Vallisimhan
விமலா,தனக்கே உரிய இடமான வீட்டுக்குப்
பின்னால் இருக்கும் வாழை மரம், வேப்பமரம் அருகில்
அந்த நிழலில் , பிடித்த ஜெய்காந்தன்
புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தாள்.
அம்மா பாலு கொண்டு வந்திருக்கேன் என்று குரல் கொடுத்தபடி
ஜகதா வந்தாள். . ஃப்ரிட்ஜில வச்சிடும்மா. இதோ வரேன். பசங்க வர நேரமாச்சு என்றபடி
வீட்டுப் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு
சமையலறையை அடைந்தாள்.
ஒருத்தனுக்கு உப்புமா பிடிக்காது. இன்னோருத்தனுக்கு பூரி பிடிக்காது.
மகளுக்கோ அடை இருந்தால் போதும்.
வீட்டுக்காரர் ஒருவர்தான் சொல் பேச்சு கேட்பவர்.
தினமும் தோசையும் சட்டினியும் இருந்தால் போதும்.
மாவைக்கரைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு,
தயார் செய்து கொண்டாள்.
இன்னோரு அடைக்கல்லை அடுப்பில் போட்டு தயார் செய்து
கொண்டாள். பெரியவனுக்கு குணுக்கு தான் பிடிக்கும்.
தக்காளிச் சட்டினி.நல்ல வேளை நான்கு பர்னர்
அடுப்பு விவேக் சேலில் வாங்கினது பயன் படுகிறது.
4 மணிக்கு எல்லாம் தயாரான் நிலையில்
தொலைபேசி அடித்தது.
அம்மாவாகத்தான் இருக்கும். கைகள் கசகசப்பைத் துடைத்துக் கொண்டு
தொலைபேசியை எடுத்தாள். மேற்குமாம்பலத்தில் இருக்கும் பெற்றோர்
தினம் காலை ஒரு தடவை சாயந்திரம் ஒரு தடவை
பேசிவிடுவார்கள்.
அவர்களது தனிமையைப் புரிந்து கொண்டு விமலாவும்
உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பாள்.. அவளுடைய
இன்னோரு சகோதரி அம்மா வீட்டுக்குப் பக்கத்திலேயே
இருந்தாலும் அப்பாவுக்கு விமலாதான் ஊன்றுகோல் போல்.
இன்று அப்பா குரலில் வழக்கமான சந்தோஷம் இல்லை.
என்னப்பா ஆச்சு , எதாவது உடம்பு சுகமில்லையா
என்றாள். நான் வண்டி எடுத்துக் கொண்டு வரட்டுமா.
டாக்டர் மோஹன் ராவ் பார்த்துவிட்டு வரலாம்.
அதெல்லாம் ஒண்ணும் இல்லை, அப்பா அடையார் வந்து உன்னைப்
பார்க்கணும் என்கிறார். இப்போ வந்தால் சௌகர்யமாக
இருக்குமா. என்றார் அம்மா.
இப்பொழுதுவிமலாவுக்கு நிஜமாகவே பயம் வந்துவிட்டது.
சரிம்மா வாங்கோ. டாக்சி வைத்துக் கொண்டு வாருங்கள்.
என்றபடி போனை வைத்தாள்.
இன்னோரு சகோதரனுக்குப் பேசலாம் என்றால் அவன்
ஏதோ அலுவலக விஷயமாய் ?ஈரோடு போயிருந்தான்.
அவர்களும் அப்பாவும் ஒரே வீட்டில் மாடியும் கீழுமாக இருந்தார்கள்.
மருமகளும் மிக நல்ல பெண். பார்த்து பார்த்து மாமியார் மாமனார்
வசதிகளைக் கவனித்துக் கொள்வாள்.
அப்பாவுக்குத்தான் அம்மாகை சாப்பாட்டைத் தவிர
வேறு பிடிக்காது.
மகன் அடிக்கடி வெளியே போய் விடுவதால்
வீட்டுப் பொறுப்பெல்லாம் அப்பாவிடம் தான்.
வாசலில் ஆட்டோ வாசலில் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
பெண்ணும் சின்னவனும் வந்துவிட்டார்கள்.
