நடக்கத்தான் செய்கிறது... எங்க ஊரில் செக்கு எண்ணெய் என நாங்கள் வாங்கிக் கொண்டிருந்த கடையில் இரவில் வெளியில் இருந்து எண்ணெய் கொண்டு வந்து கலப்பதாக கேள்விப்பட்டது முதல் அங்கு வாங்குவதில்லை... மற்றொரு கடையில் அங்கயே ஆட்டிக் கொடுக்கிறார்கள்.
கொப்பரையைக் கொடுத்து தேங்காய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிக் கொள்ள வேண்டும்.. அது எல்லாருக்கும் இயலாது.. எள்ளையும் நிலக்கடலையையும் வாங்கிக் கொடுத்து அருகிலேயே இருந்து கவனித்துப் பெற்றுக் கொள்ளலாம்...
ஆனால் அதற்கெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள் வெகுவாகப் பாடுபட வேண்டும்.. இன்றைக்கு குடும்பம் என்ற அமைப்பே சிதறி விட்ட சூழ்நிலையில் என்ன செய்ய முடியும்?..
நீதி நியாயத்துக்குப் பயந்து வாணியச் செட்டியார்கள் அன்றைக்கு செக்கு ஓட்டினார்கள்..
அந்தத் தொழிலைச் சிதைத்தது யார்!?..
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவன் எவனாயினும் வம்சாவளியற்றுத் தான் போவான்..
அன்பு துரை, இனிய வாரத்துவக்கத்திறகு வாழ்த்துகள்.. இத்தனை விவரங்கள் எண்ணெய் தயாரிப்பில் இருக்கிறது என்று இப்போதுதான் தெரிய வருகிறது. மதுரையில் செக்கு ஆட்டும் இடத்துக்குப் போய் வாங்கி வந்திருக்கிறேன். மாடுகள் சுற்றி வரும் . செக்கு முதலாளி கைகளில் புண்ணாக்கு தருவார். நல்ல மணத்தோடு இருக்கும். அதை மிட்டாய் செய்து தருவார் பாட்டி. பிறகு எல்லாம் கடைகளில் வாங்கியதே. அப்போதும் மணம் குணம் எல்லாம இருக்கும். முப்பது வருடங்களாக இந்தக் கலப்படம் பற்றி பார்ககிறேன். நீங்கள் சொல்வது போல வணிக நீதி பின்பற்றப் படவில்லை என்றால். , என்ன செய்வது. எண்ணெய் அளவை உணவில் குஉறைத்துக் கொள்ள வேண்டியதுதான். நன்றி மா.
அன்பு, குமார், இதைப் பற்றி எல்லாம் நினைக்காமல் உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தோம். நீங்கள் செய்வதுதான் உத்தமம். கொப்பரை, எள் ,நிலக்கடலை என்று கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். வந்து படித்ததறகி மிக நன்றி மா்
கலப்படம் இல்லாமல் இவர்கள் எதையும் விற்பதே இல்லை! மிளகில் பப்பாளி விதைகள் இருக்கும். என்ன செய்வது, இதைதான் வாங்க வேண்டி இருக்கிறது. துரை செல்வராஜூ ஸார் சொல்வது போல இப்போது வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துச் சென்று எண்ணெய் ஆட்டுவது இப்போதெல்லாம் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது.
கலப்படம் இல்லாமல் எதுவும் செய்வதில்லை. பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் சாமான்களிலும் கலப்படம். இங்கே ஒருத்தர் செக்கு எண்ணெய் சுத்தமாகக் கொடுத்து வந்தார். கட்டுப்படி ஆகவில்லை போல! கடையை மூடிவிட்டுப் போய்விட்டார். :( என்ன சொல்ல!
பொதுவா எண்ணெய் கலப்படத்திற்கு நாம (கன்ஸ்யூமர்ஸ்)தான் காரணம்.
