Blog Archive

Tuesday, July 31, 2018

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 3

Vallisimhan

   எனக்கு என்னமோ சபரி தர்ப்பணம் செய்யணும்னால்
பயமாக இருக்கிறது. அம்மா அப்பாவையும் கேட்கலாம்
என்று சுந்தரி சொல்ல, நடந்தே மீனாக்ஷி அம்மன் கோவிலை அடைந்தனர்.
 சரி குழம்பாதே. இத்தனை நாட்கள்  காரணம் தேடினோம். இனி அதை நிறைவேற்றும்

விதத்தை  யோசிக்கலாம். அவர் ஒன்றும் சின்ன ஜோதிடர் இல்லையே.
ஒரு  யோசனை இல்லாமல் சிந்திக்காமல் சொல்ல மாட்டார் என்ற படி
கோவிலை அடைந்து ,முக்குறுணிப் பிள்ளையார், வீர பத்ரர்கள் எல்லோரையும்
சேவித்துக் கொண்டு  பொற்றாமரைக் குளத்தையும்

தாண்டி, , மீனாக்ஷி அம்மன் சன்னிதியை அடைந்தனர்.
தாயே நல்ல வழிகாட்டு என்றி வேண்டியபடி, சொக்க நாதர்  சன்னிதியை அடைந்தனர்.
 ராம நாதன் அங்கேயே உட்கார்ந்துவிட்டார்.
ஒரு தவறால் இந்தப் பையன் திருமணம் தடைப்பட்டதே சுந்தரி என்று அழாத குறையாகச் சொன்னார்.
ஒன்றும் குறைவில்லை.இவர்கள் எல்லோரும் நம்மைக்
கவனித்துக் கொள்வதால் தானே  நமக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.
எல்லாம்  நல்லதுக்குத்தான் என்று சமாதானப் படுத்தினாள் சுந்தரி.
அதுவும் சரிதான் என்றபடி எழுந்து பிரகாரத்துடன் வாசலை அடைந்தனர்.

மாலைப் பொழுதில் ஜொலித்த கோபுரத்தை மனதார வணங்கிவிட்டு
ஆட்டோ பிடித்து வீடுவந்தனர்.
பெற்றோர்களிடம் விஷயத்தைச் சொல்ல, எங்களுக்குக் கூடத் தோன்றாமல் போச்சே.
மாப்பிள்ளை உடனே ஏற்பாடு செய்யுங்கள்.
நாங்களும் வருகிறோம். அங்கே இருக்கும் சாஸ்திரிகள் சொல்வது போல
செய்யலாம்.
சபரிக்குத் தொலைபேசி, ஒரு நான்கு   நாட்கள் கல்லூரிக்கு
விடுமுறை கேட்டுக் கொள்ளச் சொன்னார்கள்.

சபரிக்கு முதலில் பிடிபடவில்லை. நினைத்தால் லீவு எடுக்கிற வேலை இல்லையேம்மா
என்றான்.
சப்ஸ்டிட்டுட் சிவராமனை இருக்கச் சொல்லுடா.
இது முக்கியம் என்று சொன்னது இரண்டு நாட்களில் தயாராவதாகச் சொன்னான்.

இப்படியாகத் தான் ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ்ஸில் எல்லோரும் கிளம்பினர்.
மதியம் ராமேஸ்வரம் வந்து சேர்ந்ததும்,
ரயில்வே  விருந்தினர் அறைகளில் பெட்டிகளை வைத்துவிட்டு
கோவிலுக்குக் கிளம்பினர்.
சுந்தரியின் அம்மாவுக்கு பர்வதவ்ர்த்தினி அம்மன் மேல் அலாதிப்ரியம்.
அவளுக்குப் பிறந்தகம் அங்கேதான். . பர்வதம் அம்மாவுக்கு  ராமனாதன் கண்வராக வாய்த்ததும் அம்மன் அருளினால் தான்.
மிக மிக சந்தோஷமாக் அனைவரும் அந்தப் பிரம்மாண்ட கோவிலை அடைந்து
 ராமலிங்கேஸ்வரையும் அம்மனையும் தரிசித்து அங்கிருந்த குருக்களுடன் வந்த விஷயத்தைப் பேசினர்.
அவரும் கணேச சாஸ்திரிகள் சொன்னதை ஆமோத்தித்தார்.

