Blog Archive

Monday, May 19, 2008

ஆரம்பம் நேற்றே ஆனது

Posted by Picasaஇப்படியெல்லாம் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது இங்கே.
துபாய் விமான நிலையத்திலிருந்து வீடு வரும் வழியில் ஒரே ஒரு மரத்தில் ஆரஞ்சு நிறப்பூக்கள் பூத்திருப்பதைப் பார்த்தேன்.
சென்னை வெய்யிலுக்கு இங்கே சூடு தேவலை என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்னும் ''ப்ரோப்பர் சம்மர்'' ஆரம்பிக்கவில்லை என்று சொன்னார்கள்.
வந்ததும் கீழெ உள்ள மருந்துக்கடையில் இருமலுக்கு மருந்து வாங்கப் போனேன்.
''அம்மை அதுக்குள்ள திரும்பியோ'' என்று என்னை வினோதமாகப் பார்த்தார் கடையிலிருப்பவர்.
அதாகப்பட்டது ஆதௌ கீர்த்தனாரம்பத்திலேனு சொல்லத் தெம்பில்லாத ஒரே காரணத்தினால் பரிதாப லுக் ஒன்றைத் தந்து விட்டுத் திரும்பினேன்.
சென்னையில் பலருக்கு நான் கிளம்புவது கூடத் தெரியாது. எல்லோருக்கும் மயில் அனுப்பணும்.
பால்காரர் கூட அம்மா நாளைக்கு இங்கயா வெளியூரானு கேக்கிற நிலைமையாகி விட்டது.
பத்திரிகை போடுபவரோ ஊர் விலாசம் கொடுங்கம்மா அங்க அனுப்பறேன்னு நக்கலாகச் சிரிக்கிறார்.
ரெண்டு வீடு தள்ளியிருக்கிற சினேகிதி கூட, கல்யாணத்துக்கு உன்னைக் கூப்பிடணும்னு நினைச்சேன்,நீ ஊர்ல இருப்பியோ, பறப்பியோனு விட்டு விட்டேன் என்கிறாள்.!!!!!
என்ன செய்யறதுப்பா.
இப்படி ஒரு திரிசங்கு நிலைமை:))
ஆனா ஒண்ணு எங்க போனாலும் இணையம் நம்மைக் கைவிடாது. அவிங்க நம்மளை எப்பவும் போலக் கண்டுப்பாங்க. ஹ்ம்ம்.அதுதான் நமக்கு ஆறுதல்.
பார்க்கலாம்பா.

26 comments:

வடுவூர் குமார் said...

இன்னும் எத்தனை நாள் துபாயில்??

வல்லிசிம்ஹன் said...

60 நாட்கள் விசா. வரணும் குமார். உங்கள் சென்னை விசிட் கொஞ்ச நாட்கள் தானா?

கோபிநாத் said...

ஆகா..வந்தச்சா..சூப்பர்

சீக்கிரம் சந்திப்போம் ;)

ambi said...

ம்ம், இணையத்தில் என்னிக்குமே நீங்க அடுத்த வீட்டில் இருப்பவர் போல தான். :)

சென்னை வெயில் போடு போடுனு போடுது.

வல்லிசிம்ஹன் said...

ஆமா,,, வந்தாச்சு. கோபி. பார்க்கலாம்பா.

வல்லிசிம்ஹன் said...

அதென்னவோ உண்மை அம்பி.

சென்னைல இருக்கீங்களா. குடும்பம் இருக்குமிடம் வெய்யில் அடிக்கக் கூடாதே.

இன்னும் இரண்டு மாசம் போகட்டும்.
ஜாலிதான்.:)

நானானி said...

அப்பாடா!!கத்திரி வெயிலிலிருந்து
தப்பிச்சீங்க! துபாய் பத்தின் பதிவுகள் சீக்கிரம்...சீக்கிரம்...!!!

வல்லிசிம்ஹன் said...

நானானி,
இங்க ஒரு பெரிய பதிவாளர் மாநாடு நடத்தற அளவுக்குப் பதிவாளர்கள் இருக்காங்கம்மா.
எல்லோரும் தமிழில் இணையற்ற ஈடுபாடு கொண்டவர்கள்.

அவங்க பதிஞ்சதுக்கு மேல நான் ஏதாவது எழுதணும்னா ரொம்ப யோசிக்கணும். துளசி மாதிரி இடும்பி வழில போகணும்:)

துளசி கோபால் said...

போகும்போது சென்னை வெய்யிலை அங்கேயே மத்தவங்க தலையில் கட்டிட்டுக் கிளம்பிட்டீங்களாமே.......

சனங்க கொலைவெறியோடு இருக்குதாம்....

இணையம் வந்தபிறகு லோகமந்தா ஒக்கட்டே:-)))))))))

குமரன் (Kumaran) said...

எங்க ஊருக்கு எப்ப வர்றீங்க வல்லியம்மா?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி. ரொம்ப வெய்யில். ஆனாலும் நம் வேலை நமக்கு:)
அதென்னவ்வொ உண்மையிலும் உண்மை.
பிரம்மம் ஒக்கட்டே மாதிரி லோகம் ஒக்கட்டே:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமரன்.
இன்னும் ரெண்டு மாத பந்தம் இங்கே. அதுக்கப்புறம் கிளம்ப வேண்டியதுதான். அனேகமா ஆடி முதல் வாரம்:)

இலவசக்கொத்தனார் said...