இப்போ கடைல போய் பார்த்தீங்கன்னா, 220 ரூபாயிலிருந்து 450 ரூபாய் வரைக்கும் நல்லெண்ணெய் கிடைக்குது. ஒருத்தர், செக்கு எண்ணெய்க்கு இன்க்ரிடியண்ட்ஸ் லாம் எழுதி, இத்தனையும் போட்டால் 250 ரூபாய்க்கு (நான் சொல்றது 3-4 வருடங்கள் முன்பு) விற்றால் எங்களுக்கு 10 ரூபாய் மட்டும் லாபம் கிடைக்கும் (புண்ணாக்கை நாங்கள் விற்றுவிடுவதால்). ஆனா மார்க்கெட்ல 180 ரூபாய்க்கும் நல்லெண்ணெய் கிடைக்குது என்றால் எப்படி அது கிடைக்கும்னு நீங்க யோசிக்கணும் என்றார். அப்போ போட்டிக்கு விற்பனை விலையைக் குறைக்கணும் என்றால் வேற பாரஃபின் ஆயில் போன்றவற்றைக் கலக்காமல் நடக்காது என்றார்.
இதில் குளிர் ப்ரெஸ், ஹாட் ப்ரெஸ் என்ற ஃப்ராடுகளும் இருக்கின்றன.
இது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன். பஹ்ரைன்ல 1.4 தினாருக்கு சூர்யகாந்தி ஆயில் பாக்கெட் கிடைக்கும். ஆனால் காய்கெறி மார்க்கெட் (மிகப் பெரியது) இருந்த கடைகளில் ஒன்றில் 750 ஃபில்ஸுக்கு (பாதி விலை) ஒரு லிட்டர் கிடைத்தது. லாபம் என்று வாங்க எண்ணியபோது கடைக்காரர் (தமிழர்..தெரிந்தவர்), இதெல்லாம் நீங்க வாங்காதீங்க. அஃபியா போன்ற பிராண்டை மட்டும் வாங்குங்க. வேணும்னா இன்க்ரெடியண்ட்ஸ் வாசித்துப் பார்த்தீங்கன்னா 50% சூர்யகாந்தி மீதி பாமாயில், சில ஆயில்ல 30% என்றெல்லாம் போட்டிருக்கும் என்றார்.
ஏமாற்றுவதற்காகவே இதயம் பிராண்ட் போலவே ஃப்ராடு பிராண்டுகள் இங்கு நிறைய உண்டு (இதயம் பிராண்ட் சூப்பர் என்று சொல்லலை). இதுல ஆர்கானிக் நல்லெண்ணெய் என்றெல்லாம் ஃப்ராடுகள் நிறைய. ரொம்ப ஆலோசித்துத்தான் எதையாவது வாங்கணும். விலை அதிகமானால் உருப்படியா இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.
இந்த பிராண்ட் எங்க செய்யறாங்கன்னு பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி.
காஞ்சீபுரம் இட்லி செய்தோம் (இட்லி தட்டுலதான்). சூப்பரோ சூப்பர். அந்தப் பதிவும் இன்றைய பதிவும் மிக உருப்படியான பதிவுகள்.
எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறோம். அதுவும் வீட்டில் தென்னைமரத் தோப்பு இருப்பதால் வீட்டிற்குத் தேவையான எண்னெய் கலப்படமில்லாமல் கிடைத்துவிடும். தேங்காய் பறித்து உரித்து சிலவற்றை சமையலுக்கும் மற்றதைக் காய வைத்து செக்கில் கொடுத்து ஆட்டி எடுத்துவந்துவிடுவோம். இதுதான் எங்களுக்கு ஆண்டாண்டுகால வழக்கம் எனவே கலப்படம் என்பது இல்லை.
