தமிழ்ப் புலவர் ஒருவர் மன்னனைப் பாட வந்தவர் .
பாடி முடித்து , உணவு உபசாரங்களை ஏற்று
சற்றே கண்ணயர் அ ஒரு இடம் தேடுகிறார்..
அப்பொழுது கண்ணில் படுகிறது
ஒரு பூப்போல மஞ்சம்.
சுற்றுமுற்றும் பார்க்கிறார். யாரும் இல்லை.
ஓஹோ இது ஓய்வெடுக்க மன்னன் செய்த ஏற்பாடு என்று நினைத்த வண்ணம் அதில் சாய்கிறார்.
இளந்தென்றலும்,பஞ்சு மெத்தையும் சேர்ந்து தாலாட்ட புலவர் எளிதில் உறக்கவசப்படுகிறார்.
சிறிது நேரத்தில் காவலாளிகள் அங்கேவருகிறார்கள்.
புலவரைப் பார்த்து அதிசயமும்
அதிர்ச்சியும் அடைகிறார்கள்.
அது அரசனுடைய முரசுக் கட்டில் .
அரசன் அமரும் ஆசனத்துக் கேற்ற மரியாதை இதற்கும் உண்டு.
அரசானின் வெற்றிகளை அறிவிக்கும் முரசு வீற்றிருக்கும் கட்டில்/
அதில் போய் ஒரு ஏழ்மைப் புலவன் உறங்குவதா.
உள்ளம் படபடக்கச் செய்தியைச் சொல்ல அரசனிடம் விரைகிறார்கள்..
மன்னன் அவர்கள் எதிர்பார்த்தபடியே சினம் கொள்கிறான்.
விரைந்து முரசிருக்கும் மண்டபத்துக்கு வருகிறான்.
அங்கெ கண்ட காட்சி அவனை அமைதியடையச் செய்கிறது.
காவலர்களை அங்கிருந்து செல்லும்படி உத்தரவிடுகிறது.
நீராடச் சென்ற வெற்றி முரசும் திரும்புகிறது. மரியாதைக் குரிய இடத்தில்
அதை பத்திரமாக வைக்கிறார்கள்.
அரசன் கையில் சாம்ரத்தை ஏந்தி புலவருக்கு வீசுகிறான்.
புலவரும் திடீரென்று விழித்துக் கொள்கிறார்.
பக்கத்தில் அரசன்.
அடடா இதென்ன அபசாரம். மன்னா என்ன செய்கிறீர்கள்?
தமிழுக்கு மரியாதை செய்கிறேன் என்று பொறுமையாகப் பதிலளிக்கிறான்
சேரமன்னன்,சேரமான்.
சிறந்த வீரத் தமிழ் மன்னர்களில் ஒருவன்.
அப்போதெல்லாம் கேரளம் இப்போது அழைக்கப் படுமிடங்களில்
தமிழ் பேசும் சேர மன்னர்களே ஆண்டுவந்தார்கள்..
இந்தச் சேரனுக்குத் தகடூர் எறிந்த பெரும்சேரல் இரும்பொறை என்ற சிறப்புப் பட்டமும் உண்டு,.
ஆமாம் அதே தகடூர் அதியமான், நெல்லிக்கனியை ஔவையாரிடம் இருந்து பெற்ற பாக்கியவான்.அதியமான் நெடுமான் அஞ்சி..
அவனை வென்ற வீரன் இந்தச் சேரமன்னன்.
அவன் வீரமும் தமிழுக்கு அடிபணிந்தது என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
உங்கள் எண்ணம் என்னவோ. ஆனால் இதுபோன்ற கட்டுரைகளால் பலன் அடைந்தவர்கள் பல பேர் இருப்பார்கள்.
வள்ளல் அதியமானை இந்த அரசன் ஏன் போருக்கு அழைத்துவென்றான். ?
அதுதான் அரச லட்சணமோ.
சரித்திரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
பெருஞ்சேரலிரும்பொறையும் அதியமானும் தோழர்களாக இருந்திருந்தால்
நமக்குக் காவிரிப் பிரச்சினை வந்திருக்காதோ!!!!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
