்மா       கடிந்ததைக் கூட நான் பொருட்படுத்தவில்லை.                    அப்பா  அவரைப் பார்க்கிறாரா       என்றே கண்களை     ஜன்னலோரம் பதித்தவண்ணம்        பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று என்னவோ செங்கல்பட்டிலேயே         டேரா  போட்டு     விட்டது   திருநெல்வேலி எக்ஸ்ப்ரஸ்.     அப்பா        நாங்கள் இருக்கும்      கம்பார்ட்மேண்ட் அருகிலேயே  நிதானமாக  உலாவினார்.அட}     நீங்களா       என்று  குரல் கேட்டது.   எனக்கோ படபடப்பு அதிகரித்தது.    நீங்களும் இந்த வண்டியில் வருகிறீர்களா. உங்களுக்கு  ராமேஸ்வரம்     வண்டியில் போகவேண்டாமா  என்று அப்பா கேட்க      முன் கேட்ட அதே கம்பீரமான குரல்.           இல்லை      மாமா, திருச்சி  வொர்க்ஷாப்பில் ஒரு வண்டி   நிற்கிறது. அதைப் புதுக் கோட்டை கொண்டு போகவேண்டும். அதனால்       இந்த வண்டியில் வந்தேன்.      உங்களைப் பார்த்ததில்  எனக்கும்     ஒரே ஆச்சரியம்.எல்லோரும் மதுரை போகிறீர்களா என்ற வண்ணம் பக்கத்தில் வந்தது அந்தக் குரல். அம்மா உடனே    புடவையை தோள் சுற்றிப் போர்த்துக் கொண்டு என்னை ஜன்னலோரத்திலிருந்து விலக்கி    நீ அப்புறம் பார்க்கலாம்.இப்போது நாங்கள் பார்த்துக் கொள்கிறொம் என்று         தள்ளி உட்கார வைத்தார். நான்       தான் சொன்னபேச்சைக் கேட்கும் நல்ல பெண்ணாச்சே. தள்ளி உட்காரவும் ரயில் கூவவும் சரியாக இருந்தது. மாமா ஏறிக் கொள்ளுங்கள்.    பிறகு பார்க்கலாம் என்ற சொல் காதில் விழுந்ததது.        அவர் தன் கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொள்ளவேண்டுமே     என்று கவலை எனக்கு.        அப்பா உள்ளெ வந்தார். என் கண் வெளியே. அம்மா அப்பாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு   சிரிப்பதைக் கூட  உணரவில்லை.           அவர்கள் தூங்கிய பிறகும் வண்டியின் தாளத்திற்கு   ஏற்ப மனம் பாடிக் கொண்டே வந்தது.          திருச்சி ஜன்க்ஷனும் வந்தது     .எதிர்பார்த்தபடி    அதே     கண்கள்           என்னை பார்த்தபடி விலகிச் சென்றன. இது என் பெற்றொருக்கும் ரொம்ப நாளைக்குத் தெரியாது.

