எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Sunday, March 30, 2014
சிங்கம் பார்ட் 4
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
அதிகமாக வளர்ந்துவிட்ட போகென்வில்லா. இந்த சம்பவம் 1971இல் கோவையில் இருந்த போது நடந்தது..கோவையில். சின்னவனுக்கு ஒரு வயதிருக்கும் பெரியவர்கள் இருவரும் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கத்துக்கு முதல் மனைவி வேலை. பிறகுதான் நாங்கள்......|{~ காலையில் எட்டுமணிக்கு ஜீப் கிளம்பிவிட்டால் திரும்பி வரும் நேரம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்/ ஒரு நாள் இரவு வர நேரமாகிவிட்டது. வரும்போதே நாளிக்குச் சீக்கிரம் கிளம்பணும். ஈரோடு பக்கத்தில் லாரி கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாம். வெளில எடுக்கணும். லாரி ஓனர் ரொம்ப வருத்தப் படறார். சரக்கெல்லாம் மூழ்கிடும் போல இருக்கு. நானும் இன்னும் இரண்டு பேரும் போகப் போறோம் என்றதும் எனக்குப் பகீர் என்றது. கிணற்றுக்குள் விழுந்தால் கிரேன் மாதிரி எதாயாவது வச்சுத் தூக்கவேண்டியதுதானே நீங்க ஏன் போகணும் என்றெல்லாம் வாதம் செய்தேன்.பாவம்மா அவன். ஒரே ஒரு லாரிதான் வச்சிருக்கான் .கிரேன் வரவழைக்க எல்லாம் அவனிடம் காசு கிடையாது. என்னால் முடியும் எப்படியாவது வண்டியை எடுத்துவிட்டுத்தான் வருவேன் என்று தூங்கப் போய்விட்டார். எனக்குப் போனது தூக்கம். அடுத்த நாள் காலையில் உதவியாளர்கள் துணையோடு கிளம்பியாச்சு. சாயந்திரம் ஆச்சு. அடுத்த நாள் காலை வந்தது. அன்று இரவும் வரவில்லை. தொலைபேசி வசதியும் அப்போ கிடையாது. எதிர்வீட்டுப் பெரியவரும் அவர் மனைவியும் எங்களிடம் மிக அன்பாகப் பழகுவார்கள். அவர்களிடம் சொல்லி வொர்க்ஷாப்புக்குப் பேசலாமா என்று கேட்டேன். அப்போது கம்பெனியில் இருந்த ஷண்முகம் என்னும் ஆஃபீஸ் பியூன் தான் வீட்டுக்கு வருவதகச் சொல்லி வந்தும் விட்டான். சின்னப் பையன். அம்மா உங்களுக்குக் காய்கறி வெண்ணெய் காப்பிப் பொடி ஏதாவது வேணுமா நான் வாங்கித்தரட்டுமா. அய்யா இன்னும் வரலைம்மா என்றான். அன்றும் கழிந்தது. அடுத்த நாள் கவலையில் என் மனசே உருகிக் கொண்டிருந்த நேரம் வந்தாரப்பா மனுஷன். ஷ்.....நோ டாக் குளிக்கணும் தூங்கணும் என்றவரப் பார்த்து ஆத்திரமும் அழுகையுமாக ஒரு ஃபோன் பேசக் கூடாதா. எங்க எப்படி இருக்கேள்னு ஒண்ணும் தெரியலை. என்ன ஆச்சு என்றாபடி ஆளைப் பார்த்தேன்.உடன்பு முகம் வெள்ளைப் பாண்ட் சட்டை எல்லாம் கறுப்பாகி இருந்தது.முழங்கையில் ரத்தக் கட்டு வேற. விடும்மா நீ போய் சாப்பாடு எடுத்துவை. சாதமே பார்க்கமுடியலை அந்த அத்துவானக் காட்டில் என்றபடி குளிக்கப் போய்விட்டார். கூடவந்தவர்களிடம் கேட்டு டீ போட்டுக் கொடுத்து பிஸ்கட்டும் கொடுத்தேன். அம்மா நம்ம அய்யா மாதிரி இனிமே பர்க்கவே முடியாதுமா. நாற்பதடி ஆழம் அந்தக் கிணறு. தண்ணியில பாதி வெளியில பாதின்னு வண்டி சொருகிக் கிடுச்சும்மா. அய்யா தான் இறங்கி வண்டிக்கடியில் போய் ஆக்சிலைக் கழட்டினார் மா. அப்புறமாப் பெரிய பெரிய கயிறு வாங்கி அதை வெளிய கொண்டு வந்தோம். நடுல நடுல பக்கத்தில இருந்த டீக்கடையிம் டீயும் பொறையும் தாம்மா சாப்பாடு. ஆக்சில் வெளில வந்தததும்.சரக்கெல்லாம் பத்திரமா எடுத்துட்டாங்க. லாரியை எடுக்கணுமே. அதற்காKஅ அங்க வேடிக்கை பார்க்கவந்தவர்களிடம் சொல்லி ஒரு ஐம்பது பேரைச் சேத்தாரு. எல்லோரிடமும் தடிம்னான கயிறுகளைக் கொடுத்து, நான் கீழ போயி எவ்வளவு இடங்களில் முடிச்சுப் போடணுமோ போடுகிறேன். நான் சொன்னவுடனே தூக்கிடணும் என்றதும். நான் அவர்களை இடை மறித்தேன். லாரியைத் தூக்கும்போது கீழ இருந்தாரா என்று. பின்ன எப்படிம்மா யாராவது அண்டக் கொடுக்குணுமில்லையா...............ஐய்யோ என்று பரிதவித்தது மனம். எத்தனை பாடுபட்டிருக்கும் அந்தக் கைகள். இறைவன் இந்த மாதிரி ஆத்மாக்களை உதவிக்காகவே அனுப்புகிறானோ என்று உள்ளுக்குள் அழுதேன். சரி நீங்க வீட்டுக்குப் போங்க. உங்கள் வீட்டிலியும் காத்திட்டு இருப்பாங்க இல்லையா என்று அனுப்பிவிட்டு வந்து பார்த்தால் மனுஷனைக் காணொம் அம்மா அப்பா தாச்சு எகிறது சின்ன வாண்டு. வெகு நேரம் கைகால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் தான் எழுந்தார். பழைய உற்சாகம், அம்மா உனக்குத் தெரியுமா. அந்தக் காட்டில ஒரு விவசாயி எனக்குச் சாதமும் குழம்புமாக ஒரு இலையில் கொடுத்தான். அமிர்தம்.நீயும் அதுபோலக் குழம்பு பண்ணேன் என்றபடி வண்டியில் ஏறிவிட்டார், மன்னாதி மன்னன்.
கண்ணீர் வர வைச்சுடுத்து வல்லி. எவ்வளவு மன உறுதி, தைரியம், அடுத்தவங்களுக்கு உதவும் மனம்! நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. இதை எல்லாம் நினைக்க நினைக்க உங்களுக்குக் கொடுத்து வைச்சிருக்கு. மெல்ல மெல்ல எல்லாவற்றையும் பகிர்ந்துக்கோங்க.
தூக்கிடணும் என்றதும். நான் அவர்களை இடை மறித்தேன். லாரியைத் தூக்கும்போது கீழ இருந்தாரா என்று. //
படிக்கும் போதே நெஞ்சம் பதறுது லாரிக்கு அடியில் அண்டக்கொடுத்து கயிறு கட்டி தூக்க வசதி செய்த திறமையை எண்ணி வியக்க வைக்கிறது. தைரியம், மன உறுதி, பிறருக்கு உதவும் மனம் படிக்க படிக்க சார் அற்புதமானவர் அக்கா.
வரணும் தனபாலன். இப்பொழுது நினைத்தாலும் மனம் நடுங்குகிறது. உறுதியானவர்தான். அதுதான் என் தைரியத்தையும் எடுத்துப் போய்விட்டார்.உறுதியை எனக்குச் சொல்ல நேரமில்லை.
உண்மை கீதா. அசர மாட்டார். ரிஷப லக்னம்.சொன்னால் செய்யணும். இல்லாவிட்டால் சொல்லக் கூடாது. முதல்நாள் வரை அத்தனை புல்லையும் கத்தியால் வெட்டிச் சேகரித்து மாடு மேய்க்கிறவர்க்குக் கொடுத்தனுப்பினார். நானும் ஏதோ எழுதுகிறேன். நன்றி மா.