அது போல மல்லித் தூள், மஞ்சள் தூள் எதுவும் கடையில் வாங்குவதில்லை எல்லாமே அரைத்து எடுத்து வருவதால். இங்கு மஞ்சள் அரைக்க தனியயக அது போல மல்லித்தூள் அரைக்க என்ரு அரிசி அரைக்க என்று எல்லாம் தனி தனியாக இருக்கிறது. வீட்டிலேயே மிள்குக் கொடி உள்ளது. முந்திரியும் அப்படியே. பிரிஞ்சி இலை வீட்டிலேயே கிடைக்கும். சேம்பு வீட்டிலேயே விதைக்கிறோம். இப்போது கூட நட்டு முடித்தோம். இப்படி எல்லாமே பெரும்பாலும் வீட்டுத் தோட்டத்திலேயே கிடைத்துவிடுவதாலும் வீட்டில் சமையல் முறைகளும் கேரளத்து முறைப்படியே என்பதால் பிரச்சனை இல்லை. வேறு எந்த உணவு முறைகளும் மாதிரிக்காகவோ மாறுதலுக்காகவோ கூட எங்கள் வீட்டில் பெண்கள் செய்யும் பழக்கமில்லை. அதனால்தான் பல உணவுப் பதிவுகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடிவதில்லை
கலப்படம் இல்லாமல் எதுவும் இல்லை வல்லிம்மா அதுதான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கு. இப்போது என்னவோ வீட்டிலேயே மாவு அரைக்கும் மெஷின், எண்னெய் எடுக்கும் மெஷின்/ஆயில் ப்ர்ஸ்ஸர் கோல்ட்-ஹாட் என்று என்று சிறியதாக வருகிறது அமேசானில் விற்கிறது வல்லிம்மா. நாம் வாங்கும் பாக்கெட்டுகளில் கோல்ட் ப்ரெஸ்ட் ஆயில் என்றுதான் போட்டிருக்கிறது.
இப்பெயரில் அமேசானில் விற்கிறார்கள் அது போல மாவு திரிக்கும் மெஷினும் இருக்கிறது. இங்கு பங்களூரில் சின்ன சின்ன மெஷின்கள் விற்கிறார்கள், யுட்யூபில் நிறைய காணொளிகள் இருக்கின்றன
எண்ணெய்க்கு இருக்கான்னு தெரியலை. இங்கு எண்னெய் எடுக்க மெஷின் பார்த்தேன் டெமோவும் பார்த்தேன். நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி விதைகள், பாதாம் போட்டு அரைத்துக் காட்டுறாங்க. விலை கொஞ்சம் கூடுதல்
இந்த கலப்படம் என்பது வியாபார நுணுக்கங்களில் ஒன்றானதாக போய் விட்டது. இதனால் பொது மக்களுக்கு எவ்வளவு கெடுதல்கள் வருகின்றன என்பதை அவர்கள் அறிந்தும் கூட அமைதி காக்கின்றனர். இவரும் அதைக்குறித்து நன்றாக விளக்குகிறார். கடுகில் கூட கலப்படம் என வந்து விட்டது. கலப்படங்கள் மனதை கலவரமாக்குகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
அன்பு கீதாமா, சென்னையில் இருக்கும் போது காதியில் எண்ணெய் வாங்கிக் கொள்வேன். எல்லாம் பழங்கதையாகி விட்டது. இவ்வளவு கலப்படம் செய்வது விஷம் கொடுப்பத்ற்கு ஒப்பாகும் இல்லையா.
அன்பு முரளிமா, மகன் துபாயில் இருக்கும் போது கே எம் ட்ரேடிங்க் கடையில் நல்ல எண்ணெய்கள் வாங்கிய நினைவு இருக்கிறது. அவனும் நல்ல ஆராய்ச்சி செய்த பிறகே வாங்குவான். நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது தமிழ் சந்தைதான் நினைவுக்கு வருகிறது. அவர்கள் சில நல்ல பொருட்களை நம்பிக்கை தரும் விதத்தில் விற்பார்கள் . இப்போது எப்படியோ தெரியாது.
