Blog Archive

Wednesday, August 05, 2020

குடியிருந்த கோவிலும் மகனும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வீடு தேடிக் கொண்டிருந்தான் சங்கர்.  கோவில்பட்டியை
 கிளம்பும்போது அம்மாவும் ,மனைவியும் ,தனித் தனியே சொன்னது  மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  எந்த வீடு பார்த்தாலும் எனக்கொரு அறை இருக்கட்டும்டா. அப்பா படத்துக்கும்,என் பாகவத,மகாபாரத,ராமாயணம் புத்தகங்கள்  வைக்க ஒரு அலமாரி.ஒரு கட்டில்  ,துணிமணி வைக்க ஒரு அலமாரி இது போதும்டா.                
அடுத்த  வசனம் பெண்டாட்டியிடமிருந்து. ''எங்க ?நாம நாலு பேரு இருக்கிற மாதிரி வீடு பாருங்க போதும். அம்மா என்ன நம்ம
கூ டவேவா இருக்கப் போறாங்க . இரண்டு மாசம் இருந்தா அதிசயம்.கூடத்தில் படுத்து,டிவி பார்த்தால் போதும் அவங்களுக்கு. அடுத்தாப்பில மதுரைத் தம்பி வீட்டுக்குக் கிளம்பிடுவாங்க. அங்கதான் அவங்களுக்கு ஒட்டும். நமக்கும் அதிகமா வீட்டு வாடகை கொடுக்க வேண்டாம்.கட்டுப் படியாகாது பார்த்துக் கோங்க.  
யாருடைய கட்டுப்பாட்டுக்கும் வருகிற மாதிரி வீடுகள் இல்லை.  தாம்பரம் தாண்டி  பார்க்கிற  வீடுகள்  கூட 4000த்துக் குறைந்து இல்லை. அவைகளிலும்  ஒரு சமையலறையும், ஒரு படுக்கை அறையும்  ,ஒரு வரவேற்பறையும் தான் கொண்டிருந்தன.
தாம்பரத்தையும் தாண்டி  பெருங்களத்தூர்  போயும் பார்த்தான்.
இந்தக் கதை நடந்தது 2004 ஆம்   வருடம்.

No comments: