Blog Archive

Monday, December 13, 2021

Sowkar Janaki 90 ...Part 2




வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.


வாழ்க்கையில் முன்னேற எது அவசியமோ 
அதைக் கைவிடாமல் சாதித்துக் காட்டி இருக்கிறார்.

நம் சௌகார் ஜானகி. சோகப் பாத்திரங்களுக்கே அவர் சரிப்படும் என்று,
தியாகம் செய்யும் அக்கா, மனைவி,
கண்ணில்லாத மங்கை என்ற பாத்திரங்களே
அவருக்குப் பொருத்தம் என்று ஒதுக்கப்
படும்போதும் நடித்தார் . நீ அப்படி இல்லை

..
அடுத்தடுத்த வந்த படங்களில் ,புதிய பறவை,ரங்க ராட்டினம், காவியத் தலைவி,
இரு கோடுகள், தில்லுமுல்லு, உயர்ந்த மனிதன் வெவ்வேறு பாத்திரங்கள்.

பட்டு மாமி பாத்திரத்துக்கு நீதான் என்று எதிர்  நீச்சல் படத்தில்
பட்டுப் புடவையில் ஜொலிக்க வைத்தார் இயக்குனர்
பாலசந்தர்..
கண்ணும் கண்ணீருமாகவே பார்த்த நமக்கு இவை எல்லாம் 
நல்ல மாறுதல்.
நல்ல பண்பட்ட நடிகையாக வளையவரும் 
திருமதி ஜானகியைப் பற்றி எனக்குத் தெரிந்த
செய்திகள் மட்டும் இங்கே.

அவர் குடும்ப வாழ்க்கையிலும் எத்தனையோ 
சவால்களைச் சந்தித்து இருக்கிறார்
அந்த செய்திகளும் பேசும்படத்தில் படித்தது தான்.
அவரின் பெண் வழிப் பேத்தி வைஷ்ணவி
சில படங்களில் நடித்திருந்தாலும் 
பாட்டியின் முனைப்பு இல்லை.

ஜானகி அவர்கள் ஏழ்மையைக் கடந்து வந்த நாட்கள்
அவரது யூடியூப் பேட்டிகளில் காணலாம்.
அவருடைய உரம் எல்லாப் பெண்களுக்கும் வேண்டும்.
இந்த 90 வயதிலும் அவரால் கண்ணுக்கு இனிமையாகக்
காட்சி கொடுக்க முடிகிறது என்றால்
மன உற்சாகம் தான் காரணம்.

அவர் தரும் நம்பிக்கை நம் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.
வந்தனங்களுடன் வாழ்த்துகளையும் சொல்கிறோம்.




7 comments:

ஸ்ரீராம். said...

சௌகார் ஜானகி இரண்டாம் பாகம் இன்னும் சூப்பர்.  எல்லாமே அருமையான பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம், இனிய காலை வணக்கம்.
ஆமாம் மா. சாதனைப் பெண்மணிக்குக்
கிடைத்த பாடல்களும் நல்ல இசையோடுதான் வந்திருக்கின்றன. நன்றிமா.

Geetha Sambasivam said...

எல்லாமே அருமையான தேர்வு. எனக்கு அவங்க முகமும் உங்க முகமும் ஒத்துப் போகிறாப்போல் தோன்றும். அபி அப்பா கூட உங்களை சௌகார் ஜானகி என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.
இங்கே பகிர்ந்திருக்கும் அனைத்தும் பார்த்துக் கேட்டு ரசித்தவை. அதிலும் பார்த்த ஞாபகம் இல்லையோ! பாடல்! அருமையான பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

:))))))))))))))))))))))))))))))))அன்பு கீதாமா,
ஹாஹா.
இவரும் சொல்வார். உன் கண் கொஞ்சம் பெரிசா இருந்தா
அவங்க மாதிரின்னு சொல்வார்:)))

நல்ல நடிகை. சாமர்த்தியசாலி.
அபி அப்பா படித்தே நாட்களாகிறது.
எப்படி இருக்கிறாரோ.
நலமுடன் இருங்கள் அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பாடல்கள் வல்லிம்மா. சௌகார் ஜானகி பற்றிய தகவல்களும் அருமை

துளசித்ரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா, சௌகார் ஜானகி கஷ்டப்பட்ட்டு வந்தவர் என்பதை அவர் பேட்டியிலும் பார்த்திருக்கிறேன். நல்ல எஃபிசியன்ட் லேடி.

இந்த பார்ட் பாடல்கள் அதுவும் பார்த்த ஞாபகம் இல்லையோ செம பாட்டு

நீங்க கூட டக்குன்னு பார்த்தா சௌகார் போலவே!!

இப்ப கூட சௌகார் ஜானகி எப்படி இருக்காங்க! மன உறுதி!

கீதா

கோமதி அரசு said...

செளகார் ஜானகி நடிப்பு பிடிக்கும் எனக்கு .
மிக அருமையான நடிகை. பாடல்கள் எல்லாம் பிடித்த பாடல்கள். கேட்டேன் அக்கா.

90 வயதிலும் உழைத்து கொண்டு இருக்கிறார் அதற்கு மன உறுதிதான் காரணம்