Blog Archive

Sunday, April 24, 2011

ஈஸ்டர் தின வாழ்த்துகள்

வீட்டுக்குள் நுழைபவரைகே கேட்காமல் எடுத்த படம். அவரென்ன தமிழா படிக்கப் போகிறார் என்ற தைரியம் தான்:)
தண்ணீரில் அன்னம்.அச்சு அசல் நான் வரைந்த மாதிரியே இருந்தது:)
அழகான ஒரு விடுதி
இங்கே வீட்டுக்குக் கீழே டைனசார் தோற்றத்தில் ஒரு  வேர்ப் பகுதி.
பீல் கிராமம் அதன் ஏரி
ஈஸ்ட்டர்  விடுமுறைக் கோலாகலம் 
எங்கு பார்த்தாலும்  வழக்கத்துக்கு   மீறிய   உத்சாகம்.
கூட்டம்   சித்திரைத்  திருவிழாவை   நினைவுறுத்தியது.
அப்பா தலை மேல மகளோ மகனோ.!

அம்மாவின் தள்ளு வண்டியில் இரண்டு குழந்தைகள்.
ஒரு கையில் பலூன். இன்னொரு கையில் ஐஸ்க்ரீம்.

18  டிகிரி வெய்யிலில் பரம சந்தோஷம்.

ஆங்காங்கே  குட்டி முயல் பொம்மைகள். வண்ண வண்ண ஈஸ்ட்டர் முட்டைகள்.

மூன்று வருடங்களுக்கு முந்தி பார்த்த சுவிஸ் நாடு பலவிதத்தில் மாறி இருக்கிறது. எண்ணி பத்துப் பதினைந்து இந்திய முகங்கள் தென்படும் இடத்தில்
 இப்போது  ஐம்பது அறுபது பேர்களாகக் குடும்பமும் குழந்தைகளுமாக

எங்களைப் போன்ற வயதானவர்கள் சில நபர்களையும் பார்க்க முடிந்தது..
புன்னகை மட்டும் பரிமாறிக் கொண்டு எல்லோரும் நகர்ந்து கொண்டே
இருந்தார்கள்.

பல கணினித் துறையைச் சார்ந்தவர்கள் .மருந்துக் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் ,ஆடிட்டிங் துறையைக் சேர்ந்தவர்கள்  இப்படிப் பல துறையில் இந்தியர்களைக்
காண முடிந்தது. எல்லோரும்  நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள்.
சில பேர் இங்கே இருக்கும் முடிவுடன் வந்தவர்கள். சிலர் ஒரு பத்து வருடம் இருந்துவிட்டு இந்தியா  திரும்பும் நோக்கோடு இருப்பவர்கள்.

அதற்கேற்றார் போல் இந்த நகரமும்  மாறி இருக்கிறது.
குப்பைகள் நிறையக் கண்ணில் படுகிறது. புகைபிடிப்பவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள்.

10 வருடங்களுக்கு முன் இருந்த நகரம்  சுத்தத்துக்கு எடுத்துக் காட்டாக   இருந்தது.

நிலைமை  தலைகீழ்-:(
இயற்கை மாறவில்லை. அதே  தண்ணீர் வளம். பசுமை. கொழு கொழு பசு மாடுகள்.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

7 comments:

ஸ்ரீராம். said...

குப்பைகள் நிறைய கண்ணில் படுகிறதா....அட....தாய் நாட்டுல இருக்கற மாதிரி ஒரு Feeling வந்து இருக்குமே...!!

நானானி said...

kuppaikal niraya.....because of more indians?

Geetha Sambasivam said...

படங்கள் அருமையாய் வந்திருக்கின்றன. வாழ்த்துகள் வல்லி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்

நம்ம ஊர் தேவலாம் என்கிற மாதிரி குப்பை. எல்லாம் சிகரெட் துண்டுகளும்
பேப்பர் துண்டுகளும் தான்.
வெளிநாட்டவர் வந்ததால் வந்த அசுத்தம் என்பது
அவர்கள் பேச்சு.:(

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.

ரொம்ப நன்றி. எப்போதும்போல் பிடிக்கப்படும் பொருள் அழகா இருந்தால்
படமும் நன்றாக வருகிறது:)

வல்லிசிம்ஹன் said...

Illapaa Naanaani.
avangalaich
suththi
irukkira countries (rest of Europe)people paththithaan appaddich solRAAnga.

மாதேவி said...

படங்களும் காட்சிகளும் மனத்தை அள்ளுகிறது.