கயல்விழி முத்துலட்சுமி! நன்றி. ''வாம்மா மின்னலு'' ......இந்த பட்டம் என்னிடம் எப்பவும் தங்கணும்:)
படிப்பவர்களெல்லாம் முதலில் கயல்விழி முத்துலட்சுமியின் இன்றைய பதிவான இஷ்டமொவும் கஷ்டமொவும் (தட்டச்சுப் பிழை)சிறுமுயற்சியில் படித்து விட்டு மேலே படிக்கவும்.
இப்படியெல்லாம் இளைய தலைமுறை யோசிப்பதைப் பார்த்துப் படித்து ரொம்பவே பொறாமையா இருக்கு. ஆமா, பொறு ஆமை.
ஆமை வேகத்தில டெரர்(ஆயில்யன் உபயம்)காண்பிச்சுக் கொண்டிருந்த என் பதிவு இப்ப,
வெரசா (விரைவாக)த் திறக்கிறதாம்.
ஆகக் கூடி இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேன்னு யோசித்துப் பார்த்தா
எதிராப்பில இருக்கிற காளிகாம்பாள் காலண்டர்தான்னு நினைவு வந்தது.
சாமி கடவுளே, ரத்தப் பரிசோதனை நல்ல ரிசல்ட் வரணும்னு கும்பிட்டுக் கிட்டேதான் எழுந்தேன்.
கயலு எழுத்தைப் பார்த்ததும் மனசு லேசாகிவிட்டது.
உண்மையாகவே மிகவும் நெகிழ்வா உணர்கிறேன்.
கயல் நன்றி .
இதை நினைத்தே இன்றையப் பொழுதைச் சுலபமாக ஒட்டி விடுவேன்.
ஒ !! இன்னும் ஒன்று சொல்லியே ஆகணும்.
இன்று மருத்துவ மனையில் ஒரு வயதான கண் சரியாகத் தெரியாத எழுபத்தைந்து வயது மங்கையைப் பார்த்தேன்.
மங்கை என்றுதான் அவர்களைச் சொல்லணும்
எட்டு மணி வரை காப்பி குடிக்காமல் இருக்கணும்னு நொந்து கொண்டே சர்க்கரைப் பரிசோதனைக்குப் போனேன்.
இவங்க அதுக்கு முன்னால் வந்துட்டாங்க.
தனியே ஆட்டோவில் வந்து ,ரத்தம் சோதனைக்குக் கொடுத்துவிட்டு ப
வீட்டுக்குப் போய், காப்பி குடிக்கவேண்டும், துணி தோய்க்கணும், குளிச்சு சமையல் செய்யணும் என்கிறார்கள் .
தனி வீட்டில் ஒருவர் உதவியும் இல்லாமல் வாழும் துணிச்சல், மனத்திடம்
எல்லாவற்றுக்கும் மேல் அலுத்துக் கொள்ளாத அமைதியான சுபாவம்.
ஆட்டோக்காரரிடம், ஐம்பத்து ஐந்து ரூபாய்க் கூலியை
நாற்பது ரூபாயாகப் பேரம் பேசிய நாசூக்கு எல்லாவற்றையும் கண்ணிமைக்காமல் பார்த்தேன்.
கற்றுக்கொள்ள நிறைய பாடம் இருக்கிறது.
மீண்டும் நன்றி கயல்விழி முத்துலட்சுமி.!!!!
உங்கள் கவிதையும் சூப்பர்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
30 comments:
ஆகா...அதுக்குள்ளே பதிவா..விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்! உங்க ஹெட்டர் மாத்தற வேகமும் ஆர்வமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்! தங்கள் ஹெட்டர்களின் ரசிகை நான்!
நல்ல பகிர்வு, வல்லியம்மா! அந்த மங்கையார் மனதிடம் பிரமிக்க வைக்கிறது!!
வல்லிம்மா.. மின்னல் வேகத்தில் புதுப்பதிவு போட்டு அசர வைக்கறீங்க.
முத்துக்காவிடமிருந்து விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
அடுத்த துபாய் டூர் எப்போ வருவீங்க...?!
