வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்
பயணத்தின் நான்காம் நாள் ....பாகம் 5
+++++++++++++++++++++++++++++++++++++++++++
பயணத்தின் நான்காம் நாள், சியாட்டிலில் இருக்கும் பல இடங்களுக்குப் போக முடிவு.
பேரன் வேலைசெய்யும் டவுன் டௌன் போய் அவனை அழைத்துக் கொண்டு செல்ல முடிவு.
முதல் நாள் ஸ்பேஸ் நீடில் சென்று விட்டு வந்ததிலிருந்து
கால்கள் மிக வலிக்க, நான் அறையிலியே இருந்து கொள்வதாக முடிவைச் சொன்னேன்.
மிகவும் வற்புறுத்திய
பிறகு அவர்கள் கிளம்பினார்கள்.
Amazing Race enbathu Amazon Prime இல கிடைத்தது.
ரொம்ப நாட்களாகப் பார்க்க நினைத்திருந்த வியக்க வைக்கும் தொடர்.
அமெரிக்காவின் இளைஞர்களும் யுவதிகளும்
பங்கு கொள்ளும் வியக்க வைக்கும் ஓட்டம்.
மில்லியன் டாலர் பரிசு.
பலவிதமான இக்கட்டுகள், Challanges, பல தேசங்கள், பல சீதோஷ்ணங்கள்
இவற்றில் ஓட வேண்டி இருக்கும்., நீச்சல், டைவிங்க், எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
நண்பர்கள், தோழிகள், அம்மா பெண், அப்பா மகன், கணவன் மனைவி,
வைத்தியர்கள்
என்று பலவிதமான நபர்கள் பங்கு கொள்கிறார்கள்.
11 பகுதிகளாக கிட்டத்தட்ட 35 இடங்கள் உலகத்தைச் சுற்றி
செல்ல வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டுக்கான
பணத்தைக் கையில் கொடுக்கிறார்கள்.
தாராளமாக இருக்கும். உடல் உறுதி மன உறுதி எல்லாம் இருக்க வேண்டும்.
30 40 நபர்கள் முதலில் ஆரம்பித்து 24 நபர்கள் அதாவது 12 ஜோடிகளாக
வடிகட்டப் படுகிறார்கள்.
11 ஆவது பகுதி வரும்போது மூன்று ஜோடிகள் மிஞ்சுவார்கள்.
அதில் முதலாவதாக ,தீர்மானிக்கப் படுபவர்கள், புத்தியை
உபயோகிக்கத் தெரிந்த வேகம் நிறைந்த ஜோடியாக
இருப்பார்கள்.
சாப்பாடை முடித்துக் கொண்டு, பார்க்க ஆரம்பித்தவள்
தொடர்ந்து 4 மணி நேரம் சென்றதே தெரியவில்லை.
அறையைச் சுத்தம் செய்ய பெண் வந்ததும் நிறுத்தினேன்.
இவர்கள் எல்லோரும் போயிங்க் விமானம் செய்யும்
இடத்துக்குச் சென்று நாலு மணி நேரம் இருந்து
முடிந்த படங்களை எடுத்து வந்தார்கள்.
நல்ல வேளை நீ வரலம்மா. ஏகப்பட்ட இடங்களுக்கு நடந்தே
போக வேண்டி இருந்தது. நாங்கள் சாப்பிடப்
போகிறோம் , உனக்கு பீட்சா வேண்டுமா என்று கேட்டாள்
மகள்.
எனக்கு கத்திரிக்கய்ய் ஊறுகாயும் தயிர் சாதமும் இருக்குமா.
பீட்சா வேண்டாம் என்று சொல்லிப் படுக்கச் சென்று விட்டேன்.
ஆ, மிச்ச எட்டு எபிசோட் எட்டையும் பார்த்து விட்டே
படுக்கப் போனேன் என்று சொல்ல மறந்து விட்டேனே.
போயிங் விமானக்கூடத்தின் டூர் யூ டியூப்

19 comments:
பயணக்கட்டுரை என்று சொல்லி விட்டு படக்கட்டுரை எழுதி விட்டீர்கள்! ஹா...ஹா... ஹா...
கத்தரிக்காய் ஊறுகாயும்... ஆஹா....
தயிர்சாதமும்... ஆஹாஹா...
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
இரண்டு பாடல்களுமே நல்ல தேர்வு
காலை வணக்கம் ஸ்ரீராம். பயணத்தில் பார்த்த படம்
ரியாலிட்டி ஷோ என்று சொல்லி இருக்க வேண்டுமோ.
இல்லை, அந்த சுத்தம் செய்யும் பெண், ஆங்கிலம் தெரியாத
மெக்சிகன்.
நான் கேட்டதை அவள் உடனே தன் ஸ்மார்ட் ஃபோனில்
ஸ்பானிஷில் மாற்றிக் கொண்டு
எனக்குப் பதில் சொன்னாள்.
எனக்குத்தான் ஸ்பானிஷ் தெரியாதே .ஜோராகச் சிரித்தோம்.
//நான் கேட்டதை அவள் உடனே தன் ஸ்மார்ட் ஃபோனில்
ஸ்பானிஷில் மாற்றிக் கொண்டு
எனக்குப் பதில் சொன்னாள்.//
அடடே... ஸ்மார்ட் போனில் இப்படி எல்லாம் வசதி இருக்கிறதா?
இந்த மாதிரி விளம்பரத் தொந்திரவுகள் எல்லாம் இல்லாமல் தொடர்கள் பார்ப்பது என்றால் மகிழ்ச்சி தான். பொழுது நல்லபடி கழிந்ததுக்கு வாழ்த்துகள். முன்னெச்சரிக்கையாகச் சுற்றிப் பார்க்கச் செல்லாமல் இருந்ததுக்கும் பாராட்டுகள்.
Amazing race நான் சில சமயம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். ரொம்ப இன்டெரெஸ்டிங், ஆபத்தானது. நீங்க சர்வைவர் பார்த்திருக்கீங்களோ?
கத்தரிக்காய் ஊறுகாயா? :(
நல்லவேளை ரொம்ப நடக்கவேண்டிய இடங்களுக்குச் செல்லவில்லை
விமானக்கூடத்தின் டூர் யூ- டியூப் காட்சிகளை பார்த்து விட்டேன்.
மொழி தெரியாமல் பணிபெண்ணிடம் பேசியது சிரிப்பு மெளனமொழி போதுமே! உங்கள் அன்பான முகம் சிரிப்பு அந்த பெண்ணை கட்டி போட்டு இருக்கும்.
பீடசாவிற்கு நம் தயிர் சாதம் தேவாமிர்தம்.
கத்திரிக்காய் ஊறுகாய் அப்புறம் என்ன வேண்டும்!
எனக்கு கத்திரிக்காய் ஊறுகாயும் தயிர் சாதமும் இருக்கு பீட்சா வேண்டாம்.
ஹா.. ஹா.. பொருத்தம் இல்லாமல் பொருந்திய வார்த்தை.
நிறைய நடக்க வேண்டி இருந்தது என்று தெரிந்ததும் நீங்கள் போகாமல் இருந்தது நல்லதே என்று தோன்றியிருக்கும்...
ரியாலிட்டி ஷோ - இங்கேயும் இப்படியான ஷோக்கள் தான் பலரும் பார்க்கிறார்கள் - ஆனால் இங்கே இருக்கும் ரியாலிட்டி ஷோ வெறும் ஏமாத்து வேலை மட்டுமே என்று தோன்றுகிறது. :)
காணொளி பார்க்க வேண்டும். பார்க்கிறேன்.
போயிங்க்... விமானக் கூடமே பிரம்மாண்டமாக இருக்கிறது. காணொளி மூலம் நானும் பார்த்து ரசித்தேன் மா...
காணொளி அசத்தல்...
அங்கே அவர்கள் போயிங்க் விமானம் தயாரிப்பு இடத்தைப் பார்வையிட, இங்கே நீங்கள் Amazing Race டிவியில் பார்க்க-- இரண்டு பக்கமும் திருப்தி ஆயிற்று.
தொடர் வாசிக்க அழகாகச் செல்கிறது. தொடருங்கள்.