Wednesday, March 19, 2014

மறுபாதி இல்லாவிட்டால் பெண்ணுக்கு மதிப்பில்லையா

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  நிறைய    கேள்விகள் மனதைத் துளைக்கின்றன...........தனிமை சகிக்க முடியாததுதான். அதை மீறி   மனவலிமையோடு வாழத்தான் விருப்பம்... உலகத்தில் கணவன் மனைவியரில் யாராவது ஒருவர் முந்த வேண்டியதுதான்..    மிஞ்சியவர்  எழுந்திருக்க நாளாகலாம்.   எத்தனையோ  நல்ல மனங்கள் சூழ இருக்கும்போது மனப் பாரம் வெகுவாகக் குறைகிறது.     ஒரு சில நிகழ்ச்சிகளைத்    தவிர.    எங்கள்   சிங்கத்தின்    உடல்    பயிற்சிக்கூட   நண்பன்  வெகு நாள்த் தோழன்                                  இருவருக்கும்     ஏதோ விட்டகுறை தொட்ட குறையாக ஒரு பந்தம்.     அவனுக்கு வயதாகியும் திருமணம் கூடவில்லை. நாங்கள் இருவரும் அவனைப் பார்க்கும்போதெல்லாம், தன் தாயைப் பற்றி வருத்ததோடு பகிர்ந்து கொள்வான்.   அம்மா எந்தப் பெண்ணுக்கும்  சரியென்று தலை ஆட்டுவதில்லை.   நான் இப்படியே    இருக்கவேண்டியதுதான் என்று. வீட்டில் அமரவைத்து இவர் ஆறுதல் சொல்வார்.     பல நாட்களாக அவனைக் காணவில்லை. பிறகுதான் தெரிந்தது ஐயா    காதல் வசப் பட்டிருக்கிறார்   என்று. எப்படியோ திருமண நிச்சயம் வரை வந்துவிட்டது.     நடுவில்   சிங்கம் இறைவனடி க்கு எழுந்தருளிவிட்டார். சேதி தெரிந்து வந்த பிள்ளையை நானும் என் புதல்வர்களும்   ஆறுதல் சொன்னோம். திருமணம் நடந்ததா என்று அறியப் போனவாரம்   தெரிந்த ஒரு நபரிடம்   இமெயில் அனுப்பிக் கேட்டிருந்தேன். ஓ அதெல்லாம் ஆகிவிட்டதே.    உங்களுக்கு  அழைப்பு வரவில்லையா. இணைய அழைப்பு எல்லோருக்கும் அனுப்பி இருந்தாரே என்று பதில் வந்தது.     பிறகு தெரிய வந்த சேதி, வெகுநாள் கழித்து நடக்கும் திருமணம். துக்கம் நடந்தவீட்டுக்கு  அழைப்பு வைக்க வேண்டாம் என்று நினைத்துவிட்டார்களாம்.     இதுவரை நான்                                                                                               இழந்ததைக் குறித்து அழுதிருக்கிறேனே    தவிர                                      தவிர  எந்த விதத்திலும்  என்னைப் பற்றித் தாழ்வாகவோ    வேறு விதமாகவோ  எண்ணியதே இல்லை.   இதென்ன பழங்காலமா.            நம் சோகம் நம்மட்டும். மேலே வரவேண்டும்.எத்தனையோ பெண்களுக்குக் கிடைக்காத நல்வரங்கள் எனக்கு அமைந்திருக்கின்றன. அவைகளைப் போற்றிப் பாதுகாத்திரு இறைவா என்று தான்  தினம் பிரார்த்தனை..  இன்னமும் அதுதான் வேண்டுதல்.     .  மணமக்கள் நலமே வாழ ஆசிகள்.  எல்லோரும் நலமே வாழப் பிரார்த்தனைகள்.

Monday, March 17, 2014

பங்குனி மாதப் பூரண நிலா

ஜன்னலுக்குள் வந்த நிலா
வாயில் கதவு வழியே  கோலம் போட்டது இந்த நிலா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நிலவே ஒரு பிரதி பிம்பம்.அதைப் படம் எடுத்தால் வீட்டுள் இருக்கும்  பிம்பங்களும்  அடக்கமாகிறது.

Thursday, March 13, 2014

பனியுடைய பங்குனி

உறைந்த தண்ணிர்க் குட்டை. அபாயகரமானது..மேலே பனித்துகள். நம்பிக்காலைவிட்டால் பனிக்குளத்தில் விழலாம்.
சுத்தப் படுத்தப் பட்ட சாலைகள்.
கோடைகாலத்துக்கான          வெளிப்புற  நாற்காலிகளும் மேஜையும் 
பள்ளிக்கூடம்    செல்லும் சாலையில்      பனி மரங்கள்.
பக்கத்துவீட்டு   ரெக்ஸுக்குப் பனியென்றால் கொண்டாட்டம்.  வேலியோரம் அதைப் பார்த்தால் விரைவில் உள்ளே  வந்துவிடுவேன்.
Add caption
வீட்டின் பின்புறம் வெள்ளைத் தோட்டம்
வீட்டின் முன்புறம் பனிவிழும் மரம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வாயிலில் பனிமலர் ஏந்தி நிற்கும் செடிகள்    சென்னையில்  வெய்யில் வந்துவிட்டதாகச் சொன்னார்கள்..  கோடையில் இளைப்பாற இந்தப் படங்கள்    துணையாக  இருக்குமோ.

