Blog Archive

Showing posts with label சுவிஸ் பயணம் 2011. Show all posts
Showing posts with label சுவிஸ் பயணம் 2011. Show all posts

Monday, May 23, 2011

பக்கத்துப் பட்டிக்கு .. பழம் பறிக்கப் பயணம்


ஒரு பூ இரண்டு பிரான்க்.
பூக்களைப் பரித்துக்கொண்டுஉண்டியலில் பணம் போடவேண்டும்

ஸ்ட்ரா பெர்ரீஸ்  வியாபாரத்துக்கு.
வாசமுள்ள பூ. பெயர் தெரியவில்லை
எல்லாப்பூவுக்கும் ஒவ்வொரு விலை.
மொட்டு
மலர்ந்தது
மஞ்சள் நிறம் கண்ணைப் பறிக்கிறது
குதிரை ஏறி கடு சுற்றும் உரிமையாளர். இவர் ஒரு பெண் என்பதை அருகில் வந்து "கிரேட்சி "  சொன்னதும் தான் புரிந்தது.
அப்பாவோட  வாக்கிங் போகும்  செல்லங்கள். பெயர் வில்லி
 னில்லி:)
.
தந்தையும் மகனும் சுற்றிப் பார்க்கிறார்கள்.
மக்காச்சோள வயல் என்றார்கள்.
காமிரா கண்ணுக்கு அகப்பட்டது இவ்வளவு தொலைவுதான்.

மகன் வீட்டிலிருந்து பத்துமைல்கள் தொலைவில் பண்ணைகள் இருக்கின்றன.

எல்லாப் பயிர்களையும் பார்க்கலாம் என்ற ஆசையில் மகன் எடுத்து வந்த வாடகைக் காரில்


சென்றோம்.

ஒரு பத்துமைல்கள் வித்தியாசத்தில் இவ்வளவு பசுமையா என்று அதிசயிக்கவைக்கும் அளவிற்கு



அவ்வளவு அருமையான இயற்கை வெளி. நடைப் பயிற்சி செய்பவர்களுக்கு இதுதான் மெரீனா பீச் போல.

குதிரைகளில் ஆங்காங்கே வலம் வந்து கொண்டிருந்த உரிமையாளர்கள்.

ஸ்ட்ரா பெரிப் பழங்கள் பாத்திகளில் விளைந்து கண்ணைப் பறிக்கும் சிவப்பில் மினுமினுத்தன.

அவ்வளவு பெரிய அளவில் அந்தப் பழங்களைப் பார்த்ததில்லை.

அடுத்த நாள் பறித்தால் கொஞ்சக அளவு பணத்துக்கே

பழங்களை அள்ளிக் கொள்ளலாம் என்றார்கள்.



நாங்களும் ஆளுக்கு இரண்டு பழங்களைச் சுவைத்தப் பார்த்தோம். மம். யம்மம்

என்று சொல்லலாம் போல் இருந்தது.:)



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Sunday, April 24, 2011

ஈஸ்டர் தின வாழ்த்துகள்

வீட்டுக்குள் நுழைபவரைகே கேட்காமல் எடுத்த படம். அவரென்ன தமிழா படிக்கப் போகிறார் என்ற தைரியம் தான்:)
தண்ணீரில் அன்னம்.அச்சு அசல் நான் வரைந்த மாதிரியே இருந்தது:)
அழகான ஒரு விடுதி
இங்கே வீட்டுக்குக் கீழே டைனசார் தோற்றத்தில் ஒரு  வேர்ப் பகுதி.
பீல் கிராமம் அதன் ஏரி
ஈஸ்ட்டர்  விடுமுறைக் கோலாகலம் 
எங்கு பார்த்தாலும்  வழக்கத்துக்கு   மீறிய   உத்சாகம்.
கூட்டம்   சித்திரைத்  திருவிழாவை   நினைவுறுத்தியது.
அப்பா தலை மேல மகளோ மகனோ.!

அம்மாவின் தள்ளு வண்டியில் இரண்டு குழந்தைகள்.
ஒரு கையில் பலூன். இன்னொரு கையில் ஐஸ்க்ரீம்.

18  டிகிரி வெய்யிலில் பரம சந்தோஷம்.

ஆங்காங்கே  குட்டி முயல் பொம்மைகள். வண்ண வண்ண ஈஸ்ட்டர் முட்டைகள்.

மூன்று வருடங்களுக்கு முந்தி பார்த்த சுவிஸ் நாடு பலவிதத்தில் மாறி இருக்கிறது. எண்ணி பத்துப் பதினைந்து இந்திய முகங்கள் தென்படும் இடத்தில்
 இப்போது  ஐம்பது அறுபது பேர்களாகக் குடும்பமும் குழந்தைகளுமாக

எங்களைப் போன்ற வயதானவர்கள் சில நபர்களையும் பார்க்க முடிந்தது..
புன்னகை மட்டும் பரிமாறிக் கொண்டு எல்லோரும் நகர்ந்து கொண்டே
இருந்தார்கள்.

பல கணினித் துறையைச் சார்ந்தவர்கள் .மருந்துக் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் ,ஆடிட்டிங் துறையைக் சேர்ந்தவர்கள்  இப்படிப் பல துறையில் இந்தியர்களைக்
காண முடிந்தது. எல்லோரும்  நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள்.
சில பேர் இங்கே இருக்கும் முடிவுடன் வந்தவர்கள். சிலர் ஒரு பத்து வருடம் இருந்துவிட்டு இந்தியா  திரும்பும் நோக்கோடு இருப்பவர்கள்.

அதற்கேற்றார் போல் இந்த நகரமும்  மாறி இருக்கிறது.
குப்பைகள் நிறையக் கண்ணில் படுகிறது. புகைபிடிப்பவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள்.

10 வருடங்களுக்கு முன் இருந்த நகரம்  சுத்தத்துக்கு எடுத்துக் காட்டாக   இருந்தது.

நிலைமை  தலைகீழ்-:(
இயற்கை மாறவில்லை. அதே  தண்ணீர் வளம். பசுமை. கொழு கொழு பசு மாடுகள்.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்