துபாய் வந்தாச்சா? தனிமடலில் தொலைபேசி எண்களை அனுப்புங்க. நம்ம பெனாத்தலைப் பேசச் சொல்லறேன்.

Geetha Sambasivam said...

அட, வல்லி, கட்டாயமாய் அனைவரையும் மீண்டும் போய்ப் பார்த்துட்டு, எழுதுங்க, இங்கே வெயில் கடுமையாக இருக்கு, ஒருவழியா இதிலே இருந்து தப்பிச்சீங்களே! தமிழிலும் எழுத ஆரம்பிச்சாச்சுனு தெரியுது. வாழ்த்துகள் 300 பதிவுகளைக் கடந்ததுக்கு.

வல்லிசிம்ஹன் said...

சூப்பர் ஃபாஸ்ட்னு கேள்விப்பட்டிருக்கேன் இதென்னப்பா சூப்பர்மேன் ஃபாஸ்டா இருக்கு. :)
நான் எழுதி அனுப்பி அவரு பேசவும் பேசியாச்சு. இதுவும் உங்களுக்கு லேட் நியூஸா இருக்கும்.:)
நன்றிம்மா கொத்ஸ்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா எங்க ஊரு விட்டுப்போயாச்சா.. பயணக்காசு தராமலே கிளம்பியிருக்கீங்களே... சரி வரும்போது கவனிச்சா ஒகே தான். வந்தப்புறம் சொல்லுங்க பார்த்துப்பேசனும் போல இருக்கு....

வல்லிசிம்ஹன் said...

கீதா சொல்லிட்டு வரணும்னு நினைச்சேன்பா.
கடைசி நிமிஷம் வரை வேலை.
இங்கயும் வெளில என்னவோ புழுதிப்புயல் வரதாப் பேசிக்கிட்டாங்க.

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

கிருத்திகா, சாரிப்பா நம்பர் தெரிஞ்சிருந்தா பேசி இருப்பேன்.
அதனால் என்ன ,தை மாசத்துக்குள்ள வந்திடுவோம்:)
பேசலாமே அப்ப.

தி. ரா. ச.(T.R.C.) said...

பறந்து போயாச்சா? சிங்கமும் கூட இருக்காரோல்லியோ? போட்டோ இன்னும் நிறைய வரும்ன்னு நினைக்கிறேன். எதோ ஞாபகம் இருக்கட்டும்

அபி அப்பா said...

வாங்க வல்லிம்மா! எப்போ வந்தீங்க, எப்போ சந்திப்பு. என்கிட்டே இப்போ 999 தவிர வேற நம்பர் இல்லை. ஏன்னா என் போன் என்கிட்ட இல்லை. மாயவரத்திலே மனைவிக்கு தானமா கொடுத்துட்டு இப்போ ஒரு நம்பரும் இல்லாம தவிக்கிறேன்.அந்த போன் மெமரிலதான் எல்லாம் வச்சிருந்தேன்:-))

நாளை பேசுவோம்!

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச சார் சொல்லாமல் வந்ததுக்கு சாரி. கிளம்பற வரை பரபரப்பு. போறாததற்கு ஜுரம்.

படம் எடுக்கத்தான் போறேன். நிறையப் போடலாம்.
தங்கமணிக்கும் பொண்ணுக்கும் அன்பு சொல்லுங்கோ.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா. அதான் உங்களைப் பிடிக்க முடியலையா.

பரவாயில்லை. அப்புறம் பேசலாம் எனக்கும் இந்த இருமல் நிக்கட்டும். நீங்க நலமா. பத்திரமா இருங்க.

VSK said...

சிட்டாய்ப் பறக்கும் வல்லியம்மா!
சீக்கிரமா எங்க ஊருக்கும் வாங்கம்மா!

வல்லிசிம்ஹன் said...

சிட்டு சிட்டு
ஒண்ணு ரெண்டா வருதாம்
ஊரு ஊராப் பறந்து

70கிலோ ஒண்ணு
80 கிலோ ஒண்ணு

இத்தனாம் பெரிய சிட்டுகளைப் பார்த்ததுண்டோ ராலேயில்:)

சீனியர் சிட்டுகளை
வான்னு சொன்ன மருத்துவருக்கு
வணக்கமுங்கோ.:)

ராமலக்ஷ்மி said...

முன்னூறு பதிவு கண்டமைக்கு முதற்கண் என் வாழ்த்துக்கள்! இம் மாதம் பிறந்த முத்துச் சரத்துக்கு வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் வணக்கங்கள் பல.

பெங்களூரில் வெயில் அத்தனை கொடூரமில்லை!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. இப்போதுதான் பிறந்ததா முத்துச்சரம்?!!

உங்களை நானானி பதிவில் பார்ப்பேன். அதனால் புதிதாகத் தெரியவில்லை.
வாழ்க பாங்களூர்.
நன்றிம்மா.