இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்யும் போது
நம்மைச் சுற்றி இருக்கும் அத்தனை உயிர்களும்
அனுபவித்து
நன்மையை அடைகின்றன.
நம் கடமை அனைத்து உலகமும் நோயிலிருந்து விடுதலை
பெற வேண்டுவதே.
இந்த பிரார்த்தனைகளை அண்மையில்
அருகில் இருக்கும் ஒரு அம்மாவுக்காகச் செய்து வந்தோம்.
அவரும் நல்ல நலம் பெற்றார்.
இன்னும் எத்தனையோ உயிர்கள் விடுபட வேண்டி இருக்கிறது.
தினமும் நம் பிரார்த்தனைகளில்
அத்தனை நபர்களையும் இணைக்கலாம்.
நல்ல எண்ணமும், பிரார்த்தனைகளும்
நோயகன்ற உலகை உருவாக்கும்.
அவரவரின் குல தெய்வங்களை மனதில் நிறுத்தி
வேண்டிக் கொண்டால் எல்லா நன்மைகளும்
துளிர்த்து பிரம்மாண்ட விருக்ஷமாகி
நம் எல்லோரையும் காக்கும்.
வாழி நலன்.
6 comments:
//தினமும் நம் பிரார்த்தனைகளில்
அத்தனை நபர்களையும் இணைக்கலாம்.
நல்ல எண்ணமும், பிரார்த்தனைகளும்
நோயகன்ற உலகை உருவாக்கும்.//
மிக அருமையான சிந்தனை வல்லி சிம்ஹன்! அடுத்தவருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம் மனதை விசாலமாக்குகிறது! நம் மன அழுக்குகளை நீக்கி தூய்மைப்படுத்துகிறது. நல்ல சிந்தனைகளினால் நோயற்ற உலகம் மட்டுமல்ல, அழகான உலகமும் உண்டாகும். நம் சந்ததியினருக்கு அப்படிப்பட்ட உலகத்தைத்தான் நாம் தர வேண்டும்!
ந்ல்ல பதிவை வெளியிட்டதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
வேண்டுகிறேன்...
அன்பு மனோ,
மிக நன்றி.
இந்த நுண்கிருமி வந்த வேளை,
நல்லது ஏதாவது செய்திருக்கிறது என்றால் இந்த ஒற்றுமை தான்.
நீங்கள் சொன்ன பாசிடிவ் உலகம் நாம் படைக்கலாம்.
எல்லோரும் நன்றாக இருக்கட்டும்.
யாராவது அவதிப் படுவதைப் பார்க்கும் போது
தோன்றியதை எழுதினேன் மா.
அவர்களுக்குக் குணமாகி விட்டது.
எல்லோரும் நலம் அடைய வேண்டும்
அன்பு தனபாலன்.
அனைவரும் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகளும்.
அன்பு வெங்கட்,
இனிய காலை வணக்கம்மா.
நல்ல பிரார்த்தனைகள் என்றும் வெற்றி பெறும்.
Post a Comment