அன்பு கோமதி.அது போல உறுதியை அவர் வணங்கிய ராமர்தான் கொடுத்திருக்கணும். யாரும் காசுக்காகக் கஷ்டப் படுவதைச் சகிக்க மாட்டார். அதே போல எதற்கும் பயம் கிடையாது. நன்றி அம்மா.
வர்ணும் கொத்ஸ். அப்படித்தான் இருக்கணும் திடம் இருப்பதால்தான் இன்னும் வாழ்கிறேன். உறுதியும் வந்துவிடும். சோகமும் மறந்துவிடும். நல்ல நினைவுகளும் நிலைக்கும். என்ன கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
தான் செய்தது பெரிய விஷயமே இல்லை என்பது போல பேசியிருக்கிறார் உங்களிடமும், மற்றவர்களிடமும். இது மாதிரி வேலைகள் அவருக்கு சாதாரணம் என்று தெரிகிறது நீங்கள் சொல்வதை எல்லாம் வைத்துப் பார்த்தால். அப்பாடி.. குறுகலான ஒரு கிணற்றில் விழுந்த லாரியை வெளியே எடுப்பது என்பது நினைத்தே பார்க்க முடியாத விஷயமாயிருக்கிறது. கிரேட்.
1971-ல் என் குடும்பம் கோயம்புத்தூரில்தான் இருந்தது. நாங்கள் அப்போது சாய்பாபா காலனியில் இருந்தோம். அவ்வளவாக டெவலப் ஆகாத காலம். தண்ணீர் பிரச்சனை காரணமாக அங்கிருந்து நெசவாளர் காலனி குடிபெயர்ந்தோம். இராமலிங்க செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் நான் 6-ம் வகுப்பு படித்த காலம் அது......கோவை என்றதும் என் நினைவில் வந்தது
இங்கு வந்து 3 வருடங்கள் ஆகிவிட்டன கொத்ஸ்.அதற்குள் இரண்டு தொலைபேசியாவது மாற்றி இருப்பார்கள். உங்கள் ஃபோன் நம்பர் என்னிடம் இல்லை. யுகாதி நன்னாள் வாழ்த்துகள்.
அன்பு ஸ்ரீராம்.வேலையின் பரிமாணத்தைப் பற்றி யோசிக்கத்தான் செய்வார். இயல்பாகவே பயம் கிடையாது. அதனால் செயலில் இறங்கிவிடுவார். இந்த ஊரின் ஓரொரு சர்வீஸ் ஸ்டேஷன், பெரிய மாக் ட்ரக் இதெல்லாம்பார்க்கும்போது அவர் நினைவுதான் வருகிறது. வாழ்வில் ஒரே ஒரு ஆசை லாரி வாங்கி ஓட்டி உலகைச் சுற்றிப் பார்க்கணும்.
வரணும் திரு .பொன்சந்தர். நாங்கள் இராமலிங்கா நகரில் இருந்தோம்.அங்கேயும் தண்ணிர் கஷ்டம்தான். தினம் சிறுவாணித் தண்ணீர் ஒரு மாட்டுவண்டியில் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தார். அதை ஸம்ப்பில் கொட்டிக் கொள்வோம். ஒரு வண்டித்தண்ணீர் அப்போது ஐந்து ரூபாய். மிக நன்றி மா.
உண்மைதான் துரை.நல்ல தெளிவான சிந்தனை.அதைச் செயல்படுத்தும் திறமை எல்லாமே அவரிடம் உண்டு.நம் வீடு பார்த்திருக்கிறீர்கள் இல்லையா.அந்தக் குட்டியூண்டு இடத்தில் 3 லேலண்ட் சாஸிஸ் நிறுத்தி வேலை பார்ப்பார்.கூட வேலை செய்ய 4 ஆட்கள். இரவு பகல் ஒன்றும் கிடையாது.சொன்ன நாட்களில் வண்டிகளை அனுப்பியும் விடுவார்.நன்றி மா.