வாங்கப்பா முல்லை. இப்பதான் வீடியொ பார்த்தென் . பொளந்து கட்டறதுன்னா இதுதான்.
பப்புமா, செல்லம், சமத்துடா கண்ணு.
எனக்கும் ஒரோர் பதிவுக்கும் புது ஹெட்டர் போடற வெறி வந்திருக்கு:)
நீங்க ரசிக்கிறேன்னு சொல்லிட்டீங்க இல்ல. இனிமே வெளுத்துக் கட்டிடலாம்.
நன்றி முல்லை.
அம்மா பொண்ணு ரெண்டு பேருக்கும் நான் இங்கிருந்தே சுத்திப் போட்டுடறேன்.!
மின்னல் விருதுக்கு வாழ்த்துக்கள் வல்லிம்மா.
வாங்கப்பா சென்ஷி.
என்னா ஒரு பட்டம் கொடுத்துருக்காங்க.
மின்னலுன்னா அப்படி வந்து நிக்கணும் இல்ல:)
துபாய்...............................................
தெரியவில்லை.:(
பையனைவிட்டாக் கையோட அழைச்சு கிட்டுப் போய் விடுவான். அதென்னமொ ஒரு மாசத்துக்கு ஒருத்தருக்கு ஆயிரம் திர்ஹமாமெ!!
தயக்கமா இருக்குப்பா.
பேத்தி பிறந்த நாள் ஜனவரி30.
பார்க்கலாம்.
இன்னா மேட்டருன்னு எனக்கும் ஒன்னியும் பிரீல. இருந்தாலும், வாழ்த்துக்கள் :)
அட!! ம்...ம்ம்.. மின்னல் மீநாச்சியார்? good!good
அதாச்சும் சர்வேசா,
கயலும்மா எல்லாப் பதிவையும் போயி சோதனை போட்டு இருக்காங்க,.
எது ஃபாஸ்டா ,சட்டுனு பார்க்க முடியுதோ,
அதுக்கு அவார்டு கொடுத்து இருக்காங்க.
ஆனா ஒரு கண்டிசன்.
இதிக்கு மின்னாடி இதே ப்ளாகு திறக்க முடியாம இருந்திருக்கோணும்..
அந்த வகைல நம்ம நினைவு அம்மிணிக்கு வந்திடுத்து,.
இப்போ பிரிதா:))
இல்லாங்காட்டி அவங்க பதிவு ''கஷ்டமோவும் இஷ்டமோவும் ''
படிங்க. பிரியும்.
நன்னிங்கோவ்.
அமித்து அம்மா. , இந்தத் தடவை கேணிக்கு வர முடியாம போச்சு.
வீட்டுக்குள்ள வச்சு நடத்தி இருப்பாங்களோ.
மிஸ் செய்துட்டேன்.
நன்றிமா வாழ்த்துகளுக்கு.
வாவ்,.
வே டு கோ ஜயஷ்ரீ. நல்ல வார்த்தை காம்பினேஷன்.:)
நன்றிம்மா.
விருதுக்கு வாழ்த்துக்கள்!
கற்றுக் கொள்ள எல்லோரிடமும் எப்போதும் ஏதேனும் இருக்கிறது என்பதை உணர்த்தியிருப்பது அருமை.
ரொம்ப வேகமாவே திறக்குது... கலக்கல். அதுக்காக விருது வாங்கியதற்க்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வல்லிம்மா
நிஜம்மாவே நீங்க மின்னல் தான் :))
உங்களுக்கு மகிழ்ச்சியா இருந்தது என்பதை நினைச்சு எனக்கும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்... :)
//ஆமை வேகத்தில டெரர்(ஆயில்யன் உபயம்)
காண்பிச்சுக் கொண்டிருந்த என் பதிவு இப்ப,
வெரசா (விரைவாக)த் திறக்கிறதாம்.//
ஆஹா வல்லியம்மா ஒரு ரைமிங்க வந்துச்சு :)))
மின்னல் வேக பதிவு சூப்பரேய்ய்ய்ய் :)
//தனி வீட்டில் ஒருவர் உதவியும் இல்லாமல் வாழும் துணிச்சல், மனத்திடம்
எல்லாவற்றுக்கும் மேல் அலுத்துக் கொள்ளாத அமைதியான சுபாவம்.//
இந்தவரிகளில் மனம் கனத்துப்போனது உண்மை! :(
//மின்னல் விருதுக்கு வாழ்த்துக்கள் வல்லிம்மா.
