Blog Archive

Wednesday, December 15, 2021

பழைய படங்கள். பாடல்கள்., பெயர்கள்.

Vallisimhan.

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

நீளத்தலைப்புகளுடன் 55,60களில் படங்கள் வந்தன.

''பெற்ற மகனை விற்ற அன்னை,''

''தாய் மகளுக்குக் கட்டிய தாலி,''

''கடன் வாங்கிக் கல்யாணம்,''
''கூடி வாழ்ந்தால் கோடி நன்மை,''
மணாளனே மங்கையின் பாக்கியம்,
கணவனே கண்கண்ட தெய்வம்........:)
தை பிறந்தால் வழி பிறக்கும்,
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,

பானை பிடித்தவள் பாக்கியசாலி
""""""""""
தாய்க்குப் பின் தாரம்
தாயைக் காத்த தனயன்
தாய் சொல்லைத் தட்டாதே
மக்களைப் பெற்ற மகராசி
மாதர் குல மாணிக்கம்


டைரக்டர் ஸ்ரீதர் வந்த பிறகு  ஏழு எழுத்துப் படங்கள்,
பீம்சிங்கின்  பா வரிசை
பி எஸ் வீரப்பாவின் ஆ வரிசை,
மூன்றெழுத்துப் படங்கள்,

பிறகு வந்த இரு வார்த்தை, ஒரு வார்த்தைப் படங்கள், ஒரு எழுத்துப் படங்கள்

எல்லாமே நல்ல ஆராய்ச்சி செய்யப் படவேண்டியவை தான்:)

ரொம்ப அவசியம் இல்லையா.
பொழுதும், குளிரும் எழுத வைத்த பதிவு.
இன்னும் நிறைய படங்கள். சரியாக நினைவுக்கு
வரவில்லை.
அவற்றிலிருந்து சிலபாடல்கள்.



17 comments:

ஸ்ரீராம். said...

அல்லி பெற்ற பிள்ளை படம் கேள்விபட்டதில்லை! மற்ற படங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். நீளத்தலைப்புகளில் இன்னும் சொல்லலாம். அலிபாபாவும் நாற்பது திருடர்களும், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி...

பழங்காலப் படங்களுக்கு இரண்டு பெயர்கள் வைப்பார்கள். நடுவில் 'அல்லது' போட்டு இரண்டு தலைப்பையும் போஸ்டரில் சேர்ப்பார்கள்!

ஸ்ரீராம். said...

'நீ' என்று ஒரே எழுத்தில் படம் வந்திருக்கிறது! நல்லவேளை, தலைப்பே இல்லாமல் படம் வரவில்லை!!

Geetha Sambasivam said...

ஆஹா! அருமையான படங்களும்/பாடல்களும்! பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

பலமுறை பார்த்த அருமையான படங்கள்...

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா,

மகனை விற்ற அன்னை, அல்லி பெற்ற தாய் எலலம் கேள்விப்பட்டதே இல்லை.

ஹாஹாஹா நல்ல ஆராய்ச்சி அம்மா.

ஓரெழுத்தில் தீ, பூ, ஐ, உ, கோ, டூ

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் "தலைப்பு சொல்லுங்கள்" படத்திற்குப் பெயர் கொடுங்கள்" படத்தின் பெயர் என்ன என்று வந்தாலும் வரலாம்!!! போட்டியும் வைக்கலாம்! ஹாஹாஹா

கீதா

Bhanumathy Venkateswaran said...

நல்ல ஆராய்ச்சி! முன்பு குமுதத்தில் பொழுது போகாத பொம்மு என்று ஒரு பகுதி வந்து கொண்டிருந்தது. நீங்கள் இன்று பொம்மு வாங்கி விட்டீர்கள். இன்னும் ஆங்கிலப் பெயர்கள் கொண்ட படங்கள், பாடல் வரிகளை பெயராக கொண்டவை என்றும் யோசிக்கலாம்.

ஹம் ஆப் கே ஹைன் கோன், ஹம் தில் தே சுக்கே சனம் போன்ற பெயர்களை நான் உச்சரிப்பது என் குழந்தைகளுக்கு நல்ல பொழுது போக்கு.

வல்லிசிம்ஹன் said...

'நீளத்தலைப்புகளில் இன்னும் சொல்லலாம். அலிபாபாவும் நாற்பது திருடர்களும், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி...

பழங்காலப் படங்களுக்கு இரண்டு பெயர்கள் வைப்பார்கள். நடுவில் 'அல்லது' போட்டு இரண்டு தலைப்பையும் போஸ்டரில் சேர்ப்பார்கள்!"""
நன்றி மா.
பாருங்கள் இந்தப் படங்களை மறந்து விட்டேனே!!!

ஈ,ஜி, படங்கள் நினைவுக்கு வந்தன.
இது அல்லது அது எனக்கு நினைவில் இருக்கிறது.
நினைவு கொண்டதற்கு மிக நன்றி.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

ஆமாம் பழைய பாடல்கள் எப்பொழுதுமே
பொருளுடன் , கேட்கவும் நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
நலமுடன் இருங்கள்.
நெடு நாட்களாகப் பார்க்கவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்..

நலம் தானேப்பா.
நாம் வானொலியில் முன்பு இந்தப் பாடல்களைத்தானே கேட்போம்.
இலங்கை வானொலி மாதிரி இனி கிடைக்காது.

வல்லிசிம்ஹன் said...

@Thi.Geetha,
பெயர் என்ன என்று வந்தாலும் வரலாம்!!! போட்டியும் வைக்கலாம்! ஹாஹாஹா"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'''''''
என்ன பேரு வைக்கலாம்னு கூட
பெயர் வரலாம். அப்பாடி எத்தனை ஒரு சொல் கொடுத்திருக்கிறீர்கள்.

நீங்க தான் ஆராய்ச்சி செய்யணும் அம்மா:)
மிக நன்றி கீதா மா.


Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பழங்கால பெயர்களின் வரிசை பட்டியல்கள் நன்றாக உள்ளது. ஆமாம்.. அந்த காலத்தில் பெயர்கள் நீளமாகத்தான் இருக்கும். படங்களின் நீளமும் அதிகந்தான். கதை நன்றாக அமைந்து விட்டால், கொடுத்த காசுக்கு நீண்ட நேரம் அமர்ந்து பார்த்த திருப்தியும் கிடைக்கும். நீங்கள் பகிர்ந்த பாடல்களும் அருமை. முதல் பாடலை தவிர்த்து மற்ற பாடல்கள் கேட்டுள்ளேன். கடைசி படப் பாடல் வரவில்லை. எம்ஜிஆருடன் ஜமுனா நடித்த படம் என்னவென்று யோசனை செய்தும் தெரியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

பழைய பாடல்கள் மிக அருமை.
ராதா மாதவ பாட்டில் சரோஜாதேவிக்கு ஜோடி யார் என்று தெரியவில்லை.

பாடல்கள் எல்லாம் கேட்டேன். எல்லா பாடல்களும் இனிமையான பாடல்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

பழைய படங்கள் மனதில் நிற்பது போல் புதிய படங்கள் அத்தனையும் மனதில் நிற்பதில்லை. ஒருசில படங்களைத் தவிர.

நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் படங்களில் சில பார்த்துள்ளேன். பாடல்கள் எல்லாமே இனிமையான அருமையான பாடல்கள். எம்ஜிஆர் படம் பார்த்திருக்கிறேன்.

மிக்க நன்றி வல்லிம்மா.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா,
நலமுடன் இருங்கள்.

'நல்ல ஆராய்ச்சி! முன்பு குமுதத்தில் பொழுது போகாத பொம்மு என்று ஒரு பகுதி வந்து கொண்டிருந்தது. நீங்கள் இன்று பொம்மு வாங்கி விட்டீர்கள். இன்னும் ஆங்கிலப் பெயர்கள் கொண்ட படங்கள், பாடல் வரிகளை பெயராக கொண்டவை என்றும் யோசிக்கலாம்.''

ஆஹா. இது நல்ல யோசனையா இருக்கே:)
தாங்க்ஸ் பா.
ஹிந்தி வார்த்தைகள் ,ஆங்கில வார்த்தைகள்
என்று வரும் பாடல்கள் கூடப் பதியலாம்.
பானு மா. நீங்கள் அறியாத சமாச்சாரமே இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.
நீண்ட பெயர்கள் ,நீண்ட படங்கள், அலுக்காத பாடல்கள்.
இவையே நான் வளர்ந்த காலம்.
நீங்கள் சிலாகித்திருப்பதே மகிழ்வு.

''கேட்டுள்ளேன். கடைசி படப் பாடல் வரவில்லை. எம்ஜிஆருடன் ஜமுனா நடித்த படம் என்னவென்று யோசனை செய்தும் தெரியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.''

கமலாமா, அது "தாய் மகளுக்கு கட்டிய தாலி" படம்மா.
ஜமுனா ஒரே மாதிரி ஆடுவார். மிஸ்ஸியம்மாவிலிருந்து
அதே:)
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
எல்லாமே அருமையான பாடல்கள்.

அந்தப் பாடலில் சரோஜா தேவியுடன்
பாடி ஆடுவது கன்னட நடிகர் உதய குமார்.
குமாஸ்தா மகள் படம் எங்கள் குடும்பம் பெரிசு
எல்லாம் ஒன்றுதான்.
கன்னடப் படம், தமிழாக்கம்.
அடுத்தவாரம் சென்னைப் பயணம் இல்லையா
உங்களுக்கு.