Blog Archive

Monday, August 06, 2018

கயாவிலிருந்து ரிஷிகேஷ்

Vallisimhan

 கயாவில் பூர்த்தி செய்ய வேண்டிய கர்மாக்களை முடிந்ததும்
நடேசன் கொடுத்த அற்புதமான சாப்பாட்டு வகைகளை
 அங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்து திருப்தியாகச் சாப்பிட்டனர்.

 அடுத்த நாள் காலை தில்லிக்கு விமானப் பயணம்.
 அங்கிருந்து மோட்டார் காரில் தான் ரிஷிகேஷ் செல்ல வேண்டும்.
அவர்களுக்கு வண்டி யோட்டி வந்தவரையும்
சாப்பிடச் சொன்னார்கள்.
அவர்தான் சொன்னார். நீங்கள் விமானத்தில் பயணிப்பதைவிட
ரயிலில் செல்லலாம். சௌகர்யமாக இருக்கும்.
இன்று இரவு ஏறிப் படுத்துக் கொண்டால் காலை தில்லி சென்று விடலாம்.

சாதாரண டகோடா விமானம். தூக்கித் தூக்கிப் போடும்.
 என் எளிமையான கருத்து இது என்றதும், அனைவருக்கும் ஆனந்தம் தான்.
லக்ஷ்மியும் நாராயணனும் காலை ரயிலில் கிளம்புவதாக இருந்ததே வஞ்சு வாசுவுக்கு வருத்தமாக இருந்தது.
காரோட்டியை உடனே சென்று, விமான டிக்கட்டுகளை ரத்து செய்துவிட்டு இரவுக்கான
ரயில் முதல் வகுப்பில்  ரிசர்வ் செய்து வரச் சொன்னார்கள்.
அவரும் சந்தோஷமாகக் கிளம்பினார்.

நாம் இங்கே வெய்யிலில் இருப்பதற்குப் பதில் பக்கத்தில் இருக்கும்
கடைகளுக்குச் சென்று ராமர் பாதம்,இந்த ஊர்ப் படங்கள் வாங்கி வரலாம்
என்று கிளம்பினார்கள்.
காலாற நடந்து சென்று அங்கிருக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு
அவர்கள் வரவும், காரோட்டி வினாயக் திரும்பி வரவும்
சரியாக இருந்தது.
இரவு உணவுக்கு உங்களை இங்கிருக்கும்  சுஜாதா உணவு விடுதிக்கு அழைத்துப் போகச் சொன்னார்.
அங்கே உங்களுக்கு ஏற்ற காரம் இல்லாத  சப்பாத்தி,கூட்டு வகைகள் கிடைக்கும். அங்கு சாப்பிட்டுவிட்டு  நேரே  ரயில்வே ஸ்டேஷனில் விட்டு விடுகிறேன்.
10 மணிக்குக் கிளம்பும் வண்டி நாளை காலை 11 மணிக்கு
தில்லி சென்று விடும்.
 தில்லியில் கொஞ்சம் குளிர் . அம்மாவுக்கேற்ற படி ஷால் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
அதெல்லாம் நாங்கள் கவனமாக இருக்கிறோம் என்று லக்ஷ்மி சொல்லவும்.
உங்களை விட்டு விட்டு நான் கிளம்புகிறேன்.
வேகமாகச் செல்லும் லாரிகள் வரும் நேரம் என்று கிளம்பினார்
வினாயக்.
அதுவரை சும்மா இருந்த லக்ஷ்மி , அப்போ வஞ்சுவை நான் விடுவதாக
இல்லை.. இவர் என் தம்பி வரதனுக்குத் தொலைபேசியில் சொல்லியாச்சு.
வண்டியுடன்  தில்லி ஸ்டேஷனில் காத்திருப்பான்.
நாமேல்லோரும் அங்கே  போகிறோம்.
என்றார்.
ஆஆஆ. அதெல்லாம் சரியில்லை. அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது.
என்று ஆரம்பித்த வாசுவை அமர்த்தினார்  நாராயணன் . எங்கள் ராஜன் விருந்தோம்பலுக்கே
பிறந்திருக்கிறான்.
அவன் மனைவி ஜயா வோ அதற்கு மேல்.
எங்கள் மாமியார் ருக்மணி அம்மாவும் அங்கே வந்திருக்கிறார்.

குடும்பத்தோடு சௌகர்யமாக இருந்துவிட்டு நாம்
ரிஷிகேஷ் செல்கிறோம் என்று முடித்தார்.

நாம் புறப்பட்ட வேளை மிக மிக நல்ல வேளை. ஒரு நல்ல குடும்பத்துடன்
சம்பந்தம் கிடைக்கிறதே என்ற சந்தோஷத்தோடு உணவை முடித்துக் கொண்டனர்.
 அவர்கள் நிதானமாக எதிரில் இருக்கும் கயா ரயில் நிலையத்தை அடைந்து
முதல் வகுப்புக்கான இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

வாசுவும் நாராயணனும் ஸ்டெஷன் மாஸ்டரிடம், ரயிலில் காலை உணவு கிடைக்குமா என்று
விசாரித்து வந்தனர்.
ரொட்டியும், தயிரும், வெண்ணேயும் கிடைக்குமாம்.
கவலை இல்லை என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் வாசு.
ரயிலும் வந்தது.
போர்ட்டரின் உதவியுடன் பார்த்து ஏறிக்கொண்டனர்.
தில்லியை நோக்கிப் பயணம் கிளம்பியது. வாழ்க வளமுடன்.
Add caption

No comments: