Blog Archive

Tuesday, July 31, 2018

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 3

Vallisimhan

   எனக்கு என்னமோ சபரி தர்ப்பணம் செய்யணும்னால்
பயமாக இருக்கிறது. அம்மா அப்பாவையும் கேட்கலாம்
என்று சுந்தரி சொல்ல, நடந்தே மீனாக்ஷி அம்மன் கோவிலை அடைந்தனர்.
 சரி குழம்பாதே. இத்தனை நாட்கள்  காரணம் தேடினோம். இனி அதை நிறைவேற்றும்

விதத்தை  யோசிக்கலாம். அவர் ஒன்றும் சின்ன ஜோதிடர் இல்லையே.
ஒரு  யோசனை இல்லாமல் சிந்திக்காமல் சொல்ல மாட்டார் என்ற படி
கோவிலை அடைந்து ,முக்குறுணிப் பிள்ளையார், வீர பத்ரர்கள் எல்லோரையும்
சேவித்துக் கொண்டு  பொற்றாமரைக் குளத்தையும்

தாண்டி, , மீனாக்ஷி அம்மன் சன்னிதியை அடைந்தனர்.
தாயே நல்ல வழிகாட்டு என்றி வேண்டியபடி, சொக்க நாதர்  சன்னிதியை அடைந்தனர்.
 ராம நாதன் அங்கேயே உட்கார்ந்துவிட்டார்.
ஒரு தவறால் இந்தப் பையன் திருமணம் தடைப்பட்டதே சுந்தரி என்று அழாத குறையாகச் சொன்னார்.
ஒன்றும் குறைவில்லை.இவர்கள் எல்லோரும் நம்மைக்
கவனித்துக் கொள்வதால் தானே  நமக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.
எல்லாம்  நல்லதுக்குத்தான் என்று சமாதானப் படுத்தினாள் சுந்தரி.
அதுவும் சரிதான் என்றபடி எழுந்து பிரகாரத்துடன் வாசலை அடைந்தனர்.

மாலைப் பொழுதில் ஜொலித்த கோபுரத்தை மனதார வணங்கிவிட்டு
ஆட்டோ பிடித்து வீடுவந்தனர்.
பெற்றோர்களிடம் விஷயத்தைச் சொல்ல, எங்களுக்குக் கூடத் தோன்றாமல் போச்சே.
மாப்பிள்ளை உடனே ஏற்பாடு செய்யுங்கள்.
நாங்களும் வருகிறோம். அங்கே இருக்கும் சாஸ்திரிகள் சொல்வது போல
செய்யலாம்.
சபரிக்குத் தொலைபேசி, ஒரு நான்கு   நாட்கள் கல்லூரிக்கு
விடுமுறை கேட்டுக் கொள்ளச் சொன்னார்கள்.

சபரிக்கு முதலில் பிடிபடவில்லை. நினைத்தால் லீவு எடுக்கிற வேலை இல்லையேம்மா
என்றான்.
சப்ஸ்டிட்டுட் சிவராமனை இருக்கச் சொல்லுடா.
இது முக்கியம் என்று சொன்னது இரண்டு நாட்களில் தயாராவதாகச் சொன்னான்.

இப்படியாகத் தான் ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ்ஸில் எல்லோரும் கிளம்பினர்.
மதியம் ராமேஸ்வரம் வந்து சேர்ந்ததும்,
ரயில்வே  விருந்தினர் அறைகளில் பெட்டிகளை வைத்துவிட்டு
கோவிலுக்குக் கிளம்பினர்.
சுந்தரியின் அம்மாவுக்கு பர்வதவ்ர்த்தினி அம்மன் மேல் அலாதிப்ரியம்.
அவளுக்குப் பிறந்தகம் அங்கேதான். . பர்வதம் அம்மாவுக்கு  ராமனாதன் கண்வராக வாய்த்ததும் அம்மன் அருளினால் தான்.
மிக மிக சந்தோஷமாக் அனைவரும் அந்தப் பிரம்மாண்ட கோவிலை அடைந்து
 ராமலிங்கேஸ்வரையும் அம்மனையும் தரிசித்து அங்கிருந்த குருக்களுடன் வந்த விஷயத்தைப் பேசினர்.
அவரும் கணேச சாஸ்திரிகள் சொன்னதை ஆமோத்தித்தார்.

ஆனால் சந்தேகத்துடன் எதையும் செய்ய வேண்டாம்.
நாளை கடற்கரையில் உங்கள் ஸ்வாமிகள் சொல்வதைச் செய்யுங்கள்.
உங்கள் சந்தேகத்தையும் சொல்லுங்கள் என்று ஆறுதல் செய்து அனுப்பினார்.
மறு நாள் பிரகாசமாக் விடியும் முன்னரே கடற்கரையி அடைந்துவிட்டனர். சொன்ன இடத்தில் காத்திருந்தார் சுப்ரமண்ய சாஸ்திரிகள்.
ஐவரையும் அழைத்துக் கொண்டு அதிக ஆழமில்லாத அழகான கடலில் ஒன்பது முறை முங்கி எழுதிருக்கச் சொன்னார்.
ஒவ்வொரு தடவையும், பாட்டி தாத்தா கையிலும் சுந்தரி ராம்னாதன் கையில் எள்ளும் வெல்லமும்
அரிசியும் கொடுத்து கடலில் கரைக்கச் சொன்னார்.
தம்பதிகள் ஒருவர் கையை ஒருவர்  பிடித்துக் கொண்டு மனமார வேண்டிக்கொண்டு சித்தப்பாவை நினைத்தபடி ஸ்னானம் செய்தனர்.
சபரியும் தனியே ஸ்னானம் செய்தான். விவாகமானதும் பொண்டாட்டியை அழைத்து வந்து
ஆனந்தமாக வந்துவிட்டுப் போங்கோ.
என்றபடி பெரியவர்களை உட்காரவைத்து தர்ப்பணம் செய்யச் சொன்னார்.
அதறு முன்னால் அவர்கள் உடுத்தியிருந்த வஸ்திரங்களைத் தயாராகக் காத்திருந்தவர்களைக் காண்பித்து மாற்று உடை தரித்ததும்
அவர்களிடம் பழைய உடைகளைக் கொடுக்கச் சொன்னார்.

 சபரியை உட்கார வைத்து மூதாதையரை நினைத்து  ஆசிகளை வேண்டிக்க்கொள்ளச்
சொன்னார்.
 இங்கே கடலில் தீர்த்தமாடியதால், நவபாஷணக் கடலில் இறங்க வேண்டாம். பாலத்திலிருந்தே
மலர்கள் தூவி வழிபடலாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்
என்று சொல்லிவிட்டார்.
அவருக்கு உண்டான சம்பாவனையை
நன்றியைக் கொடுத்துவிட்டு
அவர் வீட்டிலேயே  மதிய உணவை முடித்துக் கொண்டு
விடுதி வந்து சேர்ந்தனர்.
அசதி அழுத்த கடற்கரைக் காற்று தாலாட்ட
நல்ல தூக்கம் தூங்கி எழுந்து  கந்தமாதன மலைக்குச் செல்லத் தீர்மானம். தாத்தா பாட்டி வரவில்லை.
மற்ற மூவரும் மலை ஏறீ , ராமர் பாதத்தைத் தரிசனம் செய்து
சீதா ராமலக்ஷ்மணர்களை வணங்கி. மீண்டும் விடுதி வந்தனர்.

அடுத்த நாள்  மதிய எக்ஸ்ப்ரஸ்ஸைப் பிடித்து
 இரவு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தனர்.
பின்னுரை... ஆறு மாதங்களில் சபரி, மீனாட்சி திருமணம் நிச்சயமானது.
மதுரைப் பெண்தான் . சுந்தரி மாதிரியே மருதாணி,மல்லி, தாழம்பூ
புது மண்டப வளையல் என்று  விருப்பங்கள் வைத்திருந்தாள்.

 படிப்பும் குறைவில்லை. M.A AND MPHIL மீனாக்ஷி கல்லூரியில்
படித்திருந்தாள். அனைவர் சம்மதத்துடன் ஐப்பசி மாதம் ,திருப்பரங்குன்றம்
செல்வ லக்ஷ்மி திருமண மண்டபத்தில்  மகிழ்ச்சிகரமாக நடந்தது.
திருமணத்தடை எல்லாம் போக்க வித விதமான வழிபாடுகள்
சொல்கிறார்கள்.
இறைவன் மனம் வைத்தால் நொடியில் நடக்கும் மணமு ம் நல்  வாழ்க்கையும் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Add caption
வாழ்க வளமுடன்.

Monday, July 30, 2018

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2

Vallisimhan

+++++++++++++++++++++++++++++++++++++++
அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள்.
அம்மா தயார் செய்து வைத்திருந்த முறுமுறு

பூரிகளையும் ,மசாலா உ.கிழங்கு கூட்டையும்
சாப்பிட்டு, ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில் படுத்துக்கப் போறேன் மா. நீ கவலைப் படாதே
என்றான். குரலில் குறும்பு.
நெடு நாட்களாகத் தானே சமைக்க ஆசை அவனுக்கு.
அம்மாவிடம் சொன்னால் பிரளயமே வந்தது போல
மருகுவாள்.

விட்டுக் கொடுத்துவிடுவான். இன்று நண்பனை அழைத்து அவனுக்கும்
சேர்த்து  பாஸ்தாவும் சீசும் சேர்த்து சமைத்திருந்தான்.
அவனையும் சாப்பிட வைத்து அப்போதுதான் முடித்தான்..

அம்மாவைக் காபரா படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை.
நண்பன் சிவராமன், எப்படி இதைக் கண்டுபிடித்தாய்
என்று வியப்புடன் கேட்டான். ப்ரௌன் அண்ட் பால்சன்
 பாக்கெட்டில் எழுதி இருந்ததுடா. டிலைட் பேக்கரி முபாரக்கிடம் சொல்லி

வரவழைத்தேன் என்றான். பயங்கர கில்லாடிடா நீ.
என்றபடி அவன் விடை பெற்றுக் கொண்டான்.

அங்கே மதுரையில் நிம்மதி யாகப் பேசி முடித்துப் படுத்துக் கொண்டார்கள்
எல்லோரும்.
நல்லபடியாக சாஸ்திரிகள் சொல்லணுமே என்ற கவலை எட்டிப் பார்த்தது.
மீனாக்ஷி பார்த்துப்பா என்று தனக்குத் தானே சமாதானமும் செய்து கொண்டார்கள்.
அடுத்த நாள் வசந்தனகர்ப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, சூறைத்தேங்காய்
உடைத்துவிட்டுச் சாப்பாடையும் முடித்துக் கொண்டனர்.
சாஸ்திரிகளுக்குப் ஃபோன் செய்து நல்ல நேரம் கேட்டுக்கொண்டு
மதியம் இரண்டு மணிவாக்கில் வரச்சொன்னதும்
 ஆட்டோ பிடித்துக் கொண்டு டவுன் ஹால் ரோட்டில் இருந்த
அவரது வீட்டை அடைந்தனர்.
அவர் வரவேற்று அமரவைத்தார்.
நினைத்தேன் நீங்கள் வருவீர்கள் என்று, என்றபடி
அவர்களைக் கைகால் அலம்பி விட்டு வரச் சொன்னார்.
ஜோதிடம் பார்க்கும் அறையில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்
படம் மாட்டி, மல்லிகை மணத்துக் கொண்டிருந்தது, தாங்கள் கொண்டு
சென்ற மலை வாழைப்பழத்தை அவரிடம் கொடுத்து அமைதியாக
அமர்ந்தனர் ராமனாதன் தம்பதியினர்.
 சபரிக்குத் திருமணக்காலம் இப்பதான் வருகிறது.
நானே உங்களை அழைத்திருப்பேன்.
உங்கள் முன்னோர்களில் ஒருவருக்குத் திதி கொடுக்காமல்
வருடங்கள்  கழிந்திருக்கிறது.
அவர் பசி தாகத்தோடு காத்துக் கொண்டிருக்கிறார்.
உங்களிடம் அவருக்கு அபரிமிதமான பிரியம்.
யார் என்று சொல்ல முடிகிறதா என்று சுருக்கமாகக்
கேட்டார்.
ராம்னாதன் இதை எதிர்பார்க்கவில்லை.
தன் தந்தைக்கு ஸ்ராத்தம் செய்வதில் அவரோ அவர் தம்பியோ
தவறியதில்லை.
சட்டென்று சிறுவயதில் இறந்துவிட்ட சித்தப்பா நினைவுக்கு வந்தார்.
அவருக்கு வாரிசாக மகன் இல்லை. ஒரு பெண் உண்டு.
அதனால்
சித்தப்பாவின் மனைவி ஏதோ தன்னால் இயன்றவரை
அன்னதானம் செய்து வந்தாள்.
 இது நினைவுக்கு வரவும் ,சாஸ்திரிகளிடம் சொன்னார்.
உங்கள் குடும்பத்தில் சித்தப்பாவுக்கு எல்லாம்  சேர்த்து செய்யும் வழக்கம் இல்லையா
என்று வினவினார் ஜோதிடர்.
நீங்களும் அவருக்கு மகன் தானே. யாராவது சொல்லி இருக்கலாமே.
எனக்குத் தெரிந்து உங்கள் நண்பர் கஸ்தூரி ரங்கன், வருஷத்துக்கு 4 ஸ்ராத்தம் செய்கிறார்.

நான் இதை யோசிக்கவில்லையே. பாவம் சித்தப்பா என்று கண் கலங்கினார்.
ஒன்றும் குறைவில்லை. நான் சொல்வதைக் கேளுங்கள்.
சபரியையும் அழைத்துக் கொண்டு ராமேஸ்வரம் செல்லுங்கள்.
நான் ஒரு சாஸ்திரிகளின் விலாசம் தரேன்.

அங்கே நீங்களும் உங்கள் மகனும் சேர்ந்து சமுத்திர ஸ்னானம்
செய்து, வஸ்திர தானம் கொடுத்து, தேவிப்பட்டினம் நவபாஷாணத்தையும்
 வழிபட்டு வாருங்கள்.

மகன் தர்ப்பணம் செய்யலாமா என்று யோசிக்க வேண்டாம். அவன் கை நீரும் எள்ளும் சின்ன தாத்தாவைப் போய்ச்சேரும்.
செய்துவிட்டு எனக்குச் சொல்லுங்கள்.
வழிபிறக்கும் .நல்ல பெண்ணும் பொருந்திவருவாள்.
இது நான் கண்கூடாகப் பார்த்த சத்தியம் என்று நிதானமாகச் சொன்னார்.
என்னால் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியவில்லை
ஆதலினால் மீண்டும் ராமேஸ்வரத்தில் பார்க்கலாம் நண்பர்களே.

அதுவரை  இந்தப் பாட்டைக் கேட்டு  மகிழவும் 💕💕💕💕💕💕💕💕💕💕💕
பாம்பன் பாலம் 

Saturday, July 28, 2018

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்

பொன்மலை ஸ்டேஷன்.
Add caption
Add caption
Vallisimhan

 கதை ஆரம்பிப்பது ,திருச்சி 1976இல்
பொன்மலை ரயில்வே காலனியில்.

 இன்னும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெறப்போகும்
ராமனாதனையும் அவர் மனைவி  சுந்தரியையும் சுற்றி
நடை பெறும் சம்பவம்.
இன்னும் இரண்டு நாட்களில் தாங்கள் மேற்கொள்ளப்
போகும் பயணத்துக்காகத் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்தார்.

ரயில்வேயில் பட்ஜெட் செக்ஷன் ஆபீஸராக இருப்பதால்,
ரயில்வே டிக்கட்டுகள் விலைஏறுவது , இடம் கிடைப்பது இதைப்
பற்றி எல்லாம் கவலை இல்லை. முதல் வகுப்பு பயணம் உறுதி.
பயண நாட்களைச் சொல்லிவிட்டால், ரயில்வே விருந்தினர்  அறை
முதற்கொண்டு  எல்லாம் ஏற்பாடு செய்யப்படும்.
கூடவே வரப்போகும் மகனுக்கு ஏற்றவாறு தன் லீவு சாங்க்ஷனுக்காக
திருச்சி ரீஜனல் அதிகாரியிடம் பேசி முடிவு செய்திருந்தார்.

மகன் சபரி , திருச்சி ஆர் இ ஸியில் லெக்சரராக இருந்தான். வயது
30 ஐ எட்டிக் கொண்டிருந்தது. 4 வருடங்களாகிவிட்டது.வேலையில் சேர்ந்து.
பள்ளிப்படிப்பு முடிந்ததும்  இஞ்சினீயரிங்க் படிப்பு சேர்ந்தான்.
நல்லபடியாகத் தேர்வடைந்ததும், எம் ஃபிலும் முடித்தான்.
படித்த கல்லூரியிலியே அழைத்துக் கொண்டார்கள்.
ஒருவருடம் டியூட்டராக இருந்துவிட்டு, பொழிப்புரையாளர் பதவி ஏற்றுக் கொண்டான்.
 அப்போது அவன் ஜாதகத்தைக் கையில் எடுத்தார்.

ரயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்த பிள்ளை. உதவிக்கு
அப்போதிருந்த  டாக்டர் கமலா ஜகன்னாதன், நேரம் எல்லாம்
சரியாகக் குறித்துக் கொடுத்திருந்தார்.
சுந்தரியின் பிறந்த ஊர் மதுரையில் இருந்த  ஜோதிடர் கணேச சாஸ்திரிகள்
நல்லவிதமாகவே கணித்துக் கொடுத்திருந்தார்.

ஆனால் சமீபத்தில் உறவுகாரர்கள் கொடுத்த பெண்களின்
ஜாதகங்கள் ஒன்று கூட  நல்ல சம்பந்தத்தில் முடியவில்லை.
பொருத்தம் நன்றாக இருந்த பெண்ணும் பார்க்க அழகாக
இருந்தாலும் , இரு குடும்பங்கள் மனம் ஒன்றினாலும்,
ஏதோ ஒருவிதத்தில்  திருமணம் வரை வரவில்லை.
புரியாத புதிராக இருந்தது.
சபரி நல்ல உயரமான,களையான முகம் கொண்ட பையன்.
 கெட்ட பழக்கங்கள் ஒன்றும் கிடையாது.
படிப்புக்கேற்ற கண்ணாடி முகத்தை அலங்கரிக்கும்.
அது சுந்தரிக்குக் குறைதான். எல்லாரும் மாதிரி காண்டாகட் லென்ஸ் போட்டுக் கோடா
 என்று வற்புறுத்துவாள்.
வேண்டாம்மா. அதனால் கண்ணுக்குக் கேடூதான்.
கண்ணாடி எல்லாம் கல்யாணத்துக்குத் தடை இல்லை
என்று சிரிப்பான்.

 இந்தத் திருமணங்கள் ஏன் நின்று போகிறது என்று புரியாமல் ,மதுரை
கணேச சாஸ்திரிகளைப் பார்க்க விரைந்தார் ராமனாதன்.
சுந்தரியும் அவருடன் வந்தாள்.
வசந்தனகரில் இருக்கும் தாய்தந்தையரைப் பார்க்க இது இன்னோரு சந்தர்ப்பம்.
 அவர்களுக்கும் வயதாகிறது. அப்பாவுக்கு 76 ஆகப் போகிறது.
அம்மா 70 ஐத்தாண்டிவிட்டாள்.
மதுரை சென்று பஸ்ஸைவிட்டு இறங்கியதும்
நேரே  இருவரும் வசந்த நகர் சென்றனர்.

திடீரென வந்து நிற்கும் பெண் மாப்பிள்ளையக் கண்டு ஒரே சந்தோஷம்
அவர்களுக்கு. . விஷயங்கள் அறிந்தவர்களாக இருந்ததால்
நாளைக்குப் போய்ப் பாருங்கள். மதிய நேரம் ரிலாக்ஸாக
இருப்பார்,. பார்த்துவிட்டு மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கும்
போய் வாருங்கள் என்று சொன்னார்.
சரிம்மா இன்னிக்கு என்ன ஸ்பெஷல் என்றபடி
உள்ளே சென்றாள்  சுந்தரி. மாட்டுப் பொண்ணு வரப் போகிற நேரம்
 நீ அம்மாவிடம் கொஞ்சிண்டு இரு என்று சிரித்தார் அப்பா.

ராமனாதன் அவள் இன்னும் மாறவே இல்லை.
பார்க்கிற பெண் களை எல்லாம் பிடித்துவிடுகிறது.
வளையலாய் வாங்கிக் கொடுக்கிறாள்.
மருதாணி அரைத்துக் கொண்டு போகிறாள்.
எதோ நடந்து முயற்சி தோற்கிறது. துவண்டு போகீறாள்.
என்றார்.
நம்மாத்தில் ஒரு பெண்  பிறந்திருந்தால் இப்படி
ஒரு ஏக்கம் வராது. போனால் போகிறது சாஸ்திரிகள் வழி காட்டுவார்.
என்று ஆறுதல் சொன்னார் அப்பா.   ...தீர்வு கிடைக்கும்
Add caption

கயாவில் செய்த ஸ்ராத்தம்.

பல்குணி நதி.
விஷ்ணு பாதம் இருக்கும் கோவில்.
Vallisimhan

 ராமரும் வந்தார். லக்ஷ்மணன் தோளில் சில மூட்டைகள்.ராமர் கையில் உணவுக்கான
பொருட்கள்.

சீதையிடம் திதி கொடுக்க உணவு தயாரிக்கும் படி சொல்ல,
அவளும் தயாரிக்கிறாள்.

ஸ்ராத்தம் தொடங்கும் போது யாரும் பிண்டம் ஏற்க வருவதாகத் தெரியவில்லை.
சீதை மெல்ல நடந்ததை விளக்குகிறாள்.

நம்ப மறுக்கிறார் ராமர்.நான் கொடுத்து அவர் ஏற்கவேண்டிய பண்டத்தை நீ கொடுத்து அவர் ஏற்றதாக நான் எப்படி நம்புவது என்று கோபிக்கிறார்.

இதோ ஐந்து பேர் சாட்சி என்றுபசு,துளசி, பிராமணன்,பல்குனி நதி, அக்ஷயவடம்
எல்லாவற்றையும் காண்பித்துக் கேட்கிறாள்.

ராமரும் வினவ, அக்ஷயவடத்தைத் தவிர மற்ற நால்வரும் ராமனுக்குப்
பயந்து உண்மையை மறுக்கிறார்கள்.

சீதைக்குச் சினம் சீறிக் கொண்டு வருகிறது.
பசுவை நோக்கிப் பொய் சொன்ன உன் வாயிருக்கும் உன் முகத்துக்கு இனி
லக்ஷ்மிவாசம் கிடையாது.
உன் பின் பாகத்துக்குத் தான் மரியாதை கிடைக்கும்.
பிராம்மணரே   உமக்கு இங்கே கிடைக்கும்
வருமானத்தால் திருப்தியே அடையாமல் மேலும் மேலும்
அலைவீர்கள்.
துளசி செடியே உனக்கு இங்கே இனி இடம் கிடையாது.

பல்குனி நதியே இங்கு இனிமேல் பூமிக்கடியில் மறைந்து வாழ்வாய்.

அக்ஷயவடத்தைப் பார்த்து யுகம் யுகம் முடியும்போது
உனக்கு அழிவு வராது. என்றும் நிலைத்திருப்பாய்
என்று ஆசிகள் கொடுத்தாள்.
ராமரும்  இதைக் கேட்டு ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு
 சீதையைச் சமாதானம் செய்தார்.//
என்று சொல்லி முடித்தார் நாராயணன்.
வஞ்சுவுக்கு அதிசயமாக இருந்தது.
சீதைக்குக் கூடச் சினம் வருமா என்று.

வந்திருக்கிறது. நீ பொய் சொன்னதாக யார் சொன்னாலும்
சினம் வரத்தான் செய்யும் வஞ்சு. இப்ப நீ செய்யும்
தளிகையில் நான் ஏதாவது குற்றம் கண்டுபிடித்தால்
 அது நீ செய்யாத தவறாக இருக்கும் சமயம் உனக்குக்
கோபம் வராதா என்று கேலி செய்தார் வாசு.

வஞ்சு வுக்குப் பொய்க்கோபம் கூட வரவில்லை.
நடக்காத விஷயத்துக்கு எல்லாம் எனக்குக்
கவலை இல்லை என்று சிரித்தாள்.
நாராயணனும் லக்ஷ்மியும் சேர்ந்து கொள்ளப் பயணமும்
பூர்த்தியாகி விஷ்ணு பாத கோவிலுக்கு வந்து நின்றது வண்டி.

கீழே  இறங்கியதும் அவர்கள் தேடியது ,தீர்த்தமாடும் இடத்தைத்தான்....
அவர்களுக்காகவே காத்திருந்த தமிழ்ப் பண்டிதர் ஒருவர்,
தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு ,அதோ தெரிகிறது
பாருங்கள் பல்குணி நதி. அதில் கிணறு  ஊற்றெடுக்கும். அங்கே சென்று ஸ்னானம்
செய்து உடை மாற்றி வாருங்கள்.
நாம் பிண்ட தானம் செய்யும் இடத்துக்குச் செல்லலாம்.
எல்லாம் நல்ல படியாகப்  பூர்த்தியாகட்டும் என்று நல் வார்த்தை சொன்னபடி
அவர்களை அழைத்துச் சென்றார்.

அவர் சொன்னபடியே செய்துவந்தவர்கள்,
ஒரு பெரிய தர்ப்பண கட்டத்தை அடைந்தனர்.
தனியாக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து
அதை வஞ்சுமாவையும், லக்ஷ்மி மாவையும்
சுத்தம் செய்யச் சொன்னார்.
அவர்கள் செய்து முடித்ததும் ,அந்த இடத்தைத் தர்ப்பைகளால்
நிரப்பினார்.
பிறகு ஆரம்பித்தது கயா ஸ்ராத்தம்.
மந்த்ரங்கள் சொல்லி லகுவாக அவர்களை வழி நடத்தினார்.
 அம்மா அப்பாவுடன், வீட்டில்  இறைவனை அடைந்த அனைவர்க்கும்
பிண்டம் கொடுக்கலாம் என்று சொன்னதும்
வஞ்சுமாவும் ,லக்ஷ்மி மாவும் தங்கள் தங்கள்
பெற்றோர்களுக்கும் கொடுக்கவும் வேண்டிக் கொண்டார்கள்.

/////////இந்த இடத்தில் நம் பதிவுலக துளசியையும் கோபாலையும்
கட்டாயம் நான் நன்றியுடன் நினைக்கிறேன்.
அவர்கள் சென்ற போது , என் கணவருக்கும்
பிண்டம் கொடுத்து ஸ்ராத்தம் செய்தனர்.
மனம் நிறை நன்றி கோபால் துளசி. என்றும் வாழ்க வளமுடன்.//////////

இந்த ஸ்ராத்த வீடியோவை  முன்னரே பதிவிட்டிருந்தேன்.
http://kothainaachiyaar.blogspot.com/2018/07/gaya-shraddhamm4v.html

அக்ஷய வடத்தின் இன்னொரு படம்.


எல்லோருக்கும் இந்தத் தயாள குணம் வராது.

இந்தக் கயை புனிதத் தலத்தில் இறந்த முன்னோர்களுக்கு  பிண்டமளித்து நீத்தார் கடன் செய்வது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தப் பிண்டங்களை பல்குணி நதிக்கரையிலும், விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வடம் எனும் விழுதில்லா ஆலமரத்தின் அடியிலும் படைக்கிறார்கள். இங்கு நம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல; நண்பர்கள், (ஏன் நல்ல மனமிருந்தால் எதிரிகளுக்கும் கூட பிண்டம் வைக்கலாம்) உறவுகள், நாம் ப்புப் பிராணிகள், முகம் தெரியாதவர்கள், விபத்து போன்றவற்றில் மறைந்தவர்கள் என அனைவருக்கும் பிண்டம் வைக்கலாம். அக்ஷய வடத்தில் பிண்டம் வைப்பதோடு ”நீத்தார் வழிபாடு” கயையில் நிறைவடைகிறது. இதனால் நம் முன்னோர்கள் மகிழ்வதாகவும், மேலுலகம் செல்வதாகவும், நம்மை ஆசிர்வதிப்பதாகவும் நம்பிக்கை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Thursday, July 26, 2018

கயாவை நோக்கி....

Vallisimhan

அடுத்தனாள் காலை ,
எல்லா ப் பெட்டிகள் படுக்கைகள், சால்வைகள்  வரவேற்பு
க் கூடத்தில் வைக்கப் பட்டிருந்தன.
பிரயாணத்து ஏற்றவாறு உடை அணிந்து ,லக்ஷ்மிமாவும் வஞ்சுவும் கங்கைக்கரை நோக்கி நடந்தனர்.

இருவருக்கும் பெற்ற தாயாரைப் பிரிவது போல
ஒரு வருத்தம்.

லக்ஷ்மி ,நீ எனக்குக் கிடைத்த மிக நல்ல தோழி.
அதற்கே இந்த கங்கை அம்மாவுக்கு நன்றி சொல்லணும்.

உண்மையே வஞ்சு, நீங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு இத்தனை சந்தோஷமான
பயணம் அமைந்திருக்காது.
ஒரு ரொடீன் கோவில் பயணம் மறக்க
முடியாமல் அமைந்தது உங்களால்தான் என்றபடி அவளை அணைத்துக் கொண்டார் லக்ஷ்மி.

 வாவா. அவர்களுக்குப் பொறுமை கொஞ்சம் குறைவு என்று விடுதியை
அடைந்தனர்.
வாசுவும் ,நாராயணனும், நடேசனிடம் விவரங்கள் கேட்டு அறிந்தனர்.
88 கிலோ மீட்டரில் இருக்கும் கயா புண்ணிய ஸ்தலத்துக்கு ஒன்றரை மணி நேரத்தில் போய்விடலாம்.
 முதலில் விஷ்ணு பாதம் இருக்கும் கோவிலுக்குச் சென்று ,நடேசன் சொன்ன புரோஹிதரை அழைத்துக் கொண்டு  அக்ஷயவடம்  சென்று வணங்க வேண்டும்.
//அவர் விவரமாக உங்களுக்குச் செய்ய வேண்டிய முறைகளைச் சொல்லிக் கொடுப்பார்.
பல்குணி நதி தரிசனம் முக்கியம்.// என்று நிறுத்தினார் நடேசன்

வஞ்சு,உனக்குத் தெரியுமா, இந்த அக்ஷயவடம் தான் எல்லாக் காலத்திலும் உயிர்த்து வாழ்ந்து யுகம் யுகமாக   நிற்கிறது.
நம் வட பத்ர சாயி துயில் வதும் இந்த புனித மரத்தின் இலையில் தான் ஆலிலைக் கண்ணன்.
  VATA PATHRA  SAAYI. நம் வாயில் வடை பாடு படுகிறார். என்று இடை மறித்தார் வாசு.
பகவானை என்ன சொன்னாலும் அவர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்றார் வஞ்சு மா.

பிரியாவிடை என்றுதான் சொல்லவேண்டும், இது போல யாத்திரை அமைந்தது இல்லை.
இத்தனை சௌகர்யமாக அலுப்பில்லாமல் எல்லா இடங்களுக்கும்
அழைத்துச் சென்றீர்கள்.
இதற்காகவே நாங்கள் இன்னோரு முறை வரத் தோன்றுகிறது.
என்றார் லக்ஷ்மி மா.
அதெல்லாம் இல்லைம்மா. நல்ல மனிதர்களுடன் ஒருவனாக இந்த ஐந்து நாட்களும்
 கழிந்தது என் பாக்கியம். மீண்டும் சந்திப்போம்.
உங்களுக்கு ஒரு தந்தி வந்திருக்கிறது இதோ கொடுக்கிறேன் என்று கொண்டு வந்தார்.
அவசரமாகப் பிரித்த வாசுவின் முகம் மலர்ந்தது.
வஞ்சு நீ சொன்ன செய்தி கன்ஃபர்ம் ஆயிடுத்து.
உன் பெண் மீண்டும் தாயாகிறாள்.
பெருமாளே காப்பாத்து என்று உணர்ச்சிவசப் பட்டார் வாசு.
அதுதான் பகவான் லட்டு கொடுத்து கண் காட்டி விட்டிருக்கிறார்
என்று ஆனந்தமாகக் கங்கைக் கரையிலிருந்து கிளம்பினார்கள்.

உங்களது மதிய உணவு இந்தப் பிரம்புக் கூடையில் இருக்கிறது.
மறவாமல் சாப்பிடுங்கள்.என்று கை கூப்பினார் நடேசன்.
மனமில்லாமல் அவரிடம் பல நன்றிகளை உரைத்தபடி வண்டி ஏறினார்கள்.

கங்கைக்கு நமஸ்காரங்களைச் சொன்னபடி வண்டி கிளம்பியது.
அவரவர் நினைவுகளில் மூழ்கினார்கள்.
எத்தனை நாட்கள் கனவு கண்ட பூமி இது. இறைவா உனக்கு நன்றி
என்றபடி சற்றே கண்ணசந்தனர்.
வண்டியோட்டி மிதமான வேகத்தில் ஒன்றரை மணி நேரத்தில்
கயாஸ்தலத்துக்கு வந்துவிட்டார்.

நடுவில் ராமாயணத்தில் நடந்த சம்பவமாக ஒன்றைக் குறிப்பிட்டார்
நாராயணன்.
பல்குணி நதிக்கரையில் ராமன்,லக்ஷ்மணன் ,சீதை தங்கி இருந்தபோது
தசரதமஹாராஜாவுக்கு  ஸ்ராத்தம் கொடுக்க வேண்டிய நாள் வந்தது.
அதிகாலையில் எழுந்த சகோதர்கள் நதிக்கு அக்கரையில் தேவையான் பொருட்களைச் சேகரித்து நதி வழியே வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை எதிர்பார்த்துக் கரை யோரம் சீதை காத்திருந்தபோது திடீரென
தசரதரே வந்துவிட்டார்.
விதிர்விதிர்த்துபோன சீதை மாமனாரை வணங்கி தாமதத்துக்கு
மன்னிக்கச் சொல்லி சகோதரர்கள் வந்துவிடுவார்கள் என்று உறுதி சொல்கிறாள்.
அந்த யுகத்தில் முன்னோர்கள்
நேரில் வந்து பிண்டங்களை வாங்கிக் கொள்வது வழக்கமாம்.
தசரதரோ மிகவும் பசியாய் இருக்கிறது சீதே,
நீ அந்த மண்லில் செய்துவைத்திருக்கும் உருண்டைகளை
நீர் வார்த்து எனக்குக் கொடு என்கிறார்.
தயங்கின சீதையை உற்சாகப் படுத்துகிறார்.
சீதையும் கொடுக்க அதை ஸ்வீகரித்தபடி மறைந்து விடுகிறார்.
சீதைக்குத் தெரியும் ராமனின் சுபாவம்.
ஐந்து சாட்சிகளைக் கேட்டு நடந்தவிஷயங்களை ராமனிடம்
ருசுப்பிக்கச் சொல்கிறாள்.
 அக்ஷயவடம், ஒரு பிராமணர்,ஒரு பசு, பல்குனி நதி, ஒரு துளசி செடி.
எல்லோரும் சம்மதிக்கிறார்கள் ராமர் வருகிறார்.  நாளை பார்ப்போம்.

Su to ku உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - 2

Vallisimhan
சுடோ கு  இரண்டாம் பாகம்   இது நம்ம ஏரியாவில் வெளிவந்தது.

சுந்தரியும் குணபதியும் அன்றிரவு உறக்கம் வராமல்
யோசித்துக் கொண்டிருந்தனர்.
குணபதியின் பெற்றோர்களும் சுந்தரியின் பெற்றோர்களும்
செய்த தீர்மானத்தைப் பற்றியும் அவர்கள்  யோசிக்க வேண்டி இருந்தது.

திடீரென வந்த ஐடியாபடி சுந்தரி முதலில் குணபதியை கைபேசியில் அழைத்தாள்.
உடனே   எடுத்துப் பதில் சொன்னான்.
சுந்தரிக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. நீங்களும் தூங்கவில்லையா என்று கேட்டாள்.
இது போலக் கண்டிஷன் எல்லாம் போட்டால்
என்ன செய்வது என்று தெரியவில்லை.
நாம் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டால் தானே
அடுத்த நடவடிக்கை. என்றான் அவன்.
அதே தான் எனக்கும் தோன்றியது.
நாளைக்கு நாம் சந்திக்க வேண்டும்...எங்கே  என்றாள். USIS
 லைப்ரரிக்கு வரமுடியுமா.
ஓகே. சாயந்திரம் 4 மணிக்கு அங்கே இருப்பேன் என்றதும், இருவருக்கும்
மனம் கொஞ்சம் அமைதியாகியது.
காலை எழுந்ததும் பெற்றோர்களைப் பார்த்து எனக்கு
சாயந்திரம் லைப்ரரி போகணும்.
உங்கள் திட்டம் பற்றி எனக்கு யோசிக்க நேரம் வேண்டும் என்றாள்.
அதுக்கு என்னம்மா,,, உங்கள் இருவர் ,வாழ்க்கை திருப்தியாக அமையத்தான் இந்த ஏற்பாடு.
என்றார் அப்பா.
நாங்கள் முதலில் ஒருவருக்கு ஒருவர் சரியான்னு பார்க்கணும் அப்பா.
அப்புறம் தான் பெற்றோர் என்ற  பெண்ணை.மலைப்புடன் பார்த்தார்.
 இந்த யோசனையே முதலில் தப்பு. நாங்கள் என்ன
சின்னக் குழந்தைகளா .இரண்டு நாள் நேரம் எடுத்துப்போம் என்றாள்
சுந்தரி.
குணபதியும் ஒத்துக் கொண்டானா.
ஆமாம் நாங்கள் இருவரும்  சந்தித்துப் பேசப் போகிறோம்.

சரி நல்ல முடிவுக்கு வாருங்கள் என்று ஒதுங்கிக் கொண்டார் தந்தை.
இதே நாடகம் குணபதியின் வீட்டிலும் நடந்தது..அவர்களும்
ஒத்துக் கொள்ள வேண்டியது ஆயிற்று.
மாலை தன்னைக் கச்சிதமாக ஒப்பனை செய்து கொண்டு
ஜீன்ஸ் ,டி ஷர்ட்டில் கிளம்பும் பெண்ணை அம்மா கவலையுடன்
பார்த்தாள்.
இதுதான் மா நான் . சரியா என்று கிளபினாள் தன் ஸ்கூட்டியில்.
அங்கே லைப்ரரி வசலில் நின்ற குணபதியைக் கண்டதுமே இயல்பாக மனம்
மலர்ந்து புன்னகை வந்தது.
ஹலோ என்று விளித்தபடி இருவரும் நெருங்கி, தங்கள் தங்கள் அட்டையைக் காட்டி
உள்ளே நுழைந்தனர்.
ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு
ஒரு மேஜையின் இருபக்க நாற்காலிகளில்
அமர்ந்தனர்.
வீட்டில் ஓகேயா என்றாம் குணபதி.
ஆமாம் குணா நான் சொல்லிவிட்டேன்.
நானும்தான் சுன்சுன் என்றான் குணா வான குணபதி.
சுன்சுனா என்ன பேரு அது. ஏதோ இந்திப் பாட்டு மாதிரி இருக்கு
என்று சிரித்தாள்.
ஆமாம் பழைய காலப் பெயர் , புது உடை பேரை மாற்றி விட்டேன்.
என்றான் குணா.
சரி இப்போ  நம் எதிர்காலம் என்ன ஆகப் போகிறது.
இரண்டு பேருக்கும் வேறு குழந்தைகள்
கிடையாது. அதனால் தங்கள் சாய்ஸ் சரியாக
இருக்கணும்னு எதிர்பார்க்கிறார்கள்.
நம் முடிவுதான் இப்போது முக்கியம். என்றான் குணா.
அதற்கு மேல் மடை திறந்தது போல் தங்கள் விஷயங்களையும்,
நம்பிக்கை, விருப்ப வெறுப்புகளையும்  பற்றிப் பரிமாறிக்
கொண்டனர்.
அங்கிருந்து வெளியே வந்து லஸ் வினாயகர் கோவிலுக்குச் சென்றனர்.
அங்கிருந்த குருக்கள் இருவரையும் பார்த்து நட்புடன்
புன்னகைத்தார். நண்பர்களா என்றார்.  ஆமாம் சார். பிள்ளையார்
பெயரில் அர்ச்சனை என்றனர்.
ஆஹா அதுக்கென்ன என்றபடி  தன் கணீர்க் குரலில் அர்ச்சனையை ஆரம்பித்தார்.
அழகான குழந்தையைப் போல் வீற்றிருந்த பிள்ளையாரை இருவரும் ரசித்துத் தொழுதனர்.
மாலையைக் குணாவின் கழுத்தில் போட்ட கணபதிக் குருக்கள், சீக்கிரமே
 விவாகப் பிராப்திரஸ்து என்று ஆசிர்வதித்தபடி சுந்தரியின் பக்கம் திரும்பி
மல்லிகை மாலையைக் கொடுத்தார்.
 தட்டில் அர்ச்சனைக்கான பணத்தை மரியாதையுடன் வைத்த குணாவை
பார்த்து மகிழ்ந்தாள். இங்கிதம் தெரிந்தவன் தான் என்றபடி
பிள்ளையாரை இருவரும் வலம் வந்தனர்..

வெளியே வந்து அவரவர் வண்டியில் உட்கார்ந்து கொண்டு
சரவணபவன் போலாமா என்று கேட்ட குணாவுக்கு மறுப்பு
சொல்லவில்லை.
நாளை நாங்கள் உங்க வீட்டுக்கு வருகிறோம் என்றாள்.
நான் காத்திருக்கிறேன் என்றான் குணா.

இருவருக்கும் புரிந்துவிட்டது இனி வாழ்க்கையில்
அவர்கள் விருப்பம் போலத்தான் எல்லாம் என்று.
இரு வண்டிகளும் இணையாக சரவணபவனில் நுழைந்தன.
இரண்டு மணி நேரம் கழித்துதான் அவரவர் வீட்டை அடைந்தனர்.

பெற்றோர் விருப்பமும் அவர்கள் விருப்பமும் ஒன்றாகி
ஆவணி மாதம் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.
 ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா.


SUTOKUஉனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. -

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இது  நம்ம ஏரியாவில்
+++++++++++++++++++++
 வெளியான கதையின் முதல் பாகம். கெளதமன் அவர்கள்  கொடுத்த கருவுக்கு நான் எழுதிய கதை.
பெயர் சூட்டியது ஸ்ரீராம் . மிக மிக நன்றி ஸ்ரீராம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருவிடந்தை வராஹ பெருமாளைப் பூமிப்பி ராட்டியை ஏந்திய கோலத்தில் அவளூக்கு உபதேசம் செய்யும் அழகை  ,நித்ய கல்யாணப் பெருமாளாகத் தரிசனம் செய்து வாங்கிப்
போன அழகிய ரோஜா மாலையை அவ்ருக்குச் சார்த்தினார் சுந்தரியின் அப்பா.

அங்கிருந்த அர்ச்சகர் ,சுந்தரியின் பெயருக்கு ,அர்ச்சனை செய்து அந்தமாலையை சுந்தரியிடம் கொடுத்து அணிந்து
கொள்ளச் சொன்னார்.

கையில வச்சுக்கறேனேப்பா என்று கெஞ்சலுடன் அப்பாவைப் பார்த்தாள் சுந்தரி.
இல்லைம்மா கழுத்தில போட்டுக்கோ
என்ற அம்மாவின் கண்டிப்பான வார்த்தையை மீற முடியாமல்
மாலையை அணிந்து கொண்டாள்.
 இத்தனை பேர் முன் னால் மாலையோடு ஒன்பது தடவை கோவிலைச்  சுத்தணுமாம்.


என்ன பைத்தியக் காரத்தனம் என்று மனம் முரண்டு பிடிக்க
கடுகடு முகத்துடன் கருவறைப் படியைத் தாண்டும்போது அந்தப்பக்கம் ஒரு வாலிபனும்
அவன் பெற்றோர்களும் கைகளில்  மாலையுடன் உள்ளே நுழைவதைக் கண்டாள்.
ஆஹா இன்னோரு பலியாடு போகிறது.
என்று சன்னிதி வெளிச்சத்தில் அவனை எடை போட்டாள்.
ம்ம். நல்லாத்தானே இருக்கார்.
எந்த இடத்தில தோஷமோ என்று குறும்பு கண்களில் மின்ன
அவனை நோக்கவும், அந்தப் பையனும் எதேச்ச்சை யாக இவளைப் பார்க்கவும்,
அந்தக் குறும்பைப் புரிந்து கொண்டவனாக,
அவனும் முறுவல் செய்தான்.

  அடுத்து சூரிய வெளிச்சத்தில் வந்ததும், துவஜஸ்தம்பத்தைச் சுற்றி
பிரகாரத்திற்கு வந்தார்கள்.
அங்கே பார்த்தால் இவளைப் போல பத்துப் பேராவது மாலை
 அணிந்து இலக்கிலாமல் பார்த்துக் கொண்டு தாயார் சன்னிதிக்கு ச் சென்று கொண்டிருந்தார்கள்.
உள்ளே போக வழி இல்லாமல் ஏதோ வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

வெளியிலிருந்து சேவித்துவிட்டு,  அடுத்தாப்பில இருந்த ஸ்தல வ்ருக்ஷத்தை
நோக்கிச் சென்றனர்.
கல்யாணம் ஆன பிறகு இங்கே கொண்டு வந்து மாலையை மரத்துல
சார்த்தணும்பா.
பாரு எத்தனை வாடின மாலை தொங்குகிறது.
ரொம்ப  கருணையான பகவான். வருடத்தில் எல்லா நாளும் கல்யாணம்
புரிந்து கொள்ளும் தயாபரன். 365 கன்னிகைகளைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களது தந்தைக்கு
வாக்குக் கொடுத்திருக்கிறான்.
குணபதி மரத்தை வணங்கிக் கொள்ளப்பா, சீக்கிரமே மணப்பெண்ணுடன் வர
அருள் செய் என்று வேண்டிக் கொள் என்னும் குரலைக் கேட்டு மீண்டும் திரும்பினாள்.
ஓ அதே  பையன் குணபதியா. படு கர்னாடகமா இருக்கே.
இந்தக் குணபதிக் கேற்ற குணவதியே மணப் பெண்ணாகவரட்டும்,
என்று மீண்டும்  சிரிப்புத் தோன்ற, முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அப்படியும் பார்த்துவிட்டான் அந்தக் குணபதி.
மிக்க சிரமத்துடன் தன்னை அடக்கிக் கொண்டான்.

இதே போல ஒன்பது தடவை சுற்றி வருவதற்குள்
பெற்றோர்கள் பழகி விட்டார்கள். குலம் கோத்ரம் எல்லாம்
எல்லாம் தெரிந்து கொண்டார்கள்.. ஏதோ தெய்வாதீனமாகச் சந்தித்திருக்கிறோம்.

ஆனால் என்று இழுத்தார் சுந்தரியின் அப்பா  முத்துராமன்
எங்கள் குல வழக்கப் படி ஜாதகம் குறிப்பதில்லை,
என்றதும் ஆச்சர்யத்துடன் பார்த்தார் நடராஜன்.
எங்க வீட்டில தான் அந்தப் பழக்கம்னு நினைத்தேன்.
நாங்க நெல்லைப் பக்கம், நீங்க ....நாகர்கோயில் என்று முடித்தார் முத்துராமன்..