Monday, March 10, 2014

உறவில்லாத உறவுகள்

என்ன  மயிலாரே சௌக்கியமா
இன்னும் கொஞ்சம் போடக் கூடாதா நாங்கள் பெரிய குடும்பம்
ரொட்டித் துண்டுகளுக்கு வந்த அணில். நீண்ட குளிர்காலத்தால் அவைகளின் உணவுகளுக்குத் தட்டுப்பாடு வந்துவிட்டதாம்.
எட்டிப் பார்க்கும் சூரியன்                                                                                           கதவுகளைத் திறந்துகொண்டு வெளியே போக முடியவில்லை. இல்லாவிட்டல் இன்னும் அழகான படங்கள் கிடைத்திருக்கும்.  வந்த அன்று இருந்த குளிருக்கு  இந்த வாரம் எவ்வளவோ முன்னேற்றம். கூடவே இருந்த மகன்களும் அம்மா ஓகே என்றதும் அவரவர் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள்.                                  சிறுவர்கள்      பாடுதான் சிரமம். நண்பர்கள் வீட்டுக்குப் போகத் தந்தை தாயின் வண்டித் துணை தேவைப் படுகிறது. சில குழந்தைகள் வீட்டில் சகோதர சகோதரியர்கள் இருந்துவிட்டால் பிரச்சினை. இல்லை                                               இப்போதைக்குச் சின்னவனுக்குப் பாட்டி துணை போதும்.   நீ  சோஃபாவில உட்கார்ந்துக்கோ. நான் விளையாடும்போது பார்த்துண்டு இரு உனக்கும் புரியும்<}}  தாத்தான்னா  கீழ உட்கார முடியும். உனக்கு முடியாது. மானேஜ் பண்ணிக்கலாம்    பாட்டி}}     பெரிய பேரனின் உலகம் மாறிவிட்டது.  அப்பப்போ  வந்து ஒரு    ஆத்மார்த்தமான அணைப்பு.  என் அறையில் துணைக்குப் படுத்துக் கொள்கிறான். ஏகப்பட்ட  படிப்பு,  சிநேகிதர்களுடன்  விசாரிப்பு. பாட்டு,அம்மா அப்பாவோடு  வாதங்கள்.  இவர்கள்   ஏன் என்றால் அவன் ஒய் நாட் என்கிறான். >(          நான் கண்டிப்பாகத் தலையிடுவதில்லை.}}}}                                       தினம் ஒரு தோழியாகப் பெண்ணின் நண்பிகள் வந்து  என்னைப் பார்த்து  அளவளாவிட்டுப் போகிறார்கள்.....   ஹவ் கான் மாமா   பாஸ் ஃஆப்   லைக் தட்.  ஹி வாஸ் ஸோ ஸ்ட்ராங்க்...............................இப்படிப் போகும்  .ஒரு டீ சில  நொறுக்குத் தீனிகள். அவரவர் வாழ்க்கையின் அன்றைய நடப்பு. ..   மாறுதல் நல்லதுதான்.                                                                      
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மோன மயிலும் யோகத் தவளையும்

Wednesday, March 05, 2014

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

புதிய  வானம்  புதிய  ஞாயிறு
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சூரியன்                      மறைந்தால் தான் என்ன.   மனம் விழித்திருக்கும் போது நல்ல நினைவுகள் எழட்டும்.  இங்கிருப்பவர்கள் வானுலகம் எய்தினவர்கள் அனைவரும் நல்வாழ்வு ஒஎற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.  என் அன்புக் கணவருக்கு 74 ஆவது பிறந்த நாள்.நல்வாழ்த்த்துகள்.     தான் பெற்ற செல்வங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆசிகள்   வழங்கட்டும்.

Monday, March 03, 2014

குளிரின் ஒரு பக்கம்

பூமிக்கும் வானத்துக்கும் நடுவில் மேகக் கடல்
கீழே  தெரியும் பனிக்கடல்
வீட்டின் முன்புறம் பனி விழுந்த  மலைகள்
பயணம் தயாராக  இன்னும் 5   நிமிடங்கள்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
son trying his hand  at the  snow b