Showing posts with label .அனுபவம். Show all posts
Showing posts with label .அனுபவம். Show all posts

Saturday, August 29, 2020

வலிமை தரும் பிரார்த்தனை

வல்லிசிம்ஹன்

இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்யும் போது
நம்மைச் சுற்றி இருக்கும் அத்தனை உயிர்களும்
அனுபவித்து
நன்மையை அடைகின்றன.
நம் கடமை அனைத்து உலகமும் நோயிலிருந்து விடுதலை
பெற வேண்டுவதே.
இந்த பிரார்த்தனைகளை அண்மையில் 
அருகில் இருக்கும் ஒரு அம்மாவுக்காகச் செய்து வந்தோம்.
அவரும் நல்ல நலம் பெற்றார்.

இன்னும் எத்தனையோ உயிர்கள் விடுபட வேண்டி இருக்கிறது.
தினமும் நம் பிரார்த்தனைகளில் 
அத்தனை நபர்களையும் இணைக்கலாம்.
நல்ல எண்ணமும், பிரார்த்தனைகளும்
நோயகன்ற உலகை உருவாக்கும்.
அவரவரின் குல தெய்வங்களை மனதில் நிறுத்தி
வேண்டிக் கொண்டால் எல்லா நன்மைகளும் 
துளிர்த்து  பிரம்மாண்ட விருக்ஷமாகி
நம் எல்லோரையும் காக்கும்.
வாழி நலன்.



Monday, August 03, 2020

வேலை சில நாள் .ஓய்வு இரண்டு நாட்கள்!

வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் காவேரி அன்னையின் அருள் என்றும் விளங்கட்டும் .
அன்னம்  பெருகி இல்லாமை எனபது இல்லாது போகட்டும்.
ஏழைகள் வயிறு வாடாமல் இறைவன்  ரட்சிக்க வேண்டும்.

விடாது கறுப்பு என்பது போல,  செருப்பு தடுக்கி  விழந்து பின் மண்டையிலும் முழங்காலிலும்
ஊமை அடி.
ஏற்கனவே அழகு. இப்போது மகளுக்கு வேலை வைத்தாகி விட்டது.

வைத்தியரிடம் சொல்லி அவர் சும்மா. இருக்க உத்தரவு போட்டார்.:) இதையும் கடப்போம்.

அவை

Saturday, July 18, 2020

வியாபாரி

வல்லிசிம்ஹன்

அனைவரும் நலமாக இருக்கப்     பிரார்த்தனைகள்.1973 இல் வந்த இன்னோரு படம் சௌதாகர்.
ஒரு வெல்ல வியாபாரியைப் பற்றிய கதை.

அமிதாப், நூத்தன்,பத்மா கன்னா மற்றும் குணசித்திர நடிகர்கள்
நடித்த  வித்தியாசமான படம்.
தன் காதலிக்கு மெஹர் ,வரதட்சிணை கொடுப்பதற்காக

இன்னோரு பெண்ணைத் திருமணம் செய்கிறார் மோதி.
அவள் அவர் கொண்டு வரும் பேரிச்சம்பழ ரசத்தைக்
காய்ச்சி, வெல்லம் செய்து கொடுக்க அதை விற்று,
பணம் சேர்ந்ததும்,
தலாக் சொல்லி விட்டு,
காதலியைக் கைப்பிடிக்கிறார்,.

இந்த துரோகத்தால் மனம் உடைந்து போகும்
மனைவியை இன்னோருவர் தன் குழந்தைகளுக்காகத் 
தன்னை திருமணம் சொல்லக் கேட்டுக் கொண்டதும்

வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார்.

காலம் மாறுகிறது.
மோதியின் காதலிக்கு வெல்லம் காய்ச்சுவது கை வரவில்லை.
வியாபாரம் சறுக்கி விடுகிறது.
 அவளிடம் ,தர்க்கம் செய்துவிட்டு, சாறு இருக்கும் பானைகளைக் கொண்டு
முதல் மனைவியின் கணவரிடம்
தயவாகக் கேட்கிறான்.