எங்க வழக்கப் படி 23 24 வயசில பையனுக்கு மணமுடிச்சுடுவோங்க.
இவனுக்கு 24ம் முடிஞ்சுடுத்து.

எங்க வீட்டிலயும் 20 வயசுல பொண்ணு வீட்டை விட்டுப் போயீடும். பட்டம் வாங்கியாச்சு மேல படிக்கணுமாம்.
இவளுக்கு 21 ஆகிறது என்றார் சுந்தரியின் அப்பா.

மௌனம் நிலவியது.
சுந்தரியின் அம்மா  கோமதியும், குணபதியின் அம்மா காந்திமதியும்
 தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டார்கள்.
 சுந்தரியும் குணபதியும் மௌனம் காத்தார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பகுதி 2
++++++
 சு to கு 2
++++++++++++++++++
கோவிலில் சந்தித்ததால் இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்
பெரியவர்கள்.
 குணபதிக்கு  சுந்தரியைப் பிடித்துவிட்டது.
சுந்தரி ஜாக்கிரதையாக இருந்தாள்.
முதல் சந்திப்பில்
எப்படி எல்லாவற்றையும் முடிவெடுக்க முடியும்.
சந்திப்பு நல்லது தான் .அவனுடன் பேசணும்.
அம்மா அப்பா எப்படி இருப்பார்களோ.
என்று யோசித்தபடி வெளிமண்டபத்தில் வாங்கிய
வடைமாலைத் துணுக்குகளைச் சத்தம் வராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

மகன் அடிக்கடி சுந்தரியைப் பார்ப்பதைக் கண்ட  அவன் அப்பா நடராஜன்
பேசுவதானால் பேசேன் பா. என்றதும்
இல்லப்பா நீங்க பேசி முடிங்க. நான் அப்புறம் பேசுகிறேன் என்றான்.
முத்துராமனும் சுந்தரியைக் கேட்டார். அவளோ நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்.
பிறகு நாங்கள் பேசிக்கொள்கிறோம்.
பெற்றோருக்கு இவர்கள் சொல்லி வைத்தாற்போல
ஒரே மாதிரி பேசுவது சிரிப்பு வந்தது.

 நாளை உங்களுடன் பேசுகிறோம்  என்றபடி விடை பெற்றனர்
இரு குடும்பத்தினரும். சுந்தரியும் குணபதியும்
 வணக்கம் சொல்லி அவரவர் வண்டியில் ஏறிக் கொண்டனர்.

இரு பெற்றோர்களும் பெண் பையனைக் கேட்ட போது
நாங்கள் இருவரும் முதலில் சந்திக்கிறோம்.
அவள் விருப்பம் என் விருப்பம் எல்லாம் ஒத்துப் போகணும்,. பிறகு உங்க இஷடப்படி உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறோ என்று இருவருமே சொல்லிவிட்டார்கள்.

Wednesday, July 25, 2018

கயாசுரன் காரணமாகக் கயா வந்தது....2

mahaa vishNu kovil
Akshaya vadam
Vallisimhan

 கயாவில் பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் வழிபாடு செய்து, பிண்டம் வைக்க முன்னோர்கள் முக்தி அடைவார்கள் என்பது நம்பிக்கை. இப்படியொரு வரத்தைக் கேட்டுப் பெற்றவன் ஓர் அசுரன். கயாசுரன்.

கயாசுரன் ஒரு அரக்கன். இவன் மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். விஷ்ணுவும் அவன் முன் தோன்ற, கயாசுரன் அவரிடம், “என்னுடைய உடல் எல்லா தீர்த்தங்களைக் காட்டிலும் தேவர்கள், முனிவர்கள், கின்னரர், கிம்புருடர், கந்தர்வர்கள், வானவர், சாதாரண மானிடர்கள் ஆகிய அனைவரைக் காட்டிலும் எனது உடல் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும் ” என்று வரம் கேட்க, விஷ்ணுவும் அவ்வாறே அருள் புரிந்தார். அதுமுதல் மக்கள் பலரும் கயாசுரனின் உடலைத் தொட்டு தங்கள் பாவங்களைக் போக்கிக் கொண்டனர். இதனால் எமதர்மராஜனின் பணி பாதிக்கப்பட்டது. பூமியில் சுமை அதிகரித்தது. எமன் பிரம்மாவிடம் முறையிட, பிரம்மா விஷ்ணுவிடம் இதைத் தெரிவித்தார். உடனே விஷ்ணு, பிரம்மாவிடம் “ நீ கயாசுரனின் சென்று உன் உடல் பவித்ரமானது. அதில் யக்ஞம் செய்ய வேண்டும் எனக் கேள்” என்றார். பிரம்மாவும் அதன்படி சென்று கயாசுரனிடம் கேட்க, அவன், ”ஒரு நல்ல காரியத்துக்கு என் உடல் பயன்படுமானால் அது எனக்கு மகிழ்ச்சியே” என்று கூறி வடக்கே தலை வைத்து, தெற்கே கால் நீட்டி தன் உடலை கீழே கிடத்தினான். அவனது உடல் மீது பிரம்மா வேள்வியைத் துவக்கினார். வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அசுரனின் தலை அசையத் துவங்கியது.

கயாசுரன்

பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் எமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. பின் விஷ்ணு கதாதரராகத் தோன்று தன் கதாயுதத்தால் அவன் மார்பை அழுத்தி, தனது பாதத்தை அவன் மீது வைத்து அவன் தலை ஆட்டத்தை நிறுத்தி அவனை பாதாள லோகம் அனுப்பினார். அதற்கு முன் அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, கயாசுரன், ”இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிரார்த்தம் செய்பவர் அனைவருக்கும் எந்தப் பாவமும் அண்டாமல் முக்தி கிடைக்க வேண்டும்” என்று வேண்ட, விஷ்ணுவும் அவ்வாறே அருளினார். அதுமுதல் இங்கு பிண்டம் வைத்து முன்னோர்களை வழிபாடு செய்வது தொடர்கிறது.

கயாசுர வதம் - கதாதரர்
கயாசுர வதம் – கதாதரர்
Add caption
முதலில் பல்குணி நதி, பின் விஷ்ணு பாதம், அதன் பின் அக்ஷய வடம் ஆகிய இடங்களில் பிண்டம் அளிக்க வேண்டும். பல்குணி நதியில் நீர் அதிகம் இருக்காது. மழைக்காலம் போன்ற சமயங்களில்தான் தண்ணீர் ஓடும். நதியின் எதிரே சீதா மாதா ஆலயம் உள்ளது. கயையில் மடங்கள், சத்திரங்கள் உள்ளன. எல்லா பிரிவினருக்கும் ஏற்றபடி சிரார்த்த காரியங்கள் செய்து தர அங்குள்ள சத்திர, மடங்களின் மேனேஜர் ஏற்பாடு செய்து தருகின்றார். அவர்களே பல்குணி நதி, விஷ்ணு பாதம், அக்ஷயவடம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பிண்டம் போட உதவி செய்கின்றனர். கயையில் தங்கள் முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர்கள், ஆசையுடன் வளர்த்த மிருகங்கள், செல்லப் பிராணிகள், மரம், செடி, கொடிகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் பிண்டம் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் பிண்டத்தால் அவர்கள் நற்கதி பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
Vishnu padham

Assi ghat.

கயா புண்ணிய யாத்திரையின் வரலாறு

Vallisimhan

இந்த இரண்டு பதிவுகளும் கூகிளில் எடுக்கப் பட்டவை. என் எழுத்தில்.

கயை” என்ற ஊர் பீகாரில் இருக்கிறது. புத்தருக்கு ஞானம் கிடைத்த ஊரான ”புத்த கயா” இங்கிருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஊராகும். இந்தக் கயை புனிதத் தலத்தில் இறந்த முன்னோர்களுக்கு  பிண்டமளித்து நீத்தார் கடன் செய்வது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தப் பிண்டங்களை பல்குணி நதிக்கரையிலும், விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வடம் எனும் விழுதில்லா ஆலமரத்தின் அடியிலும் படைக்கிறார்கள். இங்கு நம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல; நண்பர்கள், (ஏன் நல்ல மனமிருந்தால் எதிரிகளுக்கும் கூட பிண்டம் வைக்கலாம்) உறவுகள், நாம் ப்புப் பிராணிகள், முகம் தெரியாதவர்கள், விபத்து போன்றவற்றில் மறைந்தவர்கள் என அனைவருக்கும் பிண்டம் வைக்கலாம். அக்ஷய வடத்தில் பிண்டம் வைப்பதோடு ”நீத்தார் வழிபாடு” கயையில் நிறைவடைகிறது. இதனால் நம் முன்னோர்கள் மகிழ்வதாகவும், மேலுலகம் செல்வதாகவும், நம்மை ஆசிர்வதிப்பதாகவும் நம்பிக்கை.

ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தானாத்
த்ரிபி : புத்ரஸ்ய புத்ராய

என்கிறது வடமொழி ஸ்லோகம். தாய், தந்தையரை மதித்துப் பராமரிப்பது மட்டுமல்ல புத்திரனின் கடமை. அவர்கள் இறந்தபின்னும் அவர்கள் மேல்நிலைக்கு உயர நீத்தார் வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் ’கயை’ போன்ற இடத்திற்குச் சென்று அவர்கள் உயர்நிலைக்குச் செல்ல பிண்ட தானம் செய்ய வேண்டும். அவனே நல்ல புத்திரன் என்கிறது இந்த ஸ்லோகம்.

DSCN5044

இந்தப் பிண்டங்களில் பல்குணி நதியில் 17 பிண்டங்கள் வைத்துப் படைக்க வேண்டும். விஷ்ணு பாதத்தில் 64 பிண்டங்கள் படைக்க வேண்டும். பிறகு இறுதியாக அக்ஷய வடத்தில் 64 பிண்டங்கள் படைக்க வேண்டும். அந்த 64 பிண்டங்களில் தாய்க்கு மட்டும் 16 பிண்டங்கள் உரித்தானவை. அந்த அளவுக்கு தாய்க்கு முக்கிய ஸ்தானம் அளிக்கப்படுகிறது. ஏன்?

DSCN5027

நம்மைப் பத்து மாதம் சுமந்து, உதிரத்தைத் தாய்பாலாக்கி அளித்து, பெற்று வளர்த்து ஆளாக்குபவள் அன்னை. அந்த அன்னைக்கு இறந்த பின்னரும் காட்டும் நன்றிக் கடனே மேற்கண்ட 16 பிண்டப் பிரதானம். அதற்கென்று உள்ள மந்திரங்களைச் சொல்லி அந்தப் பிண்டத்தைப் படைக்கின்றனர். சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அந்த மந்திரத்தை விட்டு விட்டு அதன் பொருளை மட்டும் பார்ப்போமா?

1. அம்மா, என்னை கர்ப்பத்தில் தாங்கியபடி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது அதனால் சொல்லொணா வேதனைகளை அனுபவித்தாயே, அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தை உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள்வாயாக!

2. ஒவ்வொரு மாதத்திலும், பிரசவத்தின் போதும் உனக்கு வேதனைகளை உண்டாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், அம்மா, ஏற்றுக் கொள்வாயாக!.

DSCN5176

3. உன் வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனையை நீ சகித்தாய் அம்மா. ஆனால் அதனால் எனக்குச் சேர்த்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!.

4. நீ நிறைகர்ப்பிணியாக என்னைச் சுமந்தபோது உனக்கு உண்டான வேதனைகள் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்குவதற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் அம்மா, ஏற்றுக் கொள்வாயாக!.

DSCN5188

5. அம்மா, உன் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை போன்றவற்றால் வந்த வேதனைகள் எனக்கு விளைவித்த பாவத்தைப் போக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!.

6. அன்புள்ள அன்னையே, என்னை வியாதிகள் தாக்காமல் இருக்க, நீ கசப்பான மருந்துகளைச் சாப்பிட்டாயே , உனக்கு நான் செய்த இந்தக் கொடுமைகளினால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், தயை கூர்ந்து ஏற்றுக் கொள்வாயாக!.