வியாபாரத்தில் இவ்வளவு கலப்படம் செய்கிறார்களே. அவர்களே இதை சாப்பிட மாட்டார்கள் போலிருக்கிறது. வாத்தியார் மகன் வேறு பள்ளியில் படிப்பது போல உண்மையான பொருட்களை வாங்குவார்கள். காஞ்சீபுரம் இட்லி செய்தது அருமை. சொல்வதைச் செய்யும் மனைவி கிடைத்தது உங்கள் பாக்கியம். நல்லதே நடக்கும். நன்றி மா.
அன்பு துளசிதரன், உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து மிக மிக சந்தோஷம். நமக்கு தேவையான பொருட்கள் நம் வீட்டிலேயே கிடைத்தால்
மிக நன்மைதான். அதைப் பேணிக்காக்கவும் வேண்டும் இல்லையா. அப்படி செய்யும் போது நிலமகள் நன்மையே திருப்பித் தருவாள். அதுவும் கேரள என்றாலே வளமை ஒன்றுதான் நினைவில் வரும். இத்தகைய அருமையான செய்திகளை நீங்கள் பகிர்ந்து கொண்டதே அழகு. என்னாளும் இந்த நலன் பெருக இறைவன் அருள் புரியட்டும்.
அன்பு கீதாமா, இவ்வளவு செய்திகள் நான் கேட்டதே இல்லை. இப்படி எல்லாம் மெஷிங்கள் இருக்கின்றனவா. அதிசயம் தான். எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது உங்களுக்கு. நீங்கள் வீட்டு உபயோகத்துக்கு எண்ணெய் தயாரித்துக் கொள்வீர்களா. அமேசான் பக்கம் நான் போனதில்லை. அதெல்லாம் பெண், பையங்கள் செய்து கொள்வார்கள். க்ரெடிட் கார்ட் விஷயம் எனக்குக் கொஞ்சம் பயம். பெண்ணிடம் பணம் எடுத்துக் கொடுத்து விடுவேன். அவள் எனக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவாள்.
உங்கள் பின்னூட்டம் தந்த அதிசயத்திலிருந்து இன்னும் மீளவில்லை நான்.:) மிக மிக நன்றி மா.
அன்பு சகோதரி கமலாமா, எப்படி ஏமாற்றுகிறார்கள் பார்த்தீர்களா. ஆமாம் ரௌத்திரம் பழக நாம் மறக்கிறோம். பாதகம் என்று தெரிந்தாலும் அதற்கு மறுப்பு சொல்லாவிடில் துணை போவது போல அர்த்தம் தானே.
நீங்கள் வந்து காணொளி கண்டது மிக மகிழ்ச்சிமா. இறைவன் தான் நம்மைக் காக்க வேண்டும்.
24 comments:
உண்மைகள் பல தெரிந்தால் எதையும் சாப்பிட முடியாது என்பது உண்மை.
நன்றாக சொல்கிறார் கலப்படம், கலப்படம் இல்லாமல் செய்வது பற்றி எல்லாம் சொல்கிறார்.
நடக்கத்தான் செய்கிறது...
எங்க ஊரில் செக்கு எண்ணெய் என நாங்கள் வாங்கிக் கொண்டிருந்த கடையில் இரவில் வெளியில் இருந்து எண்ணெய் கொண்டு வந்து கலப்பதாக கேள்விப்பட்டது முதல் அங்கு வாங்குவதில்லை... மற்றொரு கடையில் அங்கயே ஆட்டிக் கொடுக்கிறார்கள்.
கொப்பரையைக் கொடுத்து தேங்காய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிக் கொள்ள வேண்டும்.. அது எல்லாருக்கும் இயலாது..
எள்ளையும் நிலக்கடலையையும் வாங்கிக் கொடுத்து அருகிலேயே இருந்து கவனித்துப் பெற்றுக் கொள்ளலாம்...