நல்ல மனிதர் அவர். வியாபார நீக்கு போக்குகள்
அறியாத அவர் அவனுக்குக் கனிவு காண்பிக்க,
நூதன் மறுக்க அந்த நேரம்
கண்ணீருடன் வரும் மோதியின் காதலியைக்
கண்டு மனம் கனிந்து அவளை அணைத்துக் கொள்கிறாள்.

பார்த்துக் கொண்டிருக்கிறான் வியாபாரி.
அவன் மனம் பதப் பட்டதா என்பது கேள்வியே.

வியாபாரி

Amazon.in: Buy Saudagar (video cd) DVD, Blu-ray Online at Best ...

Tuesday, June 23, 2015

நாங்கள் வாழ்கிறோம்


இந்தத் தம்பதியரை
 பாரீஸ்  நகரின் வெற்றி வளைவு+  நினைவு ஸ்தலம்
  ..அதன் உச்சியில் சந்தித்தோம்.
அன்று வெய்யிலின் அளவு அதிகமாக இருந்தது.
ஐரோப்பியர்களுக்கு அந்த வெயில் உற்சாகத்தைத்தான் கொடுத்தது.
எங்களுக்கு  தாகம் தாகம் தாகம்.

சின்னப் பயலுடன் மருமகள் கீழே தங்கி விட்டால். பேத்தியும் மகன்,சிங்கம் ,நான்   லிஃப்டில்
  ஏறி  மேலே வந்துவிட்டோம்.

எங்களுடன் வந்த இந்த வயதான (!)  தம்பதியரின் உற்சாகம்   மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது.

எங்களை அறிமுகம் செய்துகொண்டோம்.
  பிரெஞ்ச்  பெயர்கள் இரண்டு காதில் விழுந்தன.
புரிந்த மாதிரி தலையாட்டிக் கொண்டோம்.

குடும்பத்துடன் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா  என்று கேட்டார்கள்.
ஆமாம் என்றதும்  நாங்கள் இந்தியா வந்திருக்கிறோம்.

உஷ்ணம் தாங்கவில்லை. டெல்லி,தாஜ்மகால்,ஜெய்ப்பூர்
  பார்த்துவிட்டு வந்தோம்.
உங்கள் குடும்பமும்   இங்கே பாரீசில் இருக்கிறதா என்றதற்கு,
இல்லை என்று தலையசைத்தார்கள்.
எங்கள் மகன்  கென்யாவில்    அந்த ஊர்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு இருக்கிறான்.

நாங்கள் அருகில் மூல்ஹௌஸ்  நகரில் இருக்கிறோம்.
 உடலில் வலு இருக்கும்போது   கலைகளின்
   தலைநகரமான பாரீசுக்கு வருவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இரண்டு    வாரங்களாவது

 இங்கே இருப்போம். ஹோட்டல் விடுதி செலவெல்லாம் கிடையாது. சிநேகிதர்கள் வீட்டில் இருந்தபடி
 ஊர் சுற்றுவோம்.  என்றனர்.

முற்காலத்தில் நம் ஊரும் இப்படித்தானே இருந்தது.
ஒரு அத்தை, மாமா பெரியப்பா சித்தப்பா என்று யாராவது வருவார்கள், இருப்பார்கள். நாமும் அவர்கள் வீட்டில் போய்த் தங்குவோம்.

போன வருடம்  ஷான்
ஒரு  அறுவை சிகித்சை மேற்கொள்ள வேண்டி வந்தது. அதனால் வரமுடியவில்லை. அதை ஈடு கட்ட   இந்தத் தடவை மேலும் சில நாட்கள் இருப்போம் என்று அந்த அம்மா மகிழ்ச்சியோடு சொன்னார்.
எதோ இருதய சம்பந்தமான சிகித்சை என்பது  மட்டும் தெரிந்தது.

