வல்லிசிம்ஹன்
எல்லோரும் வள மாக வாழ வேண்டும் .
பெரிய ஆழ்வார். பெரியாழ்வார் ஸ்ரீ விஷ்ணுசித்தர்
பெரியாழ்வார் பெற்றஎடுத்த பெண்பிள்ளை வாழியே.
எல்லோரும் வள மாக வாழ வேண்டும் .
பெரிய ஆழ்வார். பெரியாழ்வார் ஸ்ரீ விஷ்ணுசித்தர்
Add caption |
பெரியாழ்வார் பெற்றஎடுத்த பெண்பிள்ளை வாழியே.
பெரியாழ்வார் உத்சவம் வல்லப பாண்டியனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்த பெரியாழ்வார் யானை மேல் பவனி வரும் காட்சி.
பேர் அணிந்த வில்லிபுத்தூர் ஆனி தன்னில்
பெருந் சோதி தனில் தோன்றும் பெருமானே
முன் சீர் அணிந்த பாண்டியன் தன் நெஞ்சு தன்னில்
துயக்கற மால் பரத்துவத்தைத் திருமாச்செப்பி
வாரணமேல் மதுரை வலம் வரவே
வானில் கருடவாகனனாய்த் தோன்ற
வாழ்த்தும் ஏரணி பல்லாண்டு முதல் பாட்டு
நானூற்று எழுபத்து ஒன்று இரண்டும்
எனக்கு உதவு நீயே//
மேற்சொன்ன மேற்கோள் ஸ்ரீ வேதாந்த தேசிகர் பெரியாழ்வாரைத் துதி
செய்த பாடல்.
யானையின் மீது, பரிவட்டம் கட்டப் பெற்று பவனி வந்த விஷ்ணுசித்தர் முன் தோன்றினான் எம்பெருமான் .
இம்மைக்கு நாம் சேர்க்கும் புண்ணியம் எம்பெருமானே என்ற தத்துவத்தை அவர் விளக்கி பொற்கிழி அறுபட்டதால் கிடைத்த தனத்தை வைத்து வடபத்ரசாயிக்குக் கோயில் எழுப்பினார்.
கண்முன் தோன்றிய ஸ்ரீமன் நாராயணனைக் கண்டதும்
அவர் ஒரு அதீதப் பரவச நிலையில் பல்லாண்டு பாட தொடங்கினார்.
பெருமானே உனக்கு கண்ணேறு படாமல் இருக்க உனக்கு
பல்லாண்டு, பாடுகிறேன் என்று கைத் தாளங்களைக் கொட்டிக் கொண்டு பாட ஆரம்பித்தார். இந்தப் பொங்கி வந்த பரிவால் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தான் அவர் பெரியாழ்வார் ஆனார்.
எங்கள் ப்ளாகில்
+++++++++++++++++++++++++++
திருமதி ரமா ஸ்ரீனிவாசனின் பதிவு எனக்குத் தூண்டிய கோலாக இருந்து
எழுத வைத்தது.
பெரியாழ்வார் பெற்றேடுத்த பெண்பிள்ளை வாழியே.
ஸ்ரீ பெரியாழ்வார் ,ஆண்டாள் திருவடிகளே சரணம்.
கைத்தாளங்கள் கொட்டி நாமும் பாடுவோம் |
11 comments:
படங்களும் பகிர்வும் அருமை
பதிவு மிக அருமை.
படங்கள் நல்ல தேர்வு, காணொளியும் அருமை.
வணக்கம் சகோதரி
அருமையான பகிர்வு. துல்லியமான அனைத்துப் படங்களும் மிகவும் அழகாக உள்ளன.
ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். ஸ்ரீமன் நாராயணனை நாள்தோறும் துதி செய்வோம்.
ஓம் நமோ நாராயணாய நமஹ..
பக்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான பகிர்வு. மதுரை கூடலழகர் கோயில் செல்லும்போதெல்லாம் இந்த நிகழ்வும் காட்சிகளும் கண் முன்னே தோன்றும். உங்கள் சுருக்கமான விவரிப்பு அதை நினைவூட்டி விட்டது. அழகாக எழுதி இருக்கிறீர்கள். அருமையான சத்சங்கம்.
பாடத் தொடங்கினார் என்பது பாடாத தொடங்கினார் என்று வந்துள்ளது.
படித்தேன், ரசித்த்தேன்.
மிக நன்றி அ்அன்பு ஜெயக்குமார்.
அன்பு கோமதி இனிய காலை வணக்கம். அதிகாலையில் தெய்வங்களை வணங்குவது.
மார்கழிக்கு உண்டான சிறப்பு. அதை விட்டு விட ஆசை இல்லை.நன்றி மா.
வணக்கம் அன்பு கமலா.இன்றைய போது இனிதாகட்டும்.கண்ணனின் பெருமைகளை
நினைக்க. நினைக்க. பொழுதுகள் நன்மை பயக்கின்றன.
அன்பு கீதா மா,எத்தனை. பண்பான. சரித்திரத்தைக் கொண்டது மதுரை.! நீங்களும் வந்து படித்து கருத்து சொல்வது இன்னும் இனிமை.நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தன. திருத்தி விட்டேன்.நன்றி மா.
அன்பு ஶ்ரீராம். நன்றி மா. திருத்தி விட்டேன்.
ஆண்டாள் மிகவும் அழகு பார்துகொண்டே இருக்கலாம்.பகிர்வு அருமை.
Post a Comment