7. நான் பிறந்தபோது மூன்று நாள்கள் அன்ன ஆகாரமின்றி பசி என்னும் பெருநெருப்பில் நீ நொந்தாயே அம்மா, உனக்கு என்னால் ஏற்பட்ட இந்தக் கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள் அம்மா!.

DSCN5203

8. இரவில் நான் உன் ஆடைகளை மல, மூத்ரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், பெற்றுக் கொள் அம்மா.

9. என் பசி, தாகம் தீர்க்க அவ்வப்போது உணவும் நீரும் எனக்குத் தந்தாயே உன்னை அவ்வாறு வருத்திய பாவத்தை நீக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், தயவு செய்து ஏற்றுக் கொள்.

10. அல்லும் பகலும் உன் முலைப் பாலை அருந்தும்போது உன்னை நான் துன்புறுத்தினேன். அதனால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக அம்மா.

11. கோடைக்காலங்களில் என்னைக் காக்கத் உன் உடலை வருத்திக் கொண்டாயே அம்மா! உனக்கு நான் தந்த இந்தத் துன்பங்களால் விளைந்த பாவங்களைப் போக்கிக் கொள்ளப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் அம்மா.

IMG01960

12. மகன் நோய்வாய்ப்பட்டானே என்ற கவலையால் வாடி இருந்தாயே, அம்மா உனக்கு விளைவித்த அந்த மனத்துயருக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள் அம்மா.

13. என் அன்பார்ந்த அன்னையே, யமலோகம் செல்லும் நீ கோரமானவற்றை எல்லாம் கடந்து செல்வதற்குத் துணை நிற்பதற்காக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் ஏற்றுக் கொள்வாயாக!.

14. உனக்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுசால் புத்திரர்கள் அவர்களின் தாய்க்குச் செய்வதை ஒப்ப, நானும் இப்பிண்டத்தைத் தருகிறேன் அம்மா! கருணை கூர்ந்து இவற்றை ஏற்றுக் கொள்வாயாக.

15. நான் நன்கு வளர்வதற்காகத் உனக்கு ஆகாரம் இல்லாமல் கூடக் கஷ்டப்பட்டாயே அம்மா, உனக்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!.

IMG01969

16. கர்ப்பத்திலும், சிசுவாக இருந்தபோதும், நான் மரணவேதனையை ஒத்த பல கஷ்டங்களை உனக்குத் தந்தமைக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைப் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக அம்மா!.

இதுதான் அந்த ஸ்லோகத்தின் பொருள்.

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அல்லவா? அந்தத் தெய்வத்தின் அருளை எப்போதும் பெறுவோமாக, பெற முயற்சிப்போமாக…

ஓம்***Tuesday, July 24, 2018

காசிப்பயணம் கயாவில் தொடரும்

பிந்து மாதவன்.
Vallisimhan

அஸ்ஸி காட்  வந்து சேர்ந்ததும்,
முதலில் ஒரு ஐம்பது படிகளாவது இருக்கும் கரை தெரிந்தது.
அதில் இறங்கினால் கங்கையின் வெள்ளம்.

வஞ்சுமாவால் இறங்க முடியாது என்று புரிந்து கொண்ட
வாசு மற்ற இருவரையும் போய் வரச் சொன்னார்.
அடுத்த நாள் கயாவுக்குக் கிளம்ப வேண்டும்.
இந்த கங்கை அம்மாவை அங்கே தொட முடியாது இல்லையா
என்று யோசித்தவண்ணம் லக்ஷ்மிமாவும் நாராயணனும்
கைகளை இணைத்துக் கொண்டு படிகளில் ஜாக்கிரதையாக இறங்கினார்கள்.

மேலிருந்து இந்தக் காட்சியைக் கண்ட வண்ணம் வஞ்சு
இவர்கள் திருமணத்தின் போது  எப்படி ஒருவரை ஒருவர் நேசித்திருப்பார்களோ
என்று வாசுவிடம் பேசிய வாறு லக்ஷ்மி நாராயணா மந்திருக்குள் நுழைந்தாள்.

 கூட்டமே காணோமே  என்றபடி சுற்றுமுற்றும் பார்த்தபடி
லக்ஷ்மி நாராயணன் தம்பதியருக்குக் காத்திருந்தனர்.

ஓ பூஜை வேளை முடிந்து விட்டதோ என்றபடி அங்கு விஸ்ராந்தியாக உட்கார்ந்திருந்த பெரியவரிடம்   விசாரித்தனர். லக்ஸ்மி நராயண். யே தோ பிந்து மாதவ் ஹை
என்றார் அவர்.
நல்ல வேளையாக நடேசன், லக்ஸ்மி நாரயணன் நுழைந்தனர்
அப்போது.
இந்தக் கோவில் லக்ஷ்மி நாராயணர் கோவில் தான்.
 பிந்து மாதவன் என்று கண்ணன் பேரிலும் அழைப்பார்கள். உள்ளே நீங்கள்
தரிசிக்கப் போவது வட இந்திய முறைப்படி அமைக்கப் பட்ட விக்ரஹங்கள்.

தொட்டு வணங்கி நமஸ்கரிக்கலாம். சுற்றி வர  நிறைய ஓவியங்கள் மிக அழகாக இருக்கும்.
மணி 12 ஆகிவிட்டதால் அன்னதானத்துக்கு எல்லோரும் சென்றிருப்பார்கள்.
நீங்கள் மனம் கொண்டவரை நிம்மதியாகத் தரிசிக்கலாம்
என்றதும் உள்ளே இருந்து பட்டாச்சாரியர் ஒருவர் வரவும்
சரியாக இருந்தது.

 மத்ராசியா. வாருங்கள் என்று உள்ளே அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்தார்.
இன்று இங்கே  லட்டு பிரசாதம் என்று ஐவர் கையிலும் அளித்தார்.
 மனம் நெகிழ்ந்த தம்பதியர் அவ்ருக்கு தட்டு நிறைய தக்ஷிணை
வைத்துவிட்டுப் பிரகாரம் சுற்றி வரக் கிளம்பினார்கள்.

சற்றே களைப்பாகத் தெரிந்த வஞ்சுவைப் பார்த்து
நாம் விடுதிக்குப் போகலாம். மருந்து சாப்பிட்டு
மதிய உணவு எடுத்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று மெதுவாக
நடந்துவந்து வண்டியில் ஏறினர்.
பெரிய கோயில் தான் . என்ன பிரம்மாண்டமான கோபுரங்கள்
  என்று வியந்தபடி  விடுதி வந்து சேர்ந்தனர்.
அன்று வேறு இடம் செல்லவில்லை.
அடுத்த நாள் பயணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு  ஓய்வெடுத்துக் கொண்டனர்.
Add captionMonday, July 23, 2018

தனிக் குடித்தனம் வந்தாச்சு.

Vallisimhan

    குழந்தைகள்  அவரவர் வீட்டுப்பாடங்களைப் படிக்க ஆரம்பித்தனர் இரண்டாம் வகுப்பு
பாடங்கள் அவ்வளவாக இல்லாததால் சின்னவன் தாத்தாவுடன் இழைந்தான். இவனை என்னுடன் அனுப்பிடுமா. நான் சங்கரா ஸ்கூலில் சேர்த்துப் பார்த்துக் கொள்கிறேன் என்று சிரித்தார்
தாத்தா.

 அப்பா உங்க பிரச்சினையை முதலில் பார்க்கலாம். அப்புறம்
அவன் வருவான். என்று சிரித்தபடி, முகுந்த்  வருகிறீர்களா.
அப்பா ஏதோ பேசணுமாம் என்று கணவரை விளித்தாள்.

இதோ வரேன் மா. என்றபடி பளிச்சென்று விபூதி நெற்றியில்
துலங்க கீழே வந்தான் முகுந்த்.

என்ன விஷயம்மா. மாமா மாமிக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தியா
என்றபடி தன் காப்பியை ரசித்தான்.

மாதவன் வேலையைவிட்டு விட்டுத் தனியாக பிசினஸ் செய்யப் போவதையும்,
\அம்மா அப்பாவுக்கு  இடம் போதாமல் வெளியே தனியாக இருக்க விரும்புவதையும் கேட்டு
ஆச்சர்யப் பட்டுப் போனான்,.
மாதவன் அப்படி எல்லாம் சட்டென்று முடிவெடுக்க மாட்டானே.
அதுவும் உங்களைப் பாதிக்கும் வழியில் செய்ய மாட்டானே மாமா
என்று அதிசயித்தான்.
அவன் மேல் குற்றமில்லை முகுந்த்.எங்களுக்கு  சுதந்திரமாக
இருக்க வேண்டும். 40 வருடக் குடித்தனம்.அதில் சேர்த்த அளவான
பொருட்கள் எல்லாம் எங்களுக்கு முக்கியம்.
அவன் எல்லாரும் சேர்ந்து அங்கே இருக்கலாம்.

கொஞ்ச நாட்கள் கஷ்டமாக இருக்கும். பிறகு பெரிய வீடு
பார்த்துக் கொண்டு போகலாம் என்கிறான்.
எனக்கு  ஒட்டவில்லை. மாடி வெராண்டா, பின்னால் கொஞ்சம்
தோட்டம் சின்னச் செடிகள்,துளசி மாடம், பூஜை அறை, அம்மாவோட
கைவேலைகள் நிரம்பின கூடம் என்று சொல்லும் போதெ
 அவர் நிறுத்திக் கொண்டார்.
விமலாவின் அம்மா விசாலம் ,உங்கள் ப்ரஷர் ஏறி இருக்கும். நிதானமா இருங்கோ.
மாப்பிள்ளை சரியாகச் சொல்லுவார். அவருடையைக் கைகளை
இதமாகப் பிடித்துக் கொண்டாள்.
மாமா இது உங்கள் தீர்மானம் என்றால் நம்மாத்தில் இருக்கலாம்.
கெஸ்ட் ரூமில் இருக்கலாம். சமைக்க வேண்டாம் விமலா பார்த்துக்
கொள்வாள். மல்லிகான்னு அவளுக்கு ஒரு உதவியாள் கிடைத்திருக்கிறாள்
எங்களுக்கு உங்களால் பிரச்சினை வராது.

அடையார் பத்மனாபன் கோவில் இருக்கு . விமலாவோடு காரில் எங்க வேணுமானாலும்
போகலாம்.எனக்கு  ஆபீஸ் வண்டி இருக்கு. கவலையே படாதீர்கள். என்று
 தீர்மானமாகச் சொன்னான்.

நீங்க தப்பா எடுத்துக் கொள்ள வேண்டாம் முகுந்த். மாதவனை
விட்டுக் கொடுக்கவீல்லை.

அவனுக்கு ஆபீஸீல் நிம்மதி இல்லை.
வீட்டைவிட்டுப் போக வேண்டி இருக்கிறது.
வருமானமும்  அவன் தகுதிக்கு ஏற்ற அளவில் இல்லை.
இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள்
நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத் தான் தெரியும்.
அங்கே இருந்து கிளம்பிவிட்டால் வேறு இடம்தான் போக வேண்டும்.
இங்கே இருப்பது அவனுக்கு அவமானம்.