அவர் அதற்குள் குறுக்கிட்டு இதோ இவளும் மூட்டு அறுவை சிகித்சை செய்து கொண்டாள். வாக்கர்  வைத்துக் கொண்டாவது வருவேன் என்று பிடிவாதம் பிடித்து வந்துவிட்டாள்    என்று பெருமையாகச் சொன்னார்.

என் கால் வலியையும்  அதற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதையும் எண்ணிப் பெருமூச்சு விட்டேன்.:(
மனம் மார்க்கம் என்று யோசனை எங்கியோ போனது!!








எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Friday, August 08, 2014

ஸ்ட்ராஸ்பர்க் பிரான்ஸ் பயணம்

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption

நடைபாதைக் கடைகள்.

வெய்யிலைக் கண்டால் பரமசந்தோஷம் துணிகளுக்குக் கூட.!!!
சென்னைவெய்யிலுக்கு அனுப்பலாமா இந்தத் தொப்பிகளை?
 ப்ளாகர்   பிரச்சினையில் எழுதிய இரண்டு பதிவுகளும் காணாமல் போயின. இப்போது படங்களை மீட்டுப் பதிந்திருக்கிறேன்.பிரான்சில் உள்ள நகரம் ஸ்ட்ராஸ்பர்க்.

பனிரண்டாம் நூற்றாண்டு கலைப் பொக்கிஷங்கள் பலவற்றைப
பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்
ஸ்ட்ராஸ்பர்க் நகரம்

, பாசலிலிருந்து நூற்றறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

முந்தைய பயணங்களில் எங்களிடம் செங்கன் விசா இல்லை.

இந்தத் தடவை அதை எடுத்த ஆக வேண்டிய கட்டாயம்.

எல்லா ஐரோப்பிய நாடுகளும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவாக

அது நடை முறைக்கு வந்திருக்கிறது.

அதற்காகவே புதுப் பாஸ்போர்ட்டும் எடுக்கச் சொன்னார்கள். மார்ச் முதல் வாரம் கிளம்ப வேண்டியவர்கள்,

இன்னும் ஒரு மாதம் கழித்துத் தான் கிளம்ப முடிந்தது.

வந்ததிலிருந்து சின்னக் குழந்தையின் சளித்தொல்லை, பெரிய குழந்தையின்

பள்ளி வேலை என்று நாட்கள் கடந்தன.

மகனுக்கோ எங்களை ஒரு இடமாவது அழைத்துச் சென்று

வரவேண்டும் என்று ஆவல்.

ஸ்விட்சர்லாந்து மூன்று பக்கமும் மூன்று எல்லைகளைக் கொண்டது. மேலே வடக்கில் ஜெர்மனி.

கீழே இத்தாலி.

மேற்கே பிரான்ஸ் நாடு.

எல்லாம் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் வந்துவிடும்.

இத்தாலிக்கு மூன்று மணி பிடிக்கும்.

ரயில்களின்வேகம்

தெரிந்ததுதான்.
நேரம் தவறாமை. சுத்தம். இவை ரயில் பயணத்தை மேலும் ரசிக்கச் செய்கின்றன.
நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட ச்விட்சர்லாந்துக்கும் ,பக்கத்திலயே

இருக்கும் பிரான்சுக்கும் எவ்வளவு வேறுபாடு!

நம்ம கேரளாவும்,தமிழ்நாடும் போலத்தான்.

அங்கே ஸ்ட்ராஸ்பர்க் என்ற ஊருக்குப் போனால் பேத்தி பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் முன்னால் வந்துவிடலாம்
என்று திட்டம்.
நேரம் கழித்துத்தான் வந்தோம். பேத்தி கண்டு கொள்ளவே இல்லை.:)

நீ ஊருக்குப் போயிட்டயோன்னு நினைத்தேன் என்றாள்:)
ஏதாவது வாங்கிண்டு வந்தியா?????
ம்ம். இந்தாம்மா. தலைக்குக் கிளிப்.
டிராயிங் செய்ய  பெயின்ட்."
என்று எடுத்ததும் குஷியாகிவிட்டது.
எனக்கு இன்னும் பாஸ்போர்ட் வரலை தாத்தா. ஐ கானாட் கம் வித் யூ. 
சோ ஐ வில் நாட் கெட் அங்க்ரி. "ஒகே?

என்று தாத்தா
 முதுகில் தட்டிக் கொடுத்தாள் பெரிய மனுஷி.:)



.






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, August 19, 2013

அவர் டிஃபீட்டட் இல்ல?

எங்க வீட்டு மஹாலக்ஷ்மி

 மங்களகரமாகப் பண்டிகை   பூர்த்தியானது.
இனி வரிசையாக ஆவணி அவிட்டம், ஸ்ரீஜயந்தி ,பிள்ளையார் சதுர்த்தி என்று தொடரும்.

பெண்ணிடம் ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது,
பேரனும் வந்தான்.
யூ  நோ  வாட் பாட்டி?
என்ன செல்லம்.
ஐ   ஸா  யுவர் டிஃபீட்டட் ஃபாதர்.

??????????????????????????????????????
பெண்ணிடம் என்ன சொல்றான் உன் பையன் என்றால் அவள் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

சின்னப் பேரனுக்கு அவள் சொல்லிக் கொடுத்திருப்பது. இறந்துவிட்டார்(டெட்)
என்ற வார்த்தையைப் பயன்படுத்தாம.
அவருக்கு வயதாகி விட்டது.
ஹி காட்    டிபீட்டட் பை  ஏஜ்.
ஸோ இது மாதிரி ரொம்ப வயசானவர்களுக்கு  இந்த மாதிரி ஆகலாம். என்று சொல்லி இருக்கிறாள். வீட்டில் மாட்டியிருக்கும் பெரியவர்கள் படம் எல்லாம் அவன் பார்த்துக் கேட்டக் கேள்விக்கு அவள் சொன்ன பதில்.

என் மாமாவுக்கு உடல் நலம் குன்றி சரியாக் வீட்டில்  மெதுமெதுவாகக் குணம் அடைந்து வருகிறார்.
அவளுடன் மாமா தேவலை  என்றதும்,
இந்த வாண்டு கூட வந்துவிட்டது. ''ஹூ பாட்டி?''
மை   அன்கிள்''

ஹி இஸ்  நாட் டிஃபீட்டட்?
நோ . பகவான் காப்பாத்திட்டார்.
திச் இஸ்  நாட் ரைட். வென் யுவர் மாமாஸ்          ஆர்     நாட் டிஃபீட்டட்
வொய் டிட்    my mom's  maamaa got defeated. it is not fair:(

அதில்லப்பா. சிலசமயம்   இது போல ஆகும் . நோ மோர் க்வெஸ்டியன்ஸ்னு

நான் அடக்கிவிட்டேன். இது எந்தப் பக்கமெல்லாம் போகும்னு எனக்கும் தெரியும்:)

இதெல்லாம் முடிந்து நேற்று சதர்ன்ஸ்பைஸ் கடைக்குப் போயிருக்கிறார்கள் அம்மாவும் பிள்ளையும்.
அங்கே தெரிந்த  இளஞரும் வந்திருக்கிறார்.

கிருஷ்ணா  என்னை ஞாபகம் இருக்கா  என்று சிரித்தபடி கேட்டு இருக்கிறார்.
ஆஹ்ன் ஊன்ஹ்  என்று யோசித்துவிட்டு  ஐ நோ  யூ. யூ ஆர் மை பாட்டிஸ்அப்பா.  என்று பளீர் பதில் . அவர் திணறி விட்டார்.
வாட் வாட் என்று அவர் கேட்க
இவன் மீண்டும் சொல்ல
அவர் முகமெல்லாம் சிவந்து விட்டதாம். ஏன்  .........உன் அப்பான்னு கூடச் சொல்லலை. உங்க அம்மாவோட அப்பான்னு சொல்கிறானே
என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டாராம்..

