எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
மார்கழி ஆறாம் நாள்.
ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்,
மார்கழிப் புண்ய நாட்களில் புள்ளும் சிலம்பினகாண் பாசுரம்.
முதல் ஐந்து பாடல்களில் பகவத் விஷயங்களில்
எடுத்தியம்பி நாம் யசோதை மைந்தனை , பரமனை, உத்தமனை, தாமோதரனை,மாயனைப் பாடும் நல்ல நாட்கள் இவை என்று
உறுதி செய்து கொண்டு,
அடுத்து தோழிகளை அழைக்கக் கிளம்புகிறாள்.
இத்தனை நேரம் இவள் கண்ணனை விழித்ததிக் கெட்டவர்கள் தாம் அவர்கள்.
இருந்தும் குளிருக்கு இதமாகப் பாதி விழித்துப்
பாதி உறக்கத்தில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கண்ணனின் பெருமை களை உரைக்கிறாள்.
புள்ளும் சிலம்பின காண் பாசுரத்தில்
கருடாழ்வார் சிறப்பாக ப் பாடப் படுகிறார்.
பறவைகளின் காலை கிராமங்கள் ஆரம்பித்து,
கருடன் மேல் பயணித்து மக்களைக் காக்கும் கண்ணனை நினைக்க.
அங்கு ஊதப்படும் வெண் சங்கத்தின் ஒலி
உனக்கு கேட்கவில்லையா.
பூதனையின் நஞ்சு உண்டு அவளை வைகுந்தத்துக்கு
அனுப்பினானே அவன் புகழ் பாட வேண்டாமா.
தன்னை அழிக்க வந்த சகடாசுரனையும் பிஞ்சுக் கால்களால் உதைத்து மோக்ஷம் கொடுத்தானே,
இவ்வளவையும் செய்து சிறு குழந்தையாய் பிரளய வெள்ளத்தில் ஆலிலையில்
மிதந்து உலகம் காக்கும் அந்த ஹரியை,
முனிவர்கள் விழிக்கும் ஓசை உங்கள் காதில் விழுகிறதா.
எழுந்து வாருங்கள். என்னும் சொல்கிறாள் திருவான பாவை.
6 comments:
பாடல் பகிர்வை கேட்டு மகிழ்ந்தேன்.
இரண்டையும் கேட்டு ரசித்தேன்.
கோமதி மா, விரிவரை எழுதி இருந்தேன். நிமிடமாகக் காணாமல் போய் விட்டது.
எப்படிஎன்று. தெரியவில்லை. நன்றி மா.
நன்றி மா ஶ்ரீராம்.
விரிவுரையைக் காணோமேனு நினைச்சேன். :( உழைப்பு வீணானால் வருத்தமாகத் தான் இருக்கு!
ரசனை.
Post a Comment