
கயல்விழி முத்துலட்சுமி! நன்றி. ''வாம்மா மின்னலு'' ......இந்த பட்டம் என்னிடம் எப்பவும் தங்கணும்:)
படிப்பவர்களெல்லாம் முதலில் கயல்விழி முத்துலட்சுமியின் இன்றைய பதிவான இஷ்டமொவும் கஷ்டமொவும் (தட்டச்சுப் பிழை)சிறுமுயற்சியில் படித்து விட்டு மேலே படிக்கவும்.
இப்படியெல்லாம் இளைய தலைமுறை யோசிப்பதைப் பார்த்துப் படித்து ரொம்பவே பொறாமையா இருக்கு. ஆமா, பொறு ஆமை.
ஆமை வேகத்தில டெரர்(ஆயில்யன் உபயம்)காண்பிச்சுக் கொண்டிருந்த என் பதிவு இப்ப,
வெரசா (விரைவாக)த் திறக்கிறதாம்.
ஆகக் கூடி இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேன்னு யோசித்துப் பார்த்தா
எதிராப்பில இருக்கிற காளிகாம்பாள் காலண்டர்தான்னு நினைவு வந்தது.
சாமி கடவுளே, ரத்தப் பரிசோதனை நல்ல ரிசல்ட் வரணும்னு கும்பிட்டுக் கிட்டேதான் எழுந்தேன்.
கயலு எழுத்தைப் பார்த்ததும் மனசு லேசாகிவிட்டது.
உண்மையாகவே மிகவும் நெகிழ்வா உணர்கிறேன்.
கயல் நன்றி .
இதை நினைத்தே இன்றையப் பொழுதைச் சுலபமாக ஒட்டி விடுவேன்.
ஒ !! இன்னும் ஒன்று சொல்லியே ஆகணும்.
இன்று மருத்துவ மனையில் ஒரு வயதான கண் சரியாகத் தெரியாத எழுபத்தைந்து வயது மங்கையைப் பார்த்தேன்.
மங்கை என்றுதான் அவர்களைச் சொல்லணும்
எட்டு மணி வரை காப்பி குடிக்காமல் இருக்கணும்னு நொந்து கொண்டே சர்க்கரைப் பரிசோதனைக்குப் போனேன்.
இவங்க அதுக்கு முன்னால் வந்துட்டாங்க.
தனியே ஆட்டோவில் வந்து ,ரத்தம் சோதனைக்குக் கொடுத்துவிட்டு ப
வீட்டுக்குப் போய், காப்பி குடிக்கவேண்டும், துணி தோய்க்கணும், குளிச்சு சமையல் செய்யணும் என்கிறார்கள் .
தனி வீட்டில் ஒருவர் உதவியும் இல்லாமல் வாழும் துணிச்சல், மனத்திடம்
எல்லாவற்றுக்கும் மேல் அலுத்துக் கொள்ளாத அமைதியான சுபாவம்.
ஆட்டோக்காரரிடம், ஐம்பத்து ஐந்து ரூபாய்க் கூலியை
நாற்பது ரூபாயாகப் பேரம் பேசிய நாசூக்கு எல்லாவற்றையும் கண்ணிமைக்காமல் பார்த்தேன்.
கற்றுக்கொள்ள நிறைய பாடம் இருக்கிறது.
மீண்டும் நன்றி கயல்விழி முத்துலட்சுமி.!!!!
உங்கள் கவிதையும் சூப்பர்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.