எத்தனை இளகிய மனசு... யாரோ வண்டி சிக்கிச்சுன்னு இருக்கமுடியாம தானே போய் இறங்கி வண்டிய மேலே ஏத்தி வீட்ல இருக்கும் உங்களை பரிதவிக்க பதைக்க வைத்தாலும் ரெண்டு நாள் கழிச்சு வந்தார் எத்தனை பெரிய தர்மம் அவர் பண்ணினது.. அவருடைய மன உறுதி போற்றக்கூடியது அம்மா.... என்ன சொல்வதுன்னே தெரியல.. படிச்சதும் அந்த மஹானுபாவனை நினைச்சுப்பார்த்தேன்.. எத்தனை கிருபை இருந்திருக்கவேண்டும் கடவுளுக்கு இவரிடம்.... மனம் நெகிழ வைச்சுட்டீங்கம்மா இந்த பகிர்வு பதிந்து.... அந்த காலத்துல மொபைல் வசதி இல்ல.. அவருக்கு என்னாச்சோன்னு பதைச்சு இருந்த உங்க நிலையையும் நினைச்சு பார்க்க வெச்சுட்டீங்க..
ஓரு பக்கம் அவர் பெருமை அளவிட முடியாத அளவுக்கு இருந்தது. அதை நான் உணர நிறைய வருடங்கள் சென்றன. எனக்கு வேண்டியது அவரது நலம் மட்டுமே. எத்தனையோ விதங்களில் அது அவருக்குத் தடங்கலாகக் கூட இருந்திருக்கலாம். வண்டியின் இரு சக்கரமும் ஓர் வழி போனால் இன்பமே .வீரமங்கையாகத் திகழும் பாக்கியம் எனக்கில்லை. பின்னாட்களில் நான் எடுக்க வேண்டிய முடிவுகளில் தீவிரமாக இருந்து என் னுள் இன்னோரு தைரியசாலியைக் கண்டு கொண்டேன். நன்றீ மஞ்சுமா. பெண்ணின் வேதனை பெண்ணுக்குத்தான் புரியும்.
29 comments:
அவரது உடல் + மன உறுதியை நினைத்து வியப்பாக உள்ளது அம்மா...
கண்ணீர் வர வைச்சுடுத்து வல்லி. எவ்வளவு மன உறுதி, தைரியம், அடுத்தவங்களுக்கு உதவும் மனம்! நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. இதை எல்லாம் நினைக்க நினைக்க உங்களுக்குக் கொடுத்து வைச்சிருக்கு. மெல்ல மெல்ல எல்லாவற்றையும் பகிர்ந்துக்கோங்க.
அப்பப்பா... என்ன ஒரு திறமை மற்றும் மன உறுதி....
படிக்கும்போதே அந்தக் காட்சியை நினைத்துப் பார்கிறது மனம்.....
//இறைவன் இந்த மாதிரி ஆத்மாக்களை உதவிக்காகவே அனுப்புகிறானோ என்று உள்ளுக்குள் அழுதேன்// நெகிழ வைக்கும் வரிகள்! பகிர்விற்கு நன்றி!
தூக்கிடணும் என்றதும். நான் அவர்களை இடை மறித்தேன். லாரியைத் தூக்கும்போது கீழ இருந்தாரா என்று. //
படிக்கும் போதே நெஞ்சம் பதறுது லாரிக்கு அடியில் அண்டக்கொடுத்து கயிறு கட்டி தூக்க வசதி செய்த திறமையை எண்ணி வியக்க வைக்கிறது.
தைரியம், மன உறுதி, பிறருக்கு உதவும் மனம் படிக்க படிக்க சார் அற்புதமானவர் அக்கா.
வரணும் தனபாலன். இப்பொழுது நினைத்தாலும் மனம் நடுங்குகிறது. உறுதியானவர்தான். அதுதான் என் தைரியத்தையும் எடுத்துப் போய்விட்டார்.உறுதியை எனக்குச் சொல்ல நேரமில்லை.
உண்மை கீதா. அசர மாட்டார். ரிஷப லக்னம்.சொன்னால் செய்யணும். இல்லாவிட்டால் சொல்லக் கூடாது. முதல்நாள் வரை அத்தனை புல்லையும் கத்தியால் வெட்டிச் சேகரித்து மாடு மேய்க்கிறவர்க்குக் கொடுத்தனுப்பினார். நானும் ஏதோ எழுதுகிறேன். நன்றி மா.
