Blog Archive

Saturday, June 02, 2018

வாழ்க்கை குரலின் கீதம் சுகம். சுபம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  சுந்தரத்தின் வரவு, 25 வருடங்கள் உழைத்த கம்பெனி ,பிடித்தம் போக
கையில் கணிசமாக சில லட்சங்கள் கிடைத்தன.
அந்த நிமிடத்தில் தான் கணினி படிப்பத் தொடர்ந்ததில்
தனக்கே   நன்றி சொல்லிக் கொண்டான்.
 தன் பயணம், நண்பன் வீட்டில் தங்கக் கொடுக்கப் பணம்,
என்று அளவாக எடுத்துவைத்துக் கொண்டு
மிச்சமான பணத்தை மகள்கள் பெயரில் உயர் வட்டி கொடுக்கும் வங்கியில் ஆறு வருடங்களுக்கு
 டெபாசிட் செய்தான்.
புது மெருகேறிய வளையல்கள் கைகளில் மின்ன
இன்னும் நம்பாத முகத்தோடு
கணவன் மனை புகுந்தாள்.
தந்தை தாய் போல அவர்கள் அணைப்பு வேண்டி இருந்தது.

எல்லோருமாக ,சுந்தரத்தை ஒரு வெள்ளி இரவு, மலேசியன்
விமானத்தில் ஏற்ற  மீனம்பாக்கம் வந்ததும், சந்திராவை
ஏதோ வெறுமை சூழ்ந்தது.
வெற்றியோ தோல்வியா இது.
சுந்தரம் அவள் முகத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டான்.
உன் மனம் ஆறுதல் அடைய  உனக்கு நேரம் வேண்டும்.
அதற்குத்தான் இந்தப் பயணம். முடிந்த வரை என்னை மன்னித்துவிடு.
 சென்ற காலத்தைத் திருப்ப முடியாது.
இந்த வாழ்க்கை நீ கொடுத்தது, அதனாலயே நான்
வளம் பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் வருகிறேன் என்று சொன்னவன் பெற்றோரை வணங்கினான்.
 பெண்களை அணைத்துக் கொண்டான்.
அவர்கள் அவன் காதில் ஏதோ கிசுகிசுக்க
அவன் முகத்தில்  புன்னகை விரிந்தது.
சரி என்று தலையாட்டி கை அசைத்து விடை பெற்றாஆன்.
அடுத்தடுத்த வருடங்களில் அவன் அனுப்பிய பணம் சேரச் சேர
இரண்டு வருடங்களில் இருவரும்  அமெரிக்காவில் பட்டப் படிப்பு வந்தனர்.

மாமாவின் மகன்கள் இருக்கும் பல்கழகத்துக்கு நூறு மைல்கள் தொலைவில்
இவர்கள் பல்கலைக் கழகம் அமைந்தது.
அருமை சகோதரர்களக அவர்களின் உதவி கிடைத்தது.
பெரியவள் மைதிலி  நான்கு வருடங்களிலிலும்
சிறியவள் மிதிலா ஐந்து வருடங்களிலிலும்
கணினி சம்பந்தப் பட்ட படிப்பில் க்ராஜுவேட் செய்தனர்.

சுந்தரம் நடுவிலும் ஒரு தடவை மகள்களை
வந்து பார்த்து விட்டுப் போனான்.
அப்பாவிடம் தெரிந்த மாற்றம் அவர்களை மகிழ்வித்தது.
கோடை விடுமுறையில் அவர்களும் அம்மா,தாத்தா பாட்டியைப் பார்க்க வந்தனர்.
தாத்தா முன்னைவிடத் தெம்பாக இருந்தார்.

தங்கள் தந்தை அனுப்பும் தபால்களே காரணம் என்று கண்டு கொண்ட
பேத்திகள் தாங்களும் எழுத ஆரம்பித்தனர்.
சந்திரா எப்பொழுதும் போலச் சலனம் காட்டாமல்
தன் அலுவலகத்தில் உயரிய பதவிக்காக உழைத்து
வெற்றியும் கண்டாள்.
இதற்குத்தான் தன் வாழ்வு மாறியதோ என்று வியந்தாள்.
மாமியார் மாமனார் உடன் ,நிறைய உபதேச சொற்பொழிவுக்குப்
போய் மன நிம்மதி பெற முயன்றாள்.

