Blog Archive

Monday, August 03, 2020

வேலை சில நாள் .ஓய்வு இரண்டு நாட்கள்!

வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் காவேரி அன்னையின் அருள் என்றும் விளங்கட்டும் .
அன்னம்  பெருகி இல்லாமை எனபது இல்லாது போகட்டும்.
ஏழைகள் வயிறு வாடாமல் இறைவன்  ரட்சிக்க வேண்டும்.

விடாது கறுப்பு என்பது போல,  செருப்பு தடுக்கி  விழந்து பின் மண்டையிலும் முழங்காலிலும்
ஊமை அடி.
ஏற்கனவே அழகு. இப்போது மகளுக்கு வேலை வைத்தாகி விட்டது.

வைத்தியரிடம் சொல்லி அவர் சும்மா. இருக்க உத்தரவு போட்டார்.:) இதையும் கடப்போம்.

அவை

18 comments:

Angel said...

வல்லிம்மா உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க .சீக்கிரம் சரியாகும் .

KILLERGEE Devakottai said...

கவனமாக இருங்கள் அம்மா, இறைவன் துணை கிடைக்கட்டும்.

நெல்லைத் தமிழன் said...

நீங்கள் மெலிதாக ஆகிவிட்டீர்கள்.

என் பெண், ஃபோட்டோ எடுக்கும்போது கேமராவை எப்போதும் பார்க்கக்கூடாது. இயல்பா இருக்கிற மாதிரி எடுக்கணும் என்பாள். அதுபோல நீங்கள் இயல்பாக இருக்கும் படம் அழகாத்தான் இருக்கு.

கோமதி அரசு said...

அக்கா கவனமாக இருங்க. விழுந்து எழுந்து கொள்வது நமக்கு புதிது இல்லை இருந்தாலும் வயதாக வயதாக கீழே விழுவது அடிபடுவது கஷ்டம் .

இறைவன் அருளால் ஊமை அடி விரைவில் குணமாகி விடும்.

ஒய்வு எடுங்கள் .
அனைவரையும் இறைவன் தான் காக்க வேண்டும்.

மனோ சாமிநாதன் said...

பின் மண்டையில் அடி என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்! வருத்தமாக உள்ளது. அதிகம் அடியில்லையே? சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா? காலிலும் அடி இருக்கிறதே. நடக்க முடிகிறதா? கவனமாக உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஐயோ.. கீழே விழுந்து விட்டீர்களா? மனதுக்கு ரொம்ப கஸ்டமாக உணர்கிறேன். உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதிகம் வேலைகளை பண்ண வேண்டாம். மருத்துவர் சொல்படி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். வலிகளிலிருந்து பூரண குணமடைந்து பழையபடி ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை மனமாற
பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.

Bhanumathy Venkateswaran said...

நீங்கள் கீழே விழுவதைப் பற்றி முன்பு ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.(சாருஹாசன் காயத்தை துடைத்துக் கொள்ள கர்சீப் கொடுத்தார் என்று) இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது. பின் மண்டையில் வேறு அடி  என்கிறீர்களே? உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். விரைவி குணமடைய சாய்ராமை வேண்டுகிறேன். 

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
மிக மிக நன்றி மா. அதிர்ச்சியிலிருந்து மீளவே நேரம்
அதிகமாகிறது.
இறைவன் காக்கின்றார்.
அன்புக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி.

மீண்டு வருகிறேன். நன்றி ராஜா.
இறைவன் எப்பொழுதும் நம் பக்கம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நான் வெளியிலிருந்த குருவிகளைப் பார்த்தவண்ணம் இருந்தேன்.
பெண் படம் எடுத்துவிட்டாள்.
சொல்லி இருந்தால் சிரித்திருப்பேனே
என்று குறைப்பட்டுக் கொண்டேன்.

:) ஏதோ பருவம் பன்றி என்பார்கள்.
வயதாவதுற்கும் ஒரு நன்மை கிடைக்கிறதுமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி கோமதி,
ஏதோ சில உதவிகள் மகளுக்குச் செய்து வந்தேன். மூன்று நாட்களாக அதுவும் இல்லை.
இத்துடன் போச்சே என்று
நிம்மதி.
இனி எல்லாம் நலமாகட்டும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,

தலைவலிக்காகத்தான் டாக்டரை அணுகினோம்.
இன்று தேவலை. மண்டை ஓடு கெட்டி.
இப்போது கவனம் மிகத் தேவை.
கையில் எதையும் வைத்துக் கொண்டு படி ஏறக்கூடாது என்பது தெரிகிறது.
பட்டால் தான் புரிகிறது.
அன்பு மனோ , நான் நன்றாக இருக்கிறேன் மா. கவலை வேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலாமா,

கவலை வேண்டாம் .நல்ல மருந்துகள் கொடுத்திருக்கிறார்.
தூங்கி விடுகிறேன்.

நடப்பதற்கும் பேரன் துணை.
எல்லாம் இறைவனின் ஆசிகள்.
இத்தனை நல்ல அக்கா தங்கைகள் இருக்கும் போது எனக்கென்ன கவலை.
நன்றி மா. நலமே வாழ்க. பேத்திக்கு ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா,
மிக நன்றி மா. ஆமாம் அது நடந்தது மெரினாவில்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும் பழமொழி சிறு செருப்பும்
மனிதரைத் தடுக்கிவிடும் புது மொழி என்று வைத்துக் கொள்வோம்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு
நிறைய விழுந்தாச்சு. இருந்தும்
புத்தி வரவில்லை பாருங்கள்.
ஆமாம் பின் மண்டையில் பட்டது வலிக்கத்தான் செய்கிறது.
அதிக நேரம் படிக்கவும் வழியில்லை.

சரியாகிவிடும் .கரிசனமாக வந்து படித்து
கருத்தும் சொல்வது ஒன்று தான் நான் இணையத்தில் சம்பாதித்த
நட்பு.இறைவன் காக்கட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா உங்கள் உடல் நலம் குறித்து அறிந்தேன். கவனமாக இருங்கள். உங்கள் உடல் நலம் விரைவில் நன்றாகிட பழையபடி ஆகிட இறைவனிடம் பிரார்த்தனைகள்.

உங்கள் உடல் நலம் தான் முக்கியம்

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இப்போ எப்படி இருக்கீங்க

படத்தில் ரொம்ப இளைச்சுப் போயிருப்பது போல இருக்கு.

கவனமா உடம்பைப் பார்த்துக்கோங்க பிரார்த்தனைகள் எல்லாம் சரியாகிவிடும் பாருங்க!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,
நன்றி ராஜா. ஓய்வு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

வலி எவ்வளவோ குறைந்து விட்டது.
சுவர் அதற்குப் பிறகு சித்திரம் என்று
புரிந்து கொண்டேன்.

கவனமாக இருக்கிறேன் அப்பா.
உங்கள் அன்புக்கு மிக நன்றி. இறைவன் காப்பான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
வலிகள் குறைந்து வருகின்றன.
வாட்ஸாப் மட்டும் பார்க்கிறேன்.
கண் சோர்ந்து போவதால்
படிப்பதையும் நிறுத்தி இருக்கிறேன்.
ஏற்கனவே எழுதி வைத்ததைப் பிரசுரம் செய்கிறேன்.
இத்தனை அன்பை ஆண்டவன் அள்ளித் தருகிறான்.
அதற்கே கொடுத்து வைத்திருக்கணும்.
நன்றி கண்ணா.