ஆனால் அதற்கெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள் வெகுவாகப் பாடுபட வேண்டும்..
இன்றைக்கு குடும்பம் என்ற அமைப்பே சிதறி விட்ட சூழ்நிலையில் என்ன செய்ய முடியும்?..
நீதி நியாயத்துக்குப் பயந்து வாணியச் செட்டியார்கள் அன்றைக்கு செக்கு ஓட்டினார்கள்..
அந்தத் தொழிலைச் சிதைத்தது யார்!?..
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவன் எவனாயினும் வம்சாவளியற்றுத் தான் போவான்..
அன்பு துரை, இனிய வாரத்துவக்கத்திறகு வாழ்த்துகள்..
இத்தனை விவரங்கள் எண்ணெய் தயாரிப்பில் இருக்கிறது என்று இப்போதுதான் தெரிய வருகிறது.
மதுரையில் செக்கு ஆட்டும் இடத்துக்குப் போய் வாங்கி வந்திருக்கிறேன். மாடுகள் சுற்றி வரும் . செக்கு முதலாளி கைகளில் புண்ணாக்கு தருவார். நல்ல மணத்தோடு இருக்கும்.
அதை மிட்டாய் செய்து தருவார் பாட்டி.
பிறகு எல்லாம் கடைகளில் வாங்கியதே. அப்போதும் மணம் குணம் எல்லாம இருக்கும்.
முப்பது வருடங்களாக இந்தக் கலப்படம் பற்றி பார்ககிறேன்.
நீங்கள் சொல்வது போல வணிக நீதி பின்பற்றப் படவில்லை என்றால். , என்ன செய்வது. எண்ணெய் அளவை உணவில் குஉறைத்துக் கொள்ள வேண்டியதுதான். நன்றி மா.
அன்பின் தனபாலன்,
உண்மைதான் ராஜா.திருடனாகப் பார்த்துத் திருந்த வேண்டும்..
எத்தனை வேண்டாத பொருட்கள் உள்ளே போயிருக்கிறதோ!
அன்பு கோமதி மா. எனக்கும் இந்த விளக்கங்கள் நல்ல செய்தியாக அமைந்தது.
அன்பு, குமார்,
இதைப் பற்றி எல்லாம் நினைக்காமல் உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தோம்.
நீங்கள் செய்வதுதான் உத்தமம். கொப்பரை, எள் ,நிலக்கடலை என்று கொடுத்து
வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். வந்து படித்ததறகி மிக நன்றி மா்
கலப்படம் இல்லாமல் இவர்கள் எதையும் விற்பதே இல்லை! மிளகில் பப்பாளி விதைகள் இருக்கும். என்ன செய்வது, இதைதான் வாங்க வேண்டி இருக்கிறது. துரை செல்வராஜூ ஸார் சொல்வது போல இப்போது வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துச் சென்று எண்ணெய் ஆட்டுவது இப்போதெல்லாம் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது.
கலப்படம் இல்லாமல் எதுவும் செய்வதில்லை. பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் சாமான்களிலும் கலப்படம். இங்கே ஒருத்தர் செக்கு எண்ணெய் சுத்தமாகக் கொடுத்து வந்தார். கட்டுப்படி ஆகவில்லை போல! கடையை மூடிவிட்டுப் போய்விட்டார். :( என்ன சொல்ல!
பொதுவா எண்ணெய் கலப்படத்திற்கு நாம (கன்ஸ்யூமர்ஸ்)தான் காரணம்.
