



இரவு, முழுநிலா நிலா வெளிச்சத்தில்
அலங்காரம் நிறைந்த மணப் பெண் போல இருக்கிறதாம் இந்த நகர்.
இத்தனை அழகான நகரைக் கட்டி ஆளுபவன் பலசாலி.
ஆனால் புத்தி இல்லாதவன்.
இருந்தால் சீதை என்னும் கற்புக்கரசியை மனசாலே
துன்புறுத்தி இருப்பானா?
இவ்வாறு நினைத்து மதில் சூழ் இலங்கையின் வாயிலை
அடைகிறான்.
இலங்கையின் காவல் தெய்வம் லங்கிணி
வருகிறாள்.
'ஏ,குரங்கே உனக்கு ராவணனின் பட்டணத்தில் என்ன வேலை.'
என்று துரத்துகிறாள்.
அனுமன் பவ்யமாகப் பதில் சொல்லியும் ஏற்காமல்
அவனைத் தாக்க வருகிறாள்.
எஜமான விஸ்வாசம்.
அனுமன் அவள் பெண்ணாயிற்றே என்று இரக்கப் பட்டுத்,தனது இடது முஷ்டியால் சற்றே இடிக்கிறான்.
அந்த வலி கூடத் தாங்கமுடியாத லங்கிணி வந்திருப்பது சாதாரணக் குரங்கு அல்ல ,
பிரம்மா இலங்கை நிர்மாணத்தின் போது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.
''ஒருவானரம் உன் முன் தோன்றி உன்னனத் தாக்கும்போது இலங்கைக்கு அழிவு''என்று சொன்னதைப் புரிந்துகொண்டு
அவனுக்கு வழிவிட்டுச் செல்கிறாள்.
மறுபடியும் ராமநாமத்தைச் சொல்லிய வண்ணம்,
இலங்கைக்குள் புகுகிறான் அனுமன்.
எங்கும் ஆனந்தமும் அழகும் கூத்தாடுகிறது
இலங்கையில். ஆடவர் பெண்டிர் குழந்தைகள் அனைவரும் அவர் அவர்களுக்கு உண்டான கேளிக்கைகளில்
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
நடனம்,இசை, நாடகம் என்று பல வேறு விதமான காட்சிகள்.வீரர்களும் மக்களும் கலந்து நடமாடிக் க்ஒண்டு இருக்கிறார்கள்.
மொத்தத்தில்
சுபிக்ஷத்திற்குக் குறைவே இல்லை.
எல்லாவற்றையும் ,தன் சின்ன வடிவில் இருந்துகொண்டே ப்ஆர்த்தவண்ணம் ராவணின் அரண்மனையை அடைகிறான்
அனுமம்.
பிரமிக்க வைக்கும் ம்அதில் சுவர்கள்.
ஒளி பொழியும் சாரளங்கள். மனததக் கவரும் உணவு மனம். மது,மாது என்று ஆரவாரமாக இருக்கிறது.
அங்கே யாருமெ மன விருப்பம் இல்லாமல் தனித்திருப்பதாகத் தெரியவில்லை.
எல்லாருமே ராவணனிடத்தில் பரிவு,விச்வாசம் உள்ளவர்களாக
செல்வச் செழிப்புடன் அதீத சந்தோஷத்தோடு காணப் படுகிறார்கள்.
மெல்ல ராவணின் அந்தப் புரம் நுழையும் அனுமனின் கண்களில் படுவது,
அங்கு துயிலிம் பெண்டிர் கூட்டம்தான்.
அவனோ நைஷ்டிகப் பிரம்மச்சாரி.
இப்படிப் பெண்களைப் பார்ப்பது அவனது
விரதத்துக்குப் பங்கமோ எண்று ஒரு கணம் வருந்துகிறான்.
பிறகு தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு ராமனை நினைத்த ஓரோரு இடமாகக் கடந்தவன் கண்களில் மிக அற்புத அழகோடு தூங்கும் ஒரு சௌந்தர்யம் மிகுந்த பெண்மணி
உறக்கத்தில் ஆழ்ந்து இருப்பதைப் பார்த்து ,
அவள்தான் சீதை என்று உற்சாகக் களிப்பில் ஆடுகிறான்.
சீதையின் சோகமும், பதிவிரத மேன்மையும் அவனைச் சட்டென்று நிலைக்குக் கொண்டு வருகின்றன.
''என்ன தவறு செய்ய இருந்தேன்.!!
என் அன்னை ஜானகி மாதா,அண்ணலை விட்டுப் பிரிந்திருக்கையில் இப்படி ஒரு சுகமான
படுக்கையில் அமைதியாகத் தூங்குவாளா?''
தவறிழைக்க இருந்தேனே' என்று பக்கத்தில் தென்படுகிறான் ராவணேஸ்வரன்.!
பத்துத்தலைகள்.
கம்பீரமான பெரிய உருவம். விசாலமான கட்டிலில் நித்திரை கொள்கிறான்.ஏவல் பெண்களும்,
விரும்பி ம்அணந்த உயர் லட்சணப் பத்மினி வகைப் பெண்கலும் அவனருகில் நித்திரை செய்கிறார்கள். அவர்கள் யாரும் கட்டயப் படுத்தி அங்கே கொண்டுவரப்பட்ட மாதிரி தெரியவில்லை.
இத்தனை பெயர்கள் இருக்க சீதையை
விரும்பினது இவனது அழிவுகாலம் ட்ஹான் எண்று முடிவுக் கட்டி,
வெளியே வருகிறான் மாருதி.
சோகம் அவனைச் சூழ்கிறது.
வீராப்புப் பேசி வந்தோமே. வந்து வெகுநேரமாகியும்
ஜானகியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையேஎ.
ஒருவேளை என் பயணம் வீணா.'
என்று கொஞ்ச நேரம் மனம் வருந்திச் சிந்திக்கிறான்.
ராம நாமாவே சமுத்திரத்தைத் தாண்டவைத்தது.சீதையிம் மகிமையே
நமக்குத் துணைவரும் என்ற அபரிமிதமான நம்பிக்கை மீண்டும் மனதில் உறுதி அளிக்க
எழுந்தான் அனுமன்.
முதலில் பார்வையிட்ட புஷ்பக விமானம் அருகே மீண்டும் சென்று தேடி,
தான் தேடாமல் விட்ட இடங்கள் ஏதாவது இருக்கிறதா
என்று பார்வையிட ஒரு உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்று
பார்த்தான்.
அதோ தெரிகிறதே இன்னுமொரு வனம். என்ன வாசம்.என்ன அழகு. உயரம் கூடிய மலர்கள் நிறைந்த
மரங்கள். கொடிகள் ,நதிகள்.
பளிங்கு மண்டபங்கள். அரசர்கள் உலவுவதற்காகக்
கட்டப்பட்ட நந்தவனமோ.
அது ஏன் அரண்மனையை விட்டுத் தள்ளி இருக்கிறது.
ஒரு வேளை அன்னைஜானகி அங்கே இருப்பாளொ.?
இந்த எண்ணம் மனதில் தோன்றிய வேகத்தில் அனுமன்
னிடம் புது உற்சாகம்
பிறந்தது.
எப்போதுமே ஒரு நல்ல காரியத்தை எடுக்கும்போது தடைகள் வருவது சகஜமே.
அப்போதும் நம்பிக்கையைக் கைவிடாமல் மீண்டும் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு
எடுத்துக்காட்டு அனுமனின் உயரிய பயணம்.
மீண்டும் மீண்டும் அவனுக்குத் தடைகள்.
மன உறுதி படைத்தவன் அனுமன். இல்லாவிட்டால் சூரியனுக்கு முன்பு
பின்னோக்கி நகர்ந்தவாறே
பறந்துகொண்டு,அவன் சொல்லச்சொல்ல
ஒன்பது வகை இலக்கணங்கள்,வேதங்கள்
எல்லாவற்றையும் கற்றிருக்க முடியுமா.
அஞ்சாநெஞ்சன் அஞ்சனை மைந்தன்.
வாழ்வின் இலக்கு எது என்று தேடியவனின் கைகளில் கிடைத்தது ஸ்ரீராமபதம்.
அதைத் திண்ணமாகப் பிடித்தவன் விடாமல் முன்னேறுகிறான்.