ஆனால் சந்தேகத்துடன் எதையும் செய்ய வேண்டாம்.
நாளை கடற்கரையில் உங்கள் ஸ்வாமிகள் சொல்வதைச் செய்யுங்கள்.
உங்கள் சந்தேகத்தையும் சொல்லுங்கள் என்று ஆறுதல் செய்து அனுப்பினார்.
மறு நாள் பிரகாசமாக் விடியும் முன்னரே கடற்கரையி அடைந்துவிட்டனர். சொன்ன இடத்தில் காத்திருந்தார் சுப்ரமண்ய சாஸ்திரிகள்.
ஐவரையும் அழைத்துக் கொண்டு அதிக ஆழமில்லாத அழகான கடலில் ஒன்பது முறை முங்கி எழுதிருக்கச் சொன்னார்.
ஒவ்வொரு தடவையும், பாட்டி தாத்தா கையிலும் சுந்தரி ராம்னாதன் கையில் எள்ளும் வெல்லமும்
அரிசியும் கொடுத்து கடலில் கரைக்கச் சொன்னார்.
தம்பதிகள் ஒருவர் கையை ஒருவர்  பிடித்துக் கொண்டு மனமார வேண்டிக்கொண்டு சித்தப்பாவை நினைத்தபடி ஸ்னானம் செய்தனர்.
சபரியும் தனியே ஸ்னானம் செய்தான். விவாகமானதும் பொண்டாட்டியை அழைத்து வந்து
ஆனந்தமாக வந்துவிட்டுப் போங்கோ.
என்றபடி பெரியவர்களை உட்காரவைத்து தர்ப்பணம் செய்யச் சொன்னார்.
அதறு முன்னால் அவர்கள் உடுத்தியிருந்த வஸ்திரங்களைத் தயாராகக் காத்திருந்தவர்களைக் காண்பித்து மாற்று உடை தரித்ததும்
அவர்களிடம் பழைய உடைகளைக் கொடுக்கச் சொன்னார்.

 சபரியை உட்கார வைத்து மூதாதையரை நினைத்து  ஆசிகளை வேண்டிக்க்கொள்ளச்
சொன்னார்.
 இங்கே கடலில் தீர்த்தமாடியதால், நவபாஷணக் கடலில் இறங்க வேண்டாம். பாலத்திலிருந்தே
மலர்கள் தூவி வழிபடலாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்
என்று சொல்லிவிட்டார்.
அவருக்கு உண்டான சம்பாவனையை
நன்றியைக் கொடுத்துவிட்டு
அவர் வீட்டிலேயே  மதிய உணவை முடித்துக் கொண்டு
விடுதி வந்து சேர்ந்தனர்.
அசதி அழுத்த கடற்கரைக் காற்று தாலாட்ட
நல்ல தூக்கம் தூங்கி எழுந்து  கந்தமாதன மலைக்குச் செல்லத் தீர்மானம். தாத்தா பாட்டி வரவில்லை.
மற்ற மூவரும் மலை ஏறீ , ராமர் பாதத்தைத் தரிசனம் செய்து
சீதா ராமலக்ஷ்மணர்களை வணங்கி. மீண்டும் விடுதி வந்தனர்.

அடுத்த நாள்  மதிய எக்ஸ்ப்ரஸ்ஸைப் பிடித்து
 இரவு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தனர்.
பின்னுரை... ஆறு மாதங்களில் சபரி, மீனாட்சி திருமணம் நிச்சயமானது.
மதுரைப் பெண்தான் . சுந்தரி மாதிரியே மருதாணி,மல்லி, தாழம்பூ
புது மண்டப வளையல் என்று  விருப்பங்கள் வைத்திருந்தாள்.

 படிப்பும் குறைவில்லை. M.A AND MPHIL மீனாக்ஷி கல்லூரியில்
படித்திருந்தாள். அனைவர் சம்மதத்துடன் ஐப்பசி மாதம் ,திருப்பரங்குன்றம்
செல்வ லக்ஷ்மி திருமண மண்டபத்தில்  மகிழ்ச்சிகரமாக நடந்தது.
திருமணத்தடை எல்லாம் போக்க வித விதமான வழிபாடுகள்
சொல்கிறார்கள்.
இறைவன் மனம் வைத்தால் நொடியில் நடக்கும் மணமு ம் நல்  வாழ்க்கையும் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Add caption
வாழ்க வளமுடன்.

No comments: