Blog Archive

Tuesday, December 31, 2019

எல்லே இளங்கிளியே!!!! மார்கழி 15

வல்லிசிம்ஹன்


எல்லோரும் வளமாக வாழ  வேண்டும் 

எல்லே இளங்கிளியே!!!!  மார்கழி 15

Image may contain: 1 person
Add caption

Image may contain: 1 person
No photo description available.

ஆனைக்கூட்டம் நிறைய வருகை தரும்   பாடல் இது.
நம் கோதை எழுப்பப்போகும் கிடைத்த தோழி
கிளி போன்றவளே  ,  அதாவது இறை பக்தியில், கிள்ளை 
மழலையில்    பயின்று  வந்து கொண்டிருப்பவள்.

அன்பாக விழிக்க வேண்டிய தருணம். இன்னம் உறங்குகிறாயே அம்மா என்றதும் உள்ளே இருந்து பட்டென்று பதில் வருகிறது.
என் இவ்வளவு கோபமாக அழைக்கிறீர்கள்.
இதோ வருகின்றேன் என்கிறாள்.

நா வலிமை பெற்றவளே , உன் கட்டுரைகள் அனைத்தும் முன்பே  நாங்கள் அறிவோம் . இது கோதை  சொல்லும் பதில் 

அதற்கு அந்தப் பெண் , நீங்கள் தான் எல்லாம் அறிந்தவர்கள் 
சரி நானே சொன்னதாக இருக்கட்டும் என்கிறாள்.
இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறாள்.
கொஞ்சம் எழுந்து வெளியே வா...
ஓஹோ எல்லோரும் வந்து விட்டார்களோ 
ஆமாம்   எல்லோரும்  வந்து விட்டார்கள் 
வேண்டுமானால் வந்து எண்ணிக் கொள் ....

உனக்கு நினைவு இல்லையா , நாம்  இன்று 
பாடப் போகும் கண்ணன்  எப்படிப்பட்டவன்  என்று தெரியாதா.

வல்லவனான  கம்சனைக் கொன்றவன்,
அதற்கு முன்  குவலயாபீடம் என்ற மதம் பிடித்த யானையைத்
 தனி  ஒருவனாக மாய்க்கிறான்.
தன்னிடம்  பகைமை கொண்டவர்களின் பகைமையைக் கொன்று 
அவர்களை நல்ல கதிக்கு அனுப்புபவன்.  

அந்த யானையின் பலம் கொண்ட கண்ணனின் 
பெருமையை நாம் பாடிக் கொண்டாடுவோம்  வா என்று அழைக்கிறாள்.

ஐந்து வயதிலே அத்தனையும் உணர்ந்து கொண்ட பிஞ்சிலே பழுத்த நம் கோதையின்   பாசுரங்களுக்கு  நம்  அடியொற்றிப் பாடுவோம்.








11 comments:

ஸ்ரீராம். said...

வழக்கம்போல இந்தப்பாசுரம் கேட்டதும் நினைவுக்கு வரும் பாடலைக் கேட்டு விட்டு வந்து விட்டேன்!

விளக்கங்களும், பொருத்தமான படங்களும் அருமை.

Geetha Sambasivam said...

மிகச் சுருக்கமான எளிமையான விளக்கம். அருமை. தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

என்ன பாட்டு அது. கிளி கிளியே உன்... அதுவா. ஸ்ரீராம்:)
ஜென்சி பாட்டு.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா நன்றி மா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

என்றும் மனதிற்கு நிறைவு தரும் பாடல்கள். இவையெல்லாம் ரசிப்பதென்பது நாம் பெற்ற பேறு.
இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

பாடல் பகிர்வும், பாடலுக்கு விளக்கமும் அருமை.

ஸ்ரீராம். said...

ஏலே இளங்கிளியே இன்னும் உறக்கமென்ன என்று சுசீலாம்மா பாடும் நினைவுச்சின்னம் படப்பாடல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா வணக்கம் உண்மை பழமை என்றாலும் பக்தி என்றும் புதிது அதன். உங்களுக்கும குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா, நனி மா. வரும் புத்தாண்டு நமக்கு நன்மை தரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

எனக்குக் கூட அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் பா!

மாதேவி said...

இனிய பாடல்.