Blog Archive

Wednesday, December 25, 2019

இங்க்லீஷ் பாட்டி. 6

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.



சந்தோஷ்  தன்  இருக்கையில் காலை நீட்டி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு
வர போகும் நாட்களை நினைத்துப்  பார்த்தான்.
எந்த  வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிதானமாக யோசிக்க வேண்டிய விஷயம்.

அம்மா சொல்வதை வைத்து சீதா நல்ல கட்டுப்பாடுடன் வளர்ந்த பெண் என்பது தெளிவானது.
அம்மாவை  அந்தப் பெண்ணிடம் எந்த குணம் ஈர்த்தது.

இந்தத் தேசத்தில் வளர்ந்த தனக்கு அது ஒத்து வருமா.
முதலில் அந்தப் பெண்ணின் சம்மதம் கிடைத்ததா .
கோவில் திருவிழா இன்னும் இரண்டு நாட்களில் முடியப் 
போகும்  வேளையில் 
இந்த அவசரம்  அம்மாவுக்கு என். இந்தியா  வருவது அவனுக்குப் பிடித்ததே.

ஆனால் இந்த   எண்ணம் எத்தனை நன்மை  பயக்கும் என்பது 
சந்தேகமே.
 இன்னும் சந்தித்திராத சீதா   வின் நினைவுகளோடு உறங்கினவன், ஃ பிராங்க் பார்ட் நிலையத்தில் தான் விழித்தான்.

கடந்த சில மாதங்களாக  அவன் ஈடுபட்டிருந்த  
ப்ராஜெக்ட் அவன் சக்தியை உறிஞ்சி இருந்தது.
ஊருக்கு வருவதே தனக்கு ஒரு நல்ல   மாறுதலாக 
இருக்கும் என்றே தோன்றியது.

சென்னை சென்று, திருச்சிக்கு மாற வேண்டும்.
அங்கிருந்து  வாடகை வண்டி  ,எடுத்துக் கொண்டு 
மாகாளிபுரம் செல்ல வேண்டும்.

Bildergebnis für a village in South India

பலவருடங்களுக்கு  முன் சென்ற இடம். பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்று  நினைத்துக் கொண்டான்.
அம்மா பாவம், முப்பது வருட அமெரிக்க வாழ்க்கையில்  சிறிதும் மாறவில்லை. தோற்றம் மாறினாலும் 
இன்னும் மனதில் தானும் கணவனும் திருமணம் செய்து கொண்ட கோவில் அக்கம்பக்கத்தார் 
என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்.

இப்பொழுது இன்னொரு பெண்ணின்  வாழ்க்கையில் குறுக்கிடுவது தேவையா 
என்று அவனுக்குப் புரியவில்லை. இயற்கையில் அவன் 
தானுண்டு,தன்  வேலை உண்டு என்று இருப்பவன்.

அதுவும் திருமண முறிவுக்குப் பிறகு ,நொந்து போன மனது 
மற்ற மாற்றங்களை நாடவில்லை.
அந்த வகையில் தானும் அம்மா மாதிரி தானோ என்ற நினைப்பு முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

ஒரு நல்லதோர்  காலை ப்  பொழுதில்  மாகாளி புரத்தில் பாதம் பதித்தான்   சந்தோஷ்.

அந்தப் பசுமை,பழமையைப் பார்க்க  மனம் நிறைந்தது.














3 comments:

கோமதி அரசு said...

சந்தோஷ் சீதா ஜோடி இறைவன் அருளால் இணையுமா?
நன்றாக கதையை சொல்லி செல்கிறீர்கள்.
தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி கோமதி.
சற்றே மெதுவாகவே நகருகிறது. என் எண்ணப்படி
,இது அவசரம் இல்லாமல் நடக்க வேண்டிய வேலை.

மாதேவி said...

பசுமையைப்போல இனிக்கட்டும் வாழ்கை.