இப்போ கடைல போய் பார்த்தீங்கன்னா, 220 ரூபாயிலிருந்து 450 ரூபாய் வரைக்கும் நல்லெண்ணெய் கிடைக்குது. ஒருத்தர், செக்கு எண்ணெய்க்கு இன்க்ரிடியண்ட்ஸ் லாம் எழுதி, இத்தனையும் போட்டால் 250 ரூபாய்க்கு (நான் சொல்றது 3-4 வருடங்கள் முன்பு) விற்றால் எங்களுக்கு 10 ரூபாய் மட்டும் லாபம் கிடைக்கும் (புண்ணாக்கை நாங்கள் விற்றுவிடுவதால்). ஆனா மார்க்கெட்ல 180 ரூபாய்க்கும் நல்லெண்ணெய் கிடைக்குது என்றால் எப்படி அது கிடைக்கும்னு நீங்க யோசிக்கணும் என்றார். அப்போ போட்டிக்கு விற்பனை விலையைக் குறைக்கணும் என்றால் வேற பாரஃபின் ஆயில் போன்றவற்றைக் கலக்காமல் நடக்காது என்றார்.
இதில் குளிர் ப்ரெஸ், ஹாட் ப்ரெஸ் என்ற ஃப்ராடுகளும் இருக்கின்றன.
இது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன். பஹ்ரைன்ல 1.4 தினாருக்கு சூர்யகாந்தி ஆயில் பாக்கெட் கிடைக்கும். ஆனால் காய்கெறி மார்க்கெட் (மிகப் பெரியது) இருந்த கடைகளில் ஒன்றில் 750 ஃபில்ஸுக்கு (பாதி விலை) ஒரு லிட்டர் கிடைத்தது. லாபம் என்று வாங்க எண்ணியபோது கடைக்காரர் (தமிழர்..தெரிந்தவர்), இதெல்லாம் நீங்க வாங்காதீங்க. அஃபியா போன்ற பிராண்டை மட்டும் வாங்குங்க. வேணும்னா இன்க்ரெடியண்ட்ஸ் வாசித்துப் பார்த்தீங்கன்னா 50% சூர்யகாந்தி மீதி பாமாயில், சில ஆயில்ல 30% என்றெல்லாம் போட்டிருக்கும் என்றார்.
ஏமாற்றுவதற்காகவே இதயம் பிராண்ட் போலவே ஃப்ராடு பிராண்டுகள் இங்கு நிறைய உண்டு (இதயம் பிராண்ட் சூப்பர் என்று சொல்லலை). இதுல ஆர்கானிக் நல்லெண்ணெய் என்றெல்லாம் ஃப்ராடுகள் நிறைய. ரொம்ப ஆலோசித்துத்தான் எதையாவது வாங்கணும். விலை அதிகமானால் உருப்படியா இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.
இந்த பிராண்ட் எங்க செய்யறாங்கன்னு பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி.
காஞ்சீபுரம் இட்லி செய்தோம் (இட்லி தட்டுலதான்). சூப்பரோ சூப்பர். அந்தப் பதிவும் இன்றைய பதிவும் மிக உருப்படியான பதிவுகள்.
எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறோம். அதுவும் வீட்டில் தென்னைமரத் தோப்பு இருப்பதால் வீட்டிற்குத் தேவையான எண்னெய் கலப்படமில்லாமல் கிடைத்துவிடும். தேங்காய் பறித்து உரித்து சிலவற்றை சமையலுக்கும் மற்றதைக் காய வைத்து செக்கில் கொடுத்து ஆட்டி எடுத்துவந்துவிடுவோம். இதுதான் எங்களுக்கு ஆண்டாண்டுகால வழக்கம் எனவே கலப்படம் என்பது இல்லை.
