இத்தனை மழை கொட்டுகிறதேமா. எப்படி வந்தாய்/ என்ற கேட்ட வண்ணம் கதவைத் திறந்தேன்.
ராணியும் 'இன்னாமா செய்யறது . நல்லநாள் வீடு கூட்டிப் பெருக்காமல் இருந்தால் நல்லா
இருக்குமா.''
எப்போது புதுசு உடுத்திக் கொள்வாய். என்ற கேட்டவாறு ,அவளுக்குக்
கொடுக்கவேண்டிய பட்டாசு, மத்தாப்புக்களையும்,வெற்றிலை,பாக்கு மஞ்சள்
எல்லாம் வைத்துக் கொஞ்சம் பணமும் வைத்து,மிக்சர்,மற்ற இனிப்புகளையும் வைத்து,
அவளிடம் உதவிக்குச் சென்றேன்.
அவள் கணவர் அருணாச்சலமும் வந்திருந்தார். அம்மா மாவிலக் கொத்து
கட்டிட்டேம்மா. மழைக்கு முன்னால இதை அனுப்பிடுங்க, அமாவாசைக்கு
நடுவீட்டுப் படையல் செய்யணும் என்றவாறு சென்றார்.
காப்பி எடுத்துக்கறியாமா என்று கேட்க ராணியைப் பார்க்கப்
போனால் பாத்திரங்களைக் கழுவின கைகளால் அவ்வப்போது கண்களைத்
துடைத்துக் கொண்டதைப் பார்த்து அதிர்ந்து விட்டேன்.
அமைதியான குணம் கொண்ட பெண். எட்டு வயதிலிருந்து இந்த வீட்டோடு வளர்ந்தவள்.
14 வயதில் திருமணம். ஐந்து குழந்தைகள் அதில் ஒரு பையனை
மூளைக்காய்ச்சலுக்குப் பறிகொடுத்தவள்.
மற்ற பசங்கள் வளர்ந்து, பெண்ணுக்கும் கல்யாணம் செய்துகொடுத்து
இப்பொழுது பத்துப் பேரன்பேத்திகள் இருக்கிறார்கள்.
முதல் பையனுக்கு வீடு வாங்கிக் கொடுத்து விட்டாள்.
இவள் இருக்கும் விடு,அம்மா முனியம்மா வாங்கிய ஹவுசிங் போர்ட்
வீடு.
இரண்டு பிள்ளைகளும் குடும்பத்தோடு இவளுடந்தான் இருக்கிறார்கள்.
அவ்வப்போது கசமுசா என்று தகறாரு வரும் சமாளித்துக் கொள்வாள்.
அதான் பண்டிகைக்குப் பணமும் கொடுத்தோமே
என்னபிரச்சினை இவளுக்கு
என்று நினைத்தபடி அவளை விசாரித்தேன்.
பணம் தேவையா, ஏன் அழுகிறாய் என்று கேட்டேன்.
இதோ வரேன் மா.என்ற வண்ணம் உள்ளே வந்தாள்.
பணம் ஒண்ணும் வேணாம். எல்லாம் கொழுத்துக் கிடக்குதுங்க.
யரைச் சொல்ற நீ என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.
எல்லாம் வாய்ச்சிருக்கிதுங்களே பிள்ளைங்க அவனுங்களைத்தான்
என்று மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்..
யாரைச் சொல்ற,?
காப்பியைக் கொடுத்தபடி கேட்டேன்.
காப்பித் தம்ளரைக் கீழே வைத்துவிட்டு,
எல்லாம் எம் மூணு பசங்களைத்தான்மா சொல்றேன்.
நீங்க கொடுத்த புடவை எல்லாம் கொடுத்தேன்மா.எடுத்து வச்சிக்கிட்டு,அல்லாம் வெளில கிளம்பினாங்க.
வீட்ல பண்டம் பலகாரம் செய்யணுமே, மூணு பொம்மனாட்டிகளுமாக் கிளம்பறீங்களே
அப்படியென்ன வேலை இப்பனு கேட்டுப் புட்டேன்.
மூணு மருமவளுகளும், விருட்டுனு புருஷன்காரன் பிள்ளைங்களை அழைச்சிட்டுப் போயிட்டாங்க.
சாயந்திரமா வந்தாங்க.ஆட்டோல போயி வந்திருக்காங்கமா.
சரி அப்படி என்னதான் வாங்கி வாந்தாங்கனு பாக்கலாம்னா, பை பையா உள்ளே எடுத்துட்டு
அவுக ரூம்பில பொட்டில வச்சுக்
கிட்டாங்க.
என்னடா மாமியார்க்காரி இருக்காளே, பாட்டிம்மா வேற இருக்காங்க. நடுவீட்ல
வச்சு வாங்கி வந்ததைக் காமிப்போமுன்னு அந்தப் பிள்ளைகளுக்குத் தோணலியே.
நான் அய்யரு வீட்ல பாக்காத துணியா.
கண்ணு போட்ருவனா. ''என்று அதற்கு மேல சொல்ல முடியாமல் மீண்டும் அழ ஆரம்பித்தாள்..
இனிமே ஏதாவது செய்றேனானு பாருங்க. எத்தனை
வாங்கித் தந்திருப்பேன். ஒவ்வொரு கல்யாணத்துக்கும் 50ஆயிரம் செலவழிச்சேனே. பேறுகாலத்தில ஆசுபத்திரிக்கு இல்ல அழைச்சுட்டுப் போனேன்.
மூணாவது பொட்டைப் பிள்ளை பொறந்தாட்டுக் கருத்தடையும் செய்து வச்சேனே.இன்னும் கந்துவட்டிக்காரனுக்குக் கொடுத்துக் கிட்டதான்
இருக்கேன்.
இப்ப இப்படிக் கூட்டுச் சேர்ந்துட்டு ஆட்டம் போடறாங்களேன்னு புலம்பல்.
இது நேற்று......................................................................................................
இன்று காலைல புதுப் புடவையும் காதுகம்மலும் கண்ணாடிவளையலுமாகச் சின்னப் பேத்தியை
அழைத்துவந்த ராணி முகம் பூவாப் பூத்திருந்தது.
என்ன விஷயம் ராணின்னு கேட்ட என்னிடம் சாக்கலேட்டை நீட்டினாள்.
அம்மா பெரியவனோட பொண்ணு மேசராயிடுச்சிம்மா.
மஞ்சாத்தண்ணி ஊத்தணும் உன்னைத்தான் செலவுப்பணம் கேக்கப் போறேன். முனை வீ ட்டு அம்மாவும் கொடுப்பாங்க.
மதியம் வர மாட்டேன். பிள்ளைக்குப் புடவை எடுக்கணுமில்ல, என்று பரபரவென்று வேலைகளை முடித்துவிட்டு ஓடிவிட்டாள்.:))))