காலம் சென்று,மகள்கள் திரும்பியதும்,
தாத்தாவின் ஏற்பாட்டில்  மைதிலிக்கான மாப்பிள்ளை
பார்க்கும் படலம் முடிவுக்கு வந்தது.
சேகர் மாமாவின் பேரன் சென்னையிலேயே நல்ல வேலையில் இருந்தான்.
 இருவரும் சந்தித்து மனம் ஒத்துப் போனதில்
திருமணம் நிச்சயமானது.

ஒரு மாதம் முன்னதாக வந்த சுந்தரம்,
தந்தை சொன்ன வழியில் கல்யாண வேலைகளை ஏற்றுக் கொண்டான்.

கிருஷ்ணசாமி ரெட்டியார் திருமணமண்டபத்தில்
இதோ ஜூலை  யில்
 திருமணம்.
 நல்வாழ்க்கை தொடங்க இருக்கும் மைதிலிக்கும் கார்த்திக்குக்கும் நன் வாழ்த்துகள்.
பெரியவர்கள் அவரவர் மனப்படி தொடர்வார்கள். வாழ்க வளமுடன்.
என்னுடன் விடாமல் தொடர்ந்து படித்து
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

22 comments:

நெல்லைத் தமிழன் said...

அந்தக் குடும்பத்தின் நல்ல நேரம்.... பிரச்சனையான காலம் விலகி எல்லாம் சுபமாக முடிந்தது. போன காலம் போனது என்றாலும், குடும்பம் மீண்டு வந்துவிட்டதே. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எப்படிப்பட்ட சிக்கல்கள் வந்து சேர்கிறது.......

Thulasidharan V Thillaiakathu said...

நல்லகாலம் பிறந்தது அக்குடும்பத்திற்கு. பாஸிங்க் க்ளவுட்ஸ் போல இதுவும் க்டந்து போகும் என்று போய்விட்டது. குடும்பம் மீண்டது. சந்திராவிற்குக் கொஞ்சம் நேரம் எடுக்கும் அந்த வயதில் இழந்தவை இழந்தவைதானே...அந்த உளைச்சலிலிருந்து மீள நேரம் எடுக்கலாம். இப்படி எத்தனையோ பிரச்சனைகள் உள்ள குடும்பங்களும் இருக்கின்றன அம்மா.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் உங்கள் வரிகளிலேயே சொல்லிக் கொள்கிறேன் அம்மா

கீதா

வெங்கட் நாகராஜ் said...

எல்லோரும் நன்றாக இருக்கட்டும். பகிர்ந்து இருக்கும் பாடல் ரொம்பவே பிடித்து இருக்கிறது.

விடுபட்ட பகுதிகளையும் படிக்க வேண்டும்....

கரந்தை ஜெயக்குமார் said...

பிரச்சனையான காலம் விலகி எல்லாம் சுபமாக முடிந்ததில் மகிழ்ச்சி
நன்றி சகோதரியாரே

கோமதி அரசு said...

இரண்டு நாளுக்கு முன்னால்தான் சாவித்திரி நடித்த் அபடம் என்று மஞ்சள் மகிமை படம் பார்த்தேன். இந்த பாடல் மிகவும் பிடித்து போனது . அதை பகிர வேண்டும் என்று நினைத்தேன் அக்கா.
நீங்கள் பகிர்ந்து விட்டது ஆச்சரியம் மகிழ்ச்சி.

கதைக்கு பொறுத்தம். அன்பினால் பல்லாண்டு வாழட்டும் சந்திராவின் குழந்தைகள்.
சந்திரா, சுந்தரம் வாழ்க்கை மறுபடி மலரட்டும்.

கோமதி அரசு said...

கதைக்கு பாடல் பொருத்தம்.

கோமதி அரசு said...