அதற்குப் பிறகு வேலைகள் சட்டென்று நடந்தன.
விமலாவின் நாத்தனார் காந்தி நகரில் பெரிய வீடு கட்டி இருந்தார்.
அவர் வருடங்களில் ஆறுமாதங்கள் லண்டன் போய்விடுவார் பெண்ணோடு
இருக்க.
அவர்கள் வீட்டு மாடி லிஃப்ட் வசதியோடு பெரியதாகவே இருந்தது.
 பேரனின் கல்லூரி பட்டவிழாவுக்காக லண்டன் கிளம்பிக் கொண்டிருந்த
சரோஜாவிடம் விஷயத்தைச் சொன்னதும்,
எனக்கு வீட்டைப் பூட்டிப் போவதில் எப்பவும் கவலை.
இப்போது இவர்கள் வந்துவிட்டால் எனக்குக் கவலை இல்லை.
 தோட்டக்காரரும் குடும்பமும்  இங்கேயே இருக்கிறார்கள்.
சமையல் மாமியும் இருக்கிறார். அவருக்கும் போக வேற இடம் கிடையாது.
காரும் ,ட்ரைவரும் உங்கள் உபயோகத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
  பிரமிப்பாக இருந்தது  சுந்தரம் மாமாவுக்கு.
அம்மா. ரொம்ப தாராளமான இடம்.
நான் வாடகை கொடுக்கணும். அதை மாப்பிள்ளையிடம் அதைப் பேசிக் கொள்கிறேன்.
அவசியமே இல்லை மாமா. நீங்கள் எனக்கும் மாமாதான்.
உங்கள் இஷ்டப்படி  செய்யுங்கள். நீங்களும் மாமியும்
இங்கே வருவது எனக்கு மஹா பெரிய நிம்மதி.
ஒருவார காலத்தில்  விசாலம் சுந்தரம் தம்பதிகள், மாதவனின்
சம்மதத்தோடு  மாம்பலத்திலிருந்து அவர்கள் முழு உடைமைகளுடன்
கிளம்பினார்கள்.
இன்னும் இரண்டு வருடங்களில் நாம் புது வீட்டுக்குப் போகும்
விதத்தில் என் வருமானம் இருக்கும் அப்பா.
நாங்களும் உங்களை வந்து பார்த்துக் கொள்கிறோம்.

அன்று இரவு அடையார் பார்க் ஷெரட்டனில் முழுக்குடும்பத்துக்கும் சுந்தரம்
விருந்து கொடுத்தார்.
விமலா, தன்னையே நம்ப முடியாமல் கணவனைப்
பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தாள்.
சரோஜாவும் அவள் கணவரும்  அடுத்த இரண்டு நாட்களில் கிளம்பினார்கள்.
ஒரு நாள் முழுவதும் சுந்தரம் விசாலம் தம்பதியர்
செட்டில் ஆக உதவியாக இருந்தாள்.


அடையார் வந்தாலும், சுந்தரம் சிவாவிஷ்ணு கோவிலையோ,சத்ய நாராயணர் கோவிலையோ விட்டுக் கொடுக்கவில்லை.
 திடீரென்று வந்து நிம்மதியைக் கெடுக்க வந்த தொந்தரவு
 இறைவன் அருளில்  காணாமல் போனது.

சுபம்.
Maple Tree.

Sunday, July 22, 2018

தனிக்குடித்தனம்

Vallisimhan

  விமலா,தனக்கே உரிய இடமான  வீட்டுக்குப்
பின்னால் இருக்கும்  வாழை மரம், வேப்பமரம் அருகில்
 அந்த நிழலில் , பிடித்த ஜெய்காந்தன்
 புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தாள்.

அம்மா பாலு கொண்டு வந்திருக்கேன் என்று குரல் கொடுத்தபடி
ஜகதா வந்தாள். . ஃப்ரிட்ஜில வச்சிடும்மா. இதோ வரேன். பசங்க வர நேரமாச்சு என்றபடி
வீட்டுப் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு
சமையலறையை அடைந்தாள்.

ஒருத்தனுக்கு உப்புமா பிடிக்காது. இன்னோருத்தனுக்கு பூரி பிடிக்காது.
மகளுக்கோ அடை இருந்தால் போதும்.
வீட்டுக்காரர் ஒருவர்தான் சொல் பேச்சு கேட்பவர்.

தினமும் தோசையும் சட்டினியும் இருந்தால் போதும்.
மாவைக்கரைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு,
தயார் செய்து கொண்டாள்.
 இன்னோரு அடைக்கல்லை அடுப்பில் போட்டு தயார் செய்து
கொண்டாள். பெரியவனுக்கு  குணுக்கு தான் பிடிக்கும்.
தக்காளிச் சட்டினி.நல்ல வேளை நான்கு  பர்னர்
அடுப்பு விவேக் சேலில் வாங்கினது பயன் படுகிறது.

4  மணிக்கு எல்லாம் தயாரான் நிலையில்
தொலைபேசி அடித்தது.
அம்மாவாகத்தான் இருக்கும். கைகள் கசகசப்பைத் துடைத்துக் கொண்டு
 தொலைபேசியை எடுத்தாள். மேற்குமாம்பலத்தில் இருக்கும் பெற்றோர்
தினம் காலை ஒரு தடவை சாயந்திரம் ஒரு தடவை
பேசிவிடுவார்கள்.

அவர்களது தனிமையைப் புரிந்து கொண்டு விமலாவும்
உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பாள்.. அவளுடைய
இன்னோரு சகோதரி அம்மா வீட்டுக்குப் பக்கத்திலேயே
இருந்தாலும்  அப்பாவுக்கு விமலாதான் ஊன்றுகோல் போல்.

இன்று அப்பா குரலில் வழக்கமான சந்தோஷம் இல்லை.
என்னப்பா ஆச்சு , எதாவது உடம்பு சுகமில்லையா
என்றாள். நான் வண்டி எடுத்துக் கொண்டு வரட்டுமா.
டாக்டர் மோஹன் ராவ் பார்த்துவிட்டு வரலாம்.

அதெல்லாம் ஒண்ணும் இல்லை, அப்பா அடையார் வந்து உன்னைப்
பார்க்கணும் என்கிறார். இப்போ வந்தால் சௌகர்யமாக
இருக்குமா. என்றார் அம்மா.

இப்பொழுதுவிமலாவுக்கு நிஜமாகவே பயம் வந்துவிட்டது.
சரிம்மா  வாங்கோ. டாக்சி வைத்துக் கொண்டு வாருங்கள்.
என்றபடி போனை வைத்தாள்.

இன்னோரு சகோதரனுக்குப் பேசலாம் என்றால் அவன்
ஏதோ அலுவலக விஷயமாய் ?ஈரோடு போயிருந்தான்.
அவர்களும் அப்பாவும் ஒரே வீட்டில் மாடியும் கீழுமாக இருந்தார்கள்.

மருமகளும் மிக நல்ல பெண். பார்த்து பார்த்து மாமியார் மாமனார்
வசதிகளைக் கவனித்துக் கொள்வாள்.
 அப்பாவுக்குத்தான் அம்மாகை சாப்பாட்டைத் தவிர
வேறு பிடிக்காது.
மகன் அடிக்கடி வெளியே போய் விடுவதால்
வீட்டுப் பொறுப்பெல்லாம் அப்பாவிடம் தான்.

வாசலில் ஆட்டோ  வாசலில் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
பெண்ணும் சின்னவனும் வந்துவிட்டார்கள்.
பெரியவன் சைக்கிளில் வருவான்.
அம்மா தாத்தா பாட்டி வரா. ஹைய்யா என்று சின்னவன் குதித்தாமன்,
அவனுக்குப் பிடித்த மில்க்பிகி பிஸ்கட்டை அவனிடம் கொடுத்த அப்பா அவனை மடியில்
இருத்துக் கொண்டார். பாட்டியை அணைத்துக் கொண்ட மகள்,
பாட்டின் கையில் இருந்த தந்தப் பெட்டியைப்
பார்த்து ஜிவ்வென்று குதித்தாள்.
ப்ரோச் கொண்டுவந்துட்டியா பாட்டி என்று பெட்டியைத்
திறந்தாள்.
ஏய் பசங்களா ஷூ கழட்டிக் கைகால் அலம்பி வாருங்கள்.

அம்மா அப்பா வாங்கோ . கால்டாக்சியில் வரக் கூடாதா
ஆட்டோ தூக்கிப் போடுமே அப்பா என்று அப்பாவின் கைகளைப்
பிடித்தாள்.
மெலிதாக நீண்டு இருந்த அந்த விரல்களின் உழைப்பை அறிவாள்.
இரண்டு மூன்று வருடங்கள் முன்னால் தான் ஓய்வு பெற்றிருந்தார்.

குழந்தைகள் வருவதற்கு முன் சொல்றேன் மா.
எங்கள் இருவருக்கும் ஒதுங்க ஒரு இடம் வேண்டும்.
மாடியில் ஒரு அறை கொடுத்தால் போதும்.
அதில் நாங்கள் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்வொம்

இதைச் சொல்லி முடிப்பத்ற்குள் அப்பாவின் குரல் தழுதழுத்தது..
அம்மா பக்கம் திரும்பினாள்

அவளும் மௌனமாக ஆமோதித்தாள்.
 மாதவன் வேலையைவிட்டுவிட்டு
வீட்டிலியே  கம்பெனி ஆரம்பிக்கப் போகிறன் மா.
மாடி சௌகர்யமாக இருக்கும் என்று நம்புகிறான்.
அவனுடைய மச்சினனும்  பார்ட்னராகச் சேர்கிறான்.

அதற்கும் நீங்கள் வெளியே வருவதற்கும் என்ன சம்பந்தம்மா.
கீழே  இரண்டு பெட்ரூம் இருக்கு மா.
எங்கள் பொருட்கள் எல்லாம் அந்த ஒரு அறையில் அடங்காது.
இந்த வைகாசியில் கம்பெனி ஆரம்பிக்கிறது.
 ஒரு குடித்தனத்துக்கு வேண்டும் என்கிற பொருட்களை எடுத்துக் கொண்டு
இங்கே வருகிறோம்.
இங்கிருந்து வேற அபார்ட்மெண்ட் பார்த்துக் கொள்கிறோம்.
ட்ரான்சிட்னு வச்சுக்கோன்னு சொல்லும் அப்பாவைப்
பார்த்து விமலா கண்ணிலும் நீர் துளித்தது.

குழந்தைகள் படி இறங்கிவரும் சத்தம் கேட்டதும்.
மீண்டும் கலகலப்பானார்கள்.  பெற்றோருக்கும்
 சாப்பாட்டு மேஜையில் இடம் செய்து அப்பாவுக்குப்
பிடித்த குணுக்குகளை இருவருக்கும் வாழை இலைகளில்
வைத்துக் கொடுத்தாள்.
அப்பாவுக்கு ஹார்லிக்ஸும், அம்மாவுக்கு டீயும்
 கொண்டு வைத்தாள்.
கணவனின் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
மனம் நிறையப் பெருமூச்சு விட்டு
அவரை உள்ளே  வரவேற்றார்  அப்பா. வாங்கோ
 முகுந்தன். அடடே வாங்கோ மாமா,மாமீ.
  இதோ குளித்துவிட்டு வருகிறேன் என்ற படி மாடிக்கு ஏறிச் சென்றார்
விமலாவின் கணவர்........நாளை தீரும் இந்தப் பிரச்சினை.

Add caption

Friday, July 20, 2018

யாத்திரை தொடர்கிறது கோவில்கள்.

காசி விஸ்வநாதர்.
ஸ்ரீ துர்கா தேவி  சரணம்.
ஜகன்மாதா துர்கா தேவி கோவில் 
வல்லிசிம்ஹன்

கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது
ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ்சுமாவுக்கு.
முதல்னாள் கடையில் அந்த சிவப்பு பனாரஸ் புடவை வாங்கினதிலிருந்து
 இனம் புரியாத மகிழ்ச்சி. எப்பொழுதோ வேண்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது.

கும்பகோணம் அருகில் பட்டீஸ்வரம் துர்க்கையைத் தரிசித்த நினைவு.
என்ன ஒரு ஆகிருதி அந்த அம்மனுக்கு.
அதுவும் பாங்காக உடுத்தப்பட்ட ஒன்பது கஜப் புடவையில் பச்சையும் சிவப்புமாக
ஒளிவிட்ட தாயார்.

குழந்தை வரம் வேண்டி தாங்கள் சென்ற கர்ப்பரக்ஷாம்பிகைக்
 கோவில் குருக்கள் சொன்ன பிரகாரம்

பட்டீஸ்வரம் அம்மாவையும் தரிசிக்க வந்தார்கள்.
 இரண்டு குழந்தைகளும் அந்தத் தாயின் வரம் என்றே  நம்பினார்கள்.
அவர்களுக்கு அழகான் வாழ்க்கை அமைத்துக் கொடுத்ததும்

அவளே. இந்த ஊரில் என்னவாகக் காட்சி கொடுப்பாளோ
என்று நினைத்த வண்ணம் ஹரி ஹரி ஹரி என்று ஜபித்தபடி
ஸ்னானம் செய்து முடித்துத் தயாராகவும்,
வாசு எழுந்து காலைக் கடன் களை முடிக்கவும் சரியாக இருந்தது.

