ஒரு பூ இரண்டு பிரான்க். |
பூக்களைப் பரித்துக்கொண்டுஉண்டியலில் பணம் போடவேண்டும் |
ஸ்ட்ரா பெர்ரீஸ் வியாபாரத்துக்கு. |
வாசமுள்ள பூ. பெயர் தெரியவில்லை |
எல்லாப்பூவுக்கும் ஒவ்வொரு விலை. |
மொட்டு |
மலர்ந்தது |
மஞ்சள் நிறம் கண்ணைப் பறிக்கிறது |
குதிரை ஏறி கடு சுற்றும் உரிமையாளர். இவர் ஒரு பெண் என்பதை அருகில் வந்து "கிரேட்சி " சொன்னதும் தான் புரிந்தது. |
அப்பாவோட வாக்கிங் போகும் செல்லங்கள். பெயர் வில்லி னில்லி:) . |
தந்தையும் மகனும் சுற்றிப் பார்க்கிறார்கள். |
மக்காச்சோள வயல் என்றார்கள். |
காமிரா கண்ணுக்கு அகப்பட்டது இவ்வளவு தொலைவுதான். |
மகன் வீட்டிலிருந்து பத்துமைல்கள் தொலைவில் பண்ணைகள் இருக்கின்றன.
எல்லாப் பயிர்களையும் பார்க்கலாம் என்ற ஆசையில் மகன் எடுத்து வந்த வாடகைக் காரில்
சென்றோம்.
ஒரு பத்துமைல்கள் வித்தியாசத்தில் இவ்வளவு பசுமையா என்று அதிசயிக்கவைக்கும் அளவிற்கு
அவ்வளவு அருமையான இயற்கை வெளி. நடைப் பயிற்சி செய்பவர்களுக்கு இதுதான் மெரீனா பீச் போல.
குதிரைகளில் ஆங்காங்கே வலம் வந்து கொண்டிருந்த உரிமையாளர்கள்.
ஸ்ட்ரா பெரிப் பழங்கள் பாத்திகளில் விளைந்து கண்ணைப் பறிக்கும் சிவப்பில் மினுமினுத்தன.
அவ்வளவு பெரிய அளவில் அந்தப் பழங்களைப் பார்த்ததில்லை.
அடுத்த நாள் பறித்தால் கொஞ்சக அளவு பணத்துக்கே
பழங்களை அள்ளிக் கொள்ளலாம் என்றார்கள்.
நாங்களும் ஆளுக்கு இரண்டு பழங்களைச் சுவைத்தப் பார்த்தோம். மம். யம்மம்
என்று சொல்லலாம் போல் இருந்தது.:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
16 comments:
வழக்கம் போல நல்ல படங்கள்! காமிரா பழகிடுத்து போல் இருக்கு!
அருமையான பகிர்வு வல்லிம்மா. பூக்கள், ஸ்ட்ராபெர்ரி, வில்லி நில்லி, லேண்ட்ஸ்கேப் படங்கள் என எல்லாமே அழகோ அழகு.
அழகின் வார்ப்புகள் உங்கள் புகைப்படங்களில்....சுத்தமான காற்று சுதந்தரமாய் உலவும் இடங்கள்...அழகோ அழகு..
மலர்ந்து கொண்டிருக்கும் அந்தப் பூ அழகாக இருக்கிறது.
வல்லி,
அந்த வாசமுள்ள பூ பேரு பியோனி - peony. எங்க வீட்ல இந்த எல்லாப் பூவும் பூக்குதே! :-)
அடுத்து பூவுக்கு ஐந்து டாலர்னு லாபம் பார்க்க வேண்டியது தான் போலிருக்கு
வரணும் தம்பி வாசுதேவன். காமரா வை
மகன் சரி செய்து கொடுத்தார். பழைய காமரா என்னைப் பழக்கிக் கொண்டது..இந்தக் காமிராவை நான் பழகிக் கொள்கிறேன்.
இங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு இல்லையா.:)
ரொம்ப நன்றி மா
அன்பு ராமலக்ஷ்மி,
ரொம்ப நன்றிமா.
நீங்க சொன்னால் சரியாதான் இருக்கும்..
உண்மைதான் மலர். வெகு நாட்களுக்கு
பிறகு
உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
ஆண்டவன் கொடுத்தவரம் இந்த ஊர். அதைப் போற்றிப் பாதுகாக்கிறார்கள்.
Thanks Sriram.
It was good. and ethereal.
அன்பு பொன்ஸ் வாங்கப்பா.
நலமா.
அதுக்கு இன்னொரு பேரும் இருக்கா. உங்க ஊருக்கு வரப் போகிறேன்.வரும்போது பார்க்கிறேன் பா.
ரொம்ப நன்றி.
ஆஹா...ஸ்ட்ராபெர்ரி..அங்கேயே பறித்து அங்கேயே சுவைத்து...ம்ம்ம்..யம்மி..யம்மி!
எல்லோரும் சொன்னாற்போல் படங்களும் அழகு, போஸ் கொடுத்த இயற்கையும் அழகு.
செர்ரிபழங்கள் பறித்து சுவைத்த அந்தநாள் ஞாபகம் வருதே!!
பச்சைப் நிறமே..பச்சை நிறமே....
அருமையான காட்சிகள் மனம் துள்ளி விளையாடுது.
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
அட! இப்பதான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன்! சண்டிகர் நாட்களில் மிஸ் பண்ணிட்டேனே....
அட?? இதுவும் பார்க்காத படிக்காத பதிவு. படங்கள் எல்லாம் அருமை.
வரணும் பா. துளசி. வரணும் கீதா. இப்போ வந்ததே சந்தோஷம் தான்.
Post a Comment