அந்த படத்தில் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்ற உண்மையை குழந்தைகள் பாடுவது தான் ஆச்ச்சரியமாய் இருந்தது.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிஅம்மா நல்லகாலம் எல்லாம் சுமூகமாக முடிந்து அக்குடும்பம் ஒன்று சேர்ந்து நல்லதாக முடிந்தது மிக்க மகிழ்ச்சி. அவர் பெண்களும் நன்றாகவே முன்னேறி விட்டார்கள் போலத் தெரிகிறது. கஷ்டங்கள் வந்தாலும் இன்று அவை எல்லாம் பனி போல விலகி மகிழ்ச்சி உண்டாயிற்று என்பதே நல்ல விஷயம். அப்பெண்ணின் மணவாழ்க்கை நன்றாக அமையட்டும். நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா.
பொறுமையும் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு
பொதுவாகவே நம் பெண்களுக்கு உண்டு.
அது ஒன்றே இந்தக் குடும்பம் நிலைக்கக்
காரணம். எல்லா இடங்களிலும் இதே போல நடப்பதில்லை.
மாறிச் செல்லும் மனைவிகளும் கணவர்களும் உண்டு.
அவர்கள் முடிவு குழந்தைகளைப் பாதிக்காமல்
இருக்கவேண்டும். பெற்றோர் வளர்ப்பில் தான்
பிள்ளைகளின் எதிர்காலம் அமையும்.
சலிக்காமல் படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு மிகவும் நன்றி ராஜா.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,

அம்மா சரியாக அமைய வேண்டும் பெண் குழந்தைகளுக்கு.
அவளைப் பார்த்து வளரும் குழந்தைகள்
பொறுமையைக் கடைப் பிடிப்பதிலிருந்து விலகுவதில்லை.
இந்தப் பெண்களும் அப்படியே வளர்ந்துவிட்டார்கள்.
வாழ்க்கை நலம் பெற்றது.
பெரியோர்கள் துணை இன்னும் பக்க பலம்.

மனை நலம் சிறக்க மன நலமும் அவசியம்.
இனியவர்கள் வாழ்வு இசைந்து செல்ல வேண்டும். அறுபது வயதுக்குப்
பக்கம் வந்துவிட்டார்கள். அன்புடன் வாசித்துப் பின்னூட்டம் இட்டதற்கு மிக நன்றி மா.
என்றும் வாழ்க வளாமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நீங்கள் வந்து படித்ததே எனக்குப் பெருமை. இந்த வெய்யில் வேளையில் பொறுமையாக வாசிக்கவும் ஒரு பிடிப்பு வேண்டும் இல்லையா.
பழைய பாடல்களைக் கேட்பதே இன்பம் தான். மனசுக்குப் பிடித்த பொருள், இசை எல்லாமே
சேர்கிறது. லயித்துப் போகிறொம்.

மெதுவாகப் படிக்கலாம்..உடல் நலத்தில் கவனம்.வெய்யிலில் அலைய வேண்டாம்.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜயக்குமார்.
அனேகமாகப் பிரச்சினை இல்லாத குடும்பங்களே இல்லை எனலாம். எப்படி சமாளிக்கிறோம் என்பதே முக்கியம்.
இந்தக் குடும்பத்தில் எல்லாம் சரியாக அமைந்தன. இனி
வரும் நாட்கள் அனைத்துக் குடும்பங்களும்
நலமாக இருக்க வேண்டும். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி
எத்தனை அருமை இல்லை இந்தப் பாடல்.
அந்தப் பெண் குழந்தை என்னமா நடனம் ஆடுகிறது.
எந்த நடிகை ஆனதோ.
மஞ்சள் மகிமை நல்ல படம். நீளம் ஜாஸ்தி.
அதே போல எல்லா சாவித்திரி படங்களையும் பார்க்க
நினைக்கிறேன். வீட்டில் எல்லோரும் இருக்கையில் முடியாது. வெளியே போனால்

பார்த்து ரசிக்கலாம்.ஹாஹா.
பாடல் எழுதியவரின் திறமை ,குழந்தைகளின் நடிப்பு,
தெலுங்கில் எல்லோருமே மன முதிர்ச்சி பெற்றவர்களாக இருந்திருப்பார்களோ.
கண்ணாம்பா அம்மா, வரலக்ஷ்மி,ரங்கராவ்,சுந்தரிபாய் எல்லொரும் பண்பட்ட கலைஞர்கள்.
நீங்களும் ,நானும்
பழைய படங்களைப் பார்க்கலாம் சரியா. நன்றாக இருக்கணும் கோமதி.
வாழ்க வளமுடன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நேர்மறையில் அருமையான திருப்பமாக, நிறைவாக இருந்தது.