அது போல மல்லித் தூள், மஞ்சள் தூள் எதுவும் கடையில் வாங்குவதில்லை எல்லாமே அரைத்து எடுத்து வருவதால். இங்கு மஞ்சள் அரைக்க தனியயக அது போல மல்லித்தூள் அரைக்க என்ரு அரிசி அரைக்க என்று எல்லாம் தனி தனியாக இருக்கிறது. வீட்டிலேயே மிள்குக் கொடி உள்ளது. முந்திரியும் அப்படியே. பிரிஞ்சி இலை வீட்டிலேயே கிடைக்கும். சேம்பு வீட்டிலேயே விதைக்கிறோம். இப்போது கூட நட்டு முடித்தோம். இப்படி எல்லாமே பெரும்பாலும் வீட்டுத் தோட்டத்திலேயே கிடைத்துவிடுவதாலும் வீட்டில் சமையல் முறைகளும் கேரளத்து முறைப்படியே என்பதால் பிரச்சனை இல்லை. வேறு எந்த உணவு முறைகளும் மாதிரிக்காகவோ மாறுதலுக்காகவோ கூட எங்கள் வீட்டில் பெண்கள் செய்யும் பழக்கமில்லை. அதனால்தான் பல உணவுப் பதிவுகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடிவதில்லை
துளசிதரன்
கலப்படம் இல்லாமல் எதுவும் இல்லை வல்லிம்மா அதுதான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கு. இப்போது என்னவோ வீட்டிலேயே மாவு அரைக்கும் மெஷின், எண்னெய் எடுக்கும் மெஷின்/ஆயில் ப்ர்ஸ்ஸர் கோல்ட்-ஹாட் என்று என்று சிறியதாக வருகிறது அமேசானில் விற்கிறது வல்லிம்மா. நாம் வாங்கும் பாக்கெட்டுகளில் கோல்ட் ப்ரெஸ்ட் ஆயில் என்றுதான் போட்டிருக்கிறது.
Savaliya Industries Fully Automatic Oil Maker Machine and Cold Press Oil Machine (Brown)
இப்பெயரில் அமேசானில் விற்கிறார்கள் அது போல மாவு திரிக்கும் மெஷினும் இருக்கிறது. இங்கு பங்களூரில் சின்ன சின்ன மெஷின்கள் விற்கிறார்கள், யுட்யூபில் நிறைய காணொளிகள் இருக்கின்றன
கீதா
https://www.youtube.com/watch?v=UrH9AEf4iXE
இதுல மாவு அரைக்கும் மெஷின் வீட்டு உபயோகத்திற்கு
மீனாட்சி மீனாட்சி சானல் இவர் நிறைய இப்படி காட்டுவார்.
கீதா
prestige லயும் மாவு அரைப்பது இருக்கு வல்லிம்மா
எண்ணெய்க்கு இருக்கான்னு தெரியலை. இங்கு எண்னெய் எடுக்க மெஷின் பார்த்தேன் டெமோவும் பார்த்தேன். நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி விதைகள், பாதாம் போட்டு அரைத்துக் காட்டுறாங்க. விலை கொஞ்சம் கூடுதல்
கீதா
மிக அழகாக விளக்குகிறார் உண்மையான மனிதர்.
வணக்கம் சகோதரி
இந்த கலப்படம் என்பது வியாபார நுணுக்கங்களில் ஒன்றானதாக போய் விட்டது. இதனால் பொது மக்களுக்கு எவ்வளவு கெடுதல்கள் வருகின்றன என்பதை அவர்கள் அறிந்தும் கூட அமைதி காக்கின்றனர். இவரும் அதைக்குறித்து நன்றாக விளக்குகிறார். கடுகில் கூட கலப்படம் என வந்து விட்டது. கலப்படங்கள் மனதை கலவரமாக்குகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு ஸ்ரீராம். ஆமாம்பா.
கலப்படம் இல்லாமல் ஒன்றும் இல்லை.
மிளகும் ,மணத்தக்காளியிலும் அந்தி மந்தாரை
சேர்க்கப் படுகிறது தெரியும்.
இங்கு ஒருவிதமாக நல்ல பொருட்கள் கிடைக்கின்றன.
நாம் தாம் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அன்பு கீதாமா,
சென்னையில் இருக்கும் போது காதியில்
எண்ணெய் வாங்கிக் கொள்வேன்.
