Saturday, June 30, 2018

1397, காசிப் பயணம் 2 ஆவது படி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 இரவில் நல்ல உறங்க ஆரம்பித்த வஞ்சும்மாவுக்கு
ரயிலின் சத்தம் ஒத்துக் கொள்ளவில்லை. இத்தனை வேகம் அவசியமா.
என்றபடி எழுந்து, பக்கத்து கூஜாவில் வைத்திருந்த தண்ணீரை, நிதானமாக எடுத்துக் குடித்தார்,
 எதிர்த்த இருக்கையைப் பார்த்தார், லக்ஷ்மி ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார்.
என்னம்மா தூக்கம் வரலியா என்ற ஆதரவான குரல் கேட்டுமேலே பார்த்தார்.
கணவரின் புன்னகை முகம் கண்ணில் பட்டதும் சிரிப்பு வந்தது.
ஏன் நீங்க தூங்கலை.
ஏதோ நினைவுகள்னு பாடலாமா என்று தோன்றுகிறது.
க்கும் தோன்றும் தோன்றும்.
என்று அவர் முடிப்பதற்குள் ஸ்ரீனிவாசன் கீழே வந்தாச்சு.
 உடம்பு சரியா இருக்காம்மா.
உடம்பு மனசு எல்லாம் சரி செய்து தானே அனுப்பினார் டாக்டர் செரியன்.
அவர் அனுமதிப்படிதானே. பயணம் ஆரம்பித்தோம்.
வீணக் கவலைப் படாமல் தூங்குங்கோ.
லக்ஷ்மி பார்த்தால் சிரிக்கப் போகிறாள்.

ரயில் தெலிங்கானா ஸ்டேஷனில் நின்றது.
ஒரு நிமிஷம் இரு. நல்ல சூடான பால் வாங்கித்தருகிறேன்.
சாப்பிட்டுத் தூங்கு என்றபடி இறங்கிய கணவரை
கண்ணெடுக்காமல் பார்த்தார் வஞ்சு,.
 அவளது அதிர்ஷ்டம் அந்தப் பால் வண்டி பக்கத்திலியே இருந்தது. ஃப்ளாஸ்கில் சர்க்கரை போட்ட பாலை வாங்கிக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தார் ஸ்ரீனிவாசன்.
தன்னையே பார்க்கும் வஞ்சுவைப் பார்த்து
என்னம்மா உன் நினைவு எங்க இருக்கு
என்றபடி பாலை ஆற்றி அவள் கையில் கொடுத்தார்.
அவருக்கு சளைக்காமல் வஞ்சுமாவும்,அவரிடம் இன்னோரு டம்ப்ளரை நீட்டினாள்.
ம்ம் சொல்லு, நம் முதல் பயணத்தைதானே நினைத்துக் கொண்டிருந்தாய்
என்று குறும்பாகக் கேட்டார்.
58 வயது வஞ்சுமாக்கு இன்னும் சிவந்தது கன்னம்.
30 வருஷமா எவ்வள்வோ பயணம். எனக்கு மறதி.
எத்தனையொ
மறந்துவிட்டது என்று சிரித்தாள்.
நான் மறக்க மாட்டேன் என்ற ஸ்ரீனிவாசன் என்கிற வாசு.
கல்யாணம் முடிந்து திருப்பதி போய் வந்த கையோடு நாம்
ஷங்கர் நகர் போனோம் இல்லையா.
ம்ம் என்றார்.
நீயும் புடவை கசங்காமல், மல்லி வாடாமல், காசுமாலை உறுத்தால் அப்படியே
ஜன்னலோரம் உட்கார்ந்து விட்டாய்.
தூக்கம் கண்களைச் சுற்ற அப்படியே சரிந்து விட்டாய்.
அந்த முதல் வகுப்பில் யாரும் இல்லை.
உன்னை அப்படியே எடுத்து என் மடியில் சார்த்திக் கொண்டேன்.
நானும் தூங்கிவிட்டேன். திண்டுக்கல் வந்த போதுதான்
உனக்கு விழிப்பு வந்தது..
சடக்கென்று எழுந்துவிட்டாய்.
அனியாயத்துக்கு வெட்கப் பட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்டாய்.
 இப்போது நீங்கள் படுத்துக்கொள்ளுங்கள். இன்னும் ஆறு மணி நேரமாவது போகணுமே
என்றாய். .தலயணை இல்லையே என்ற என் சிரிப்புக்கு ஈடு கொடுக்க முடியுமால் சிரித்துவிட்டாய்,
எல்லாம் இருக்கு.மேலே ஜம்க்காளத்தில் அப்பா சுற்றி வைத்திருக்கிறார்
என்று எடுத்துக் கொடுத்தே.
நானும் உன்னை எவ்வளவு ஒட்டமுடியுமோ அத்தனை ஒட்டி
தலையணைப் போட்டுக் கொண்டு உன் புடவைத்தலைப்பை
இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.

ம்ம்ம். ,மாஹா ரொமாண்டிக்கா இருக்கே. மாமிக்கு ரொம்பக் கூச்ச்மோ என்று மேலிருந்து
நாராயணன் என்கிற நாணா வின் குரல் சிரித்தது.
நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் தானா. கணக்குப்படி
ஆறாவது இருக்கணுமே என்றபடி அவரும் கீழே இறங்கினார்,

இருக்கும் இருக்கும் என்று லக்ஷ்மியும் ஒத்துப் பாடினார்.
எங்களுக்கு மூன்று முத்துகள் . எல்லாம் வேற நாட்டுக்கே போயாச்சு.

எங்க குடித்தனம் சனி அல்லது ஞாயிறு ஸ்கைப்பில் ஒன்று சேரும்
என்றார் நாணா.
இந்த ஏஸீ வண்டியில் இரவு பகலே தெரிவதில்லை. இதோ இன்னோரு ஸ்டேஷன் வருகிறது.
நாம் இருக்கைகளை பழைய நிலைக்கு வைத்துவிடலாமா என்றார்,.
 கட்டாயம் மதியம் தூங்கிக் கொள்ளலாம்.
வஞ்சு பல் தேய்த்துவிட்டு முகம் அலம்பி வா. என்ன வருகிறது என்று பார்ப்போம்.
லக்ஷ்மியும் வஞ்சுவும் எழுந்திருக்க ,அந்த காலை வேளை சுகமான காற்றில் நின்றபடி சுத்தம் செய்தபடி பேசிக்கொண்டு வந்தார்கள்.
ஆடவர்கள் இருவரும் கச்சிதமாக
அவர்கள் இருக்கைகளைச் சுத்தம் செய்து வைக்கவும் அடுத்த
ரயில் நிலையம் வரவும் சரியாக இருந்தது. மீண்டும் பார்க்கலாம்.

10 comments:

கோமதி அரசு said...

பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தது நன்றாக இருக்கிறது.

அன்பு காதல், பரிவு எல்லாம் கலந்த உரையாடல் அருமை.

ஸ்ரீராம். said...

சுகமான பயணத்தில் சுவையான பேச்சு...!

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா இரண்டு தம்பதிகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல பழக ஆரம்பிசாச்சா.... நல்லதோர் இரயில் ஸ்னேகம்.....

Geetha Sambasivam said...

யதார்த்தமான உரையாடல். அந்தக் காலகட்டத்தில் இப்படித் தான் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழகிக் கொள்வார்கள். இப்போல்லாம் எல்லோரும் மொபைலும் கையுமாக! :( அப்படியே பேசிக் கொண்டாலும் அவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாகத் தான் இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
ரயில் தோழமை வலுப்பெற்று உதவிய காலகட்டம் அது.
நன்றி மா.வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், பயணங்களில் இனிமை அந்தக் காலத்திலும் இருந்தது. இந்தக் காலத்திலும் இருக்கும் என்று நம்புவோம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு தங்கை கோமதி.
நெடு நாட்களுக்குப் பிறகு மேற்கொண்ட பயணம்.

இருவருக்கும் கிடைத்த தனிமை.பேசிகொள்ள ஏதுவாக இருந்தது.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அப்படித்தானே இருந்தது முன்பெல்லாம் கீதாமா.
இப்போது வீட்டுக்குள் பேசிக் கொள்வதே
அதிசயமாகி விடுகிறது.
சின்னவன் தான் மொபைல் எடுப்பதில்லை.
காலம் மாறிப் போச்சு.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: அருமையான அன்புடனான ஹனிமூன் ஜோடிகள் போல இருக்கிறார்களே. பயணம் இனிதாய் அமைந்திருக்கும். தொடர்கிறோம் வல்லிம்மா

கீதா: அட! அம்மா எபியில் வந்த கதையில் வந்த தாத்தா பாட்டி போலவே ஆஹா!! மடியில் தலை சாய்த்து...ஹையோ என்ன ரொம்பாண்டிக் சீன் அம்மா அந்த பழைய நினைவை இப்ப மீட்டிப் பார்ப்பது!!! செமை...படமே எடுக்கலாம் போல!!! தொடர்கிறோம் அம்மா

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி,
அது அவர்களுக்கு செகண்ட் ஹனிமூன் போலத்தான்.
நீங்கள் சொல்லி இருக்கும் யானை தண்ணீர் ஊற்று, என் கணவர் செய்தது.
ஸ்ரீராம் இதைப் பார்த்திருக்கிறார்.

அன்பு கீதா , கிட்டத்தட்ட இது நடந்த சம்பவம் என்பதால் ரொமாண்டிக்
ஆகத்தான் இருந்தது.
Intertwined between my marriage and My parents trip.
நன்றி மா. வாழ்க வளமுடன்.