கோமதி அரசு said...

//கண்ணாம்பா அம்மா, வரலக்ஷ்மி,ரங்கராவ்,சுந்தரிபாய் எல்லொரும் பண்பட்ட கலைஞர்கள்.//

நான் நினைத்த மாதிரியே நீங்களும் நினைக்கிறீர்கள் அக்கா. நடிக்கவில்லை அப்படியே வாழ்ந்து இருப்பார்கள். மிகை இல்லா நடிப்பு.
பழைய படங்களை பார்த்து வருகிறேன் . எவ்வளவு படிப்பினை கதைகளில் படமும் சிக்கனமாய் , எளிமையாய் உடைகளில் எளிமை படபிடிப்பில் எளிமை, எல்லாம் எனக்கு பிடித்து இருக்கு. இப்போது நாடகம், சினிமா எல்லாம் அதிக ஆடம்பரம், நிறைய வீண்செலவு கொஞ்சம் கொஞ்சமாய் பாருங்கள் நான் அப்படித்தான் பார்த்து வருகிறேன்.
முழுபடமும் மூன்று மணி நேரம் தொடர்ந்து பார்க்க வேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
உண்மையே. இப்போது மூன்று மணி நேரம் படம் வருவதில்லைம்மா.
இரண்டரையாகக் குறைத்து விட்டார்கள்.

அதிலும் சிலபாடல்களை கடந்து விடுகிறேன்.
ஒரே யடியாக உட்கார முடியாது.
மதியம் கொஞ்சம். சாயந்திரம் கொஞ்சம் பார்த்துவிடுகிறேன்.
பலவித குழப்பங்களிலிருந்து விடுபட சினிமா வழி காட்டுகிறது. நன்றி மா.
வாழ்க வளமுடன். இன்று கடன் வாங்கி கல்யாணம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

பிரச்னைகள் தீர்ந்து அனைத்தும் சுபமாக முடிந்தது மகிழ்ச்சி.

காமாட்சி said...

வாழ்க்கையில் திருந்துவதும்,திரும்பவும் மாறுவதுமாக இல்லாமல் ஒருவழியாக புத்தி வந்ததே. மனைவி படித்து உத்தியோகம் பண்ணாதவளாக, ஸாதாரணப்பெண்ணாக இருந்து விட்டால் குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அடுத்தடுத்து விஷயங்கள் கோர்வையாக வந்து வீழ்ந்திருந்தது. அன்புடன்

ஸ்ரீராம். said...

சுபம். சுகம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா சுபமாகவே முடிந்தது. சந்திராவின் பெற்றோர் படித்த ராமாயணம் காப்பாற்றியது என்று சொல்வாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சி மா.

இது ஆயிரத்தில் ஒருவருக்கு நடக்கலாம். அடிப்படையில்
சுந்தரம் அப்பாவுக்குப் பயந்தவனாக இருந்தததானாலும்
இருக்கலாம்,.
கெட்ட பழக்கங்களால் வீணான குடும்பங்கள் எத்தனையோ.\
படிக்காமலும் இருந்து பணமும் இல்லாமல் பிரிந்தவர்களும் அதிகம்.
எங்கள் வீட்டில் உதவி செய்பவர்களின் கணவர்களுக்கு
குடிப்பழக்கம் இருந்து ,மனைவியை அடிப்பதே வழக்கமாக இருந்திருக்கிறது.

ரொம்பப் பரிதாபம்.
இப்போது அவளும் குடும்பமும் நன்றாக இருக்கிறார்கள்.
சர்வே ஜனா சுகினோ பவந்து.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். சுகமான சுபம்.