Blog Archive

Tuesday, July 24, 2018

காசிப்பயணம் கயாவில் தொடரும்

பிந்து மாதவன்.
Vallisimhan

அஸ்ஸி காட்  வந்து சேர்ந்ததும்,
முதலில் ஒரு ஐம்பது படிகளாவது இருக்கும் கரை தெரிந்தது.
அதில் இறங்கினால் கங்கையின் வெள்ளம்.

வஞ்சுமாவால் இறங்க முடியாது என்று புரிந்து கொண்ட
வாசு மற்ற இருவரையும் போய் வரச் சொன்னார்.
அடுத்த நாள் கயாவுக்குக் கிளம்ப வேண்டும்.
இந்த கங்கை அம்மாவை அங்கே தொட முடியாது இல்லையா
என்று யோசித்தவண்ணம் லக்ஷ்மிமாவும் நாராயணனும்
கைகளை இணைத்துக் கொண்டு படிகளில் ஜாக்கிரதையாக இறங்கினார்கள்.

மேலிருந்து இந்தக் காட்சியைக் கண்ட வண்ணம் வஞ்சு
இவர்கள் திருமணத்தின் போது  எப்படி ஒருவரை ஒருவர் நேசித்திருப்பார்களோ
என்று வாசுவிடம் பேசிய வாறு லக்ஷ்மி நாராயணா மந்திருக்குள் நுழைந்தாள்.

 கூட்டமே காணோமே  என்றபடி சுற்றுமுற்றும் பார்த்தபடி
லக்ஷ்மி நாராயணன் தம்பதியருக்குக் காத்திருந்தனர்.

ஓ பூஜை வேளை முடிந்து விட்டதோ என்றபடி அங்கு விஸ்ராந்தியாக உட்கார்ந்திருந்த பெரியவரிடம்   விசாரித்தனர். லக்ஸ்மி நராயண். யே தோ பிந்து மாதவ் ஹை
என்றார் அவர்.
நல்ல வேளையாக நடேசன், லக்ஸ்மி நாரயணன் நுழைந்தனர்
அப்போது.
இந்தக் கோவில் லக்ஷ்மி நாராயணர் கோவில் தான்.
 பிந்து மாதவன் என்று கண்ணன் பேரிலும் அழைப்பார்கள். உள்ளே நீங்கள்
தரிசிக்கப் போவது வட இந்திய முறைப்படி அமைக்கப் பட்ட விக்ரஹங்கள்.

தொட்டு வணங்கி நமஸ்கரிக்கலாம். சுற்றி வர  நிறைய ஓவியங்கள் மிக அழகாக இருக்கும்.
மணி 12 ஆகிவிட்டதால் அன்னதானத்துக்கு எல்லோரும் சென்றிருப்பார்கள்.
நீங்கள் மனம் கொண்டவரை நிம்மதியாகத் தரிசிக்கலாம்
என்றதும் உள்ளே இருந்து பட்டாச்சாரியர் ஒருவர் வரவும்
சரியாக இருந்தது.

 மத்ராசியா. வாருங்கள் என்று உள்ளே அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்தார்.
இன்று இங்கே  லட்டு பிரசாதம் என்று ஐவர் கையிலும் அளித்தார்.
 மனம் நெகிழ்ந்த தம்பதியர் அவ்ருக்கு தட்டு நிறைய தக்ஷிணை
வைத்துவிட்டுப் பிரகாரம் சுற்றி வரக் கிளம்பினார்கள்.

சற்றே களைப்பாகத் தெரிந்த வஞ்சுவைப் பார்த்து
நாம் விடுதிக்குப் போகலாம். மருந்து சாப்பிட்டு
மதிய உணவு எடுத்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று மெதுவாக
நடந்துவந்து வண்டியில் ஏறினர்.
பெரிய கோயில் தான் . என்ன பிரம்மாண்டமான கோபுரங்கள்
  என்று வியந்தபடி  விடுதி வந்து சேர்ந்தனர்.
அன்று வேறு இடம் செல்லவில்லை.
அடுத்த நாள் பயணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு  ஓய்வெடுத்துக் கொண்டனர்.
Add caption



No comments: