இந்தியா முன்னேறுகிறது.
காய்கறி விலை ஏறிவிட்டது. வாங்குகிறோம்.
வீதியில் இறங்கி நடக்க முடியவில்லை. அவ்வளவு வண்டிகள்.
முன்னேற்றம் தான்.
எங்கள் வீதியில் இருந்த பழையவீடுகள் 80(சுற்றி இருக்கும் பத்து க்ரௌண்ட் மனைகளோட)) கோடிகளுக்கு விற்கப்பட்டு
ஒரு அபார்ட்மெண்ட் 3 கோடி என்ற அளவில் விற்கப் படுகிறது.
கட்டினது தெரியவில்லை. குழந்தைகளும் துணி உலர்த்துக் கொடிகளும்
கண்ணில் படுகின்றன.
ஒரே ஒரு வீதியில் மூன்று அழகு நிலையங்கள்,
மூன்று துணிமணிக் கடைகள்.
மூன்று மருத்துவ மனைகள். ...
மூன்று பாங்குகள்.
இரண்டு தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள்..
அவைகளில் எப்பொழுதும் கூட்டம்..
இது இருக்கட்டும். ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்
வந்து எனக்குத் தெரிந்த நாலைந்து குழந்தைகள்
நன்றாக மதிப்பெண்கள் பெற்றவர்கள்..
இரண்டு பெண்கள் பொருளாதார்ம், வணிகம், கணக்கெடுப்பு
இந்த வகையில் பிரமாதமான மதிப்பெண் எடுத்துத் தேர்வடைந்திருந்தார்கள்.
இரண்டு பையன்களுக்கும் எஞ்சீயர்,அமெரிக்கா கனவுகள்.
ஒரே ஒரு பையன் விஸ்காம்,கிரிக்கெட் இரண்டு அகாடமியில் சேரப் போவதாகச் சொன்னான்.
ஏன்பா என்றதற்Kஊ இரண்டிலும் பணம் உண்டு ஆந்டி.
நீங்க ஐபிஎல் பார்ப்பதில்லையா. என்றான்.
இல்லப்பா. எனக்கு ஈடுபாடு இல்லை.
அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகி விடுவதில்
முனைப்பாக இருக்கிறார்கள்.
நூறு கோடியில் வீடு கட்டி இருக்கிறாராம் ஒருத்தர்.
எங்கள் காலத்தில் எண்பதுகளிலும் விழித்திருந்து இந்த விளையாட்டைப் பார்த்திருக்கிறேன்.
.
இப்போது உலக மயமான கிரிக்கெட்.. அவ்வளவு ரசிக்கவில்லை. அதுவும் ஒரு மாணவன் 750 ரூபாய் கொடுத்து, விளையாட்டைப் பார்க்க
வந்திருப்பதாகச் சொன்னான். தொலைக்காட்சியில் பார்த்தேன்.
மாற்று சிந்தனை உடைய எனக்கு இது ஒப்பவில்லை. ஒரு பக்கம்
கணினி படிப்புக்குக் கையேந்தும் வறுமைக் கோட்டு மாணவர்கள்.
மறுபுறம் அம்மா படிப்புக்காகக் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு கிரிக்கெட்
பார்க்கப் போகும் இன்னோரு பையன்.
எல்லோர் கையிலும் கைபேசி.
கண்மண் தெரியாமல் சாலையில் விரையும் முகமூடிப் பெண்கள்.
சர்ரென்று எங்கள் வண்டியை தப்பான பக்கத்தில்
கடந்த பெண்ணைப் பார்த்தால் சிரிக்கிறாள்.
ஒரு செகண்ட் இவர் சமாளிக்காமல் இருந்தால் வண்டி யோடு கீழே விழுந்திருப்பாள்
வந்திருந்த பெண் நான் கூட ஸ்கூட்டி கேட்டிருக்கிறேன் . என் மதிப்பெண்ணுக்குப் பரிசாக. என்றாள். பதினெட்டு வயது..
''ஓடிப் போய்க் கல்யாணம் செய்துகொள்ளலாமா ''என்று ஒருவிளம்பரம்.
அந்த நிமிடத்துக்காக மட்டுமே வாழக் கற்றுக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறை.
ஒரு அணி எங்கயோ வெற்றி பெற்றால் சென்னையில்
பார்ட்டி கொண்டாடும் விடலைப் பையன்கள் பெண்கள்.
போன வார ஸ்காண்டல் வாரமாக பல தொலைக் காட்சிகளில் பார்த்ததின் விளைவு இந்தப் பதிவு.
சிறுவர்கள் தெளிவாக இருக்கிறார்களோ இல்லையோ
நான் குழம்பிப் போயிருக்கிறேன்.
இன்று ஏறியிருக்கும் பெட்ரோல் விலை,
அதைத் தொடரப் போகும் மற்றவிளைவுகள்..
வெளிநாட்டில் முடங்கியிருக்கும் கறுப்புப் பணம். அதைச் சொல்ல ஏசி வண்டியில் வந்து தீர்மானங்கள் இயற்றும் கல்விமான்கள்.(?)
மேரா பாரத் மஹான்.
.