Blog Archive

Monday, December 30, 2019

நகர் வலம் 2019 December 29.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

ஓராண்டு ஓடி விட்டது.இதோ அடுத்த நாள் புத்தாண்டு 
பொலிய 
 ஆரம்பிக்கும்.
இங்கு வீடுகளில் சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்கும் 
மக்கள்,  நகரின் மைய பகுதியை ச் சுற்றி 
 குழுமுகிறார்கள் . எந்நேரமும் சலசலப்புதான் .

அனைத்து ஐரோப்பிய மக்களும்  விடுமுறைக்கு களிப்பில் ஈடுபடுகிறார்கள்.
ட்ராமில்  ஏறினால் , சந்தோசம் கொப்பளித்துப் பரவுகிறது.
கண்ணாபின்னான்னு குளிர்.
அதிலும் வண்ணம் ஏற்றிய கூந்தல், முகம்.....
 உறை  அணியாத கால்கள் என்று இளைஞர்களும் யுவதிகளும்,

நடுவயதுக்காரர்களும் குழந்தைகளும், மகன் பேரன்,மக்கள் என்று குடும்பத்தோடு செல்லும் பாட்டிகள்.
தாத்தா பாட்டி என்று தனியாகத் தம்பதிகள்.

கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர்  பரப்பில் எங்கும் ஒளிவெள்ளம்.
அலங்கரிக்கப்பட்ட  கடைகள்.  வளைவுகள். சாண்டா க்ளாஸ். இனிய இசை வெள்ளம் .

ஊரின் மால் எனப்படும்  கடைகளில் குளிர்கால உடைகள்  சேல் !!சேல் !
என்று கூவி அழைக்கின்றன.

உள்ளே வருபவர்களைக் கண்காணிக்க காமிராக்கள்.

வருபவர்களைத் துன்புறுத்தாமல்,அதே சமயம்,கடைக்கும் பாதுகாப்பாக இயங்கும் சூட் 
அணிந்த  இளைஞர்கள்.

ஒரு தமிழ்  இளைஞனைக்  கூட பார்த்தேன்.
திடீரென ஒரு வயதானவரின் சத்தம்.

நான் ரிட்டையரான மிலிட்டரி ஆளு.
என்னைத்தனியாகக் கவனிக்க வேண்டும் . என்றவாறு முன்னேறிக் 
கொண்டிருந்தார்.
யாரும் கண்டு கொள்ளவில்லை.
அவரைத் துன்புறுத்தவும் இல்லை.
அதுதான் இந்த ஊர் மக்களிடம் என்னை வியக்க வைத்த பண்பு.


அவரவர்  வேலை அவரவர்களுக்கு.

Chestnut  வறுத்து விற்கும் இடம். நாங்களும் ஆளுக்கொரு பாக்கெட் வாங்கித் தின்றபடியே நடந்தோம். 

Image result for basel town christmas 2019

அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2020க்கான  நல் வாழ்த்துக்கள் .

Image result for basel town christmas 2019





16 comments:

ஸ்ரீராம். said...

ஓராண்டுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வா?    இல்லை வரப்போகும் புத்தாண்டு பற்றிச் சொல்கிறீர்களா?நேற்று நகர்வலம் சென்று வந்தீர்களா?   அட்வான்ஸ் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், வரப்போகும்
புத்தாண்டுக்குத் தான் வாழ்த்துகள்.
அனேகமாகத் தினமுமே இந்தக் கிராமத்திலியெ
நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மகிழ்ச்சிதான் எங்கேயுமே.
வழ்த்துகளூக்கு மிக நன்றி மா.

Geetha Sambasivam said...

முன்கூட்டிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கும் அழகான படங்களுக்கும் மிக்க நன்றி. அனைவருக்கும் நானும் முன் கூட்டியே வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்கிறேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவில் புத்தாண்டு நிகழ்வுகளை விவரித்த விதம் இதமாக உள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நகரின் படங்கள் அற்புதமாக இருந்தது. காணொளி கேட்டேன். இனிமையான இசை. இசைக்கு கட்டுப்பட்டு மக்கள் குழுமிய விதம் மக்களுக்கு அந்த இசையின் மேலிருந்த நாட்டத்தை விவரிக்கின்றது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நாளை இரவு பிறக்கப் போகும் இனிமையான அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டில் அனைவருக்கும் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கிறேன். இனிமையான பகிர்வுக்கு நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம்
கீதா மா. முன் கூட்டியே சொல்லி விடுவது நல்லது. யாரையும் விட்டு விடக்கூடாது இல்லையா! ஹாப்பி 2020 மா.

வெங்கட் நாகராஜ் said...

புத்தாண்டு விரைவில் வந்து விட்டது.

அனைவருக்கும் நலமே விளையட்டும்...

புத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலாவுக்கு புத்தாண்டு. நன்மைகளைக் கொடுக்கட்டும்.
எல்லோரையும் இனிய வார்த்தைகளால் பரிவு காட்டும் உங்களுக்கு நன்றி.

இவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கப் பிறந்தவர்கள். அதனாலயே காண
உள்ளம் நெகிழ்கிறது. மிக நன்றி மா. இனிய புத்தாண்டு 2020க்கான. வாழ்ததுகள்.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆசிகளைச் சொல்லவம் கமலா மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நாட்கள் விரைந்தே ஓடிவிட்டன. ஆதிக்கும், ரோஷ்ணிக்கும் உங்களுக்கும் என் அன்பு ஆசிகள்.

கோமதி அரசு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.
உங்கள் குடும்பத்தினர்களுக்கும் வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா...

ஜீவி said...

சின்னச் சின்ன வரிகளாக துள்ளியோடும் உங்கள் வர்ணிப்புகளைப் படிப்பதே ஒரு தனி சுகம் தான்.. இது எந்த ஊர் காட்சிகள்? அனைத்து ஐரோப்பிய மக்களும் என்று இடையில் ஒரு வரி ஓடுகிறது..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
மிக மிக நன்றி.அனைவரும் நலமாக இருக்கு புத்தாண்டு
நலம் தரும். அமைதி தர வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் வரும் புது வருடங்கள் அனைத்தும் உங்களுக்கு வளங்கள் தரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார், இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் புது வருடம்
கோலாஹலமாகப் பிறக்கப் போகிறது.
நான் இப்போது இருப்பது சிறிய மகன் வீட்டில் பாசல் என்ற கிராமத்தில்.
ஸ்விட்சர்லாண்டில்.
இங்கும் மற்ற ஐரோப்பியர்களும் வருகிறார்கள்.
ஏனெனில் அவர்கள் ஊரைவிட மிதமான
தட்ப வெப்பம்.
பல் கிட்டிப் போகும் குளிரில்லை.
நல்ல ஜாக்கெட்+ஸ்வெட்டர் அணிந்து,தலைக்குல்லா,கழுத்துப் பட்டை எல்லாம் போட்டுக் கொண்டு தாராளமாக வெளியே செல்லலாம்.
அதுதான் அப்படிச் சொன்னேன்.
எண்ணங்கள் வரும் வேகத்தில் வார்த்தைகளை டைப் செய்ய முடியாமல் சுருக்கிவிடுகிறேன்.
தங்கள் பாராட்டுக்கு மிக நன்றி.
மனம் நிறை இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மா.

மாதேவி said...

புத்தாண்டு கொண்டாட்டங்களை எங்கும் பார்பது மகிழ்சியே. அழகிய படங்கள்.

நாங்களும் இங்கு குடும்பமாக சில இடங்கள் சுற்றி வந்தோம்.