என் பெண்ணுக்கோதீராத சிரிப்பு ஒரு பக்கம். அவஸ்தை ஒருபக்கம். அவன் ஏதோ நினைவில் சொல்கிறான். மன்னித்துவிடுங்கள் என்று பாதிப் பொருட்களை அப்படியே வாங்காமல் விட்டுவிட்டு வீட்டூக்குச் செல்ல
வண்டியில் ஏறினாளாம்.
பாதிவழியில் இவள் அவனைக் கேட்பதற்கு முன் அவன்  பதில் சொல்கிறானாம்.
He looks exactly like paatti's appa. maybe paatti's appa  got successful  HERE!!!
இப்பொழுது சிரிப்பாக இருந்தாலும்
பிறகு   அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கச் சொல்லி   இருக்கிறேன் .



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, March 16, 2013

ஆர்க்கிட்ஸ் தோழியின் தோட்டத்திருந்து

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption


நெடு நாளையத் தோழிக்கு  ஐம்பதாவது திருமண நாள் நடந்தேறியது.
அந்த தினத்தில் நாங்கள்
துபாயில் இருந்தோம்.

விழா அமோகமாக நடந்ததாக க்  கடிதம் அனுப்பி இருந்தாள்.

ஊரிலிருந்து வந்தபிறகு இன்றுதான் நேரம் கிடைத்தது.
பூங்கொத்தும்,  வாழ்த்து மடலும்,அவளுக்கு    மிகப் பிடித்த வளையலகளும்  வாங்கிக் கொண்டு சென்றோம் நானும் சிங்கமும். .

அவர்கள் வீட்டில்   செடி கொடிகள்   நிறைய உண்டு. தோழியின் கணவர்  ஆர்க்கிட் பூக்களை வளர்ப்பவர்.
இதற்காகவே  தாய்லாண்ட் ,சிங்கப்பூர் என்று சென்று வாங்கி

ஒரு   25 வருடங்களாகப்  பண்ணையாக வைத்து நடத்திவருகிறார்..
வீட்டைச் சுற்றிலும் நிழல் தரும் மரங்கள்.
ஆர்க்கிட் வளரவேண்டிய       உஷ்ண நிலையைக் கொண்டுவர ஏற்பாடுகள்..

அவைகளுக்காகத் தண்ணீர் ஏற்பாடு  தனி.

எப்படி இத்தனை சாத்தியமானது என்று கேட்டோம்.

செய்யும்  வேலையிலிருந்து      ஓய்வு பெற்றதும் முழு நேரம் இந்தக் குழந்தைகளைக்   கவனிப்பதையேத்    தொழிலாகக் கொண்டுவிட்டேன்.
வீட்டின் மேல்தளம் ,சுவர்கள்  அனைத்திலும்    படிகள் கட்டி எங்கும் இந்தச் செடிகள் நிறைந்திருக்கின்றன.
இந்த ஆர்க்கிடை வளர்ப்பது மிகச் சிரமம்  என்பது   தெரிந்த சமாசாரம்..


எத்தனை பொறுமையும் உழைப்பும் இந்த வளர்ப்பில் அவர் செலுத்தி இருக்க வேண்டும்.!!!

ஆச்சரியமாக இருந்தது.

மிகப் பெரிய வேலையில் இருந்துவிட்டு
ஓய்வெடுப்பது  பெரிய   மாற்றம்.
அந்த மாற்றத்தை  இந்தச்  செடிகளின் பராமரிப்புத்

தன்வாழ்க்கையில் பெருத்த நிம்மதியைக் கொடுப்பதாகச் சொன்னார்.
எங்களுக்கும் பரிசாக நல்ல வளர்ந்த ஆர்க்கிட் பூக்கள் நிறைந்த செடியைக் கொடுத்தார்..

மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பினோம்.







 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, October 05, 2011

மேல் நோக்கியும் பாயும் நீர்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அனைவருக்கும்  ஆயுத பூஜை நன்னாள் வாழ்த்துகள்.
என் இனிமைத் தோழி சாவித்திரிக்கும்  என்னைப் போலவே சர்க்கரை  
சேர்ந்த உடல் நலம்.
நவராத்திரிக்குத் தவறாமல் வந்து அழைத்துப் போவாள். 
வயதில் சிறிது மூத்தவளாக இருந்தாலும்
குறை நிறை பார்க்காத
 இனிமையான உள்ளம் கொண்டவள்.

இருதய பைபாஸ் செய்த பிறகு தினம் தோறும் இரண்டு மைல்
களாவது நடப்பது என்ற  கொள்கையோடு,  
கபாலியையும் கற்பகத்தையும்  போய்ப் பார்த்துவிட்டுத்தான் வருவாள்.
ஊரிலிருந்து திரும்பியதும்   சாலையில் சந்தித்தபோது படு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த சிநேகிதி நவராத்திரிக்கு வராமல் எங்கே 
போனாள் என்று ஒரே வியப்பு .வீட்டிற்குத் தொலை பேசினால்
மருமகள்தான் எடுக்கிறார்.

''அம்மா உடல் நலம் சரியில்லாமல் இசபெல்லாவில் இருக்கிறார். ஏதோ ஈகோலி
அலர்ஜியாம்''
என்றதும் எனக்கு நிலை கொள்ளவில்லை.
ஏற்கனவே சர்க்கரை நோயாளி. வயிற்றுப் பாதிப்பும் சேர்ந்தால்
ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவும் கூடுமே என்ற கவலை சூழ்ந்து கொண்டது. 35  வருடப் பழக்கம்
என்னைச்  சும்மா இருக்க விடவில்லை.

போய்ப் பார்க்கலாமா என்றால் அனுமதி  இல்லை.
வாயில் கேட்டருகே நின்று சாவித்திரியின் கண்வருடன் விசாரித்துக் கொண்டிருந்தபோது ,
 மருமகள் வசு  கையில் கூடையோடு  எங்களைத் தாண்டிப் போனாள். தன் மாமனாரைப் பார்த்து
'' அப்பா நீங்கள் வீட்டில் இருந்க்கள் .இன்று முழுவதும்   அம்மா என் பொறுப்பு'' என்று
விரைந்துவிட்டாள்.

வேலைக்குப் போகும் மருமகள், வீட்டில் இரண்டு குழந்தைகள்,கணவன் எல்லாரையும் கவனித்துவிட்டு
மாமியாரையும்
கவனிக்கப் போகும் வசுவின்  அன்பு நெகிழ வைத்தது.
சாவித்திரியின் கணவரிடம்   அவரது  மருமகளை  மெச்சிக் கொண்டேன்.

அவள் எப்பொழுதுமே இப்படித்தான் மா. வேலைக்கோ பொறுப்புக்கோ அஞ்ச மாட்டாள்.
நல்ல பெண் எங்களுக்கு மருமகளாக வாய்த்தது
எங்கள் பாக்கியம்  என்றவரை மேலும் நிறுத்தி வைக்காமல்
வீட்டிற்கு அனுப்பினேன்.
இதோ இன்று ,
என் தோழி  வீடு வந்து விடுவாள்.
விழா சிறக்கும்.
 .


Wednesday, September 28, 2011

திருப்பதி சென்று திரும்பி வந்தால்......




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நல்ல படியாக உற்றார் ஒத்துழைப்புடன் பெரியோர் ஆசிகளுடன்  சிரஞ்சீவி வைகுந்தனின்
ஆண்டு நிறைவு நடந்தேறியது.


என் நண்பர்கள் என்று ஒரு  நூறு பேரையாவது அழைத்துச் சிறப்பாக
அமைய வேண்டும் என்ற ஆசை.


அதற்கும் ஒரு நாள் வரும் என்றே நினைக்கிறேன்.

ஆண்டு நிறைவு பூர்த்தியான குழந்தைக்கு  திருமலை சென்று முடி இறக்குதல் வழக்கம்.

ஏற்கனவே ஏற்பாடு செய்தது போல சில நண்பர்களால் வர முடியவில்லை.
அதனால் ரயிலில்  செல்லும் யோசனையைக் கைவிட்டு

டிராவல்ஸ் வண்டி ஏற்பாடு செய்து கொண்டோம்.
மதியம் 3 மணிக்குக் கிளம்பினோம்.
ஆஹா.பயணம் என்றால் சாலையில் மிதப்போம் என்று நான் நினைக்கவில்லை.
வண்டி ஓட்டி அப்பொழுதுதான்   திருப்பதியிலிருந்து
திரும்பி வந்திருந்தாராம்.

எங்களை வண்டியில் திணித்த கையோடு விமானத்தை ரன்வேயில் கிளப்புவது போல
ஒரு உறுமலோடு அந்த இன்னோவா வைக் கிளப்பினதுதான் தெரியும்.
சென்னைத்தெருக்களில் இத்தனை வேகமாக வண்டியை ஓட்டக் கூடியவரை இப்போதுதான் பார்க்கிறேன்:(

மருமகள் , பேரனை மார்போடு இறுக்கிக்  கொண்டுதான் பயணம் செய்தாள்.
பல்வலி உடம்பு வலியோடு புறப்பட்டு வந்த சிங்கத்துக்கு அது கூட மறக்கும் அளவிற்கு வேகம்.!!

நடுவில் ஒரே ஒரு இடத்தில் நிறுத்தி ஓய்வெடுத்தோம். மீண்டும் சீறியவண்டிக்கு இருட்டில் கண்
 தெரியாததால் மெதுவாகச் செல்ல வேண்டிய அவசியம் வந்தது.
இலாவிட்டால் ஆந்திரவாடுகள்  ஒரு பத்து நபர்களாவது பரலோகம் போயிருப்பார்கள்.:(
''எங்க கம்பனில நாமே பெஸ்ட் ட்ரைவரு. மூணு மணில திருப்பதி. நாலு மணில ஹைதராபாது""
என்றேல்லாம் சொல்லிவந்தார்.

அதிகாலை 3 மணிக்கு வேங்கடேச  தரிசனம் முடிந்தது.
ஜெருகண்டி இல்லை.
அமைதியான  வரிசை. அவரும் கர்ப்பக் கிரகத்திலிருந்து
பெரிய பெருமாளாகக் கண் கொள்ளாமல் காட்சி அளித்தார்.

அவர் என்னைக் கண்டிப்பாகப் பார்த்திருப்பார். அது போதும்.
இவ்வளவு கால்வலி கைவலி, பணம் செலவழித்துப் போயும் அந்த ஒரு
செகண்ட் மட்டும் பார்த்தால் போதுமா.
வேற வழியே கிடையாதா. புரியவில்லை.

தங்கும் வசதிகளுக்குக் குறைவில்லை. இயற்கை வளங்களுக்குக் குறைவில்லை.
சாப்பாட்டுப் பிரச்சினை இல்லை.
சுற்றுலாத் தலமாகி விட்டது.அவ்வளவுதான்.

மலையெல்லாம் அவர்தான். காற்றும் மரமும் அவர்தான்.
திருமலை ஏழுமலைகளும் செழித்து நான் தான் அவன். அவன்தான் நாங்கள் என்று சொல்கின்றனவோ.

''திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
உன்னைப் பார்ப்பதற்குச்
சொல்லு வழி ..  கொஞ்சம் லேசா''
 இது எங்கள் பாட்டு இப்போது.
இரண்டு நல்ல வேலைகள் நடந்தன.
பேரன் கதறலுக்கு பயப்படாமல்  ,ஒரு சிறு கீறல் கூட
விழாமல்  முடிஅகற்றிய  அந்தக் கலைஞருக்கு மனம் நிறைந்த நன்றி.

