Blog Archive

Wednesday, December 25, 2019

மார்கழிப் பாசுரம் தூமணி மாடம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

மார்கழிப்  பாசுரம்   தூமணி மாடம் 

தூமணிமாடத்துச் சுற்றும்  விளக்கெரிய 
தூபம் கமழத்  துயிலனை  மேல் கண்வளரும் 
மாமான் மகளே  மணிக் கதவம் தாள்திறவாய் 
மாமீர்  அவளை  எழுப்பீரோ உன் மகள்தான் 
ஊமையோ  அன்றிச்  செவிடோ அனந்தலோ 
ஏமப்பெருந்துயில்  மந்திரப்  பட்டாளோ 
மாமாயன் மாதவன்  வைகுந்தன்  என்றென்று 
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



Bildergebnis für SRIVILLIPUTHUR ANDAL
நம் கோதை இப்பொழுது  அடுத்த வீட்டுக்கு வருகிறாள்.
ஆவலுடன் கூட வருகிறார்கள் தோழிகள்.

கண்ணனப் பார்க்கப்   போகிறோம்  சீக்கிரம் போகவேண்டும் என்றபடியே நாலாவது வீட்டைப் பார்த்தால் 
கதவு மூடி இருக்கிறது. இந்தப் பெண் இன்னும் எழுந்திருக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் 
திறந்திருக்கும் சாளரம்   வழியே ஆண்டாள் பார்க்கிறாள்.
அங்கே அவளை காணும்  காட்சி...அழகான மஞ்சம், சுற்றிலும் 
விளக்குகள்,

தூய ரத்தினங்கள் பதித்த சுவர்கள் விளக்கொளியைப் பிரதிபலிக்கின்றன.
 அந்த மஞ்சத்தில் எழிலாக உறங்குவது போலப் 

பாவனை செய்தபடி இருக்கும்  பெண்.
ஆச்சர்யத்துடன் விளிக்கிறாள்  ஆண்டாள்.

அவளோ அசையவில்லை. அவள் அன்னையை அடுத்தபடி அழைக்கிறாள் . அன்பு மாமீர் அவளை எழுப்புங்கள்.
அவளுக்கு காது கேட்கவில்லையா, ஊமையாகிவிட்டாளா 

பெண்ணே என்ன உறக்கம் இது உன்னை யாராவது மந்திரத்தால் வசியப்  படுத்தி விட்டார்களோ?

நாம் மாதவனை,வைகுந்தனை, மால வனைப் பாட வேண்டாமா.
பொய்யுறக்கம் களைந்து எழுந்து வந்து எங்களுடன் அவன் நாமங்களைச்  சொல் 
என்று வேண்டுகிறாள்.
நம்மையே அழைக்கிறாள்  நாமும் பாடுவோம்.







7 comments:

ஸ்ரீராம். said...

விளக்கத்தை ரசித்தேன்.

KILLERGEE Devakottai said...

காணொளி கேட்டு ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி, ஊரில்
மார்கழிப்பாடல்கள் ஒலி பெருக்கியில் வைக்கிறார்களா.
நன்றி மா.

கோமதி அரசு said...

பாடலின் விளக்கம் மிக அருமை. காணொளி கேட்டேன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விளக்கம் வல்லிம்மா...

பாசுரம் கேட்டு ரசித்தேன். நன்றிம்மா...

மாதேவி said...

விளக்கமும் காணொளியும் நன்று.