அது ஒரு காதல் கதைதான். இருந்தாலும் எடுக்கப்பட்ட விதம் மனதை இனிக்க வைக்கும்.
எல்லாப்பாடல்களும் சூப்பர் ஹிட்தான்.
அதில் ஒன்றே ஒன்று ரொம்ப சீரிய அர்த்தத்தோடு எல்லாக் காலத்துக்கும் பொருத்தமா இருக்கிறது.
யூ டியூபில் போட்டுக் கேட்கும் போது இப்பவும் உற்சாகப் படுத்தும் விதத்தில் தான் ஒலிக்கிறது.
அதன் தமிழ்ப் பொருளை
முடிந்தவரையில் எனக்குப் புரிந்த வகையில் கொடுக்கிறேன்.
//மலைகள் எல்லாவற்றையும் ஏறிவிடு.
//மலைகள் எல்லாவற்றையும் ஏறிவிடு.
ஆறுகள் குறுக்கிட்டால் பாலமிடு
எந்த ஒரு பாதையோ சாலையொ உயரமோ பள்ளமோ
விடாமல் தேடு.
வானவில் வண்ணங்களில் வாழ்க்கைக் கனவை நாடு.எந்தக் கனவு உன் ஆழ்ந்த ஆசைகளையும் உயர்ந்த எண்ணங்களையும் மேன்மைப் படுத்துகிறதோஅதை விடாமல் தேடிப் பூர்த்தி செய்.//
இந்தப் பாடல் படத்தின் கதாநாயகியை ஊக்குவிப்பதாக, அவள் இருக்கும் கன்னியர்கள் மடத் தலைவி பாடுவதாகப் பின்னணியில் ஒலிக்கும்.
வாழ்வின் கஷ்ட நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல்முன்னேற ஒரு பாசிடிவ் எண்ணம் மனதில் வேண்டும் இல்லையா.
தன்னம்பிக்கை,உற்சாகம் இதுவே வாழ்க்கைக்கு வேண்டிய மந்திரங்கள்.
இதெல்லாம் எனக்கு நானே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.
கொஞ்ச நாட்கள் முன்னால் வெளிவந்த பாடல் ''வெய்யிலோடு விளையாடி'' பாட்டும்,''வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல் ''பாட்டும் இந்தப் பாடலைக் கேட்கும் போது நினைவுக்கு வரும்.
13 comments:
அருமை! வள்ளி மேடம் அருமை!
நன்றி பிரேம்ஜி.
எனக்குப் பிடித்த பாடல் உங்களுக்கும் பிடித்தது சந்தோஷம்.
நான் வல்லிம்மா மா.
மேடம் வேண்டாம்;)
இந்தப் பதிவு மொக்கைப் பதிவு. இதனால் நான் சொல்ல வருவது என்ன என்றால் பி.க செய்யவில்லை. முன்னூற்றைத் தொட வேண்டும் என்ற ஒரே ஒரு முயற்சிக்காகச் செய்யப் பட்ட மொக்கைத் தியாகம் என்று அறிவீர்களாக.:)))))))))))))))))))))))))))
முதலில் 300க்கு வாழ்த்துக்கள் வல்லிம்மா ;))
பாட்டும் அதான் தமிழ் வரிகளும் அருமை...மொக்கையிலும் எங்களுக்கு ஒரு செய்தி சொன்னிங்க பார்த்திங்களா...அதான் வல்லிம்மா ;))
நன்றி & வாழ்த்துக்கள் ;))
வரணும் கோபிநாத்,
நன்றிம்மா.
ரொம்ப சலிப்பா இருக்கும்போது கேட்டுப்பேன். கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாக இருக்கும்:)
வாழ்த்துகளுக்க் ரொம்பநன்றி.
தன்னம்பிக்கை அவசியம் தேவை, தன்னிரக்கம் தான் தேவை இல்லாத ஒன்று, வாழ்த்துகள் வல்லி, மீண்டும், வாழ்த்துகள்.
Dear Geetha,
thank you. we are here in Dubai.
will have to find a way to write thamizh.
Yes I have found out the hard way that only self confidence can make you satisfied with your self.
வாழ்த்துகள். நமக்கு 100க்கே முழி பிடுங்கிவிடும் போல இருக்கு.
நன்றி தி.ரா.ச சார். அதெல்லாம் சும்மா. நீங்க ஒரு பதிவுல சொல்லற விஷயத்தை நான் நாலு பதிவுல சொல்றதா வேணா வைத்துக்கொள்ளலாம்:))
சூப்பர், :))
இப்ப காய்ச்சல், ஜுரம் எல்லாம் தேவலையா?
இன்னிக்குத்தான் கொஞ்சம் சாப்பாடுனு உள்ள போச்சுப்பா:)
நீங்க சென்னை வந்து திரும்பி இருப்பீர்கள்:)
முன்னூறைத் தொட்டு சக்கை போடு போடும் நீங்கள் இதை மொக்கைப் பதிவு என்று அழைப்பது சரியல்ல!
தன்னம்பிக்கை எனும் தாரக மந்திரத்தை அழகாகத் தமிழ் படுத்தியிருக்கிறீர்கள்!
வரணும் ராமலக்ஷ்மி. எனக்குப் பள்ளிநாட்களில் ராமலக்ஷ்மி எனும் தோழி இருந்தாள். இப்போது என்ன செய்கிறாளோ:)
வரவுக்கு நன்றிம்மா.கருத்துக்கும் தான். உங்கள் பிரியங்கா கவிதையை இப்போதுதான் படித்தேன். அருமை.
Post a Comment