எத்தனையோ சிரமம் இருந்தாலும், ஒரு க்ஷணமே அவனைப் பார்த்தாலும்
அந்தக் கருணை ஒன்றே போதும் என்று நினைக்க வைக்கிறானே
அந்த ஈசன்.
அந்தப் பெருமை மறக்க முடியாது.
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.

பி.கு
அன்பு கவிநயாவுக்காக
பாலாஜியும் ,திருமலாவும் படங்களாகப் பதிந்திருக்கிறேன்.;)

Posted by Picasa

Friday, September 09, 2011

காலங்கள், பயணங்கள்,அனுபவங்கள்

துபாயின் அழகு விமான நிலையம்
துபாய் மெட்ரோ
புதிய  கடிகாரம், காலம் மாறுகிறது:)
 பயணங்களும் முடிந்து  சென்னையும் வந்தாகிவிட்டது.
அரைமணி நேரத்தில் வழக்கமான பரிசோதனைகளை முடித்து வேலை வரும்போது நம்ம சென்னை எர்போர்டா  இப்படி மாறி இருக்கிறது ஒரே ஆச்சரியம்.

கும்பலிலும் அமைதி.
கசகசப்பு இல்லை. அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது.

சங்கீதாவில் வண்டியை நிறுத்தி ஆளுக்கொரு பொட்டலம் இட்டிலியும் சட்டினியும் வாங்கும் போது  விலை அதிகரிப்பு கொஞ்ச்சம் உரைத்தது:)

தினமணியும் ஹிந்து பேப்பரும் ஆன்லைனில் படித்துக் கொண்டு வந்ததால் அவ்வளவு அதிர்ச்சி இல்லை.

விமானத்தில் சில இந்தியர்களின் நடவடிக்கைகள் தான் வருத்தம்
கொடுத்தது.

ஏறியதிலிருந்தே அவர்கள்   மற்ற நபர்களைப பற்றி  கமென்ட்  செய்வதும். கொஞ்சம் உற்சாக பானம் உள்ளே  போனதும்

கொஞ்சம் பருமனாக இருந்த
 ஒரு அம்மாவை '' ஒரு டிக்கட்டுக்கு ரெண்டு பேரு வந்து இருக்காங்கன்னு சொன்னதும்
உரத்த குரலில் சிரிப்பதும்
கொஞ்சம் அமைதியைக்    கலைப்பதாகத் தான் இருந்தது. விடுமுறையைக் கழிக்கச் செல்லும் உற்சாகம் இருக்க வேண்டியதுதான்.
ஒரு பத்து நபர்கள்   இப்படி நடந்ததால்
ஒட்டுமொத்த இந்தியர்களையும்
  யாரும்   தப்பாக நினைக்கப் போவதில்லை.

எனக்குத் தான் அவர்கள் சொன்னது போல  "பெரிசு"க்கான புத்தி வந்துவிட்டது   என்று  நினைக்கிறேன்.;))


சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டார்கள்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, August 07, 2011

வீடு .....




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பயணங்கள்  ஆரம்பிக்கும் போது   உற்சாகம். உடல் களைப்பு
 தெரிவதில்லை..
மனம் நிறைந்த  அனுபவங்களுடன்  அடுத்த கட்டத்துக்கு வரும் போது
வீட்டை   நெருங்கும்  எதிர்பார்ப்புகளும்,சிறிதே அச்ச்சமும் எழுவது
பழகி விட்டது.

சுவிட்சர்லாந்த்  வந்து சேர்ந்தோம். இங்கேயும் வெயில் வரலாறு கானாததாம்:)
இன்று மழை உண்டு. அதனால்  வெப்பம் தணியும்.

முன்னைவிட

வயதானவர்களைப் பார்க்க  முடிகிறது.
இந்த கோடை
முடிந்ததும்  வழமையான   உற்சாகத்துக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
விடுமுறையில் சென்ற குழந்தைகள் வீடு திரும்ப நகரமும் உயிர் பெறும்-
சில மழைக் காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



Posted by Picasa

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...