பெரியவன் சைக்கிளில் வருவான்.
அம்மா தாத்தா பாட்டி வரா. ஹைய்யா என்று சின்னவன் குதித்தாமன்,
அவனுக்குப் பிடித்த மில்க்பிகி பிஸ்கட்டை அவனிடம் கொடுத்த அப்பா அவனை மடியில்
இருத்துக் கொண்டார். பாட்டியை அணைத்துக் கொண்ட மகள்,
பாட்டின் கையில் இருந்த தந்தப் பெட்டியைப்
பார்த்து ஜிவ்வென்று குதித்தாள்.
ப்ரோச் கொண்டுவந்துட்டியா பாட்டி என்று பெட்டியைத்
திறந்தாள்.
ஏய் பசங்களா ஷூ கழட்டிக் கைகால் அலம்பி வாருங்கள்.
அம்மா அப்பா வாங்கோ . கால்டாக்சியில் வரக் கூடாதா
ஆட்டோ தூக்கிப் போடுமே அப்பா என்று அப்பாவின் கைகளைப்
பிடித்தாள்.
மெலிதாக நீண்டு இருந்த அந்த விரல்களின் உழைப்பை அறிவாள்.
இரண்டு மூன்று வருடங்கள் முன்னால் தான் ஓய்வு பெற்றிருந்தார்.
குழந்தைகள் வருவதற்கு முன் சொல்றேன் மா.
எங்கள் இருவருக்கும் ஒதுங்க ஒரு இடம் வேண்டும்.
மாடியில் ஒரு அறை கொடுத்தால் போதும்.
அதில் நாங்கள் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்வொம்
இதைச் சொல்லி முடிப்பத்ற்குள் அப்பாவின் குரல் தழுதழுத்தது..
அம்மா பக்கம் திரும்பினாள்
அவளும் மௌனமாக ஆமோதித்தாள்.
மாதவன் வேலையைவிட்டுவிட்டு
வீட்டிலியே கம்பெனி ஆரம்பிக்கப் போகிறன் மா.
மாடி சௌகர்யமாக இருக்கும் என்று நம்புகிறான்.
அவனுடைய மச்சினனும் பார்ட்னராகச் சேர்கிறான்.
அதற்கும் நீங்கள் வெளியே வருவதற்கும் என்ன சம்பந்தம்மா.
கீழே இரண்டு பெட்ரூம் இருக்கு மா.
எங்கள் பொருட்கள் எல்லாம் அந்த ஒரு அறையில் அடங்காது.
இந்த வைகாசியில் கம்பெனி ஆரம்பிக்கிறது.
ஒரு குடித்தனத்துக்கு வேண்டும் என்கிற பொருட்களை எடுத்துக் கொண்டு
இங்கே வருகிறோம்.
இங்கிருந்து வேற அபார்ட்மெண்ட் பார்த்துக் கொள்கிறோம்.
ட்ரான்சிட்னு வச்சுக்கோன்னு சொல்லும் அப்பாவைப்
பார்த்து விமலா கண்ணிலும் நீர் துளித்தது.
குழந்தைகள் படி இறங்கிவரும் சத்தம் கேட்டதும்.
மீண்டும் கலகலப்பானார்கள். பெற்றோருக்கும்
சாப்பாட்டு மேஜையில் இடம் செய்து அப்பாவுக்குப்
பிடித்த குணுக்குகளை இருவருக்கும் வாழை இலைகளில்
வைத்துக் கொடுத்தாள்.
அப்பாவுக்கு ஹார்லிக்ஸும், அம்மாவுக்கு டீயும்
கொண்டு வைத்தாள்.
கணவனின் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
மனம் நிறையப் பெருமூச்சு விட்டு
அவரை உள்ளே வரவேற்றார் அப்பா. வாங்கோ
முகுந்தன். அடடே வாங்கோ மாமா,மாமீ.
இதோ குளித்துவிட்டு வருகிறேன் என்ற படி மாடிக்கு ஏறிச் சென்றார்
விமலாவின் கணவர்........நாளை தீரும் இந்தப் பிரச்சினை.

Add caption |
No comments:
Post a Comment