//நான் கேட்டதை அவள் உடனே தன் ஸ்மார்ட் ஃபோனில்
ஸ்பானிஷில் மாற்றிக் கொண்டு எனக்குப் பதில் சொன்னாள்.//
ஆஹா.. எவ்வளவு செளகரியங்கள்?.. இனி இந்தி தெரியவில்லையே என்ற கவலை என் போன்றவர்களுக்கு வேண்டாம் போலிருக்கு!
அதே தான் கீதாமா.
விளம்பரமே கிடையாது.
முழுக்க முழுக்க
பொய்யே கலக்காத நல்ல நிகழ்ச்சி.
பரபரவென்று அவர்கள் இயங்கும் வேகம் என்னை ஈர்க்கிறது.
தினம் 4 எபிசோட்ஸ் பார்க்கிறேன்.
சீக்கிரம் முடிந்து விடும்.
ஆமாம் முரளிமா.
ஆபத்தானது. நல்ல வேளை,யாருக்கும் அடிபடாது இது வரை போய்க் கொண்டிருக்கிறது.
விழுந்தால் கூட சமாளித்துக் கொண்டு ஓடி விடுகிறார்கள்.
பணம்தான் ஊக்குவிக்கிறது.
ஆனாலும் சுவாரஸ்யம்.
சர்வைவர் இன்னும் பார்க்கவில்லை.
கத்திரிக்காய் பிடிக்காதா. அட ராமா.
முன்பே பார்த்து வைத்துக்கொண்டேன் .
நான் இல்லாவிட்டால் அவர்கள் இன்னும் சில இடங்களைப்
பார்க்க முடியும்.
அன்பு கோமதி. விடுதி முழுவதும் அந்த ஊர்ப் பெண்கள் தான்.
படு சுட்டிகள்.
கலகலவென்று சிரிப்பு.
வாக்குவம் போடணும் நீ வெளியே போயிரு
என்பதைச் சொல்லி எனக்கு சைகை காட்ட எனக்குப் புரியவில்லை.
வெளியே ஜன்னல் பக்கம் போய் உட்கார்ந்து கொண்டேன்.
10 நிமிஷத்தில் முடித்துக் கொண்டு வெளியே வந்து விட்டது.
நல்ல பெண். உன் கைப்பை உள்ள இருக்கிறது. செக் செய்துக்கோன்னு சொல்லிவிட்டுப்
போனது அந்தப் பெண்.. நன்றி கோமதி மா.
பீட்சா ஒத்துக் கொள்வதில்லை அன்பு தேவ கோட்டை ஜி.
பொருந்தாத பொருத்தமா. ஹாஹ்ஹா.
அன்பு வெங்கட், முதல் நாள் நடந்ததே
மிக அலுப்பாக இருந்தது. புது ஊராக இருந்ததால் வண்டி சுற்றிச் சுற்றி போய்க் கொண்டிருந்தது.
ஆறுமணியானால் பசி தாங்காது.
கண்டதைச் சாப்பிட முடியாது.
எல்லாமே அவர்களுக்குச் சங்கடம் தரும்.
நான் இல்லை என்றால் அவர்கள் நிதானமாகப் பார்த்து வருவார்கள்.
இதெல்லாம் உத்தேசித்தே இணையத்தில் பார்த்து வைத்தேன்.
ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடம் என்று பல இடங்கள் அந்ததொழிற்கூடத்தில் இருந்தன.
ஏறி இறங்க வேண்டும்.
அதுதான் இந்தத் தீர்மானம் பா. காணொளி
பார்க்க முடிந்தது மிக சந்தோஷம். நன்றி மா.
வணக்கம் ஜீவீ சார்.
இப்போது நிறைய நபர்கள் இந்த ட்ரான்ஸ்லேட்டரை
உபயோகப் படுத்துகிறார்கள்.
நல்ல சௌகர்யமாக இருக்கிறது.
அந்தப் பெண்களுக்கு மிக அவசியம் கூட.
அடுத்த நாள் நீண்ட பயணம் என்பதால் முதல் நாள் செல்லவில்லை.
ஆர்வமும் குறைந்து விட்டது.
இதோ யூ டியூபில் இருக்கிறது பலவிதமான விளக்கங்கள்.
பிரமாண்டமான இடம்.
Post a Comment