பொன்மலை ஸ்டேஷன். |
Add caption |
Add caption |
கதை ஆரம்பிப்பது ,திருச்சி 1976இல்
பொன்மலை ரயில்வே காலனியில்.
இன்னும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெறப்போகும்
ராமனாதனையும் அவர் மனைவி சுந்தரியையும் சுற்றி
நடை பெறும் சம்பவம்.
இன்னும் இரண்டு நாட்களில் தாங்கள் மேற்கொள்ளப்
போகும் பயணத்துக்காகத் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்தார்.
ரயில்வேயில் பட்ஜெட் செக்ஷன் ஆபீஸராக இருப்பதால்,
ரயில்வே டிக்கட்டுகள் விலைஏறுவது , இடம் கிடைப்பது இதைப்
பற்றி எல்லாம் கவலை இல்லை. முதல் வகுப்பு பயணம் உறுதி.
பயண நாட்களைச் சொல்லிவிட்டால், ரயில்வே விருந்தினர் அறை
முதற்கொண்டு எல்லாம் ஏற்பாடு செய்யப்படும்.
கூடவே வரப்போகும் மகனுக்கு ஏற்றவாறு தன் லீவு சாங்க்ஷனுக்காக
திருச்சி ரீஜனல் அதிகாரியிடம் பேசி முடிவு செய்திருந்தார்.
மகன் சபரி , திருச்சி ஆர் இ ஸியில் லெக்சரராக இருந்தான். வயது
30 ஐ எட்டிக் கொண்டிருந்தது. 4 வருடங்களாகிவிட்டது.வேலையில் சேர்ந்து.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் இஞ்சினீயரிங்க் படிப்பு சேர்ந்தான்.
நல்லபடியாகத் தேர்வடைந்ததும், எம் ஃபிலும் முடித்தான்.
படித்த கல்லூரியிலியே அழைத்துக் கொண்டார்கள்.
ஒருவருடம் டியூட்டராக இருந்துவிட்டு, பொழிப்புரையாளர் பதவி ஏற்றுக் கொண்டான்.
அப்போது அவன் ஜாதகத்தைக் கையில் எடுத்தார்.
ரயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்த பிள்ளை. உதவிக்கு
அப்போதிருந்த டாக்டர் கமலா ஜகன்னாதன், நேரம் எல்லாம்
சரியாகக் குறித்துக் கொடுத்திருந்தார்.
சுந்தரியின் பிறந்த ஊர் மதுரையில் இருந்த ஜோதிடர் கணேச சாஸ்திரிகள்
நல்லவிதமாகவே கணித்துக் கொடுத்திருந்தார்.
ஆனால் சமீபத்தில் உறவுகாரர்கள் கொடுத்த பெண்களின்
ஜாதகங்கள் ஒன்று கூட நல்ல சம்பந்தத்தில் முடியவில்லை.
பொருத்தம் நன்றாக இருந்த பெண்ணும் பார்க்க அழகாக
இருந்தாலும் , இரு குடும்பங்கள் மனம் ஒன்றினாலும்,
ஏதோ ஒருவிதத்தில் திருமணம் வரை வரவில்லை.
புரியாத புதிராக இருந்தது.
சபரி நல்ல உயரமான,களையான முகம் கொண்ட பையன்.
கெட்ட பழக்கங்கள் ஒன்றும் கிடையாது.
படிப்புக்கேற்ற கண்ணாடி முகத்தை அலங்கரிக்கும்.
அது சுந்தரிக்குக் குறைதான். எல்லாரும் மாதிரி காண்டாகட் லென்ஸ் போட்டுக் கோடா
என்று வற்புறுத்துவாள்.
வேண்டாம்மா. அதனால் கண்ணுக்குக் கேடூதான்.
கண்ணாடி எல்லாம் கல்யாணத்துக்குத் தடை இல்லை
என்று சிரிப்பான்.
இந்தத் திருமணங்கள் ஏன் நின்று போகிறது என்று புரியாமல் ,மதுரை
கணேச சாஸ்திரிகளைப் பார்க்க விரைந்தார் ராமனாதன்.
சுந்தரியும் அவருடன் வந்தாள்.
வசந்தனகரில் இருக்கும் தாய்தந்தையரைப் பார்க்க இது இன்னோரு சந்தர்ப்பம்.
அவர்களுக்கும் வயதாகிறது. அப்பாவுக்கு 76 ஆகப் போகிறது.
அம்மா 70 ஐத்தாண்டிவிட்டாள்.
மதுரை சென்று பஸ்ஸைவிட்டு இறங்கியதும்
நேரே இருவரும் வசந்த நகர் சென்றனர்.
திடீரென வந்து நிற்கும் பெண் மாப்பிள்ளையக் கண்டு ஒரே சந்தோஷம்
அவர்களுக்கு. . விஷயங்கள் அறிந்தவர்களாக இருந்ததால்
நாளைக்குப் போய்ப் பாருங்கள். மதிய நேரம் ரிலாக்ஸாக
இருப்பார்,. பார்த்துவிட்டு மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கும்
போய் வாருங்கள் என்று சொன்னார்.
சரிம்மா இன்னிக்கு என்ன ஸ்பெஷல் என்றபடி
உள்ளே சென்றாள் சுந்தரி. மாட்டுப் பொண்ணு வரப் போகிற நேரம்
நீ அம்மாவிடம் கொஞ்சிண்டு இரு என்று சிரித்தார் அப்பா.
ராமனாதன் அவள் இன்னும் மாறவே இல்லை.
பார்க்கிற பெண் களை எல்லாம் பிடித்துவிடுகிறது.
வளையலாய் வாங்கிக் கொடுக்கிறாள்.
மருதாணி அரைத்துக் கொண்டு போகிறாள்.
எதோ நடந்து முயற்சி தோற்கிறது. துவண்டு போகீறாள்.
என்றார்.
நம்மாத்தில் ஒரு பெண் பிறந்திருந்தால் இப்படி
ஒரு ஏக்கம் வராது. போனால் போகிறது சாஸ்திரிகள் வழி காட்டுவார்.
என்று ஆறுதல் சொன்னார் அப்பா. ...தீர்வு கிடைக்கும்
Add caption |
No comments:
Post a Comment