வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்
பயணத்தின் நான்காம் நாள் ....பாகம் 5
+++++++++++++++++++++++++++++++++++++++++++
பயணத்தின் நான்காம் நாள், சியாட்டிலில் இருக்கும் பல இடங்களுக்குப் போக முடிவு.
பேரன் வேலைசெய்யும் டவுன் டௌன் போய் அவனை அழைத்துக் கொண்டு செல்ல முடிவு.
முதல் நாள் ஸ்பேஸ் நீடில் சென்று விட்டு வந்ததிலிருந்து
கால்கள் மிக வலிக்க, நான் அறையிலியே இருந்து கொள்வதாக முடிவைச் சொன்னேன்.
மிகவும் வற்புறுத்திய
பிறகு அவர்கள் கிளம்பினார்கள்.
Amazing Race enbathu Amazon Prime இல கிடைத்தது.
ரொம்ப நாட்களாகப் பார்க்க நினைத்திருந்த வியக்க வைக்கும் தொடர்.
அமெரிக்காவின் இளைஞர்களும் யுவதிகளும்
பங்கு கொள்ளும் வியக்க வைக்கும் ஓட்டம்.
மில்லியன் டாலர் பரிசு.
பலவிதமான இக்கட்டுகள், Challanges, பல தேசங்கள், பல சீதோஷ்ணங்கள்
இவற்றில் ஓட வேண்டி இருக்கும்., நீச்சல், டைவிங்க், எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
நண்பர்கள், தோழிகள், அம்மா பெண், அப்பா மகன், கணவன் மனைவி,
வைத்தியர்கள்
என்று பலவிதமான நபர்கள் பங்கு கொள்கிறார்கள்.
11 பகுதிகளாக கிட்டத்தட்ட 35 இடங்கள் உலகத்தைச் சுற்றி
செல்ல வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டுக்கான
பணத்தைக் கையில் கொடுக்கிறார்கள்.
தாராளமாக இருக்கும். உடல் உறுதி மன உறுதி எல்லாம் இருக்க வேண்டும்.
30 40 நபர்கள் முதலில் ஆரம்பித்து 24 நபர்கள் அதாவது 12 ஜோடிகளாக
வடிகட்டப் படுகிறார்கள்.
11 ஆவது பகுதி வரும்போது மூன்று ஜோடிகள் மிஞ்சுவார்கள்.
அதில் முதலாவதாக ,தீர்மானிக்கப் படுபவர்கள், புத்தியை
உபயோகிக்கத் தெரிந்த வேகம் நிறைந்த ஜோடியாக
இருப்பார்கள்.
சாப்பாடை முடித்துக் கொண்டு, பார்க்க ஆரம்பித்தவள்
தொடர்ந்து 4 மணி நேரம் சென்றதே தெரியவில்லை.
அறையைச் சுத்தம் செய்ய பெண் வந்ததும் நிறுத்தினேன்.
இவர்கள் எல்லோரும் போயிங்க் விமானம் செய்யும்
இடத்துக்குச் சென்று நாலு மணி நேரம் இருந்து
முடிந்த படங்களை எடுத்து வந்தார்கள்.
நல்ல வேளை நீ வரலம்மா. ஏகப்பட்ட இடங்களுக்கு நடந்தே
போக வேண்டி இருந்தது. நாங்கள் சாப்பிடப்
போகிறோம் , உனக்கு பீட்சா வேண்டுமா என்று கேட்டாள்
மகள்.
எனக்கு கத்திரிக்கய்ய் ஊறுகாயும் தயிர் சாதமும் இருக்குமா.
பீட்சா வேண்டாம் என்று சொல்லிப் படுக்கச் சென்று விட்டேன்.
ஆ, மிச்ச எட்டு எபிசோட் எட்டையும் பார்த்து விட்டே
படுக்கப் போனேன் என்று சொல்ல மறந்து விட்டேனே.
போயிங் விமானக்கூடத்தின் டூர் யூ டியூப்