Sunday, June 21, 2026

தம்பிகள் பாசம்

வல்லிசிம்ஹன் 
எல்லோரும் வளமாகவாழ வேண்டும். 
படிக்காத மேதை. ரங்கன். 

என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன்,
இந்தப் பாட்டில் வரும் அத்தனை
வரிகளுக்கும் சொந்த மானவன் . 
சிவாஜி பக்தன்.

ஒரு சிவாஜி சார் படத்தையும் பார்க்காமல் இருக்க மாட்டான். சினிமா, பாட்டு, நண்பர்கள் என்று அவனைச் சுற்றி பெரிய கூட்டமே இருக்கும். 

எல்லோருக்கும் நண்பன். என் கணவரிடம் அதீத பக்தி. எத்தனையோ. தருணங்களில் என்னுடன். தோள் கொடுத்து நிற்பான்.
தந்தை மறைந்த போது தம்பிகள் இருவரும்  என் கைகளைப் பற்றி. கலங்கியபோது நான் கலங்கமல் இருந்தது தான் அதிசயம். மகளின் திருமணம் பத்து நாட்களில். அம்மான் சீர் வந்து சேரும் என்று என் அம்மாவும் தம்பிகளும். சொல்லி அணைத்தார்கள்.

திருமணம் நடந்த அன்று இருவரும் அப்பாவின் படத்தை
மண்டபத்துக்கே கொண்டுவந்தார்கள்.
மணமக்களின் பின்னால் அவர் படம் வைக்கப் பட்டது.




தம்பிகள் இருவரும் என் இருபக்கத்திலும் நின்று நான் கலங்காமல்
பார்த்துக் கொண்டார்கள்.

பெரிய தம்பி கல்கத்தாவில்  பாட்டா கம்பெனியில் வேலை பார்க்கிறவன் சென்னை திரும்பும் போது .பெற்றோரைப் பார்த்து விட்டு அடுத்த நாள் திருச்சிக்கு வந்து விடுவான். கல்கத்தா ரசகுல்லா, இன்னும்  பாட்டா  செருப்புகள் கலகத்தாவிலிருந்து,  ஆடைகள் என்று கொண்டு வருவான் பெட்டி நிறைய!!எங்களுடன் ஒரு வாரம் தங்கி விட்டு
மனமில்லாமல் திரும்பி  செல்வான்.

சிங்கத்துக்கு வயிற்றில் ஏதோ பிரச்சினை அறுவை சிகித்சை
செய்ய வேண்டுமோ என்று பயந்த போது சின்னவன் ஓடி வந்து விட்டான்.  22 வயதுக்கு மிகப் பெரிய பொறுப்பு.
தன் அத்திம்பேருக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை 
என்று  தெரிந்த பிறகே திரும்பினான்.

இன்னும் நிறைய செய்திகள் உண்டு. மீண்டும் பார்க்கலாம். வாழ்க சகோதர பாசம்.


8 comments:

ஸ்ரீராம். said...

சகோதரர்களின் பாசம் நெகிழ வைக்கிறது.  ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றாலும் சுவாரஸ்யம்.

மாதேவி said...

உங்கள் குடும்ப சகோதரபாசம் அவர்களின் அதீத அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

பாசமுள்ள சகோதரங்கள் நம்முடன் இருக்க நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும்.எமது சகோதரங்களும் மிகுந்த அன்பானவர்கள் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி, உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதால் எனக்கு மன நிறைவு கிடைக்கிறது. வலை உலகில் அன்பு பரவி நிற்கிறது. தாங்களும் சகோதரர்களும் நீண்டு நீடூழி வாழ ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம். நன்றி மா. நேற்று இதைப் புதிதாக எழுதினேன். தம்பிகளுக்கான என் சமர்ப்பணம்.. நினைவுகள் சில சமயம் அழுத்தம் கொடுக்கின்றன.

கோமதி அரசு said...

அக்கா உங்கள் தம்பிகளின் பாசம் பற்றி முன்பு பகிர்ந்து இருக்கிறீர்கள். மீண்டும் படிக்க தூண்டும் எழுத்து. அன்பு, பாசம் பகிரும் போது மனம் நெகிழ்ந்து விடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதி, வந்து படித்ததற்கு மிக நன்றிமா.அவர்கள் திருமணம் நடந்து 45ஆம் வருட பூர்த்தி. என்னென்னவோ எண்ணங்கள். சிலவற்றை மட்டும் பதிந்தேன். இப்போது இணையம் முழுவதும் பாசம் சூழ்கிறது. மீண்டும் நன்றி மா.

Bhanumathy Venkateswaran said...

உடன்பிறந்தவர்கள் சகோதரனோ, சகோதரியோ வரம்தான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பானு மா. தொலைத்த பின்னரே உணர்கிறேன். நன்றி. அன்பு பிறந்த நாள் வாழ்த்துகள் பானு. என்றும் நலமாக இருக்க ஆசிகள்.

முதுமையில் வேண்டும் இனிமை

வல்லிசிம்ஹன் முதுமை சிறப்பு .3 Vallisimhan எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.   வந்து இரண்டு நாட்களுக்குப் பேச நிறைய விஷயங்கள் இருந்தன அம்மாவுக...