Blog Archive

Saturday, December 21, 2019

மாயனை.................மார்கழி 5

வல்லிசிம்ஹன்


மாயனை.................மார்கழி 5


மார்கழி ஐந்தாம் நாள்  மாயனைப் பாடும்  திருநாள். அதென்ன  எல்லாப் பாடல்களும் அவனைப் பற்றித்தானே  இதில்  இந்தப் பாடலுக்கு என்ன  மகிமை பெரிதாக என்றால்...இது அவதாரப் பெருமை,யமுனையின் பெருமை, தேவகியின் பெருமை,யசோதையின்  பெருமை எல்லாம்  விகசிக்கும்  பாடல் இது.

மாயங்கள் செய்பவன்,அதிசயங்களை  நிகழ்த்துபவன்  மாயன்.
மதுராவில் பிறந்தவன்.  யமுனையை மகிழ்வித்து  அதைத் தாண்டித் தன் தந்தை வசுதேவரால்   எதிர்க்கரையில் இருக்கும் நந்தகோபனிடம் ஒப்படைக்கப் பட்டவன்.
யமுனையைக் கௌரவித்தவன்.
வைகுந்தத்திலிருந்து கீழே  இறங்கி தேவகியின் கர்ப்பத்தில் புகுந்ததால் தாயைக் குடல் விளக்கம் செய்தவன்.
யசோதை  அவனைக் கயிற்றால் கட்டப் புகுந்தபோது கயிறு பற்றாமையால் சோர்ந்தபோது குழந்தை எடுத்துக் கொடுத்ததாம் இன்னோரு கயிற்றை.
அம்மா இதைவைத்து என்னைக் கட்டு என்று. அவன் தாமோதரன்.

அவனைத்,,,,,,,,  நாம் தூயநீரில்  நீராடி,  புது மலர்களைப் பறித்து அவனைத் தொழுது,மலர்களைத் தூவி, வாயினால் பாடி,மனதில் அவனையே    நினைத்து,உடல் பூமியில் அங்கமெல்லாம் பட கீழே விழுந்து வணங்கி னால்
இதுவரை   செய்த பாபங்களும் இனி செய்யப் போகும் பாபங்களும்(அறிந்தோ அறியாமலோ)  தீயினில் இட்ட தூசு  போல  மறையும் என்று உறு தி சொல்கிறாள் நம் கோதை.
இதோ   பாசுரம்.
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர்குலத்தின்ல் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடுஇ மனத்தினால் சிந்திக்கப்
போயபிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர்  எம்பாவாய்....மாயனை.......
வில்லிபுத்தூர்க் கோதை தாள்களில் சரணம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa




4 comments:

கோமதி அரசு said...

பாடலுக்கு விளக்கம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி கோமதி மா.
காயம் பட்டிருக்கிறதாகப் படித்தென். சுகமாப்பா.

Geetha Sambasivam said...

தாமதமாய்ப் பார்க்கிறேன் இந்தப் பதிவை. விளக்கம் அருமை!

மாதேவி said...

மலர்தூவி மாயனை பணிவோம்.