பல்குணி நதி. |
விஷ்ணு பாதம் இருக்கும் கோவில். |
ராமரும் வந்தார். லக்ஷ்மணன் தோளில் சில மூட்டைகள்.ராமர் கையில் உணவுக்கான
பொருட்கள்.
சீதையிடம் திதி கொடுக்க உணவு தயாரிக்கும் படி சொல்ல,
அவளும் தயாரிக்கிறாள்.
ஸ்ராத்தம் தொடங்கும் போது யாரும் பிண்டம் ஏற்க வருவதாகத் தெரியவில்லை.
சீதை மெல்ல நடந்ததை விளக்குகிறாள்.
நம்ப மறுக்கிறார் ராமர்.நான் கொடுத்து அவர் ஏற்கவேண்டிய பண்டத்தை நீ கொடுத்து அவர் ஏற்றதாக நான் எப்படி நம்புவது என்று கோபிக்கிறார்.
இதோ ஐந்து பேர் சாட்சி என்றுபசு,துளசி, பிராமணன்,பல்குனி நதி, அக்ஷயவடம்
எல்லாவற்றையும் காண்பித்துக் கேட்கிறாள்.
ராமரும் வினவ, அக்ஷயவடத்தைத் தவிர மற்ற நால்வரும் ராமனுக்குப்
பயந்து உண்மையை மறுக்கிறார்கள்.
சீதைக்குச் சினம் சீறிக் கொண்டு வருகிறது.
பசுவை நோக்கிப் பொய் சொன்ன உன் வாயிருக்கும் உன் முகத்துக்கு இனி
லக்ஷ்மிவாசம் கிடையாது.
உன் பின் பாகத்துக்குத் தான் மரியாதை கிடைக்கும்.
பிராம்மணரே உமக்கு இங்கே கிடைக்கும்
வருமானத்தால் திருப்தியே அடையாமல் மேலும் மேலும்
அலைவீர்கள்.
துளசி செடியே உனக்கு இங்கே இனி இடம் கிடையாது.
பல்குனி நதியே இங்கு இனிமேல் பூமிக்கடியில் மறைந்து வாழ்வாய்.
அக்ஷயவடத்தைப் பார்த்து யுகம் யுகம் முடியும்போது
உனக்கு அழிவு வராது. என்றும் நிலைத்திருப்பாய்
என்று ஆசிகள் கொடுத்தாள்.
ராமரும் இதைக் கேட்டு ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு
சீதையைச் சமாதானம் செய்தார்.//
என்று சொல்லி முடித்தார் நாராயணன்.
வஞ்சுவுக்கு அதிசயமாக இருந்தது.
சீதைக்குக் கூடச் சினம் வருமா என்று.
வந்திருக்கிறது. நீ பொய் சொன்னதாக யார் சொன்னாலும்
சினம் வரத்தான் செய்யும் வஞ்சு. இப்ப நீ செய்யும்
தளிகையில் நான் ஏதாவது குற்றம் கண்டுபிடித்தால்
அது நீ செய்யாத தவறாக இருக்கும் சமயம் உனக்குக்
கோபம் வராதா என்று கேலி செய்தார் வாசு.
வஞ்சு வுக்குப் பொய்க்கோபம் கூட வரவில்லை.
நடக்காத விஷயத்துக்கு எல்லாம் எனக்குக்
கவலை இல்லை என்று சிரித்தாள்.
நாராயணனும் லக்ஷ்மியும் சேர்ந்து கொள்ளப் பயணமும்
பூர்த்தியாகி விஷ்ணு பாத கோவிலுக்கு வந்து நின்றது வண்டி.
கீழே இறங்கியதும் அவர்கள் தேடியது ,தீர்த்தமாடும் இடத்தைத்தான்....
அவர்களுக்காகவே காத்திருந்த தமிழ்ப் பண்டிதர் ஒருவர்,
தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு ,அதோ தெரிகிறது
பாருங்கள் பல்குணி நதி. அதில் கிணறு ஊற்றெடுக்கும். அங்கே சென்று ஸ்னானம்
செய்து உடை மாற்றி வாருங்கள்.
நாம் பிண்ட தானம் செய்யும் இடத்துக்குச் செல்லலாம்.
எல்லாம் நல்ல படியாகப் பூர்த்தியாகட்டும் என்று நல் வார்த்தை சொன்னபடி
அவர்களை அழைத்துச் சென்றார்.
அவர் சொன்னபடியே செய்துவந்தவர்கள்,
ஒரு பெரிய தர்ப்பண கட்டத்தை அடைந்தனர்.
தனியாக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து
அதை வஞ்சுமாவையும், லக்ஷ்மி மாவையும்
சுத்தம் செய்யச் சொன்னார்.
அவர்கள் செய்து முடித்ததும் ,அந்த இடத்தைத் தர்ப்பைகளால்
நிரப்பினார்.
பிறகு ஆரம்பித்தது கயா ஸ்ராத்தம்.
மந்த்ரங்கள் சொல்லி லகுவாக அவர்களை வழி நடத்தினார்.
அம்மா அப்பாவுடன், வீட்டில் இறைவனை அடைந்த அனைவர்க்கும்
பிண்டம் கொடுக்கலாம் என்று சொன்னதும்
வஞ்சுமாவும் ,லக்ஷ்மி மாவும் தங்கள் தங்கள்
பெற்றோர்களுக்கும் கொடுக்கவும் வேண்டிக் கொண்டார்கள்.
/////////இந்த இடத்தில் நம் பதிவுலக துளசியையும் கோபாலையும்
கட்டாயம் நான் நன்றியுடன் நினைக்கிறேன்.
அவர்கள் சென்ற போது , என் கணவருக்கும்
பிண்டம் கொடுத்து ஸ்ராத்தம் செய்தனர்.
மனம் நிறை நன்றி கோபால் துளசி. என்றும் வாழ்க வளமுடன்.//////////
இந்த ஸ்ராத்த வீடியோவை முன்னரே பதிவிட்டிருந்தேன்.
http://kothainaachiyaar.blogspot.com/2018/07/gaya-shraddhamm4v.html
அக்ஷய வடத்தின் இன்னொரு படம். |
எல்லோருக்கும் இந்தத் தயாள குணம் வராது.
இந்தக் கயை புனிதத் தலத்தில் இறந்த முன்னோர்களுக்கு பிண்டமளித்து நீத்தார் கடன் செய்வது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தப் பிண்டங்களை பல்குணி நதிக்கரையிலும், விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வடம் எனும் விழுதில்லா ஆலமரத்தின் அடியிலும் படைக்கிறார்கள். இங்கு நம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல; நண்பர்கள், (ஏன் நல்ல மனமிருந்தால் எதிரிகளுக்கும் கூட பிண்டம் வைக்கலாம்) உறவுகள், நாம் ப்புப் பிராணிகள், முகம் தெரியாதவர்கள், விபத்து போன்றவற்றில் மறைந்தவர்கள் என அனைவருக்கும் பிண்டம் வைக்கலாம். அக்ஷய வடத்தில் பிண்டம் வைப்பதோடு ”நீத்தார் வழிபாடு” கயையில் நிறைவடைகிறது. இதனால் நம் முன்னோர்கள் மகிழ்வதாகவும், மேலுலகம் செல்வதாகவும், நம்மை ஆசிர்வதிப்பதாகவும் நம்பிக்கை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment