![]() |
| பெல் ஹார்பர் மெரீனா Pier 66 Seattle. |
| Add caption |
| Add caption |
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.
பயணத்தின் மூன்றாம் நாள், சியாட்டில் நகரம் சுற்றி வரலாம்
என்று திட்டம்.
காலை உணவுக்கு நானும் சின்னப் பேரனும் முதலில் வந்து விட்டோம்.
எனக்குத் தேவையான ஓட்ஸ் கஞ்சி, பழங்கள் நிறைய இருந்தன.
சியாட்டில் காஃபிக்கு பெயர் பெற்றது.. தெர்மாஸ் எடுத்துப் போய்
இரண்டு மூன்று கப் எடுத்துக் கொண்டேன்.
பேரன் வாஃபிள்+ மேபிள் சிரப் , என்று அவனுக்குப் பிடித்த
மற்ற வகை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தான்.
நமக்கு அதெல்லாம் ஒத்துக் கொள்ளாதே.. என்று சுற்றிப் பார்த்தால், சுடச்சுட
சாதம் கொண்டு வந்து வைத்தார்கள். கூடவே நிறைய வேகவைத்த
காய்கறிகள்.
இண்டியன் ஃபூட் மாம் என்று சிரித்தாள்
அந்த உணவுக்கூடப் பெண்.
நான் பார்த்துக் கொண்டே இருக்கும் போதே ,இந்த ஊர்க்காரர்கள்
நிறைய டப்பாக்களில் எடுத்துச் சென்றனர் .
காலை உணவு ஃப்ரி என்பதால் சீக்கிரமே காலியாகிவிட்டது..
நானும் எங்கள் அறைக்கு இரண்டு டப்பாக்கள் நிறைய எடுத்து
வந்தேன்.