//
அதே ! அதே !!
தூய சென்னை பாஷையில் சர்வேஷனுக்குத் தந்த பதிலில் நாங்க எல்லாம் அப்பீட்டு :)))
வாங்கப்பா ராமலக்ஷ்மி.
இன்று மதியமும் அவங்களைப் பார்த்தேன். பிள்ளைங்களுக்குக் காரும் இருக்காம்.
ஒருத்தருக்கும் இவங்களை அழைத்து வர நேரமில்லையாம்.
வாங்க தமிழ் பிரியன்!
மின்னல் விருது மழை மேகங்களையும் கொண்டு வந்து விட்டது போலத் தோன்றுகிறது:)
நன்றிம்மா.
வாங்க தென்றல். வாழ்த்துகளுக்கு நன்றி. கைவலி தேவலையாம்மா.
மின்னல்னு சொன்னாட்டு, நிரூபிக்கணும் இல்லையாப்பா.:)
உங்களுக்குப் பின்னூட்டத்திலியே
சொல்ல வேண்டும்னு நினைச்சேன். இன்னிக்கு பிசியான
நாளாகப் போய் விட்டது:)
வாழ்த்துகளுக்கு மிக நன்றி மகேஷ்.
மழை முடிந்த பிறகு வந்த மின்னலுக்கும் வாழ்த்துகள்.:)
கைவலி இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நன்றிம்மா
http://pudugaithendral.blogspot.com/2009/11/blog-post_12.html
இந்தப் பதிவை படிச்சு உங்க கருத்தையும் சொல்லுங்க
வாங்கப்பா ஆயில்யன்.
இன்னும் ஒரே ஒருத்தர் உங்க ஊர்க்காரர்தான் இங்கே படிப்பதையே நிறுத்திவிட்டார்.
ஆனால் மத்த பதிவுகள்ள அவரைப் பார்க்கிறேன்:)
*********************
அந்த அம்மாவைப் பார்த்தபிறகு,
என் மனசுக்கே ஒரு தெளிவு கிடைத்திருக்கு.
மின்னல் பதிவுன்னு சொன்னதுக்கும் நன்றி.
நானும் மத்த பதிவுங்களையும் போய்ப் பார்த்தேன். எல்லாமே நல்லாதான் இயங்குகிறது.:)
வாழ்த்துகள் வல்லிம்மா!
ரிசல்ட் எப்படி வந்தது?
நீங்கள் சொன்னவரை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்தது. ஆரோக்யம், அதுவும் வயதான காலத்தில் எவ்வளவு முக்கியம்னு இப்பதான் ஒரு தோழியும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அவருக்கும், உங்களுக்கும், அனைவருக்குமான பிரார்த்தனைகளுடன்...
அன்பு சதங்கா, மிக மிக நன்றி. நம்ம மதராஸ் பாஷை ச்சின்ன வயசிலிருந்து கேட்டதுதானெ.
உற்சாகமா பேசலாம்.
கவனித்ததற்கு நன்றி
அன்பு கவிநயா, இன்றுதான் ரிசல்ட் வரும். ஒன்றும் பயமில்லை. அந்த அம்மாவே சமாளிக்கும் போது நான் சமாளிக்கக் கூடாதா:)
நன்றிம்மா.நன்றி.
விருதுக்கு வாழ்த்துக்கள் வல்லிம்மா
Thanks pa. Ammini.
என்ன விருது, எங்கே விருது, எப்படி விருது? யாருக்கு விருது, ஒண்ணுமே புரியலை உலகத்திலே, நான் வேறே ஏதோ உலகத்திலெ இருக்கேன் போல! எப்படி இருந்தாலும் வாழ்த்துகள் வல்லி.
Post a Comment