எதையும் மனத்தில் தீர்மானம் செய்து அழகாகப் ப்ளான் போட்டுத்தான் செய்வார். எனக்கு சுமையே இல்லாமல் எல்லா வேலையும் நடந்துவிடும்.நன்றி வெங்கட்.
வரணும் ஸ்ரீ சேஷாத்ரி. நரசிம்ஹ பரம்பரை. அப்படித்தான் இருப்பார்கள்.நன்றி மா.
அன்பு கோமதி.அது போல உறுதியை அவர் வணங்கிய ராமர்தான் கொடுத்திருக்கணும். யாரும் காசுக்காகக் கஷ்டப் படுவதைச் சகிக்க மாட்டார். அதே போல எதற்கும் பயம் கிடையாது. நன்றி அம்மா.
இதுவரை நீங்க எழுதினதுல இதுதான்மா பெஸ்ட். தைரியத்தை எடுத்துக் கொண்டு போகலை. அவரோடதையும் சேர்த்து உங்க கிட்ட குடுத்துட்டுதான் போயிருக்கார். டேக் கேர்.
வர்ணும் கொத்ஸ். அப்படித்தான் இருக்கணும் திடம் இருப்பதால்தான் இன்னும் வாழ்கிறேன். உறுதியும் வந்துவிடும். சோகமும் மறந்துவிடும். நல்ல நினைவுகளும் நிலைக்கும். என்ன கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
ஒரு நிமிசம் என் இதயம் துடிப்பதை நிறுத்திருச்சு.
ஹப்பா........... என்ன ஒரு ஆளுமை!!
Great Soul!
தான் செய்தது பெரிய விஷயமே இல்லை என்பது போல பேசியிருக்கிறார் உங்களிடமும், மற்றவர்களிடமும். இது மாதிரி வேலைகள் அவருக்கு சாதாரணம் என்று தெரிகிறது நீங்கள் சொல்வதை எல்லாம் வைத்துப் பார்த்தால். அப்பாடி.. குறுகலான ஒரு கிணற்றில் விழுந்த லாரியை வெளியே எடுப்பது என்பது நினைத்தே பார்க்க முடியாத விஷயமாயிருக்கிறது. கிரேட்.
அம்மா, இங்கதானே இருக்கீங்க? முடிஞ்சப்போ போன் பண்ணுங்க. நம்பர் இருக்குல்ல?
1971-ல் என் குடும்பம் கோயம்புத்தூரில்தான் இருந்தது. நாங்கள் அப்போது சாய்பாபா காலனியில் இருந்தோம். அவ்வளவாக டெவலப் ஆகாத காலம். தண்ணீர் பிரச்சனை காரணமாக அங்கிருந்து நெசவாளர் காலனி குடிபெயர்ந்தோம். இராமலிங்க செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் நான் 6-ம் வகுப்பு படித்த காலம் அது......கோவை என்றதும் என் நினைவில் வந்தது
ஆமாம் துளசி. அமைதியான ஆளுமை. தற்பெருமை கிடையாது. எனக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை.
இங்கு வந்து 3 வருடங்கள் ஆகிவிட்டன கொத்ஸ்.அதற்குள் இரண்டு தொலைபேசியாவது மாற்றி இருப்பார்கள். உங்கள் ஃபோன் நம்பர் என்னிடம் இல்லை. யுகாதி நன்னாள் வாழ்த்துகள்.
அன்பு ஸ்ரீராம்.வேலையின் பரிமாணத்தைப் பற்றி யோசிக்கத்தான் செய்வார். இயல்பாகவே பயம் கிடையாது. அதனால் செயலில் இறங்கிவிடுவார். இந்த ஊரின் ஓரொரு சர்வீஸ் ஸ்டேஷன், பெரிய மாக் ட்ரக் இதெல்லாம்பார்க்கும்போது அவர் நினைவுதான் வருகிறது. வாழ்வில் ஒரே ஒரு ஆசை லாரி வாங்கி ஓட்டி உலகைச் சுற்றிப் பார்க்கணும்.
