வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
மார்கழி 13 ஆம் நாள் புள்ளின் வாய்க் கீண்டானை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மார்கழி 13ஆம் நாள் , திருமாலின் அவதாரங்களில் கண்ணனையும் ராகவனையுமே சேர்த்துப் போற்றுகிறாள் கோதை.
வெண்மை நிறத்தில் பெரிய கொக்காக வந்த அரக்கனை அவன் வாய்க்குள்
புகுந்து இரண்டாகக் கீறி மாய்த்து விடுகிறான் சின்னக் கண்ணன்.
ராகவனோ பத்துத் தலை ராவணனின் சிரங்களைக் கிள்ளிக்
களை கிறான்.
ராமனையும் கண்ணனையும் பாட எல்லோரும்
பாவை த்தலத்துக்கு அதாவது திருப்பாவை பாடி சேவிப்பதற்காகவே ஏற்பட்ட இடத்துக்கு வந்துவிட்டார்கள்.
அழகிய மலர்ந்த தாமரை போன்ற கண்களைக் கொண்டவளே
பறவைகள் சேர்ந்து ஒலி எழுப்பிக் களிப்பது
உன் காதுகளில் விழுகிறதா.
இதோ வானில் வெள்ளி முளைத்து விட்டது.
பிரகஸ்பதி உறங்கி சுக்கிராச்சாரியார் விழித்து எழுந்து விட்டார்
நாம் எல்லோரும் கண்ணன் பக்தர்கள்.
தனித்தனியே போவது அழகில்லை.
நதியில் குள்ளக் குளிர முங்கி குளித்து ஆனந்தித்து
எங்களுடன் வந்து அவனை அனுபவிக்க வா.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.

13 comments:
ஆண்டாள் திருவடி சரணம். படித்தேன். காணொளி பிறகுதான் கேட்கவேண்டும்.
எளிமையான விளக்கம், திகட்டவே திகட்டாத திருப்பாவைப்பாடல்கள்.
இறைபக்தி என்பதே ஆனந்தப் பெருவெள்ளம்..
அதில்
ஒரு ஓரமாக ஆகிலும் நீராடி நலம் பெறுவோம்..
மிகச் சிறப்பான, எளிதான விளக்கம். தொடர்கிறேன் மா.
மிக அருமையான பாடல். கேட்டு மகிழ்ந்தேன்.
விளக்கம் அருமை.
வணக்கம் சகோதரி
அழகான பாடல், கூடவே ஐயம் தீரும்படியான விளக்கங்கள். பதிவு மிக அருமையாய் இருக்கிறது. கண்ணனின் ஆனந்தமயமான பெருமைகளை தினமும் உரைத்தாலும் கேட்கத் திகட்டாது. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரோடு நாமும் இம்மாதம் முழுவதும் கேட்டு ரசிப்போம். காணோளி பாடலும் அருமை. கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக மிக நன்றி ஶ்ரீராம் நலமுடன்இருங்கள.
ஆமாம் கீதா, அமைதியான பின்மாலை நேரங்களில். கேட்டே வளர்ந்தவர்கள் நாம். எங்கிருந்தாலும் நம்மை
அணுகி ஆறுதல் அளிக்கும்.இனி காலை வணக்கம்.
உண்மையே. மார்கழிப் பதிவுகளில் நீராடி
நாம் உள்ளத்தூய்மை அடைவோம். நன்றி துரை.
அனபு வெங்கட் வந்து கருத்துரை பதிந்ததற்கு மிக நன்றி. நீண்ட பதிவாக எழுத முடியவில்லை.
இன்னும் நிறைய எழுத வேண்டும். கோமதி மா. முதுகு வலி வந்துவிடுகிறது. மிக மிக நன்றி மா.
அன்பு கமலாமா,
இன்னும் அழகான உரைகளைக கேட்டிருக்கிறேன் . 63 வருடங்களாகக் கேட்ட காலாட்செபங்கள் !நினைவுக்கு. வந்தது கொஞ்சமே.
அன்பு வார்ததைகளுக்கு. மிக நன்றி மா.
அழகான பாடலும் படமும்.
Post a Comment