எல்லாம் பழங்கதையாகி விட்டது. இவ்வளவு
கலப்படம் செய்வது விஷம் கொடுப்பத்ற்கு
ஒப்பாகும் இல்லையா.
அன்பு முரளிமா,
மகன் துபாயில் இருக்கும் போது
கே எம் ட்ரேடிங்க் கடையில் நல்ல
எண்ணெய்கள் வாங்கிய நினைவு இருக்கிறது.
அவனும் நல்ல ஆராய்ச்சி செய்த பிறகே வாங்குவான்.
நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது தமிழ் சந்தைதான் நினைவுக்கு வருகிறது.
அவர்கள் சில நல்ல பொருட்களை
நம்பிக்கை தரும் விதத்தில் விற்பார்கள் .
இப்போது எப்படியோ தெரியாது.
வியாபாரத்தில் இவ்வளவு கலப்படம் செய்கிறார்களே.
அவர்களே இதை சாப்பிட மாட்டார்கள் போலிருக்கிறது.
வாத்தியார் மகன் வேறு பள்ளியில் படிப்பது போல
உண்மையான பொருட்களை வாங்குவார்கள்.
காஞ்சீபுரம் இட்லி செய்தது அருமை.
சொல்வதைச் செய்யும் மனைவி கிடைத்தது உங்கள் பாக்கியம்.
நல்லதே நடக்கும். நன்றி மா.
அன்பு துளசிதரன்,
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து மிக மிக சந்தோஷம்.
நமக்கு தேவையான பொருட்கள் நம் வீட்டிலேயே கிடைத்தால்
மிக நன்மைதான்.
அதைப் பேணிக்காக்கவும் வேண்டும் இல்லையா.
அப்படி செய்யும் போது
நிலமகள் நன்மையே திருப்பித் தருவாள். அதுவும் கேரள என்றாலே
வளமை ஒன்றுதான் நினைவில் வரும்.
இத்தகைய அருமையான செய்திகளை நீங்கள் பகிர்ந்து கொண்டதே
அழகு.
என்னாளும் இந்த நலன் பெருக இறைவன் அருள் புரியட்டும்.
அன்பு கீதாமா,
இவ்வளவு செய்திகள் நான் கேட்டதே இல்லை. இப்படி எல்லாம் மெஷிங்கள்
இருக்கின்றனவா.
அதிசயம் தான்.
எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது
உங்களுக்கு.
நீங்கள் வீட்டு உபயோகத்துக்கு எண்ணெய்
தயாரித்துக் கொள்வீர்களா.
அமேசான் பக்கம் நான் போனதில்லை.
அதெல்லாம் பெண், பையங்கள் செய்து கொள்வார்கள். க்ரெடிட் கார்ட் விஷயம் எனக்குக் கொஞ்சம் பயம்.
பெண்ணிடம் பணம் எடுத்துக் கொடுத்து விடுவேன்.
அவள் எனக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவாள்.
உங்கள் பின்னூட்டம் தந்த அதிசயத்திலிருந்து இன்னும் மீளவில்லை
நான்.:)
மிக மிக நன்றி மா.
அன்பு தேவகோட்டைஜி,
எனக்கும் இந்தக் காணொளி மிகவும் பிடித்தது.
நல்ல மனிதர்கள் நன்றாக இருக்க வேண்டும்.
அன்பு சகோதரி கமலாமா,
எப்படி ஏமாற்றுகிறார்கள் பார்த்தீர்களா.
ஆமாம் ரௌத்திரம் பழக நாம் மறக்கிறோம்.
பாதகம் என்று தெரிந்தாலும் அதற்கு மறுப்பு
சொல்லாவிடில் துணை போவது போல அர்த்தம் தானே.
நீங்கள் வந்து காணொளி கண்டது மிக மகிழ்ச்சிமா.
இறைவன் தான் நம்மைக் காக்க வேண்டும்.
Post a Comment