Blog Archive

Thursday, July 19, 2018

ஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST










இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன.



எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எல்லோருடைய அறிவுரைகளும் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன.



ஆனாலும் சினத்தை வென்றவர் என்று பார்க்கப் போனால் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் இருப்போம்.





மற்றவர்கள் எல்லோரும் கோபம் வரும்போது கட்டுப்படுத்துபவர்களாக இருப்பார்கள். சாப்பாட்டில் காண்பிப்பார்கள். சாப்பாடு செய்பவர்களின் கோபம் காரமாய் வந்து சேரும்.



சாப்பிடுபவர்கள் வயிற்றுக்குப் போய் அது படுத்தும்.


இன்னோரு வகை, உண்ணாவிரதம் இருந்து சாதிக்க முயலுவார்கள்.


பழைய காலமாயிருந்தால் யார் கண்டுகொள்வார்கள்?


ஒருநாள் சப்பிடலைன்னா ஒண்ணும் கெடாது என்று விட்டுவிடுவார்கள்.



அங்கேதான் இந்தவயிற்றுப்ப்ரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.


வேளைக்குப் பேணப்படாத வயிறு,புண்ணாகி வலிக்கிறது.


அது பரவாயில்லை.


மனதில் விழும் வலிக்கு ஏது மருந்து.?


நம்மைப் போய் இதுபோல பேசிவிட்டார்களே.,


நாம் நினைத்தது ஒன்றும் நடக்கவில்லயே, நேர்மையான ஆசைதானே,என்றெல்லாம் மனம் நினைக்கும்.



எங்க திருமண ஆரம்பக் கட்டங்களில் என் கோபத்துக்கு மதிப்பு அதிகம்.


இருவர் சுபாவமும் வேறு.


தன் வேலையைத்தவிர வேற எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளத்தெரியாத மனிதர்,பபவம்.


இந்த மாதிரி சினிமா ஹீரோயின்கள் கணக்கில் கோபிக்கும் எந்த ஜீவனையும் பார்த்திராத அப்பாவி.


அவர் அம்மாவோடு ஒப்பு நோக்கும் குணம் வேற.


அவங்க அம்மாவோ பொறுமையின் பூஷணம்.


மாமியார் ஆட்சியில் அவங்க சொல்றதுக்கெல்லாம் சரி சரினு சொல்லியே


கழுத்து வலி வந்தவர்.



நாம அப்படியா.


"நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான் நான் "பிடிவாதம்.


என் பெற்றோருக்கு என்னை எப்படி வழிக்குக் கொண்டுவருவது அத்துப்படி.


ஒரு சினிமாவுக்குக் கூட்டிப்போனால் கோபம் பஞ்சாய்ப் பறந்துபோகும்


என்று தெரியும்.


அடுத்தவாரம் எங்க வீட்டுப்பிள்ளை படம் டவுனுக்குப் போய்ப் பார்க்கலாம்


என்று போகிறவாக்கில் அப்பா,அம்மாவிடம் சொல்ல, அதைக் கேட்டு


மறுபடி சாதுவாகிவிடும் அசட்டுப் புத்தி.:))


இந்த நெளிவு சுளிவெல்லாம் தெரியாத எங்க வீட்டுச் சிங்கம்


புதுக்கோட்டை,தஞ்சாவூர்,நாகப்பட்டணம் என்று வாடிக்கையாளர்களைப்


போய்ப் பார்த்துவிட்டு வருவார்.(அறந்தாங்கி ரோட்டில் ,புதுக்கோட்டையில் ஒரு பெரிய வீட்டுமாடியில் எங்கள் தனிக்குடித்தனம்.

திருமேனி என்னும் பையனும் அவன் பாட்டியும் எனக்குத் துணை.

சிங்கம் வர வரையில் பாட்டி எனக்குப் பழய கதைகள் சொல்லுவாள்.)

கண்ணும் காதும் மாடிப்படிகளயே பார்த்தாற்போல இருப்பேன்.


வாசலில் ஜீப் ஒரு உறுமலோடு நிற்க வேண்டியதுதான்.

கிழவி கால்களை மடித்து உறங்கப்போய்விடுவாள்.


இங்கே கைகேயி அவதாரம் ஆரம்பமாகிவிடும்.


அப்பத்தான் சமையலறையில் வெட்டி முறிக்கிற வேலை வந்து சப்பாத்தி மாவு டொப் டொப் சத்தத்தோடு பிசைந்து


ணங்னு தவ்வாவை ஸ்டவ்வில் வைத்து (ஆறே ஆறு சப்பாத்திக்கு இந்த நாடகம்) மோட்டுவளையைப் பார்த்தபடி போஸ்.


சிங்கத்துக்குப் பூ,பழம் ,சாக்லேட் இந்த மாதிரி சமாதான டாக்டிக்ஸ்


எல்லாம் தெரியாது.


குளித்துவிட்டு தன்பாட்டுக்கு ஒரு மைக் ஹாமர் ,இல்லாட்ட சேஸ் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்துவிடுவார்.

எனக்கோ பசி ..(அப்பவும் இப்பவும் இந்தப் பசி என்ன விடுவதாக இல்லை).-)

எனக்குத்தான் அன்பே வா படம் போகாத கோபமாச்சே.

அதனாலே சப்பாத்திகளையும் எனக்குத் தெரிந்த  ஒரெ ஒரு காய்கறிப் பொரியல் உ.கிழங்கையும்

செய்து தரையில் வைத்து மூடிவிட்டு(அப்போதெல்லாம் டைனிங் டேபிள் லேது)

இரண்டு தட்டுகளையும் போட்டுவிட்டு படுக்கப் போய்விடுவேன்.

அந்தப் புத்தகத்தில் எல்லாக் கேசும் கண்டுபிடிச்சு ஹீரொ சியர்ஸ் சொல்லித் தன் பெண்சினேகிதியோடு வண்டியில் ஏறியபிறகு இந்தப் புதுக்கோட்டை

வீட்டிற்குள் இறங்குவார் சிங்கம்.

நாளைக்கு மிச்ச கோபம் பார்க்கலாம்.:-)))))))))))))))

No comments: