Blog Archive

Thursday, December 26, 2019

இங்கிலிஷ் பாட்டி. 7

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.


இங்கிலிஷ் பாட்டி.  7
Bildergebnis für american asian  indian men

ஆனந்திக்கு அளவில்லாத மகிழ்ச்சி மகன் வந்ததில்.

அவன் மனம் பிடிபடாவிட்டாலும் 
அவனது வேற்று வாழ்க்கையில் ஒரு மாறுதல்  இருக்கட்டும் என்றுதான் 
வராகி சொன்னால்.
எதோ திரைப்படங்களில்  வருவது போல 
வந்தான் காதலில் விழுந்தான் ,அடுத்து திருமணம்  என்பதை அவளும் 
நம்பவில்லை. 

லக்ஷத்தில் ஒருவருக்கு இது   போல  தோன்றலாம்.

தன்  மகனின்  இலட்சிய நோக்கு அவளுக்கு த் தெரியும். இருந்தும் ஒரு தாய்க்கே  உரிய பாசத்தினால்   நன்மை விளைந்தால் நல்லதே 
என்ற எண்ணமே அவளை இவ்வாறு யோசிக்க வைத்தது.

வந்த உடனே குளித்துக் கோவிலுக்கு கிளம்ப தயாரான 
மகனைப்  பெருமையுடன் பார்த்தாள் .

இருவரும் நடந்தே  கோயிலை அணுகினர்.

கோயிலின் வாசனைகளும் ,அமைதியாகப் பணியாற்றும்  பெண்கள் 
ஆண்கள் அனைவரும் அவன் மதிப்பில் உயர்ந்தனர்.

ஆனந்தி வருவதை முதலில் கண்ட சீதா அவள் அருகில் நிற்கும் சந்தோஷைப்  பார்த்து விட்டுப் பின்  வாங்கிவிட்டாள் .
கடைக்கண்ணால் இதையும் கண்டால் ஆனந்தி.
கோவிலின் பிரகாரத்தில் அவர்களின்  குல தெய்வம் மாகாளி சந்நிதிக்கு மகனை அழைத்துச் சென்றாள் .
அங்கே பிரார்த்தனை செய்த பிறகு,அங்கு    குருக்கள்  கொடுத்த குங்குமத்தை அளவாக அவன் நெற்றியில் பொருத்தினாள் .

மகன் சிரித்தான். அமெரிக்காவில் செய்ய முடியாததை இங்கே செய்கிறாயா.
அங்கேயும் செய்வேனடா. உனக்கு கோவில் வர சந்தர்ப்பங்கள் குறைவு இல்லையா 

மெதுவே விநாயகன்,  வேலவன்  சந்நிதிகளை சுற்றி, அம்பாளின் சந்நிதிக்கு வந்தார்கள்.

அங்கு தன்  தோழிகளுக்கு  மகனை அறிமுகம் செய்து வைத்தாள் 
ஆனந்தி.

ஆராதனைகள் முடிந்த பிறகு சீதாவைத் தேடினாள் .

அவள் கோவில்   சமையலை அறையைச் சுத்தம்செய்பவர்களோடு இருப்பதை பார்த்து  என்னம்மா அம்பாளைத் தரிசனம் செய்ய வரவில்லையா என்று வினவினாள் 

கூ ட்டம் களைந்து பிறகு வரேன் மா. நிம்மதியாக   அவளுடன் பேசலாம் என்றவளை 
ஆழ்ந்து பார்த்து,என் மகனை நான் அழைத்துப் போகிறேன் நீ வா வெளியே  என்றாள்  ஆனந்தி.

அச்சோ  அப்படி எல்லாம் இல்லை மா. அவர் என்னுடன் வேலை செய்யும் மற்றவர்கள் போலத்தான். எனக்கு வித்தியாசமில்லை ,
இதோ வருகிறேன்  என்று வந்தவள்  அம்பாளைத் தரிசனம் செய்து விட்டு வெளியே 
வந்தாள்.

மகனை அறிமுகப் படுத்தி வைத்த   ஆனந்தி ,
அனைவரையும் தன்  வீட்டுக்கு மாலையில்  வருமாறு அழைத்தாள் .

பயணக்  களைப்பு   இருந்தாலும் மலர்ச்சியுடன்  
எல்லோருடனும் உரையாடினான்  சந்தோஷ்.

எதோ இறுக்கம்  கலைந்தது  அங்கே.

நாளை இந்த வேளை  பார்க்கலாம்.

Image result for தமிழ்ப் பெண்கள்.










8 comments:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன் அம்மா.    மனம் கலந்ததா என்று அறிய ஆவல்.

வல்லிசிம்ஹன் said...

இரு மனமும் விழைந்தால் திருமணம் இல்லையாமா ஶ்ரீராம்..ஆனந்திப் பாட்டியின். மனமறந்து அம்பாள் அருளட்டும்.

வல்லிசிம்ஹன் said...

மனம்அறிந்து என்று படிக்கவும்.

கோமதி அரசு said...

ஆனந்திப் பாட்டிக்கு மகனின் உள்ளம் தெரிந்து விட்டது.
அப்புறம் என்ன எல்லாம் நலமாக நிறைவு பெற வேன்டும் அம்பாளின் அருளால்.

Geetha Sambasivam said...

இனி எல்லாம் நலமே! சீதாவின் மூலம் ஆனந்தியின் மனமும் மகிழும்.

வல்லிசிம்ஹன் said...

ததாஸ்து கீதா மா. ஒரு பெண்ணின் வாழ்க்கை மலர்ந்தால் நன்மை தான்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா, நன்மை நடக்கட்டும்.

மாதேவி said...

பாட்டியின் மகிழவான அழைப்பு மலர்சியை தரட்டும்.