வரணும் திரு .பொன்சந்தர். நாங்கள் இராமலிங்கா நகரில் இருந்தோம்.அங்கேயும் தண்ணிர் கஷ்டம்தான். தினம் சிறுவாணித் தண்ணீர் ஒரு மாட்டுவண்டியில் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தார். அதை ஸம்ப்பில் கொட்டிக் கொள்வோம். ஒரு வண்டித்தண்ணீர் அப்போது ஐந்து ரூபாய். மிக நன்றி மா.
பெயர்ல சிங்கமா இருந்துண்டு பலத்துல யானையா இருந்துருக்கார். அவரின் நினைவுகள் நம்மை வழி நடத்தும்!
மாமன்னரேதான். மற்றவருக்குத் தன்னலம் பாராது உதவும் உறுதி, தீரம்..
my goodness!
துணிவைக் காட்டிலும் திறமை வேணும் to pull this off. திறமையைக் காட்டிலும் தலைமை வேணும். amazing.
நன்றி தக்குடு. சொல்லிக் கொண்டே போகலாம் .அதுவே பாரமாகிவிடுகிறது சிலசமயம்.
நன்றி ராமலக்ஷ்மி. தன்னலம் என்பதே கிடையாது.எளிமையும் கூட. சிலபேருக்கு வாய்த்த ஆளுமை.
உண்மைதான் துரை.நல்ல தெளிவான சிந்தனை.அதைச் செயல்படுத்தும் திறமை எல்லாமே அவரிடம் உண்டு.நம் வீடு பார்த்திருக்கிறீர்கள் இல்லையா.அந்தக் குட்டியூண்டு இடத்தில் 3 லேலண்ட் சாஸிஸ் நிறுத்தி வேலை பார்ப்பார்.கூட வேலை செய்ய 4 ஆட்கள். இரவு பகல் ஒன்றும் கிடையாது.சொன்ன நாட்களில் வண்டிகளை அனுப்பியும் விடுவார்.நன்றி மா.
எத்தனை இளகிய மனசு... யாரோ வண்டி சிக்கிச்சுன்னு இருக்கமுடியாம தானே போய் இறங்கி வண்டிய மேலே ஏத்தி வீட்ல இருக்கும் உங்களை பரிதவிக்க பதைக்க வைத்தாலும் ரெண்டு நாள் கழிச்சு வந்தார் எத்தனை பெரிய தர்மம் அவர் பண்ணினது.. அவருடைய மன உறுதி போற்றக்கூடியது அம்மா.... என்ன சொல்வதுன்னே தெரியல.. படிச்சதும் அந்த மஹானுபாவனை நினைச்சுப்பார்த்தேன்.. எத்தனை கிருபை இருந்திருக்கவேண்டும் கடவுளுக்கு இவரிடம்.... மனம் நெகிழ வைச்சுட்டீங்கம்மா இந்த பகிர்வு பதிந்து.... அந்த காலத்துல மொபைல் வசதி இல்ல.. அவருக்கு என்னாச்சோன்னு பதைச்சு இருந்த உங்க நிலையையும் நினைச்சு பார்க்க வெச்சுட்டீங்க..
ஓரு பக்கம் அவர் பெருமை அளவிட முடியாத அளவுக்கு இருந்தது. அதை நான் உணர நிறைய வருடங்கள் சென்றன. எனக்கு வேண்டியது அவரது நலம் மட்டுமே. எத்தனையோ விதங்களில் அது அவருக்குத் தடங்கலாகக் கூட இருந்திருக்கலாம். வண்டியின் இரு சக்கரமும் ஓர் வழி போனால் இன்பமே .வீரமங்கையாகத் திகழும் பாக்கியம் எனக்கில்லை. பின்னாட்களில் நான் எடுக்க வேண்டிய முடிவுகளில் தீவிரமாக இருந்து என் னுள் இன்னோரு தைரியசாலியைக் கண்டு கொண்டேன். நன்றீ மஞ்சுமா. பெண்ணின் வேதனை பெண்ணுக்குத்தான் புரியும்.
படிக்கும்போது மனம்நெகிழ்ந்துவிட்டது.
Post a Comment