Blog Archive

Friday, December 20, 2019

Azhimazhai Kanna

வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
மார்கழியின் நான்காம் நாள்
மார்கழி நீராட்டத்துக்கான நீர் வேண்டி
கண்ணனைத் துதிக்கிறாள்.

குழந்தைகளுக்கு ஓர் விஞ்ஞான செய்தியும்
உள்ளடக்கி வருவதை எங்கள் தமிழாசிரியர் சொல்வார்.

கண்ணனை விளித்து,
அன்புக் கண்ணா ஆழியில் துயில் கொள்பவனே,
உன்னால் ஒரு நன்மை வேண்டும்.
ஆழியில் புகுந்து அந்த நீரை எடுத்து ஊழிக்கே முதல்வனான உன் மேனி போலக்
கருத்த மேகங்களை கொண்டு,
உயர்ந்து அகன்ற திடமான தோள்களைக் கொண்ட பத்மனாபா
உன் கையில் உன் வலது கரத்தில் சுழலும் சக்கிரம்
போல மின்னி, உன் சங்கம் போல முழங்கி,
உன் சார்ங்கம் எனும் வில்லிலிருந்து புறப்படும் அம்புகள்
போல மழைத்தாரைகள் எங்கள் நிலத்தில் சரசரவென்று இறங்க வேண்டும்.

அது எங்களை வாழ வைக்கும் மழையாக வந்து நீர் நிலைகளை நிரப்பினால நாங்களும் மார்கழி நீராடி மகிழ்வோம். அருள் செய்வாய் என்று பூர்த்தி
செய்கிறாள். சென்னையில் இன்று மழை பெய்திருக்க வேண்டும்.

8 comments:

KILLERGEE Devakottai said...

ஆழிமழையில் கண்ணா கேட்டு ரசித்தேன் அம்மா.

ஸ்ரீராம். said...

அருமை.  ரசித்தேன்.   சென்னையில் இதுவரை மழையில்லை அம்மா!

Geetha Sambasivam said...

வளவளவென்று இல்லாமல் சுருக்கமான எழுத்து. எனக்கும் இப்படி எழுத வரலையேனு இருக்கு! அநேகமா நீங்க, பானுமதி எல்லாம் பள்ளியில் படிக்கிறச்சே சுருக்கி எழுது நு சொல்லி இருக்கும் கேள்வியில் முழு மதிப்பெண்கள் வாங்கி இருப்பீங்கனு நினைக்கிறேன். :))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி, கருத்துக்கு மிக நன்றி மா.
நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், மார்கழியாவது அவனை மறவாமல் இருக்கவே பதிகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கீதா மா,
நானா சுருக்கவா. ஆளைவிடுங்கோ.
விஷய ஞானம் அவ்வளவு தான்.
ப்ரசி ரைட்டிங்க் ல பத்துக்கு நாலுதான் வாங்குவேன்.
ஜஸ்ட் பாஸ்.:_)

கோமதி அரசு said...

மிக அழகாய் சொன்னீர்கள்.
பாடல் கேட்டேன்.வசந்தகுமாரி அவர்களின் திருப்பாவை, திருவெம்பாவை பாடல் கேஸட் என்னிடம் இருக்கிறது.
அந்தக் காலத்தில் எல்லா கோவில்களிலும் இவர் பாடல்தான் ஒலிக்கும்.
இப்போது யார் யாரோ பாடியது வைக்கிறார்கள்.

மாதேவி said...

பாடல் பின்பு கேட்கிறேன்.