Blog Archive

Sunday, December 29, 2019

மார்கழி 14 ஆம் நாள்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.

14 ஆம் நாள் மார்கழியின் இனிமை.

நாச்சியார் திருவடிகளே சரணம்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து  வாவியில் 
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து  ஆம்பல்  வாய் பூத்தன காண் 
செங்கல் பொடிக்கூறை வெண்  பல்  தவத்தவர் 
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்  போதந்தார் 
எங்களை  முன்னம்  எழுப்புவான் வாய் பேசும் 
நங்காய் எழுந்திராய்  நாணாதாய்  நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் 
பங்கயக் கண்ணா னைப் பாடேலோர்  எம்பாவாய்........

ஸ்ரீ ஆண்டாள்  திருவடிகளே சரணம்.
அடுத்த பாவையை எழுப்ப  ஆண்டாளும் தோழிகளும் வருகிறார்கள்.

அவர்களுக்கு உடனே கண்ணில் தெரிவது அவளது தோட்டத்துக்குளம்தான்.
அதில் அழகாக மலர்ந்திருக்கும் செங்கழுநீர்  மலர்கள். 
தாமரை போன்ற குணம் உடையவை .

அதேபோல் ஆம்பல்  மலர்கள்  கூம்புகின்றன.
சூரிய உதயமும்  தாமரை மலர்வதும் போல 
கண்ணனை நினைக்கையில் மனம் மலர்கிறது.

காவி உடை உடுத்திய துறவிகள் , வெண்  பற்கள் பொருந்திய தூய வாயில் வெண்சங்கைப் பொருத்தி இறைவனின் 
புகழை வலியுறுத்துவார்  போல  முழக்கம் செய்வது உன் காதில் விழவில்லையா பெண்ணே ?
எங்களை முன்பே வந்து எழுப்புவதாக நேற்று உரைத்தாயே.
இதோ நாங்கள் வந்து விட்டோம் நீதான் உறங்கி கொண்டிருக்கிறாய்.

உன் உரையை நீயே மறந்தாய்,வெட்கமாக இல்லையா உனக்கு.

நாவன்மை படைத்தவளே  , சங்கும் சக்கரமும், சாரங்கமும் ஏந்தும் 
கரங்களை உடைய நம் நாராயணனைப் 
பாட எங்களுடன் கலந்து  கொள் .வா 
இதோ இந்த மலர்களைப்   போலவே மலர்ந்த
 திருமாலின்  அழகான கண்கள் 
நம்மை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
என்று  அழைக்கிறாள் ஸ்ரீ ஆண்டாள். நாமும் செல்வோம்.

கோதா தேவி! உன் பாதங்கள் சரணம்.











10 comments:

Geetha Sambasivam said...

சுருக்கமான தெளிவான விளக்கம். காணொளிக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

படித்தேன், கேட்டேன், ரசித்தேன்.   சிறப்பு.

ஸ்ரீராம். said...

செங்கல்பட்டு - நான் பிறந்த ஊர்!    அதன் பெயர்க்காரணம் இன்றுதான் அறிந்தேன்!

கோமதி அரசு said...

பாடலும், விளக்கமும் அருமை.
வைகரை செய்தி காணொளி அருமை.
செங்கல்பட்டு பெயர் காரணம் தெரிந்து கொண்டேன். செங்கழுநீர் பூவும் அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்புகீதாமா, இனிய காலைக்கான வணக்கம். நிறைய எழுத்துப் பிழைகள் வந்து விடுகின்றன.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி ஶ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

செங்கழுநீர் மலருக்காக ஆரம்பித்த தேடல் செங்கல்பட்டில் முடிந்தது மா ஶ்ரீராம் நல்ல ஊரில் அதன் பிறந்திருக்கிறீர்கள்!

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி
அன்பு கோமதி மா. ஆண்டாளுக்கான கடமையாகக் கருதி எழுதுகிறேன். மிக்ச்சுருக்கம்:)

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு... ரசித்தேன் மா.

மாதேவி said...

செங்கழுநீர் அழகிய பூ. ஊர் காரணமும் அறிந்தோம்.