மனம்,வாக்கு,கார்யம் அனைத்திலும் நேர்மை.
இயற்கையாகவே சொல்லின் செல்வன்.
நுணுக்க புத்திக் கூர்மை,
செயல் திறமை,
அவ்வளவு திறனையும் ராமனுக்கு அர்ப்பணித்ததால்
சகல வித மகிமையோடு மிளிர்கிறான்.
தேகம் முழுவதும் ராமநாம மகிமை பரவ
அசோகவனத்தை நோக்கிப் பாய்கிறான்.
தேடி வந்தத் தாயைக் காணப் போகிறோம் என்கிற ஆனந்தத்தில்
அவன் தாவும்
வழியில் உள்ள பெரிய பெரிய கிளகள் எல்லாம் புயல் காற்றில் அகப்பட்ட
சிறுகொடிகள் போல ஆடுகின்றன.
மலர்கள் உதிர்ந்து அனுமன் வருகிறான். சீதைக்கு நல்ல காலம் பிறந்து விட்டது
நாமெல்லாம் புண்ணியம் செய்தவர்கள் என்ற சேதியைச் சொல்லியபடி மரத்தின்
அடியை நோக்கி மிதக்கின்றன.
முழுநிலா கூட இனிமேல் என்ன நடக்கும் என்று ஆவலுடன்
மேகத்துக்குள் போகாமல் பார்க்கிறதாம்!!
சிம்சுபா மரங்கள் நிறைந்த அசோகவனத்தை அடைகிறான் அனுமன்.
அங்கு ஒரு பளிங்கினால் ஆன மணி மண்டபம்.
அருகே ஒடும் சிறிய ஆறு ஒன்று.
அதை ஒட்டியபடி இன்னுமொரு சிம்சுபா மரம்.
அதன் கிளைகளில் தாவிய அனுமன் கீழே நோக்குகிறன்.
ஒரு உயரமான திண்ணை.
அதைச் சுற்றி அரக்கியர் கூட்டம்.
கொடூரமான தோற்றம்.
அவர்களுக்கு நடுவில் புலிகளுக்கு இடையில் அகப்பட்ட மானைப் போல தாயார் சீதா தேவி.
அவள் சீதையாகத்தான் இருக்க வேண்டும்.
ராமனிடம் கண்ட அதே சோகம், பொலிவில்லாத ஆனால்
மிக சாத்வீகப் பெருமை ஒளிரும் தேஜஸ் பொருந்திய முகம்.
சோர்வுற்று இருந்தாலும் வீரவிலாசம்,திண்மை தெரிகிறது.
சௌந்தரியமோ அளவிடமுடியாமல் அடக்கமாகத் தோன்றுகிறது.
அன்னையே,சீதா உன்னைக் கண்டேனா.
இது நீயாகத்தான் இருக்க வேண்டும்.
அனுமன் கூத்தாடுகிறான்.
அம்மா,உன் மேனியில் நாங்கள் (அன்று)கண்ட
ஆபரணங்கள் இல்லை. ராமன் இருக்கும் என்று சொன்ன
வளைகளும் இதோ இருந்த மரத்தின் கிளையில் தொங்குகிறது.
கணவனைப் பிரிந்த சோகமே
அவளைச் சேற்றில் மறைந்தும்
மறையாமலும் இருக்கும் தாமரை மலரின்மேல்
மறையாமலும் இருக்கும் தாமரை மலரின்மேல்
சேறு போல
போர்த்தி உள்ளது.
இவளெதான் சீதை!
போர்த்தி உள்ளது.
இவளெதான் சீதை!
என் தலைவனின் தலைவி என்று தெளிந்து, யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாத தேவியின் தரிசனம்,
ராமனின் உயிரைத் தன்னில் வைத்திருப்பவளின்
தோற்றம் தன்முன் தெரிய ,கூப்பிய கைகளுடன் அனுமன் அமர்ந்தான்.
ராமனின் உயிரைத் தன்னில் வைத்திருப்பவளின்
தோற்றம் தன்முன் தெரிய ,கூப்பிய கைகளுடன் அனுமன் அமர்ந்தான்.
