Blog Archive

Wednesday, October 05, 2011

மேல் நோக்கியும் பாயும் நீர்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அனைவருக்கும்  ஆயுத பூஜை நன்னாள் வாழ்த்துகள்.
என் இனிமைத் தோழி சாவித்திரிக்கும்  என்னைப் போலவே சர்க்கரை  
சேர்ந்த உடல் நலம்.
நவராத்திரிக்குத் தவறாமல் வந்து அழைத்துப் போவாள். 
வயதில் சிறிது மூத்தவளாக இருந்தாலும்
குறை நிறை பார்க்காத
 இனிமையான உள்ளம் கொண்டவள்.

இருதய பைபாஸ் செய்த பிறகு தினம் தோறும் இரண்டு மைல்
களாவது நடப்பது என்ற  கொள்கையோடு,  
கபாலியையும் கற்பகத்தையும்  போய்ப் பார்த்துவிட்டுத்தான் வருவாள்.
ஊரிலிருந்து திரும்பியதும்   சாலையில் சந்தித்தபோது படு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த சிநேகிதி நவராத்திரிக்கு வராமல் எங்கே 
போனாள் என்று ஒரே வியப்பு .வீட்டிற்குத் தொலை பேசினால்
மருமகள்தான் எடுக்கிறார்.

''அம்மா உடல் நலம் சரியில்லாமல் இசபெல்லாவில் இருக்கிறார். ஏதோ ஈகோலி
அலர்ஜியாம்''
என்றதும் எனக்கு நிலை கொள்ளவில்லை.
ஏற்கனவே சர்க்கரை நோயாளி. வயிற்றுப் பாதிப்பும் சேர்ந்தால்
ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவும் கூடுமே என்ற கவலை சூழ்ந்து கொண்டது. 35  வருடப் பழக்கம்
என்னைச்  சும்மா இருக்க விடவில்லை.

போய்ப் பார்க்கலாமா என்றால் அனுமதி  இல்லை.
வாயில் கேட்டருகே நின்று சாவித்திரியின் கண்வருடன் விசாரித்துக் கொண்டிருந்தபோது ,
 மருமகள் வசு  கையில் கூடையோடு  எங்களைத் தாண்டிப் போனாள். தன் மாமனாரைப் பார்த்து
'' அப்பா நீங்கள் வீட்டில் இருந்க்கள் .இன்று முழுவதும்   அம்மா என் பொறுப்பு'' என்று
விரைந்துவிட்டாள்.

வேலைக்குப் போகும் மருமகள், வீட்டில் இரண்டு குழந்தைகள்,கணவன் எல்லாரையும் கவனித்துவிட்டு
மாமியாரையும்
கவனிக்கப் போகும் வசுவின்  அன்பு நெகிழ வைத்தது.
சாவித்திரியின் கணவரிடம்   அவரது  மருமகளை  மெச்சிக் கொண்டேன்.

அவள் எப்பொழுதுமே இப்படித்தான் மா. வேலைக்கோ பொறுப்புக்கோ அஞ்ச மாட்டாள்.
நல்ல பெண் எங்களுக்கு மருமகளாக வாய்த்தது
எங்கள் பாக்கியம்  என்றவரை மேலும் நிறுத்தி வைக்காமல்
வீட்டிற்கு அனுப்பினேன்.
இதோ இன்று ,
என் தோழி  வீடு வந்து விடுவாள்.
விழா சிறக்கும்.
 .


14 comments:

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு பகிர்வு வல்லிம்மா..

உங்க கொலுவை கொஞ்சூண்டுதான் பார்த்தேன் ;-). யானையின் மேல் சவாரி செய்யற கூர்மாவதாரம் ஜூப்பர் ஐடியா.. இதுதான் 'கால்' டாக்சியோ :-)))) நாலுகால் பாய்ச்சல்ல சீக்கிரமா கொண்டு சேர்த்துடுமே.

ஸ்ரீராம். said...

உங்கள் தோழி நலம் பெற வாழ்த்துகள். ஆயுதபூஜை/சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், ஆமையைக் கண்டு பிடித்த ஆற்றலை என்ன சொல்றது.!!

உடல் நலம் சிறிதே பாதிக்கப்பட்டதால் கொலுவின் கவனம் சிறிது கலைந்து இருந்தது.
அதையும் பார்த்துப் பாராட்டுவதற்கு பெரிய மனம் வேண்டும். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், நவராத்திரி நல் வாழ்த்துகள் மா.
தோழியைப் பார்த்தேன். நலமாக ஆனால் சிறிதே நோயிடம்
அகப்பட்ட கவலையொடு இருந்தாள். அவள் உற்சாகம் குறையவில்லை.
மிகவும் நன்றி மா.

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்.

சரஸ்வதி மஞ்சள் மாலை சூடி அழகாக காட்சி தருகின்றாள்.

Kavinaya said...

தோழி அவர்களுக்கு உடல் நலம் சீராக பிரார்த்திக்கிறேன் அம்மா.

ஹுஸைனம்மா said...

பண்டிகை வாழ்த்துகள்.

மருமகளை மனமார வாழ்த்தும் மாமனார்-மாமியார்: இருதரப்பில் யார் அதிக அதிர்ஷ்டசாலி? :-)))

கூர்மாவதாரம் - ஆமை: அறிந்துகொண்டேன். :-))))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மாதேவி.
சரஸ்வதி அம்மா நிற்கும் இடத்துக்கு மேலே ஸ்கைலைட் இருக்கிறது. அந்த ஒளியில் அவர்கள் அழகாகவே
இருந்தார்கள்.
மிகவும் நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா, அந்த ஆமை ரொம்ப நாட்களா மகள் கப்போர்டில் ஒளிந்திருந்தது.

சிங்கத்தின் கால்களைப் பிடித்துக் கொண்டு மலைதாண்டிய ஆமை நினைவுக்கு வந்தது:)
யானை மேல வைத்துவிட்டேன்:)

நானானி said...

வல்லி,
ஆயுதபூஜை வாழ்த்துக்கள்!!
உங்கள் சிநேகிதி சாவித்திரி நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

கோமதி அரசு said...

அக்கா உங்கள் தோழி நலமா?
அவர்கள் பூரண நலம் பெற்று வர வாழ்த்துக்கள். அவர்கள் மருமகளுக்கும் வாழ்த்துக்கள்.

கொலு பார்த்தேன்.

குங்குமம், சுண்டல் எடுத்துக் கொண்டேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நானானி.தோழி நல்லபடியா
நலம் பெற்று வருகிறார்.மஹா பொறுமைசாலி.
சிரித்த முகம்.நன்றாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி.சாவித்திரியின் குணம் ரொம்ப பாசிடிவ். எல்லாவற்றையும் வெல்லும் போராடும் குணம் உண்டு,. ஈர்க்குச்சி உடம்பில் இத்தனை தைரியம் எப்படின்னு நான் பரிகாசம் செய்வேன்.
உங்கள் அனைவருடைய பிரார்த்தனைகளையும் கடவுள் ஏற்றுக் கொண்டார் என்றே நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கவிநயா.

தோழி மிக நலம். நடைக்குப் போகத் தடை.அதனால் தொலைபேசியில் உரையாடல்.:)