வஞ்சுமா நெற்றிக் குங்குமத்தைச் சரி செய்த படி அவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.
  ஓஹோ  ,தாயாரைத் தரிசிக்க இந்தத் தாயார் ரெடியா
என்று பரிகாசம் செய்தபடி, வஞ்சு நீ என்ன காயகல்பம் ஏதாவது சாப்பிடுகிறாயா
 ஒரே மந்தஹாசமாக அழகு சுடர் விடுகிறதே என்று
பழையகாலக் கதானாயகர்கள் போல வசனம் பேசவும் வஞ்சுமாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தேவைதான், சீக்கிரம் தயாராகுங்கள். நாம் ஒன்பது மணிக்குக் கோவிலில் இருக்கவேண்டும்.
வெள்ளிக்கிழமை ...மறந்துவிட்டதா.என்றார்.
மறப்பேனோ நான் இதை மறப்பேனோ என்று பாடிக் கொண்டே
உள்ளே சென்றார்.
  என்ன கச்சேரி அமர்க்களப் படுகிறதே. மாமா இவ்வளவு அழககப் பாடுவாரா
என்றபடி லக்ஷ்மிமா உள்ளே நுழைந்தார்.

அந்த சிவப்பு மேனியில் மின்னும் பச்சை காசிப் புடவையைப் பார்த்து
இங்கேயே பிரித்து உடுத்தியாச்சா என்று வியந்தபடி ரசித்தார் வஞ்சுமா.
எங்கள் திருமண நாள்.
நாற்பது வருடங்கள் முடிகிறது என்றதும்.
அப்போ ஸ்பெஷல் வாழ்த்துகள். இரண்டு கோவில்களிலும்
மாலைகள் வாங்கிக் கொடுக்கவேண்டும்.
எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்றபடியே சிறு குழந்தை போல
குளியலறைக் கதவைத் தட்டி வாசுவுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
வஞ்சு, நீ வா இங்கே, நாம் காலை உணவு வரவழைக்கலம்.
யாராவது சிரிக்கப் போகிறார்கள் என்று அழைத்தார் லக்ஷ்மி மா.

அதெல்லாம் ஒன்றும் இல்லை.இன்னிக்குக் கொண்டாடியே ஆகவேண்டும்.
என்ன என்ன கொண்டாட்டம் என்றபடி நுழைந்தார் நாராயணன்.
 எங்க அக்காவுக்கு இன்னிக்கு 40ஆவது திருமண நாளாம்.
உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்று சிரித்தார் வஞ்சு.

அதானா ....மறந்து போச்சே.
ஆஹா. அதுதான் காலைலயே பாட்டோட தான் எழுந்திருந்தாப்
போல கூந்தலிலே நெய் தடவி...என்று அவரும் பாட,வாசு நுழைய
கோலாஹலமாகத் தொடங்கிய நாள், துர்க்க மாதா கோவிலுக்கு வந்ததும் அமைதியாக
வழிபட்டனர்.
எத்தனை பெரிய கோவில் வங்காள மஹராணி கட்டிய கோவிலாம்.
அரக்குவர்ணத்தில் பலவாசல்கள், பல சன்னிதிகள்,
சலவைக்கல் கூடம், மாதாவுக்குத் தனிக் குளம் கங்கையோடு இணைக்கப்
பட்டதாம்.
அந்தத் தேவியின் திருமேனி பார்க்கப் பார்க்கத்
திகட்டவில்லை.
புலி மேல் அமர்ந்த துர்க்கையின் கோலம் மனதில் நிறைந்தது.
காசி ராஜாவைப் பகைவர்களிடம் இருந்து காப்பாற்ற
வந்த தேவியாம். தானாகவே தோன்றிய சிலாரூபம். சிங்கத்தின் மீது
 அமர்ந்திருப்பது போல ஒரு சன்னிதி.
எல்லா விவரங்களையும் தனக்குத் தெரிந்த இந்தியில் நாராயணன் கேட்டுக் கொண்டார்.
நடேசன் ஏற்பாடு செய்தபடி அந்த அழகான சிவப்புப் புடவை
அம்மனுக்குச் சார்த்தப் பட்டது.

அனேகமாக சிவப்புதான் அங்கே பயன்படுத்தப் படுமாம்.

பார்க்கும் இடமெல்லம் சிவப்புக் கொடிகள். வீரத்தின் விளைனிலத்தில் இருப்பது போல
நால்வருக்கும் தோன்றியது.
வாசுவின் பிரத்தியேகப் பிரார்த்தனை வஞ்சுமாவின் உடல் நலத்துக்காகத்தான்.
வஞ்சுவோ வரப் போகும் சிசுவிற்கு துர்க்காவின் நாமங்களில்
ஒன்றைச் சூடுவதாகப் பிரார்த்தனை.
லக்ஷ்மி நாராயணன் தமபதிகளுக்கு
புதல்வர்கள், மகள் அவர்களின் குடும்ப நலன் எல்லாவற்றிர்க்கும்
ஒரு தாயிடம் முறையிடுவது  போல மனதில் எண்ணங்கள் ஓடின.

வாசுவின் ஏற்பாட்டின்படி தம்பதியர் இருவருக்கும் பொருத்தமான மாலைகள்
நடேசன் வாங்கி வந்திருந்தார்.
வஞ்சு ,மாலை மாற்றினார் பாட வெளி மண்டபத்தில் இருவரும்
 மாலைகள் அணிந்து கொண்டனர்...
அப்படியே வெளியே வந்து, மலர்ப் பிரசாதங்களுடன், லக்ஷ்மி நாராயணர் கோவில்
இருக்கும் அஸ்ஸி காட் பகுதிக்கு வந்தனர்.

Add caption

Thursday, July 19, 2018

ஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST


இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன.எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எல்லோருடைய அறிவுரைகளும் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆனாலும் சினத்தை வென்றவர் என்று பார்க்கப் போனால் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் இருப்போம்.

மற்றவர்கள் எல்லோரும் கோபம் வரும்போது கட்டுப்படுத்துபவர்களாக இருப்பார்கள். சாப்பாட்டில் காண்பிப்பார்கள். சாப்பாடு செய்பவர்களின் கோபம் காரமாய் வந்து சேரும்.சாப்பிடுபவர்கள் வயிற்றுக்குப் போய் அது படுத்தும்.


இன்னோரு வகை, உண்ணாவிரதம் இருந்து சாதிக்க முயலுவார்கள்.


பழைய காலமாயிருந்தால் யார் கண்டுகொள்வார்கள்?


ஒருநாள் சப்பிடலைன்னா ஒண்ணும் கெடாது என்று விட்டுவிடுவார்கள்.அங்கேதான் இந்தவயிற்றுப்ப்ரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.


வேளைக்குப் பேணப்படாத வயிறு,புண்ணாகி வலிக்கிறது.


அது பரவாயில்லை.


மனதில் விழும் வலிக்கு ஏது மருந்து.?


நம்மைப் போய் இதுபோல பேசிவிட்டார்களே.,


நாம் நினைத்தது ஒன்றும் நடக்கவில்லயே, நேர்மையான ஆசைதானே,என்றெல்லாம் மனம் நினைக்கும்.எங்க திருமண ஆரம்பக் கட்டங்களில் என் கோபத்துக்கு மதிப்பு அதிகம்.


இருவர் சுபாவமும் வேறு.


தன் வேலையைத்தவிர வேற எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளத்தெரியாத மனிதர்,பபவம்.


இந்த மாதிரி சினிமா ஹீரோயின்கள் கணக்கில் கோபிக்கும் எந்த ஜீவனையும் பார்த்திராத அப்பாவி.


அவர் அம்மாவோடு ஒப்பு நோக்கும் குணம் வேற.


அவங்க அம்மாவோ பொறுமையின் பூஷணம்.


மாமியார் ஆட்சியில் அவங்க சொல்றதுக்கெல்லாம் சரி சரினு சொல்லியே


கழுத்து வலி வந்தவர்.நாம அப்படியா.


"நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான் நான் "பிடிவாதம்.


என் பெற்றோருக்கு என்னை எப்படி வழிக்குக் கொண்டுவருவது அத்துப்படி.


ஒரு சினிமாவுக்குக் கூட்டிப்போனால் கோபம் பஞ்சாய்ப் பறந்துபோகும்


என்று தெரியும்.


அடுத்தவாரம் எங்க வீட்டுப்பிள்ளை படம் டவுனுக்குப் போய்ப் பார்க்கலாம்


என்று போகிறவாக்கில் அப்பா,அம்மாவிடம் சொல்ல, அதைக் கேட்டு


மறுபடி சாதுவாகிவிடும் அசட்டுப் புத்தி.:))


இந்த நெளிவு சுளிவெல்லாம் தெரியாத எங்க வீட்டுச் சிங்கம்


புதுக்கோட்டை,தஞ்சாவூர்,நாகப்பட்டணம் என்று வாடிக்கையாளர்களைப்


போய்ப் பார்த்துவிட்டு வருவார்.(அறந்தாங்கி ரோட்டில் ,புதுக்கோட்டையில் ஒரு பெரிய வீட்டுமாடியில் எங்கள் தனிக்குடித்தனம்.

திருமேனி என்னும் பையனும் அவன் பாட்டியும் எனக்குத் துணை.

சிங்கம் வர வரையில் பாட்டி எனக்குப் பழய கதைகள் சொல்லுவாள்.)

கண்ணும் காதும் மாடிப்படிகளயே பார்த்தாற்போல இருப்பேன்.


வாசலில் ஜீப் ஒரு உறுமலோடு நிற்க வேண்டியதுதான்.

கிழவி கால்களை மடித்து உறங்கப்போய்விடுவாள்.


இங்கே கைகேயி அவதாரம் ஆரம்பமாகிவிடும்.


அப்பத்தான் சமையலறையில் வெட்டி முறிக்கிற வேலை வந்து சப்பாத்தி மாவு டொப் டொப் சத்தத்தோடு பிசைந்து


ணங்னு தவ்வாவை ஸ்டவ்வில் வைத்து (ஆறே ஆறு சப்பாத்திக்கு இந்த நாடகம்) மோட்டுவளையைப் பார்த்தபடி போஸ்.


சிங்கத்துக்குப் பூ,பழம் ,சாக்லேட் இந்த மாதிரி சமாதான டாக்டிக்ஸ்


எல்லாம் தெரியாது.


குளித்துவிட்டு தன்பாட்டுக்கு ஒரு மைக் ஹாமர் ,இல்லாட்ட சேஸ் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்துவிடுவார்.

எனக்கோ பசி ..(அப்பவும் இப்பவும் இந்தப் பசி என்ன விடுவதாக இல்லை).-)

எனக்குத்தான் அன்பே வா படம் போகாத கோபமாச்சே.

அதனாலே சப்பாத்திகளையும் எனக்குத் தெரிந்த  ஒரெ ஒரு காய்கறிப் பொரியல் உ.கிழங்கையும்

செய்து தரையில் வைத்து மூடிவிட்டு(அப்போதெல்லாம் டைனிங் டேபிள் லேது)

இரண்டு தட்டுகளையும் போட்டுவிட்டு படுக்கப் போய்விடுவேன்.

அந்தப் புத்தகத்தில் எல்லாக் கேசும் கண்டுபிடிச்சு ஹீரொ சியர்ஸ் சொல்லித் தன் பெண்சினேகிதியோடு வண்டியில் ஏறியபிறகு இந்தப் புதுக்கோட்டை

வீட்டிற்குள் இறங்குவார் சிங்கம்.

நாளைக்கு மிச்ச கோபம் பார்க்கலாம்.:-)))))))))))))))