Blog Archive

Thursday, July 26, 2018

Su to ku உனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. - 2

Vallisimhan
சுடோ கு  இரண்டாம் பாகம்   இது நம்ம ஏரியாவில் வெளிவந்தது.

சுந்தரியும் குணபதியும் அன்றிரவு உறக்கம் வராமல்
யோசித்துக் கொண்டிருந்தனர்.
குணபதியின் பெற்றோர்களும் சுந்தரியின் பெற்றோர்களும்
செய்த தீர்மானத்தைப் பற்றியும் அவர்கள்  யோசிக்க வேண்டி இருந்தது.

திடீரென வந்த ஐடியாபடி சுந்தரி முதலில் குணபதியை கைபேசியில் அழைத்தாள்.
உடனே   எடுத்துப் பதில் சொன்னான்.
சுந்தரிக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. நீங்களும் தூங்கவில்லையா என்று கேட்டாள்.
இது போலக் கண்டிஷன் எல்லாம் போட்டால்
என்ன செய்வது என்று தெரியவில்லை.
நாம் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டால் தானே
அடுத்த நடவடிக்கை. என்றான் அவன்.
அதே தான் எனக்கும் தோன்றியது.
நாளைக்கு நாம் சந்திக்க வேண்டும்...எங்கே  என்றாள். USIS
 லைப்ரரிக்கு வரமுடியுமா.
ஓகே. சாயந்திரம் 4 மணிக்கு அங்கே இருப்பேன் என்றதும், இருவருக்கும்
மனம் கொஞ்சம் அமைதியாகியது.
காலை எழுந்ததும் பெற்றோர்களைப் பார்த்து எனக்கு
சாயந்திரம் லைப்ரரி போகணும்.
உங்கள் திட்டம் பற்றி எனக்கு யோசிக்க நேரம் வேண்டும் என்றாள்.
அதுக்கு என்னம்மா,,, உங்கள் இருவர் ,வாழ்க்கை திருப்தியாக அமையத்தான் இந்த ஏற்பாடு.
என்றார் அப்பா.
நாங்கள் முதலில் ஒருவருக்கு ஒருவர் சரியான்னு பார்க்கணும் அப்பா.
அப்புறம் தான் பெற்றோர் என்ற  பெண்ணை.மலைப்புடன் பார்த்தார்.
 இந்த யோசனையே முதலில் தப்பு. நாங்கள் என்ன
சின்னக் குழந்தைகளா .இரண்டு நாள் நேரம் எடுத்துப்போம் என்றாள்
சுந்தரி.
குணபதியும் ஒத்துக் கொண்டானா.
ஆமாம் நாங்கள் இருவரும்  சந்தித்துப் பேசப் போகிறோம்.

சரி நல்ல முடிவுக்கு வாருங்கள் என்று ஒதுங்கிக் கொண்டார் தந்தை.
இதே நாடகம் குணபதியின் வீட்டிலும் நடந்தது..அவர்களும்
ஒத்துக் கொள்ள வேண்டியது ஆயிற்று.
மாலை தன்னைக் கச்சிதமாக ஒப்பனை செய்து கொண்டு
ஜீன்ஸ் ,டி ஷர்ட்டில் கிளம்பும் பெண்ணை அம்மா கவலையுடன்
பார்த்தாள்.
இதுதான் மா நான் . சரியா என்று கிளபினாள் தன் ஸ்கூட்டியில்.
அங்கே லைப்ரரி வசலில் நின்ற குணபதியைக் கண்டதுமே இயல்பாக மனம்
மலர்ந்து புன்னகை வந்தது.
ஹலோ என்று விளித்தபடி இருவரும் நெருங்கி, தங்கள் தங்கள் அட்டையைக் காட்டி
உள்ளே நுழைந்தனர்.
ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு
ஒரு மேஜையின் இருபக்க நாற்காலிகளில்
அமர்ந்தனர்.
வீட்டில் ஓகேயா என்றாம் குணபதி.
ஆமாம் குணா நான் சொல்லிவிட்டேன்.
நானும்தான் சுன்சுன் என்றான் குணா வான குணபதி.
சுன்சுனா என்ன பேரு அது. ஏதோ இந்திப் பாட்டு மாதிரி இருக்கு
என்று சிரித்தாள்.
ஆமாம் பழைய காலப் பெயர் , புது உடை பேரை மாற்றி விட்டேன்.
என்றான் குணா.
சரி இப்போ  நம் எதிர்காலம் என்ன ஆகப் போகிறது.
இரண்டு பேருக்கும் வேறு குழந்தைகள்
கிடையாது. அதனால் தங்கள் சாய்ஸ் சரியாக
இருக்கணும்னு எதிர்பார்க்கிறார்கள்.
நம் முடிவுதான் இப்போது முக்கியம். என்றான் குணா.
அதற்கு மேல் மடை திறந்தது போல் தங்கள் விஷயங்களையும்,
நம்பிக்கை, விருப்ப வெறுப்புகளையும்  பற்றிப் பரிமாறிக்
கொண்டனர்.
அங்கிருந்து வெளியே வந்து லஸ் வினாயகர் கோவிலுக்குச் சென்றனர்.
அங்கிருந்த குருக்கள் இருவரையும் பார்த்து நட்புடன்
புன்னகைத்தார். நண்பர்களா என்றார்.  ஆமாம் சார். பிள்ளையார்
பெயரில் அர்ச்சனை என்றனர்.
ஆஹா அதுக்கென்ன என்றபடி  தன் கணீர்க் குரலில் அர்ச்சனையை ஆரம்பித்தார்.
அழகான குழந்தையைப் போல் வீற்றிருந்த பிள்ளையாரை இருவரும் ரசித்துத் தொழுதனர்.
மாலையைக் குணாவின் கழுத்தில் போட்ட கணபதிக் குருக்கள், சீக்கிரமே
 விவாகப் பிராப்திரஸ்து என்று ஆசிர்வதித்தபடி சுந்தரியின் பக்கம் திரும்பி
மல்லிகை மாலையைக் கொடுத்தார்.
 தட்டில் அர்ச்சனைக்கான பணத்தை மரியாதையுடன் வைத்த குணாவை
பார்த்து மகிழ்ந்தாள். இங்கிதம் தெரிந்தவன் தான் என்றபடி
பிள்ளையாரை இருவரும் வலம் வந்தனர்..

வெளியே வந்து அவரவர் வண்டியில் உட்கார்ந்து கொண்டு
சரவணபவன் போலாமா என்று கேட்ட குணாவுக்கு மறுப்பு
சொல்லவில்லை.
நாளை நாங்கள் உங்க வீட்டுக்கு வருகிறோம் என்றாள்.
நான் காத்திருக்கிறேன் என்றான் குணா.

இருவருக்கும் புரிந்துவிட்டது இனி வாழ்க்கையில்
அவர்கள் விருப்பம் போலத்தான் எல்லாம் என்று.
இரு வண்டிகளும் இணையாக சரவணபவனில் நுழைந்தன.
இரண்டு மணி நேரம் கழித்துதான் அவரவர் வீட்டை அடைந்தனர்.

பெற்றோர் விருப்பமும் அவர்கள் விருப்பமும் ஒன்றாகி
ஆவணி மாதம் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.
 ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா.


No comments: